பொக்கேயாக வந்த ரோஜாவை
தக்கையாக கிடந்த டப்பாவில்
சொருகி நிற்க வைத்து
முக்காலி எடுத்து விரித்து
லென்ஸை திருப்பிப் போட்டு
தண்ணீர் பீய்ச்சி அடிச்சு
ஈரமாக்கிய பூவை க்ளிக்கி
ப்ளாகரில் படத்தை ஏற்றி
வைத்தேன் உங்கள் ஸைட்டுக்கு
நல்லா பாத்து ஆராஞ்சு
டக்கரா? சுமாரா? கலீஜா?ன்னு
மறைக்காம சொல்லுங்க கருத்துக்களை!
-சர்வேசன்
;)
12 comments:
ஒரு கவுஜ கூட சரியா வரமாட்டேங்குது :(
நான் சொல்ல வந்த மேட்டரை, நல்லா இன்னும் சுரம் பிரித்து, ராகமுள்ள கவுஜையாக மாற்றி யாராவது சொன்னீங்கன்னா புண்ணியமா போவும் :)
படம்: ஏனோ அப்பீல் ஆகலை. ஏன்னு சொல்லத்தெரியலை.
கவுஜை: ஆஸ்கிங் பார் ட்ரபிள்!
ரோஜா பொக்க
டப்பா தக்க
முக்காலில நிக்க
லென்ஸை திருப்பி போட்டு
தண்ணீ பீய்ச்சி ஆட்டு
பூவ க்ளிக்கு
வலல ஏத்து
ஆராஞ்சு பாத்து
டக்கரா?
சுமாரா?
கலீஜா?
மறைக்காம சொல்லு நைனா
பூங்கொத்தில் இருந்து
புன்னகை சிந்திய
பூக்களின் ராணியை
பக்கத்தில் இருந்த
பல்லக்கு ஒன்றில்
ஏற்றி அதைத்
தாங்கிப் பிடித்திட
'மூவரை' அழைத்தேன்.
சட்டென சூரிய'(லெ)ன்(ஸ்)'
கருமேகத்துள் 'திரும்பி'ட
படபடவென்ற சாரல்
ராணிமேல் தெறித்திட
கண்கள் கவர்ந்தை
அரியணையில் 'ஏற்றி'
அழகு பார்த்தேன்.
ராணியின் அழகை
ரசிப்பது சுகமா
சோகமா சாபமா
சொல்லுங்க வேகமா!
சொற்பிழை
பொருட்பிழை
இருந்தால்
பொருத்தருள்க:))!
இங்க என்ன நடக்குது
"' போட்டோவைப்பாரு
கவிதை பாடு "
போட்டியா ? :)
நீர்த்துளிகள் சிறிதும் பெரிதுமாய் இல்லாமால் ஒரே அளவாய் இருப்பது; அதிலும் அதிகமாய் இருப்பது ஒரு வித செயற்கைதனமாக, பூவின் அழகை கெடுத்துவிட்டது போல தோன்றுகிறது.
மற்றபடி நீங்கள் எடுக்கும் படங்கள் எப்போதுமே அழகுதானே!:)
திவா,
உண்மையச் சொல்லணும்னா, ரோஜா எனக்கும் பெரிய அப்பீல் ஆகலை;
ஒரு செயற்கைத் தனம் இருக்கு.
;)
ராமலக்ஷ்மி,
எப்படிங்க இப்படி கலக்கறீங்க?
//ராணியின் அழகை
ரசிப்பது சுகமா
சோகமா சாபமா
சொல்லுங்க வேகமா!
//
அவரவர் ராணியை ரசிப்பது சுகம்தான்.
சாபமாகவும் இருக்கலாம், ராணியைப் பொறுத்து ;)
முத்துலெட்சுமி,
//கவிதை பாடு போட்டியா//
இல்லை. கவுஜ பாடு போட்டி ;)
ஓவியா,
//நீர்த்துளிகள் சிறிதும் பெரிதுமாய் இல்லாமால் ஒரே அளவாய் இருப்பது; அதிலும் அதிகமாய் இருப்பது ஒரு வித செயற்கைதனமாக, பூவின் அழகை கெடுத்துவிட்டது போல தோன்றுகிறது.
//
ஹ்ம். இருக்கலாம். கலரும், ஒரு பளாஸ்டிக் லுக் கொடுக்குதுன்னு நெனைக்கறேன்.
நன்றி.
ஓவியா,
//நீர்த்துளிகள் சிறிதும் பெரிதுமாய் இல்லாமால் ஒரே அளவாய் இருப்பது; அதிலும் அதிகமாய் இருப்பது ஒரு வித செயற்கைதனமாக, பூவின் அழகை கெடுத்துவிட்டது போல தோன்றுகிறது.
//
ஹ்ம். இருக்கலாம். கலரும், ஒரு பளாஸ்டிக் லுக் கொடுக்குதுன்னு நெனைக்கறேன்.
நன்றி.
Post a Comment