recent posts...

Tuesday, January 30, 2007

சிறந்த புகைப்பட வித்தகர் - போட்டி

(பாரதிராஜா குரலில் படிக்கவும்)
-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+
என் அன்பு தமிழ் மக்களே, வணக்கம்!

அமெரிக்காவில் ஓடித்திருந்து வாழ்ந்து கொண்டிருந்த இந்த சர்வேசன், தன் காமிரா பார்வையில் க்ளிக்கி படம் பிடித்ததை உங்கள் பார்வைக்கு படையலாக்கினான்.
படங்களை பார்த்து திக்குமுக்காடிப்போன அன்பு உள்ளங்கள் சிலர், தங்களுக்கும் காமிரா கண் இருப்பதை சர்வேசனிடம் நவின்றார்கள்.
அந்த அன்பு உள்ளங்களின் கலைப் படையல்களை வைத்து காவியம் படைக்க வருகிறது, 'சர்வேசனின் - சிறந்த புகைப்பட வித்தகர் - போட்டி'.
-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+
:)

அதாகப்பட்டது, மேட்டர் இதாங்க.

நம் பதிவர்கள் மத்தியில் இருக்கும் கலைத் திறனை தட்டி எழுப்ப ஒரு போட்டி வைக்கலாம்னு இருக்கேன்.

போட்டி: சிறந்த புகைப்பட வித்தகர் போட்டி (for amateurs)
தலைப்பு: வெங்காயம், தக்காளி, உருளைக் கிழங்கு.

rule1: இந்த மூணையும் வச்சு ஒரு அழகான போடோ எடுக்கோணும். படத்துல மூணு ஐட்டமும் கண்டிப்பா இருக்கணும். வேறு எந்த ஐட்டமும் படத்தில் இருக்கவே கூடாது. எந்த ஜாதி/கலர்ல வேணா காய choose பண்ணிக்கலாம். காய் கட் பண்ணியும் இருக்கலாம், முழுசாவும் இருக்கலாம்.

rule2: மூன்று காய்களும் ஒன்றாக assemble செய்து, ஒரே frameல் க்ளிக்கி இருக்க வேண்டும். நிஜக் காய்கறிகள் உபயோகிக்கணும். (download செய்ததாய் இருக்கக் கூடாது). Adobe போன்றதை உபயோகித்து stitching செய்திருக்கக் கூடாது. Adobe போன்ற editing software உபயோகித்து சின்ன சின்ன டச்சிங் ( Originality போகாத அளவில்) செய்யலாம்.

rule3: உங்க பெயர் படத்தில் தெரியக் கூடாது. please don't add borders, if possible.

rule4: ஒருவர் ஒரு படம் மட்டுமே அனுப்பலாம்.

rule5: போட்டிக்கு அனுப்பும் படத்தை போட்டி வாக்கெடுப்பு முடியும் வரை வேறு எங்கும் வெளியிடக்கூடாது (no vote campaigning allowed :) ). Use your imagination. No other limitations.

பெயர் பதிவு செய்து கொள்ள கடைசி நாள்: Feb 3, 2007. (முதல் 25 விண்ணப்பங்கள் மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும்). போட்டியில் பங்கு பெற விரும்புவோர் பின்னூட்டம் மூலமாக பதிவு செய்ய வேண்டும். No anonys, sorry.
புகைப்படம் அனுப்ப கடைசி நாள்: Feb 11, 2007. படத்தை zip செய்து surveysan2005@yahoo.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.
வாக்கெடுப்பு: Feb 12 to Feb 19, 2007.
பரிசு: பின்னர் அறிவிக்கப்படும். based on number of participants (If anybody wants to sponsor a prize, let me know :) ). இம்முறையும், ஏதாவது ஒரு நல்ல காரியத்துக்கு பணம் செலவு செய்ய முயற்ச்சிக்கலாம்.

இதுக்கு மூவர்/நடுவர் குழுவெல்லாம் கிடையாது. மக்கள்ஸே வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கும் புகைப்படமே வெற்றி பெறும். எந்த புகைபடம் யார் அனுப்பியது என்பது போட்டியின் முடிவில் மட்டுமே அறிவிக்கப்படும்.

வெற்றி பெற்றவர், அவர் சொந்தமாக எடுத்த புகைப்படம் என்பதை prove செய்ய வேண்டும். பதிவர்களில் மூவர் குழு ஒன்று, அவர் இல்லத்திர்க்கு flying visit அடித்து, வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு படத்தில் இருப்பது போல் இருக்கிறதா என்று verify செய்ய வேண்டும். Flying-visit verification தினம் வரை, காய்களை கெட்டுப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது, புகைப்பட வித்தகரின் பொறுப்பு - ஹி ஹி ஹி. சும்மா, just kidding. அதெல்லாம் வேணாம். நம்பிக்கையே வாழ்க்கை!!! :)

ஓ.கே தானே?

