பள்ளிக் காலங்களில், ஆங்கில வழிக் கல்வி கற்பித்த மெட்ரிக்குலேஷன் பள்ளியில் தான் அடியேனின் அறிவு தாகத்தை த்ணித்துக் கொள்ளும் பெரும்பணி நடந்தது.
ஐந்தாம் வகுப்பு வரை ஒரு 'சாதா' பள்ளியில் பயின்று வந்தேன். சுத்தி இருக்கும் பத்து என்ற பத்மநாபன், அண்ட்டு என்ற அனந்தசயனன், டில்லி என்ற டில்லிபாபு, குட்டி என்ற (அவன் நெஜப்பேரே மறந்து போச்சு) நண்பர் படையுடன், டயர் ஓட்டி, கில்லி கோலி ஆடி டரியல் பண்ணிய காலம் அது. மழைக்காலங்களில், தூண்டிலில் மண்புழு சொருகி, ஏரியில் வீசி கெண்டையும், குறவையும், கெலுத்தியும் பிடித்த காலம் அது.
எல்லாத்தையும் பொறுத்துக் கொண்ட நைனா, மீன் பிடிக்கும் படலம் ஆரம்பித்ததும், அப்துல் கலாம் ஆகவேண்டிய அருமைப் புத்திரன், இந்த அஜாடி கும்பலுடன் சேந்து வீணாப் போயிடுவானோன்னு பயந்துட்டாரு.
(அஜாடி கும்பலை அஜாடி வேலைக்கு இஸ்துக்கினு போறதே நாந்தான்னு அவருக்கு அப்பத் தெரியாத காலம் அது.)
நான் உருப்படணும்னா, மெட்ரிகுலேஷன் சேந்து மெத்தப் படிக்கும் மாணாக்கர்களுடன் சேந்தாதான் முடியும்னு முடிவு பண்ணி, 'நல்ல' ஸ்கூல்ல சேத்துவிட்டாரு.
அங்க படிச்சு, பெரிய லெவல்ல அறிவை வளத்துக்கிட்டு உலகமே மெச்சும்படி உயர்ந்ததெல்லாம் ஹிஸ்ட்டரி. இங்க வேணாம் அந்த டீட்டெயிலெல்லாம்.
ஆறாம் வகுப்பு முதல் நாளன்று, வகுப்பு ஆசிரியை வந்து, "children, you have the option to choose your second language. you can choose tamil or hindi. how many of you know hindi?"ன்னு கேட்டாங்க. என் பக்கத்து சீட்டு விஜய் ஆனந்த் (பெயர் மாற்றவில்லை. மச்சி, உன் பேரை நாரடிக்கறேன்னு அன்னிக்கு சொன்னதை இன்னிக்கு நிறைவேத்தறேன்) அதைக் கேட்டதும். "I No miss"னு கையத் தூக்கிட்டான்.
பாவம் பய, அவனும் நம்மள மாதிரி 'சாதா' ஸ்கூல்ல படிச்சு மீனெல்லாம் புடிச்சுட்டு, அவங்க அப்பா புண்ணியத்தில், 'நல்ல' ஸ்கூலுக்கு மாறிய கேட்டகிரி தான்.
இந்தி தெரியாதுங்கரத, 'I no miss, I no miss'னு கூப்பாடு போட்டதில் இருக்கும் சோகம் புரியாமல், ஆசிரியையும், 'I know'ன்னு கைதூக்கிய இதர ஸேட்டு பிள்ளைகளுடன், விஜய் ஆனந்தையும், "come children"ன்னு கடா வெட்ட கூட்டிக்கிட்டு போற மாதிரி, இந்தி வகுப்புக்கு கூட்டிக்கிட்டு போயி விட்டாங்க.
அதுவரை, Doordarshanல் 1:30 மணி செய்தியில் மட்டுமே இந்தி பரவலாய் பார்த்த விஜய் ஆனந்தும், முட்டி மோதி ஒரு வழியா இந்தி படிச்சு பாஸ் மார்க் வாங்கிட்டான். ஆனா, அவனுக்கு, இன்னி வரைக்கும், தன்னை மட்டும் ஏன் ஸேட்டு பசங்களோட விட்டுட்டு, மத்தவங்களையெல்லாம் டமில் படிக்க விட்டுட்டாங்கன்னு தெரியாமையே அப்பாவியா வளந்துட்டான்.
