recent posts...
Tuesday, September 21, 2010
பீதியை கிளப்பும் இந்த வெள்ளிக் கிழமை...
இந்த வெள்ளிக் கிழமைய (September 24) நெனச்சாலே வயத்துல லேசா புளியக் கரைக்கர மாதிரி இருக்கே.
எங்க பாத்தாலும், அயோத்தி தீர்ப்பை பத்தியே பீதியா பேசிக்கிட்டு அலையரானுவ.
எல்லா பெருந்தகைகளும் சேந்து, அடுத்த கட்ட, கொடூரத்தை துகிலுரிக்க திட்டம் போடர மாதிரி தெரியுது.
திரைக்கு வர இருந்த பல படங்கள் ஸைலண்ட்டா ஒரு வாரம் தள்ளி வச்சிருக்காங்க, லாபத்தில் சொட்டை விழுந்துருங்கரதுக்காக.
என்ன என்ன அட்டூழியங்கள் நடக்கப் போவுதோ.
Lucknowல் போலீசாரும், மிலிட்டரியும் குவிக்கப்படுதாம்.
எல்லாரும் லீவு போட்டுட்டு, "Working" from home செய்வது சாலச் சிறந்தது.
அதை விடச் சிறந்தது, எக்கேடுகெட்ட தீர்ப்பு வழங்கப்பட்டாலும், இரு தரப்பும், ஒன்னியுமே நடக்காத மாதிரி, நார்மல் வாழ்க்கையை நடத்தி, அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் குள்ள நரிகளின் முகத்தில் கரியை பூசுதல்.
எல்லாம் நன்மைக்கே!
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
நெலம் எந்த தரப்புக்கு வந்தாலும், ஏரோட்டி சமன் செய்து, அரிசியோ கோதுமையோ விளைவித்தல், சாலச் சிறந்தது.
அதைவிடச் சாலச் சிறந்தது, ஃப்ளாட் கட்டி, சின்னத்திரையில் நடக்கும் போட்டா போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசாக் கொடுக்கலாம்.
ஒன்னியும் இல்லன்னா, பள்ளமாக்கி, மழை நீர் சேகரிக்கலாம்.
வேற எந்த முடிவுக்கும் யாராம் வராதீங்கப்பு.
ஊருக்குள்ள இருக்கிறவங்க தான் இருக்கப்போறம்..நாங்க்க எதும் செய்யமாட்டோம்.. வெளிய இருந்து புதுசா யாரும் வரமாட்டாங்க போலீஸ் தான் குவிச்சி வச்சிருக்காங்க.. இங்க ஒன்னும் நடக்கப்போறதில்லன்னு அயோத்யா காரங்க சொல்றாங்க..
மத்தவங்களும் அவங்கவங்க வேலைய பாத்தா சரிதான்..
எந்த விபரீதம் நடந்தாலும் பாதிக்கப்பட போறது பொதுமக்கள்தான், ஆனால் அதிலேயும் ஆதாயம் தேட பார்ப்பாங்க!
///இங்க ஒன்னும் நடக்கப்போறதில்லன்னு அயோத்யா காரங்க சொல்றாங்க..///
CWG நடத்திக் கிழிப்பதை விட, மேலே சொன்னதை நடத்திக் காட்டுவதில்தான் பெருமை இருக்கிறது.
நடக்கட்டும்.
ஹ்ம்ம்...
பீதியைக் கிளப்பும் வெள்ளி என புளியக் கரைக்கும் பதிவு.
//எல்லாரும் லீவு போட்டுட்டு, "Working" from home செய்வது சாலச் சிறந்தது.//
ம்ம், நல்ல சஜஷன். மாநில அரசே பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தால் நல்லது. செய்வது சந்தேகமே.
மசூதி இடிக்கப்பட்ட அன்னைக்கு ஹைதையில் காலடி எடுத்து வெச்சு அப்ப நடந்த கலவரங்களை அயித்தான் பார்த்திருக்காரு. இப்பவும் என்ன நடக்குமோ ஹைதையில்னு பெம்மாதான் இருக்கு. அண்டை மாநிலமான கர்நாடக அண்ணாக்கள் 25,26 லீவு விட்டிருக்காங்க.
சும்மாவே சாமி ஆடிகிட்டு இருக்கும் ஹைதையில் என்ன நடக்குமோ!!!!
முத்துலெட்சுமி,
////மத்தவங்களும் அவங்கவங்க வேலைய பாத்தா சரிதான்./////
சில பேருக்கு முழு நேர வேலையே, நாட்டில் குழப்பம் உண்டு பண்ணுவதுதான்.
முதலி என்ற அந்த ராம் சேவக் முதலையின் tehelka expose பாத்திருந்தீங்கன்னா தெரிஞ்சிருக்கும். :)
எஸ்.கே,
நன்றி. எல்லாமே ஒரு 'ஆதாய'த்துக்காததான, ப்ளான் பண்ணி நடத்தினாங்க/நடத்தறாங்க/நடத்தப் போறாங்க.
இயற்கை ராஜி, ஹ்ம்! :|
ராமலக்ஷ்மி,
லீவு விட்டா சாலச் சிறந்தது. சன் டிவி வருமானத்தை ஏத்தி விடுவாங்க எல்லாரும் சேந்து.
ஆனா, டவுட்டுதான், ஏன்னா ஆதாயம் தரும் விஷயமாச்சே இது.
புதுகைத் தென்றல்,
நன்றீஸ். நடப்பவை நன்மைக்கே :)
நல்ல படியாக தீர்ப்பை எதிர்கொண்ட மகாஜனங்களுக்கு நன்னீஸ்.
தீர்ப்பு பொதுவா அமையும் என்று ஓரளவுக்கு கிரஹிக்க முடிந்திருந்தாலும், personaly, i am not happy about it.
பல விஷயங்கள் கேள்விக்குறியாகியிருக்கிறது, இந்த தீர்ப்பினால்.
Post a Comment