ஏன் வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு? சும்மா, அதான் எல்லாருக்கும் ஈசியா கெடைக்கும். வேற ஐடியா இருந்தா சொல்லுங்க அடுத்த தடவ தூள் கெளப்பிடலாம்.

உங்கள் கணவன்/மனைவி, பிள்ளைகளுடன் சேர்ந்து மண்டையை குடைந்து ஒரு நல்ல படம் க்ளிக்கி அனுப்புங்க பாக்கலாம். ஜமாய்ங்க!

இதோ சும்மா ஒரு சேம்பிள்:



என்ன நெனைக்கறீங்க இந்த போட்டியப் பத்தி?




பொன்ஸ் மாதிரி நல்லுள்ளங்கள், வழக்கம் போல் ஒரு இலவச வெளம்பரம் கொடுத்தா நன்னாருக்கும்!!!

:)

கோதாவில் இறங்கி இருப்பவர்கள்:
1. anamika
2. செந்தழல் ரவி
3. நெல்லை சிவா
4. A n&
5. வெற்றி
6. k4karthik
7. Prince Ennares Periyar.S
8. பெருசு
9. சிறில் அலெக்ஸ்
10. Boston Bala
11. பிருந்தன்
12. சோத்துக்கட்சி
13. மாதங்கி
14. Radha Sriram
15. பொன்ஸ்
16. Appaavi
17. லட்சுமி
18. சு.கிருபா ஷங்கர்
19. Jeeves
20. காஞ்சி பிலிம்ஸ்
21. Aparnaa
22. ஒப்பாரி
23. Kohilavani Karthikeyan
24. ராமச்சந்திரன் உஷா
25. Shakthi

Sponsors:
1. Surveysan
2. கடலோடி Baranee

.

89 comments:

k said...

ரொம்ப நல்லப் போட்டி! i am participating!

//Adobe போன்ற editing software உபயோகித்து சின்ன சின்ன டச்சிங் செய்யலாம். ஒருவர் ஒரு படம் மட்டுமே அனுப்பலாம்.//

டச்சிங் செஞ்சா orginality இருக்காது..அந்த option வேண்டாமே!

SurveySan said...

anamika,

பிள்ளையார் சுழி போட்டிருக்கீங்க, நல்ல freshஆ வெங்காயம், தக்காளி, உர்ளை வாங்கிட்டு வந்து பளிச்னு எடுத்து அனுப்புங்க.

adobe கொஞ்சமா originality போகாத மாதிரி உபயோகிக்கலாம்னு சொல்லி இருக்கேன்.
என் வெங்காயப் படம் adobe touched. :)

ரவி said...

சார் இதென்ன கொடுமை ? வெங்காயம் தக்காளின்னு உருளைக்கிழங்குன்னு காஸ்ட்லி ஐட்டங்களை வெச்சு ஒரு போட்டி ? நாங்கள்ளாம் என்ன செய்யறது ?

வேற எதுவுமே தோனலையா புகைப்பட போட்டிக்கு...வெங்காயம்..:))))))

புகைப்படம் சிறப்பா இருக்கனும் அதானே...உருளைக்கிழங்கு வாயு..அதை கடையில் போட்டோ எடுத்தா கால் கிலோ வாங்கும்பான்...ப்ப்ப்ர்ர்ர்...

சரி விடுங்க...நான் வெங்காயத்தை வெச்சு போட்டோ எடுத்து அனுப்புறேன்...

Anonymous said...

தக்காளி நமீதா இடுப்புல நிக்கறமாதிரி இருந்தா பரவால்லையா ?

SurveySan said...

செந்தழல் ரவி,

//சரி விடுங்க...நான் வெங்காயத்தை வெச்சு போட்டோ எடுத்து அனுப்புறேன்...//

மூணு ஐட்டமும் படத்துல இருக்கணும்ங்க. கொஞம் அழுகினதா பாருங்க. சீப்பா இருக்கும் :)

பேர் சேத்துடரேன். வெங்காயம் மட்டும் போட்டு எடுத்தா, ரிஜக்ட் செய்யப்படும் :)

SurveySan said...

அனானி,

//தக்காளி நமீதா இடுப்புல நிக்கறமாதிரி இருந்தா பரவால்லையா ?//

நமீதா இடுப்புலயா. சூப்பர் concept. ஆனா, நான் மட்டும் தான் பார்த்து ரசிக்க முடியும். போட்டியில் சேர்க்க முடியாதுங்கோ. No அனானீஸ் :)

நெல்லை சிவா said...