நானும் முட்டி மோதி, டமில் படிச்சு, திருக்குறள் கஷ்டப்பட்டு மக் அடிச்சு, குறுந்தொகை பெருந்தொகை, அகநானூறு, புறநானூறெல்லாம் பிட் அடிச்சு, டமிலை கரைச்சு குடிச்சு கரையேறிட்டேன்.
எனக்குத் தெரிஞ்ச இந்தியெல்லாம், சூப்பர் ஹிட் முக்காப்லா பாத்து வந்ததுதான். விஜய் ஆனந்த், "ஏக் தோ தீன்"னு கத்தி மனப்பாடம் செய்யும்போதும் அரசல் புரசலாய் என் காதில் விழும்.
அதைத் தவிர, கேய்ஸி ஹேய், அச்சா ஹேய், கியா ஹுவா, நஹி, பஹுத், நாம் கியாஹே, இந்த மாதிரி தோடா தோடாதான் தெரியும்.
அந்த தோடா தோடா வச்சுக்கிட்டே, பம்பாயில் ஒரு மாசமும், டில்லியில் ஒரு மாசமும், சமாளிச்சு மூச்சுத் திணறியதெல்லாம் நடந்தது.
அப்பேர்பட்ட எனக்கு, அமெரிக்கா வந்ததும், இந்தித் தொல்லை அதிகமாகியது. அப்பெல்லாம், பொட்டிய தூக்கிக்கிட்டு வாராவாரம் ஊரு விட்டு ஊரு போகும் வேலை. அலுவலகங்களும், பணத்தை தண்ணியா வாரி இறைச்ச காலம் (2001ன் ஆரம்பம்). NewYorkலும் மற்ற அநேகம் நகரங்களிலும், டாக்ஸி ஓட்டரது முக்கால்வாசி சர்தார் சிங்க்கும், பாக்கிஸ்தான் காரனுமாத்தான் இருப்பான். ஏர்போர்ட்டிலிருந்து வெளியில் வந்ததும், வரிசையில் நிற்கும் taxiல் ஏறி அமர்ந்ததும், "क्या बाथा हे साब. केसी हो? सामान निक्कालो?"னு சர சர சரன்னு இந்தியில் எதையாவது வாய்ல வந்ததை பேச ஆரம்பிச்சுடுவான். நான் அரை தூக்கத்துல, "ஹம் ஹிந்தி நஹீ மாலூம்"னு சொன்னதும், கொசுவைப் பாக்கர மாதிரி பாத்துக்கிட்டு, "தும் மத்ராஸி?"ன்னு கேட்டுட்டு ஒரு கேவல லுக் விட்டுட்டு, கப் சிப்னு ஆயிடுவான்.
99.99% taxi பிடிக்கும்போது, இந்த கொசுப்படலம் தொடரும்.
இந்தி தெரியலன்னா தெய்வகுத்தம் செஞ்ச மாதிரி பாக்கராங்க. எனக்கே, இப்பெல்லாம், அடடா இந்தி படிச்சிருக்கலாமேன்னு தோணும், பழைய இந்தி பாடல்களை கேட்கும்போதெல்லாம். என்னமா வரிகள் எழுதியிருக்கானுவ? அற்புதம்.
taxi காரனாவது, 'ஹிந்தி நஹி மாலூமை' மதிச்சு, பேச்சைக் கொறைச்சிடறான். ஆனா, இந்த அலுவலகத்தில் இருக்கும் சில வடநாட்டு சகாக்களின் கொடுமைதான் தாங்க முடியல்ல.
எப்பப் பாத்தாலும், இந்தியில், "सरियाना कड़ी इल्ला इन्ध मीटिंग? इन्तहा कम्पनी उरुप्पदाधू"ன்னு ஆரம்பிச்சிடுவானுவ. நானும், "ஹிஹி. i can understand a bit of hindi, but not very well"னு ஆயிரம் தபா சொல்லிட்டேன். வுடாம, இந்தியிலேயே வாட்டி எடுக்கறாங்க.
