recent posts...

Monday, September 29, 2008

'குறும் போட்டி'க்கு ஒரு ஒத்திகை

நண்பர்களே, வாங்க வாங்க.

சௌக்யமா?

'குறும் போட்டி' பத்தி தெரியும்ல? தெரியலண்ணா, வலது பக்கம், பச்சையா பட்டை போட்டிருக்கேன் பாருங்க. க்ளிக்கித் தெரிஞ்சுட்டு வாங்க.

என்னது? ஏற்கனவே, சர்வேல க்ளிக்கிட்டீங்களா? போட்டீல கலந்துக்குவேன்னு, இதுவரை வாக்களித்த 22 நல்லவங்கள்ள நீங்களும் ஒருத்தரா? நீங்க யாருன்னு, பின்னூட்டத்துல சொல்லிடுங்க. கூடியவிரைவில், உங்ககிட்டயெல்லாம், கலந்தாலோசிச்சுதான், அடுத்த கட்டத்தை பத்தி திட்டம் தீட்டி செயல் படுத்தணும்.

முழுசா, கதை எழுதி, அதுக்கு, வ்சனம், திரைக்கதை எல்லாம் அமச்சு, படமாவும் எடுத்து, எடிட்டிங்கும் பண்ணி, முடிஞ்சா, பின்னிசையும் சேத்து ஒரு கலக்கு கலக்கணும்னு நெனைக்கும்போதே த்ரில்லிங்கா இருக்குல்ல? நடிகர்களுக்கு ஏற்பாடு பண்றதும் ஈசிதான். அலுவலகத்தில், கண்டிப்பா, யாராச்சும் மாட்டுவாங்க.

போட்டி ஒருபக்கம், மெதுவா உருவாகிக் கொண்டு வரும்போது, நேத்து ஆஃபீஸ்ல ஒரு கனவு வந்துது. ஒரு குறும்படத்துக்கான ஐடியா அது.

அந்த ஐடியாவை இங்க சொல்றேன்.
வீடியோ காமெராவிலோ, செல்ஃபோனிலோ, வீடியோ எடுக்க முடிந்தவங்கள், இதை செயல் படுத்த முனையலாம்.

'குறும் போட்டி'க்கு ஒரு ரிஹர்ஸல் மாதிரி இத வச்சிக்கலாம்.

செஞ்சுடலாம்ல?

தலைப்பு: தானம்

கதைக் கரு: சமீபத்தில் அதிகமாய் பேசப்படும், உடல் உறுப்பு தானத்துக்கான விழிப்புணர்வை, நம் இந்திய மக்களுக்கு ஊட்டுதல்.

தயாரிப்பு செலவு: ரெண்டு குழந்தைகளுக்கு சப்பு மிட்டாய், ரெண்டு சைனா பீங்கான் குழந்தை பொம்மை.

ஸ்க்ரீன் ப்ளே:
காட்சி1:
அனுவுக்கும், நஸ்ரீனுக்கும் (ஸ்+ரீ போட்டா ஸ்ரீ ஆயிடுதே? ஆஹா, ஈ.கலப்பையின் மத-ஒப்புமை, ஜூப்பர்:) ) நாலு வயசு. ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்து வீட்டுல வசிக்கும் க்யூட் குழந்தைகள்.
ரெண்டு பேரும் ரூமுக்குள்ள, பொம்மைகளை வச்சுக்கிட்டு வெளையாடராங்க.
அனு கைல ஒரு அழகான பெண் குழந்தை பொம்மை.
நஸ்ரீன் கையிலையும், அதே மாதிரி, ஒரு அழகான பெண் குழந்தை பொம்மை.

காட்சி2:
வீட்டுக்குள்ள, ஹால்ல, ரெண்டு குடும்பமும் சிரிச்சு பேசிக்கிட்டு, அக்கடான்னு கதை அடிச்சுக்கிட்டு இருக்காங்க. டி.வி, ஓடிக்கிட்டு இருக்கு.
திடீர்னு, படால்னு சத்தம்.
தொடர்ந்து ரெண்டு குழந்தைகளும் அழும் சத்தம்.
ரெண்டு அம்மாக்களும் ரூமுக்குள்ள "அனு/நஸ்ரீன் என்னம்மா ஆச்சு"ன்னு ஓடறாங்க.