சூப்பருங்க, ஏற்கனவே தேன்கூடு கதைப் போட்டிக்கு தலைப்பு வைப்பேன்னு சொன்னீங்க, அதுக்கு முன்னாடி போட்டோ போட்டி வச்சுட்டீங்க,

நம்மளயும் ஆட்டத்துக்கு சேத்துக்கோங்கண்ணா,

ஆமா, இந்த மூணு காய்கறியையும் போட்டு, பூரி மசால் பண்ணி, பூரியோட ஹோட்டல் 'சர்வேசபவன்'-னு போட்டு ஒரு போட்டோ எடுத்துரலாமா? :))

SurveySan said...

வாங்க நெல்லை சிவா சார்.

//ஆமா, இந்த மூணு காய்கறியையும் போட்டு, பூரி மசால் பண்ணி, பூரியோட ஹோட்டல் 'சர்வேசபவன்'-னு போட்டு ஒரு போட்டோ எடுத்துரலாமா? :)) //

பூரி மசாலா பண்ணா பார்சல் அனுப்புங்க, போடோ எல்லாம் எடுக்காதீங்க.
மசாலா பண்றதுக்கு முன்னாடி போடோ எடுத்து அனுப்புங்க :)

SurveySan said...

ஆரம்பிச்ச நேரம் சரியில்லையோ? தமிழ்மணம் down ஆயிடுச்சு.

ஹிட் கவுண்ட் கம்மி ஆயிடுச்சே :(

Anonymous said...

பெரியார் ரசிகன் என்ற முறையில் வெங்காயத்துக்கு முதல் இடம் கொடுத்து பெருமைப்படுத்தியதுக்கு நன்றி!
நமிதா ரசிகன் என்ற முறையில் தக்காளிக்கும் இடமளைத்ததற்கு நன்றி.
மும்தாஜ் ரசிகன் என்ற முறையில் உருளைக் கிழங்குக்கும் கடைசியிலாவது இடமளித்ததற்கு மிகவும் நன்றி. என் செல்பேசிக் காமிராவுடன் லோக்கல் பழமுதிர் நிலையத்தில் நானும் புகைப்படம்எடுக்கிறேன் அழகான ஒரு பெண் வாங்கும் பொழுது காமிராவை நீட்டி, அவர்கள் தவறாக நினைத்து எனக்கு நாலு தர்ம அடி அடித்தால் சர்வேசனே பொறுப்பு! என்னையும் ஆட்டத்துல சேத்துக்கோங்க நண்பரே!

SurveySan said...

செல்லா,

வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்குக்கு இவ்ளோ அர்த்தம் வருதோ. :)

தர்ம அடிக்கு நான் பொறுப்பாக முடியாது என்பதை இங்கு 'disclaimer' ஆக்குகிறேன் :)

புகைப்படத்தில் வெறும் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு மட்டும் தான் தெரியணும். மற்றவை ட்ரிம் செய்யப்படணும்.

வாங்கும் பெண்ணின் கை உருளைக்கிழங்கு மாதிரிதானங்க இருக்குன்னு சொன்னா, போட்டியில் இருந்து நீக்கப்படும். சொல்லிபுட்டேன் :)

camera phoneல quality பெருசா வராதே செல்லா? Adobeல தேத்திடுவீங்ளா?

Osai Chella said...

anuppivitten ungkal minnanjalukku!

Anonymous said...

my friend, a coimbatore photographer came. i ve shown this post. he is angry .. NO MURUNGAIKKAAI.. cause he is a Bhakiyaraj fan!

SurveySan said...

chella,

that was quick! சூப்பரா இருந்தது!
நன்றி!
பதில் மடல் அனுப்பி இருக்கிறேன்.

புகைப்படம் அனுப்ப, Feb 11th வரை அவகாசம் உள்ளது.

SurveySan said...

செல்லா,

//my friend, a coimbatore photographer came. i ve shown this post. he is angry .. NO MURUNGAIKKAAI.. cause he is a Bhakiyaraj fan!//

:) முருங்கைக்காய் சேர்க்காததர்க்கு காரணம் ஈ.மெயிலில் சொல்லி இருக்கிறேன்.

வெற்றி said...