இப்பெல்லாம் "இந்தி நஹீ மாலூம்" சொல்றதை விட்டுட்டேன். அவங்க பேசும் தொனியை வச்சுக்கிட்டு, சீரியஸ் மேட்டர் சொல்றாங்களா, சிரிப்பு மேட்டரான்னு கிரஹிச்சு, அதுக்கேத்த மாதிரி, "Ya Ya"ன்னு தலைய ஆட்டி வெக்கறேன்.
இந்த இந்திக்காரனுவ தொல்லை ஒருபக்கம் இப்படி இருக்கும்போது, புதுசா, ஒரு தெலுங்குகாரன் வந்திருக்கான். அவனும் எப்பப்பாத்தாலும், காதோரம் வந்து, "ఎందోరు మగాను బావులు అన్తేరిక్కి వంథానము"ன்னு நச்சறான்.
நேக்கு, ஹிந்தி நஹி மாலூம் & தெலுகு தெல்லேதுராஆஆஆஆஆ கொலுட்டி டொங்கணக் கொடுக்கா!
38 comments:
கருத்ஸ் ப்ளீஸ். டொங்கணக் கொடுக்கா கெட்ட வார்த்தை இல்லியே?
தெலுகு அன்பர்கள் மன்னிக்க.
//"I No miss"//
:))!
தோடா தோடா ஹிந்தியுடன் மும்பையில் 2 வருடம். தெற்கே வந்த பின்னும் பிரச்சனை விடுகிறதா? குடியிருப்பின் செக்யூரிட்டிகளுக்கு ஏன்தான் ‘தோடா தோடா’ ஆங்கிலம் தெரியவே மாட்டேன்கிறதோ எனும் வருத்தத்தில் நான்:)!
அப்படியே இந்தியில் போட்டதை மொழிப்பெயர்த்துப் போட்டா நாங்களும் புரிஞ்சிக்குவோம்.
தெலுங்குலே போட்டதையும் மொழிப்பெயர்த்துப் போடுங்க..வரலாறு இன்றியமையாததாமே !
டொங்கனா கொடுக்கா...கெட்ட வார்த்தை இல்லைங்க.. புதுபுது அர்த்தங்கள் படத்துல ஜெயசுதா
விவேக்கை பார்த்து சொல்லுவாங்களே.... அது என்ன அர்த்தம்..? நமக்கும் தெலுங்கு
தெலுசு லேதன்டி.... :)
உங்க நண்பரோட ஐ நோ இந்தி மேட்டரு...செம காமெடி.... தல....:))
ராமலக்ஷ்மி, இந்தி தெரியாமஎல்லாத்துக்கும், 'ஹீ ஹீ'ன்னு சொல்லி வாய் வலிப்பதுதான் மிச்சம்.
நமக்கு விடிவுகாலமே லேது ;)
TBCD, இந்தியில் அடிச்சதை google transliterateல் அடிச்சேன். something like 'indha company uruppaadhu' :)
teluguல் 'enthoru maganu bavulu antherikki vandhanumulu'ன்னு அடிச்சேன்.
அப்பாடி, வரலாறு தப்பிச்சுது :)
நாஞ்சில் பிரதாப், வயத்தில பால வாத்தீங்க. எங்க 'சாரி' பதிவு தனியாப் போட்டு ஹிட் தேத்தணுமோன்னு பயந்துட்டேன்.
நன்றீஸ் :)
சர்வே, நமக்கும் அந்த அனுபவம் உண்டு. ஹிந்தியில தெரியாதுன்னு சொன்னதானே கொசு லுக்கு?
நாம விடாம இங்கிலிபீசுல கொஞ்ச நேரம் சமாளிச்சுட்டா, நாராயணா இந்தக் கொசு தொல்ல போயிரும்பா :)
மும்பை, டெல்லிய விட அமெரிக்காவில் இருக்கும்போதுதான் ஹிந்தி தெரியலன்னு கொஞ்சம் வருத்தம். ஏன்னா, என்னோட நெறைய வட, மேற்கு, கிழக்கு நண்பர்களுக்கு, அங்ரேஜி படா தக்றார் ஹை!
