recent posts...
Thursday, January 18, 2007
திருட்டு CD/VCD/DVD/MP3 வியாதியும், நமது மூதாதையரும்.
© © ©
இன்று நாளிதழில் படித்த செய்தி - சென்னையில் "Moser Baer" என்ற நிறுவனம், 34 ரூபாய்க்கு DVDக்களும், 28 ருபாய்க்கு CDக்களும் விற்பனை செய்கிறார்களாம்.
இப்படி குறைந்த விலையில் விற்பனை செய்வதன் மூலம், கள்ளச் சந்தையில் புழங்கும் திருட்டு CD/VCD/DVDக்களை மக்கள் வாங்காமல் Original copy வாங்குவார்களாம்.
என்னதான் சட்ட திட்டங்கள் ஏற்றி anti-piracy கெடுபிடி செய்தாலும், நம் மக்கள் ருசி கண்ட பூனைகள். சந்து பொந்தில் எல்லாம் புகுந்து அடி மாட்டு விலையில் கிடைக்கும் கள்ளச் சந்தை பொருளை வாங்காமல் இருந்ததில்லை.
தேவா முதல், ஸ்ரீகாந்த் தேவா வரை யார் இசை அமைத்தாலும் ஓடிச் சென்று MP3க்களை download செய்யும் கள்வர்கள் நம்மில் மிகையானவர்கள். (என்னது இல்லியா? நெஞ்சத் தொட்டு சொல்லு ராசா).
சரி, இப்படி அடி மாட்டு விலைக்கு இசைத் தட்டுக்கள், திரைப்பட DVDகள் கிடைத்தாலும், நாம் திருந்தி விடுவோமா என்ன?
28 ரூபாய்க்கு Original கிடைக்குது சரி. 10 ரூபாய்க்கு திருட்டு DVD கிடைத்தால் நம்மாளு அதை அல்லவா வாங்குவான்?
இந்த கயமை, ஊழல், திருட்டு வழி, சுலப வழி, நம் இரத்தத்தில் ஊறியல்லவா இருக்கு? அவ்வளவு சுலபத்தில் மாறுமா? மாறுவோமா? மாறவிடுவோமா?
அதுவே இன்றைய சர்வே. யோசித்து வாக்களியுங்கள்.
நல்லதா எதாவது கருத்தையும் பின்னூடுங்கள்.
Originalஐ ஆதிரிப்போம். Duplicateஐ ஒதுக்குவோம்! ஜெய்ஹிந்த்!
Subscribe to:
Post Comments (Atom)
31 comments:
டெஸ்ட்.
முதல் அவுங்களை ஒரிஜினல் ம்யூசிக் போடாமே திருட்டு ம்யூசிக் போடறத நிறுத்த ஸொல்லு. நாங்க ஒரிஜினல் டிவிடி வாங்காமே திருட்டு டிவிடி வாங்குறத நிறுத்திடுறோம்
அனானி,
//முதல் அவுங்களை ஒரிஜினல் ம்யூசிக் போடாமே திருட்டு ம்யூசிக் போடறத நிறுத்த ஸொல்லு. நாங்க ஒரிஜினல் டிவிடி வாங்காமே திருட்டு டிவிடி வாங்குறத நிறுத்திடுறோம் //
ஆஹா அருமையான வாதம் :)
தல, அவங்க ஒரிஜினல் ம்யூசிக் போடலன்னா, அத வாங்காதிங்க.
திருட்டு மார்க்கெட்ல வாங்கி எவனயோ ஏன் பணக்காரனாக்கறீங்க?
திருந்தணும் தல. நம்மளே இப்படி இருந்தா, நம்ம சந்ததி எல்லாம் இன்னும் என்னென்ன பண்ணுமோ.