சர்வேசா,
சபாஷ். நல்ல போட்டி. போட்டிக்கு நான் தயார். ஆனால் ஒரு சின்னச் சிக்கல். நான் வீட்டில் சமைப்பதில்லை. எனக்குச் சமையல் எல்லாம் தெரியாது.
Coffee/tea கூட ஒழுங்காய்ச் சமைக்கத் தெரியாதய்யா. அதனால் ஒவ்வொரு நாள் காலையிலும் Coffee கடையில் கால் கடுக்க பெரிய வரிசையில் நின்று coffee வாங்கிக் குடிப்பவன்.

அதனால் நீங்கள் சொல்லியுள்ள பொருட்கள் எதுவும் என்னிடம் இப்போது கைவசம் இல்லை. இப் போட்டிக்கு deadline ஒன்றும் இல்லை என்றால் இந்த வார இறுதியில் யராவது வீட்டிற்கோ அல்லது கடைக்கோ சென்று இப் பொருட்களைப் படம் பிடித்து அனுப்புகிறேன்.

SurveySan said...

வெற்றி,

உங்க பேர சேத்தாச்சு. (உள்ள வந்த ஒடன்ன கபால்னு புடிச்சு போட்ருவமில்ல :) )

Feb 11 (sunday) வரைக்கும் நேரம் இருக்குங்க. மார்கெட்டுக்கு போய் அழகான தக்காளி, வெங்காயம், உருளை எடுத்துட்டு வாங்க.

சட்ட திட்டங்களை ஒரு தரம் படிச்சுடுங்க. :)

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
k4karthik said...

அட.. சொன்ன மாதிரி ஆரம்பிச்சிட்டீங்களே...

நானும் கலந்துக்கொள்கிறேன்..... என் பெயரையும் சேர்த்துக்கோங்க...

SurveySan said...

k4karthik,

வாங்க வாங்க. பேரை சேத்தாச்சு.

rules படிச்சுடுங்க.

ஜமாய்ங்க! :)

PRINCENRSAMA said...

நாண்டா! வர்றண்டா!
என்.ஆர்.எஸ் பேரண்டா!
டிஜிட்டல் கேமரா தொட்டு
படம் புடிக்க வர்றண்டா!
வர்றண்டா! வர்றண்டா!

(நடுவர்களை இப்படி மரியாதை இல்லாமல் அழைப்பதாக எண்ன வேண்டாம். நானும் போட்டிக்கு வருகிறேன் என்பதையே எங்க ஊரு ஸ்டைலில் சொன்னேன்)

SurveySan said...

prince ennares periar.s, (செம பேருங்க),

//நாண்டா! வர்றண்டா!
என்.ஆர்.எஸ் பேரண்டா!
டிஜிட்டல் கேமரா தொட்டு
படம் புடிக்க வர்றண்டா!
வர்றண்டா! வர்றண்டா!//

வாங்கோ! குந்துங்கோ!
தக்காளி வாங்குங்கோ
வெங்காயம் உரிச்சுக்கினு
உருளையும் சேருங்கோ
டிஜிட்டல் பொட்டி எடுத்து
பலவிதமா க்ளிக்குங்கோ
எடுத்த படத்த அனுப்புங்கோ
அப்பாலிக்கா அப்பாலிக்கா
குருமா பண்ணி தின்னுங்கோ!

:)

ஆதிபகவன் said...

என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நானும் என் வித்தையை காட்ட முயற்ச்சி செய்கிறேன்.

SurveySan said...

ஆதிபகவன், உங்களையும் ஆட்டத்துல சேத்தாச்சு.

வித்தையை பார்க்க ஆவலுடன் காத்திருக்கும்,
சர்வேசன்

:)

ரூல்ஸ் படிச்சுடுங்க!

சிறில் அலெக்ஸ் said...

என்னையும் சேத்துக்குங்க.

SurveySan said...

சிறில்,சேத்தாச்சுங்க.

டிப்ஸ்: Indian groceriesல வாங்காம, whole foods மாதிரி எடத்துல வாங்கினீங்கன்னா, தக்காளி கொழு கொழுன்னு பாக்கவே அழகா இருக்கும் :)

வெற்றி said...

சர்வேசன்,
ஒரு சின்னச் சந்தேகம்.
எத்தனை உ.கி, தக்காளி, வெங்காயம் பயன்படுத்தலாம்? தலா ஒன்றா அல்லது ஏதேனும் விதிகள் உண்டா?

SurveySan said...

வெற்றி,

படத்துல மூணு காயும் தெரியணும். எவ்வளவு என்பது பொருட்டல்ல.

அதே சமயம், முழுசாவும் இருக்கலாம், வெட்டியும் இருக்கலாம், சின்ன வெங்காயமாவும் இருக்கலாம், பெரிய வெங்கமாவும் இருக்கலாம்.. etc.. etc..

:)

thiru said...