பாவம், உங்க நண்பர் விஜய் ஆனந்த்:))
ரூம் போட்டு யோசிச்சும், அந்த 150ஆவது ஆளை தேத்த முடியாம போயிடுச்சே ;)
commonwealthஐ கிழிச்சு ஒரு பதிவு போட்டாதான் தேறும்போலருக்கு. :)
வார்த்தைக்கு வார்த்தை சிரிக்கவைத்த பதிவு...
வாழ்த்துக்கள்.!
ஹா ஹா
தோடா தோட ஹிந்தி சிக்கியாதோ சப் கேலியா அச்ச ஹே
உங்க நண்பரோட ஐ நோ இந்தி மேட்டரு...செம காமெடி
ஹி ஹி
150-க்கு வாழ்த்துக்கள்:)!
டொங்கனா கொடுக்கா - திருட்டுப்பயலே
"सामान निक्कालो?"
அப்பவே பொட்டிய தூக்கிட்டு ஊரூரா திரிஞ்சிங்க போல!!!
நான் என்னத்த பின்னூட்ட சர்வேசன்.
எனக்கு ஹிந்தி அச்சா மாலும் ஹை,(அதுக்கு காரணம் எங்கம்மாதான். அடிச்சு பத்தவிட்டுட்டாங்க ஹிந்தி கிளாசுக்கு) தவிர மீ தெலுகு பிட்ட ( தெலுகு பொண்ணு) :)))
ஆமாம் கோத்துவிட்டதை பதிவு போட்டேன்னு லிங்க் கொடுத்திருந்தீங்க அதை காக்கா தூக்கிகிட்டு போயிடிச்சு போல. திரும்ப லிங்க் கொடுங்களேன்.
இந்த இடத்துல ஒரு முக்கியமான விஷ்யம் சொல்லிக்க ஆசைப்படறேன். பெரிய பெரிய வேலைகளுக்காக நாம வடநாட்டுக்கு போன மாதிரி கூர்க்கா, கூலிவேலை, கார்பண்டர் போன்ற வேலைகளுக்கு இப்ப பார்ட்டிகள் வடநாட்டிலிருந்துதான் இறக்குமதி.
\\"सरियाना कड़ी इल्ला इन्ध मीटिंग? इन्तहा कम्पनी उरुप्पदाधू"//
sariyana kadi illa indha meeting indha company urupadathu... அப்படின்னு எப்படி தமிழை ஆங்கிலத்தில் அடிப்பீங்களோ அதையே ஹிந்தில அடிச்சிருக்கிறது படிச்சு எனக்கு ஒரே
சிரிப்பு..அதை வேற என்னன்னு ஒருத்தர் கேக்கறார்.. ஹிஹி
ஆனா எனக்கு தெலுங்கு தெரியாது..
தெலுங்கு பொண்ணு அது ஏன் சொல்லாம போயிடுச்சு..
சர்வேசன், ஹிந்திக்காரனுங்களையும் தெலுங்குக் காரனுங்களையும் சமாளிக்க ஒரே வழிதான்.. திருப்பித் தமிழ்ல பேசுங்க.. மேட்டர் சால்வ்ட்..
ஹிந்தி தெரியாம தமிழ்நாட்டிலேயே IT அலுவலகங்களில் நெளியும் தமிழ் மக்கள்சை பார்த்ததில்லையா? ஏன் தமிழ்நாட்டிலே நெளியனும்னா இங்கே எல்லா மாநிலத்தவங்களும் வேலை செய்வதாலும் சில சமயங்களில் நாம மாட்டும் ப்ரொஜெக்டில் தமிழர்கள் குறைவாக இருந்து மற்ற மாநிலத்தவர்கள் (நம்ம தவிர எல்லா மக்கள்ஸும் ஹிந்தி போலுவாங்க) எல்லாம் பொது மொழியாக ஹிந்தி போலிக் கொண்டு இருக்க நாம ஹீ ஹீ ஹிந்தி நயீ, என்று அசடு வழிந்து விட்டு நமக்கு நேஷனல் மொழியான ஆங்கிலத்தில் talking ( talking மட்டும் தான் பண்ண முடியும். அவங்க போல்றது புரியாது என்பதால் ஞே அல்லது s ஆகா வேண்டியது தான்
drbalas, மிக்க நன்றி. :)
Jaleela kamal, தன்யவாத்.