காட்சி3:
ரூமுக்குள்ள, ரெண்டு பொம்மைகளும், கீழ விழுந்து, ஒடஞ்சு கெடக்குது.
அனுவும், நஸ்ரீனும் அழுதுக்கிட்டு இருக்காங்க.
நஸ்ரீனோட அம்மா, அழாதம்மான்னு சமாதானம் பண்றாங்க.
அனுவின் பொம்மை முழுசா ஒடையல, கை மட்டும் ஒடஞ்சிருக்கரத பாக்கராங்க.
நஸ்ரீனின் பொம்மை முழுசா ஒடஞ்சு போச்சு, ஆனா, கை ஒடையாம கீழ இருக்குது.
நஸ்ரீனின் அம்மா, தனியா இருக்கும் கையை எடுத்து, அனுவின் உடைந்த பொம்மையில் ஒட்டி வைக்கிறாங்க.
அனுவின் பொம்மை முழுசாயிடுது.
அதை, அனுகிட்ட கொடுக்கராங்க. பொம்மையை வாங்கிக்கிட்டு அனு சிரிக்கராள்.
ஆனா, நஸ்ரீன் தொடர்ந்து அழரா, தன் பொம்மை ஒட்ட முடியலையேன்னு.

அனு, நஸ்ரீன் கிட்ட மெதுவா போய், என் பொம்மைய நீயே வச்சுக்கோன்னு கொடுக்கரா,
நஸ்ரீன் அழுகைய நிறுத்தி சிரிக்கரா.
அனுவை கட்டிப்பிடிச்சு ஒரு முத்தா கொடுக்கரா.
சீன், அப்படியே ஃப்ரீஸ் பண்றோம்.

காட்சி4:
"உடல் உறுப்பு தானம்
உயிரைக் காக்கும்
உறவுகளை மகிழ்விக்கும்
இன்றே செய்யுங்கள்"
இந்த மாதிரி ஏதாவது கவிதைய டைட்டில் கார்டுல போட்டுடுங்க.

காட்சி5:
(ஆப்ஷனல்)
கதைக் கரு: சர்வேசன் ( ஹி ஹி )
'குறும்' போட்டிக்கான ஒத்திகை ன்னு டைட்டில் கார்டுல கடைசில போடரதும், போடாததும் உங்க விருப்பம்

;)


சீக்கிரம், இத முயற்சி பண்ணி, யூ-ட்யூப்ல ஏத்துங்க.

அனு, நஸ்ரீனுக்கு அம்மாவாக நடிக்க, ஆள் கிடைக்கலன்னா, குழந்தைகளை மட்டும் வைத்துக் கொண்டே, திரைக் கதையை உல்டா செய்யலாம். அந்த மாதிரி எடுக்க ஆசைப் படுபவர்கள், பின்னூட்டத்தில் தெரிவித்தால், நமது பதிவுலக, ஸ்க்ரீன் ப்ளே வித்தகர்கள் ஒதவுவாங்க.

முயற்சி பண்ணுவீங்கல்ல? ( அஞ்சு நிமிஷத்துக்கு மேல வராம பாத்துக்கங்க. உ.த, கவனிக்க ;) )

பி.கு: இந்தக் கதை/திரைக்கதை, என் சொந்த சரக்கு. இதுக்கு முன்னாடி எந்த குறும்படமோ, படமோ, கதையோ, இந்த கருவுடன் நான் பார்த்த ஞாபகம் இல்லை. இது, இன்னொரு கதையுடன் ஒத்துப் போயிருந்தால், it is just a mere coincidence. so, தைரியமா கோதால எறங்குங்க ;)


6 comments:

SurveySan said...

உடல் உறுப்பு தானத்துக்கு, வேற மாதிரி, சிறப்பா, குறும் படம் எடுக்க முடியும்னா, அதையும் சொல்லுங்க. பதிவா போட்டாலும், ஓ.கே.

படத்துக்கு தலைப்பு, 'தானம்' ஓகேவா?

'நச்'னு வேர தலைப்பு தோணிச்சுன்னாலும் சொல்லுங்க.

நானும் எடுக்கலாம்னு இருக்கேன்.

குழந்தைகளுக்கான வேட்டையில் ஈடுபடணும் ;)

திவாண்ணா said...

//
குழந்தைகளுக்கான வேட்டையில் ஈடுபடணும் ;)//
சாக்கிரதபா!

நஸ்ரீன் சத்தம் ஒண்ணுதானே அதான்.

SurveySan said...

diva,

yes.

ellaa manushangalum onnudhaannu sollaama solraanga ;)

SurveySan said...

noone?

திவா, நீங்கதான ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல படிக்கரவரு?

திவாண்ணா said...

ஆஹா! இவ்ளோ இளமையான ஆசாமியா என்னை நினைக்கிறீங்களா! சரி அப்படியே இருக்கட்டும். :-))விடை: இல்லை

SurveySan said...

வேர யாருங்க?

எல்லா பின்னூட்டத்தையும் அலசிப் பாக்கணும். இப்பதான் யாரோ சொன்னாங்க.