நம்ம வேடிக்கை பார்க்க மட்டுமே! போட்டிக்கு இல்லங்க! கலந்துகொள்பவர்களுக்கு வாழ்த்துக்கள்! தக்காளி, உருளைக்கிழங்கு, வெங்காயம் எல்லம் விலையேறிட போகுது :)))

SurveySan said...

திரு,

என்ன இப்படி சொல்லிட்டீங்க?
சும்மா ஜாலியா கோதால எறங்குங்க.

lets help the farmers :)

Boston Bala said...

naanum varalaama?

SurveySan said...

Boton Bala,

//naanum varalaama?//

கண்டிப்பா வரலாம். சேத்துட்றேன்.

ஆமா, உங்க '100' பிரச்சனை முடிஞ்சுதா?

பிருந்தன் said...

நானும் வருகிறேன் போட்டிக்கு முற்சிக்கு வாழ்த்துக்கள்.

SurveySan said...

பிருந்தன்,

சேத்தாச்சு உங்களையும்.

உங்க profile படம் சூப்பர்.

சோத்துக்கட்சி said...

அடடா, எழுத சோம்பல் பட்டு, சும்மா படிச்சுகிட்டு இர்க்கிற எனக்கு, இந்த விளாட்டு ஒகேப்பா..

நானும் வாரேன்..

SurveySan said...

சோத்துக்கட்சு, அடிச்சு தூள் கெளப்புங்க!

மாதங்கி said...

ரொம்ப சுவாரசியமாக இருக்கிறது. என் பெயரையும் சேர்த்துக்கொள்முடியுமா?

SurveySan said...

மாதங்கி,

வருகைக்கு நன்றி!

உங்க பேரையும் சேத்தாச்சு.

Radha Sriram said...

இந்த விளையாடுக்கு என்னையும் சேதுக்கோஙக சர்வேசன்!!!என்ன மக்கள் எல்லாரையும் நிக்க வச்சு cheeseநு இளிக்க வச்சு படம் புடிச்சாதான் மனசுக்கு ஒரு திருப்தி இருக்கும்!!! இருந்தாலும் try பண்ணரேன்

SurveySan said...

Radha Sriram,

விளையாட்டுக்கு உங்களையும் சேத்தாச்சு.

//என்ன மக்கள் எல்லாரையும் நிக்க வச்சு cheeseநு இளிக்க வச்சு படம் புடிச்சாதான் மனசுக்கு ஒரு திருப்தி இருக்கும்!!!//

மக்கள்ஸ எடுக்கரத விட தக்காளிய எடுக்கரது ஸ்வாரஸ்யமா இருக்கும். வேண்ணா, தக்காளிக்கு வாயும், வெங்காயத்துக்கு மீசையும் இருக்கர மாதிரி கட்டிங் பண்ணி எடுக்கலாம் :)

வெற்றி said...

என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை! ஆகப் பதின்நான்கு பேர் தான் இதுவரை போட்டியில் குதித்துள்ளனரா?! :)))

பி.கு :- இது சும்மா இப் பதிவை தமிழ்மண முகப்பில் வரச் செய்யப் போடப்பட்ட பின்னூட்டம்.

SurveySan said...

வெற்றி,

பின்னூட்ட கயம்ஸுக்கு நன்றி! :)

25 சீக்கிரம் வந்துடுவாங்க. யாரும் இல்லன்னா, என் பேரும் சேத்துடரேன் :)
கவலய வுடுங்க.

Anonymous said...

why no anonys?

SurveySan said...

//why no anonys?//

no big reasons. It's easy that way to get only one submission per person/blogger.

SurveySan said...

ஆமாம், டிஜிடல் கேமிரா இல்லாதவங்க பங்கு பெறுவது கஷ்டமாச்சேன்னு நண்பர் ஒருவர் சொன்னாரு.

வெளியூர்ல இருக்கரவங்க பெரும்பாலும் வெச்சிருப்பாங்க.

ஊர்ல இருக்கரவங்க டிஜிடல் கேமிரா இல்லாததனால சேர முடியலன்னா பின்னூடுங்க, உங்க ஊர்ல இருக்கரவரு யாராவது வாடகைக்கு கேமிரா தருவாங்களான்னு பாக்கலாம்.

(கேமிராக்கு திரும்ப கிடைக்க, சர்வே கமிட்டி பொறுப்பாகாது :) )

aparnaa said...

நல்ல தலைப்பு!!
என்னயும் சேர்துகோங்க...
let me give a try ;-)

பொன்ஸ்~~Poorna said...