ராமலக்ஷ்மி, நன்றீஸ். samக்கு நன்றி :)
பாலகுமாரன், ஊர் ஊரா திரிஞ்சது அப்ப சுகமான அனுபவம். கொம்பேனியார் செலவுல பல தலங்களை பார்க்கும் வாய்ப்பு அது. :)
புதுகைத் தென்றல், வாங்க வாங்க. திட்டாம விட்டதுக்கு சால சந்தோஷமுலு. அந்த லிங்க்குக்கு போட்ட கிரீடம் ஸ்லோவா லோடாச்சு அதான் எடுத்துட்டேன். திரும்ப என்னா மேட்டருன்னு பாத்துட்டு போட்டுடறேன்.
நீங்க சொன்னப்பரம்தான் ஞாபகம் வருது, என் உடைந்த இந்தியைக் கேட்டு எங்க ஊரு கூர்கா, நான் இப்ப சிரிக்கர மாதிரி சிரிப்பான். :)
முத்துலெட்சுமி,
google.com/transliterateல் தட்டி வெட்டி ஒட்டினேன். என்ன அடிச்சிருந்தேன்னு எனக்கே சட்டுனு ஞாபகம் வரலை.
TBCDன் அறிவுத் தாகத்தை தீக்க, அதை எடுத்து translate.google.comல் திரும்ப வெட்டி ஒட்டி, ஒப்பேத்தினேன்.
சரியான விளக்கத்தை ஊர்ஜீதப் படுத்தி வரலாற்றை திடம் படுத்தியதர்க்கு ரொம்ப நன்னி ;)
முத்துலெட்சுமி,
தெலுகு தெரியாத "தெலுகு பிட்ட". ஷேம் ஷேம் :)
முகிலன்,
நல்ல ஐடியா. இங்க டெலிமார்க்கெட்டிங்க் calls அடிக்கடிவரும். தொணத் தொணன்னு உயிரை வாங்குவானுவ. அவங்களுக்கு, டமில் ட்ரீட்மெண்ட்தான்.
சகாக்களுக்கு அப்படி செஞ்சா, காமெடியாத்தான் இருக்கும். ட்ரை பண்றேன் ;)
virutcham,
நீங்க சொல்ற அதே மேட்டரு எங்க அலுவலகத்திலும் பிரசித்தி. "ஹீ ஹீ"ன்னு இளிக்கரதோட என் வேலை முடிஞ்சது அந்த மாதிரி நேரங்களில் :)
tamilmanam 2/3.
அப்ப்படீன்னா மூணு பேருக்கு இந்த பதிவு புடிக்கலையா? இல்ல மூணில் ஒருத்தருக்கா?
ஐயகோ, இந்திக்காரரோ, தெலுகுக்காரரோவாத்தான் இருக்கும்.
புதுகைத் தென்றல், நீங்க இப்படிப் பண்ணுவீங்கன்னு நேக்கு கொஞ்சம் கூட தெலுசல ;)
தஞ்சாவூரான்,
///பாவம், உங்க நண்பர் விஜய் ஆனந்த்:))////
:) நண்பேன், இத்தையெல்லாம் கண்டுக்க மாட்டான். இதைப் படிச்சாவது, அவனோட உள்மனதில் இருக்கும் கேள்விக்கு விடை கிட்டட்டும்.
தொங்கனா கொடுக்கான்னு பதிவுல நீங்க எழுதியிருந்ததற்கு திருட்டுப்பய மவனேன்னு ஒருத்தர் அர்த்தம் சரியா கொடுத்திருந்ததாலத்தான் நான் விளக்கம் சொல்லாம போனேன். அதுவும் புது புது அர்த்தங்கள் படத்துல ஜெயசுதா இல்ல அது அவங்க பேரு வேற அவங்க பஞ்ச் டயலாக் அதுன்னு சரியா சொல்லியிருக்காங்க அதனாலதான் நேனு மொழிபெயர்ப்பு சேயலேதண்டி.