பின்னூட்டங்களை இன்னும் படிக்கலை.. என்னையும் சேர்த்துக்குங்க.. வெங்காயம் தக்காளி ரெண்டுமே எனக்கும் ரொம்பப் பிடிக்கும். உருளைக்கிழங்கும் எனக்கும் ஆகாது. இருந்தாலும் பார்க்கலாம்..

தலைவா,
//பொன்ஸ் மாதிரி நல்லுள்ளங்கள், வழக்கம் போல் ஒரு இலவச வெளம்பரம் கொடுத்தா நன்னாருக்கும்!!!//
உள்குத்தாக் கீது..
உங்களுக்கு விளம்பரம் கொடுக்க ரவி, வெட்டிப்பயம் மாதிரி எவர்ஸ்டார் பதிவர்களே இருக்காங்களே.. நான் வேறயா?!! நானே செல்லா பதிவப் பார்த்து தான் இங்க வந்தேன் :)

Anonymous said...

SurveySan saaaaaarrr..... நம்மளயும் இந்த ஆட்டத்தில சேர்துகோங்கோ....

அண்ணாச்சி கடைல சொல்லி எல்லாம் ஒரு கால் கிலோ ready பண்ணணும்!!!

Anonymous said...

//பொன்ஸ் மாதிரி நல்லுள்ளங்கள், வழக்கம் போல் ஒரு இலவச வெளம்பரம் கொடுத்தா நன்னாருக்கும்!!!//

வெளம்பரம் Ready... போட்டியை என் பதிவிலிருந்து லிங்கி உள்ளேன்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நானும் முயற்சி செய்யறேன்.

Anonymous said...

கொஞ்சம் தாமதமாகப் பார்த்துவிட்டேன். இன்னுமும் இடம் கிடைக்கும் என்றால், என் பெயரையும் சேர்த்துக்கொள்ளவும்.

மின்னஞ்சல் முகவரி: shankarkrupa @ yahoo dot com
க்ருபா

SurveySan said...

பொன்ஸ்,

//உள்குத்தாக் கீது..
உங்களுக்கு விளம்பரம் கொடுக்க ரவி, வெட்டிப்பயம் மாதிரி எவர்ஸ்டார் பதிவர்களே இருக்காங்களே.. நான் வேறயா?!! நானே செல்லா பதிவப் பார்த்து தான் இங்க வந்தேன் :)
//

உள்குத்து இல்லீங்க. உங்க விளம்பரம் தான் very effectiveங்க :)

செல்லாவிர்க்கு நன்றிகள். நான் இன்னும் பாக்கல அத. wordpress down இப்போ.

SurveySan said...

appaavi,

உங்களயும் சேத்தாச்சு. விளம்பரத்திர்க்கு நன்றிகள் பல!

SurveySan said...

லட்சுமி,

வாங்க. உங்களயும் ஆட்டத்துல சேத்தாச்சு.

Anand V said...

d1234நானும் முயற்சி செய்யறேன்

SurveySan said...

A n&, முயற்சி திருவினையாக்கும்.

நன்றி for the பங்கேர்ப்பு.

பெருசு said...

அண்ணா! என்னையும் விளையாட்டுக்கு சேத்துக்கங்க.

வெற்றி said...

சர்வேசா,

ஐயோ, A n& வும் போட்டியில் குதிக்கிறாரா? ஐயோ தெய்வமே ஆளை விடய்யா, நான் போறேன்!:)) சும்மா...
A n& வின் புகைப்படங்களுக்கு நான் பரம இரசிகனே! இப்படி பெருந்த் தலைகள் எல்லாம் வந்து போட்டியில் குதிக்க பயமா இருக்கு. சரி... பார்ப்போம்.

SurveySan said...

சேத்தாச்சு பெருசு.

ஜமாய்ங்க!

SurveySan said...

வெற்றி,

//இப்படி பெருந்த் தலைகள் எல்லாம் வந்து போட்டியில் குதிக்க பயமா இருக்கு. சரி... பார்ப்போம்//

மனம் தளர வேண்டாம். கொஞ்சம் creativeஆ திங்க் பண்ணி ஏதாவது செஞ்சு கலக்குங்க.

A n&, உங்க பதிவில் உள்ள படங்கள் நல்லா இருக்கு. Tips ஏதாவது கொடுங்க மத்தவங்களுக்கும். ஆமாம், நீங்க professional photographer இல்லியே?

ஏன்னா, கோதால இருக்கரது என்ன மாதிரி பொழுதுபோவ படம் புடிக்கரவங்க. :)

Anonymous said...

நம்மளயும் ஆட்டத்தில் சேர்துகிட்டதுக்கு நன்றிங்கோவ்...

Don't tell this table lamp dealing to others.. :-)

Iyappan Krishnan said...

நம்ம பேரையும் சேத்துக்கோங்க அண்ணாச்சி
அப்பாலிக்கா அடிக்கடி இந்த மேறீ போட்டோ காண்டெஸ்ட் நட்துங்கோ அண்ணாச்சி

k4karthik said...

ஆஹா.. போட்டி பயங்கரமா இருக்கும் போல..

SHIVAS said...

அண்ணே நானும் இந்த ஆட்டத்துக்கு வரேன்ணே. பிலீஸ் அண்ணே. ஆனா வெங்காயத்தியும்,உ.கிழங்கியும்,தக்காளியும் வச்சி என்னா செய்றதுந்தான் ஒன்னும் பிரியில அண்ணே. சமைக்க சொன்னா பரவயில்லை, போட்டா எடுக்க சொல்ரீக. சரி பரவயில்லை அண்ணே என்னோடைய பேரையும் கடைசியா போட்டுக்கங்கண்ணே. அட்வான்ஸ் நன்றிங்கோ.

aparnaa said...

நானும் வரேனே...

Anand V said...

வெற்றி, சர்வேசன்
சரி. நான் என் நாமினேஷனை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். :-)
professional இல்லைங்க, ஏதோ பொழுது போகாத பொம்முவாய் படமெடுக்கறதுதான்.

SurveySan said...

A n&, If you don't make a living out of photography, you are considered non-professional according to my rules :)

ஆட்டத்துல இருங்க என்று கேட்டுக் கொள்கிறேன். let me know if you think otherwise.

ஆட்டத்தின் சட்ட திட்டங்களையும் பாருங்க with regards to usage of Adobe and other editing tools.

வெற்றி said...

A n&

/*வெற்றி, சர்வேசன்
சரி. நான் என் நாமினேஷனை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். :-)*/

ஐயய்யோ, A n& , உங்களின் புகைப்படங்கள் பலவற்றைப் பார்த்து இரசித்திருக்கிறேன். அதனால் தான் உங்களைப் போல எல்லாம் எடுக்க எனக்கு வராது என்று சொல்ல விழைந்தேன். மற்றும்படி, நீங்கள் போட்டியில் இருந்து விலக வேண்டும் எனும் எண்ணத்தில் இல்லை. என் எழுத்தில் அப்படித் தொனித்திருந்தால் தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள். :))
கட்டாயம் உங்கள் போன்ற திறமைசாலிகளும் கலந்து கொண்டால்தான் ஆட்டமும் களைகட்டும். அத்துடன் இது சும்மா ஒரு fun க்குத் தானே!

ஒப்பாரி said...

நானும் முயற்சி செய்து பார்கிறேன். என்னையும் சேர்த்துக்கோங்க.

SurveySan said...

Jeeves,

//நம்ம பேரையும் சேத்துக்கோங்க அண்ணாச்சி
அப்பாலிக்கா அடிக்கடி இந்த மேறீ போட்டோ காண்டெஸ்ட் நட்துங்கோ அண்ணாச்சி//

போட்டாச்சு அண்ணாச்சி. அடிக்கடி வெக்கலாம். இது எப்படி போவுதுன்னு மொதல்ல பாத்துட்டு பிரச்சனை (booth capturing, violence,) ஒண்ணும் பெருசா வரலன்னா போட்ருவோம் :)

SurveySan said...

காஞ்சி பிலிம்ஸ்,

//அண்ணே நானும் இந்த ஆட்டத்துக்கு வரேன்ணே. பிலீஸ் அண்ணே. ஆனா வெங்காயத்தியும்,உ.கிழங்கியும்,தக்காளியும் வச்சி என்னா செய்றதுந்தான் ஒன்னும் பிரியில அண்ணே. சமைக்க சொன்னா பரவயில்லை, போட்டா எடுக்க சொல்ரீக. சரி பரவயில்லை அண்ணே என்னோடைய பேரையும் கடைசியா போட்டுக்கங்கண்ணே.//

ஒரு வாரம் டைம் இருக்கேங்க. நல்லா எல்லா ப்ரேக்டீஸ் பண்ணுங்க :)

SurveySan said...

aparnaa,

//நானும் வரேனே... //

வாங்களேன்.

SurveySan said...

ஒப்பாரி, (தல, என்ன பேரு இது?)

//நானும் முயற்சி செய்து பார்கிறேன். என்னையும் சேர்த்துக்கோங்க.//

சேத்தாச்சு.

Anonymous said...

பருசு எவ்ளோங்க ?

Anonymous said...

பரிசு என்ன சாமியோவ்?