ஐயோ சிரிச்சி தாங்கலை..
அப்படியே என்னோட வாழ்கையிலே நடந்தது போல் இருந்துச்சி.
Highlights :
//"I No miss"னு கையத் தூக்கிட்டான்.//
நான் 8 ஆம் வகுப்பு படிக்கும் பொது நடந்தது.
அது அறிவியல் வகுப்பு. நான் விஜய் அல்ல.
// निक्कालो?"னு சர சர சரன்னு இந்தியில் எதையாவது வாய்ல வந்ததை
பேச ஆரம்பிச்சுடுவான்//
இங்கே ஆப்ரிக்காவிலும் அப்படிதான். இந்தியை தவிர ஒன்னும் தெரியாத
பன்னாடைகள் நம்மளை கண்டவுடனேயே கொள்ள ஆரம்பிசிடுவானுக.
"உனக்கு இந்தி தெரியாதுன்னா ஏன் இந்தியால இருந்து வாற ?"
இப்படிகூட என்கிட்டே கேட்டு அடிதடி ஆகியிருக்கு.
இங்கே நம்மூருகாரன் Interview கு போயிருக்கான். முதலாளி
ஹிந்தி மாலும் ஹேய்? என கேட்க நம்மூருகாரன்
"மாலாது சார் " என பதில் சொல்லியிருக்கிறான்.
//எப்பப் பாத்தாலும், இந்தியில், "सरियाना कड़ी कम्पनी उरुप्पदाधू"ன்னு ஆரம்பிச்சிடுவானுவ.
நானும், "ஹிஹி. i can understand a bit of hindi, but not very well"னு ஆயிரம் தபா சொல்லிட்டேன்//
நானும் 6 மாதம் முன்பு வரை அப்படிதான் கைபுள்ளயாட்டம்
அமைதியா சொல்லிகிட்டிருந்தேன். இப்போ அவனுக ஹிந்தியிலே
ஆரம்பிச்சான்ன, நான் தமிழில் பதில் சொல்ல ஆரம்பிச்சிடுவேன்.
நமக்காவது 5 % ஹிந்தி தெரியும் அவனுக்கு சுட்டு போட்டாலும்
தமிழ் தெரியாது. அப்பறம் "Sorry I dont know you Langauge " ன்னு சொல்லிடுவான்.
புதுகைத்தென்றல், விளக்கத்துக்கு நன்னி.
புச்சா ஏதாவது தெலுங்கு வார்த்தை சொல்லிக் கொடுத்திட்டு போயிருக்கலாம் :)
இசை ரசிகன், ரொம்ப டாங்க்ஸு.
நானும் உங்க ஐடியாவை அமுல் படுத்தறேன் :)
:-))))))))))
நம்ம கதை எப்படின்னா படிப்பை முடிச்சிட்டு பொட்டி தட்ட போன இடம் பம்பாய். அங்கன நம்ம damager & கூட குப்பை கொட்டின ரெண்டு பேரு (team mates ) எல்லாம் தமிழு. ஒரே ஒரு இந்திக்காரன் தான் team -இல். தமிழ் பேசியே சமாளிச்சாச்சு.
அமெரிக்காவுக்கு வந்து தான் ஆப்பு கிடைச்சது. பாப்பாவை பார்த்ததுக்க கிடைச்ச baby sitter -க்கு ஹிந்தி மட்டுமே மாலும். ஒரே காமெடி தான் போங்க.காசிக்குப் போனாலும் கருமம் தொலையலைன்கிற மாதிரி இன்னும் thoda thoda பேசிக்கிட்டே இருக்கேன்.
Agila,
///காசிக்குப் போனாலும் கருமம் தொலையலைன்கிற //
;)
எனக்கு நேத்துகூட, அதே நிகழ்வு ரிப்பீட்டாச்சு. அவனுக்கு இந்தப் பதிவை படிச்சுக் காமிச்சாதான் அடங்குவான் போலருக்கு :)
Post a Comment