SurveySan said...

பரிசு விரைவில் அறிவிக்கப்படும் சார்!

(ஒரு மூணு பேர தேத்திக் கொண்டாங்க. உங்கள தனியா கவனிக்கறேன் :) )

SurveySan said...

kohilavani karthikeyan,

welcome to the contest and good luck!

last day for submitting the picture is Sunday, Feb 11th 11:59PM IST.

SurveySan said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. அப்பாடா.. எல்லாருக்கும் ஒரி ரிமைண்டர் அனுப்பியாச்சு.

Kokilavani and காஞ்சி பிலிம்ஸ்,
உங்க மின் அஞ்சல் இல்ல. சோ, இங்க படிச்சுக்கோங்க. இது தான் மத்தவங்களுக்கு அனுப்பினது.

//
வணக்கம்.

சர்வேசன் புகைப்பட போட்டி, புகைப்படம் அனுப்ப கடைசி நாள் Feb 11 2007 11:59 pm IST.
போடோவை surveysan2005 at yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

அனுப்பிய புகைப்படத்தை போட்டி முடிவுகள் அறிவிக்கும்வரை நீங்கள் வேறு எங்கும் வெளியிடக்கூடாது.

வாக்கெடுப்பு Feb 12 அன்று ஆரம்பிக்கப்படும்.

நன்றிங்கோ!

போட்டி விவரங்கள் இங்கே: போட்டி
//

SurveySan said...

போட்டியில் உள்ள 23 பேரும் , தாங்கள் காய்கரிகள் வாங்கிய விதம், படம் பிடித்த விதம் இதெல்லாம் ஸ்வாரஸ்யமா ஒரு பதிவா போட்டா நல்லாதான் இருக்கும். முயலுங்கள்!

இன்னும் 2 பேர் குறையுது. ஆனால், விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் நேரம் முடிவடைந்துவிட்டது.

(பெரிய ரெகமண்டேஷனோட வந்தா, யோசிக்கலாம். இல்லன்னா, சர்வேசன சைட்ல கவனிச்சாலும் சர்வே கமிட்டில சொல்லி ஏதாவது செய்ய முடியுதுன்னா பாக்கரேன் :) )

SHIVAS said...

நம்மளையும் ஆட்டத்துக்கு சேத்துகுனத்துக்கு மிக்க நன்றிங்கோ.

SurveySan said...

காஞ்சி பிலிம்ஸ்,

சேந்துக்கனதுக்கு நன்றிங்கோ.

படம் புடிச்சாச்சா?

SurveySan said...

போடோ அனுப்ப மறவாதீர்!

ஒருத்தர் தான் அனுப்பியிருக்காங்க இதுவரை.

24 பேரும் டைம்க்கு அனுப்பலன்னா, நானே பினாமி பேர்ல போடவேண்டியதாயிடும் :)

SurveySan said...

அஞ்சு போடோ வந்தாச்சு. ஒவ்வொண்ணும் ஒவ்வொரு விதம். அருமை.

இன்னும் அனுப்பாதவங்க அனுப்பிடுங்க.

Shakthi said...

போட்டீல சேந்துக்க இன்னும் இடம் இருக்கா?

SurveySan said...

வாங்க Shakthi. கடைசியா ஒரு இடம் கொக்கி போட்டு பிடிச்சு வச்சிருக்கேன்.
சரியான நேரத்துல தான் வந்திருக்கீங்க.

ஞாயிறு 11:59 pm IST க்குள்ள படம் புடிச்சு அனுப்பினா, ஆட்டத்துல சேத்துக்கறேன்.

சரியா?

சிறில் அலெக்ஸ் said...

தல... கொஞ்சம் லேட் ஆகுது ப்ளீஸ் கரடி வித் மி.

SurveySan said...

சிறில்,

//தல... கொஞ்சம் லேட் ஆகுது ப்ளீஸ் கரடி வித் மி.//

சாயங்காலத்துக்குள்ள அனுப்பிருங்க. நன்றி!

(நானும் பிரியாணி சாப்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கரேன்:))

SurveySan said...

16 த.வெ.உ படம்ஸ் வந்திருக்கு. எல்லாத்தையும் போட்டு குருமா.. சீ... பதிவ போடணும். இன்னும் ஒரு 2 hoursல வாக்கெடுப்பு பற்றிய அறிவிப்பு வரும்.

நன்றி!

Adiya said...

via k4karthik blog.
:) oru chinna asai dhaan. i know date is barred for the contest.. if inclusion can happen u can try out my entry also.

http://static.flickr.com/119/306914231_354f08c7cd_o.jpg

:) any thing is ok.