மிகவும் தொடக்ககாலத்தில் திருட்டு வீசிடிகளை வாங்கினேன். ஆனால் ஒரிஜினல் வாங்கத் தொடங்கி ஆண்டுகளாகின்றன. விலை குறைவாகக் கிடைக்கிறது. நூறு ரூவாய்க்கு ஒரிஜினல் டிவிடி கிடைத்தால் கூட வாங்கத் தயார். ஆனால் இன்னமும் சிலர் 425, 600 என்று விலை போடும் போது எரிச்சலாக வருகிறது. பேராசை பிடித்தவர்கள். இவர்களாலும் திருட்டு விசிடி பெருகுகிறது. நல்லவேளையாக bayshore, movieland போன்றவர்கள் குறைந்த விலையில் ஒரிஜினர் டிவிடிகள் கொடுக்கிறார்கள். தனிப்படமென்றால் 50. இரண்டு படங்கள் என்றால் 70 அல்லது 90. இது போதுமே. ஆகையால் என்னிடம் இருக்கும் விசிடி டீவிடீகளில் 90 சதவீதம் ஒரிஜினல்தான். அந்த 10 சதவீதம் ஆரம்பகாலத்தில் வாங்கப்பட்டதாக இருக்கும்.
அது சரி...சென்னையில் இந்தக் கடை எங்கே இருக்கிறது? அடுத்த வாரக்கடைசியில் சென்னை வரலாம் இருக்கிறேன். அப்பொழுது moser baer கடைக்கும் ஒரு விசிட் போடலாம் என்று நினைக்கிறேன்.
இந்த விலைக்கும் கிடைக்கும் பொழுது திருட்டு விசிடி, டிவிடிக்குப் போவது மிகத் தவறு.
G.ராகவன்,
//மிகவும் தொடக்ககாலத்தில் திருட்டு வீசிடிகளை வாங்கினேன். ஆனால் ஒரிஜினல் வாங்கத் தொடங்கி ஆண்டுகளாகின்றன. விலை குறைவாகக் கிடைக்கிறது. நூறு ரூவாய்க்கு ஒரிஜினல் டிவிடி கிடைத்தால் கூட வாங்கத் தயார். //
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. ஆனது ஆச்சு. இனி ஒரிஜினல் வாங்குவதுதான் சரி என்பது தான் என் கருத்தும்.
அடுத்த பதிவர் சந்திப்பில் டூப்ளிகேட் வச்சிருக்கரவங்க எல்லாரும் திருட்டு CDக்களை கொண்டுவந்து ஒரு bon-fire செஞ்சா நல்லா இருக்கும்.
//ஆனால் இன்னமும் சிலர் 425, 600 என்று விலை போடும் போது எரிச்சலாக வருகிறது. பேராசை பிடித்தவர்கள். இவர்களாலும் திருட்டு விசிடி பெருகுகிறது//
உண்மைதான். இந்த மாதிரி அதிக விலை சி.டி களை எல்லோரும் ஒதுக்கினால் காலப்போக்கில் திருந்துவார்கள். but, sometimes high-quality content இருந்தால், அதிக காசு கொடுப்பதும் நியாயமே.
//அது சரி...சென்னையில் இந்தக் கடை எங்கே இருக்கிறது? அடுத்த வாரக்கடைசியில் சென்னை வரலாம் இருக்கிறேன். அப்பொழுது moser baer கடைக்கும் ஒரு விசிட் போடலாம் என்று நினைக்கிறேன்.
//
Moser Baer என்பவர்கள் manufacturers. அநேகமாக எல்லா கடைகளிலும் இவர்களின் தகடுகள் கிடைக்கும் என்று தான் நினைக்கிறேன்.
இதைப் பற்றி வந்த செய்தி: Click here
படத்தை தியேட்டர்ல பார்க்கனும், அப்படி இல்லையா ஒரிஜினல் டிவிடி வாங்கி பார்க்கனும். அதென்ன திருட்டு விசிடி / டிவிடி. அதுல பார்க்கிறதுக்கு
பார்க்காமலே இருக்கலாம்.
HD டிவிடி, ப்ளூரே டிவிடி வந்தாச்சு. விசிடி இன்னும் இருக்கா என்ன?
ஆதிபகவன்,
//HD டிவிடி, ப்ளூரே டிவிடி வந்தாச்சு. விசிடி இன்னும் இருக்கா என்ன? //
விசிடி இன்னும் நம்ம ஊர்ல இருக்குங்க. ப்ளூரே HD எல்லாம் பிரபலம் ஆக இன்னும் சில வருஷங்கள் ஆகும்.
அதுக்குள்ள திருட்டு ப்ளூரே, திருட்டு HD யும் வந்துடும் பாருங்க :)
//விசிடி இன்னும் நம்ம ஊர்ல இருக்குங்க. ப்ளூரே HD எல்லாம் பிரபலம் ஆக இன்னும் சில வருஷங்கள் ஆகும்.
அதுக்குள்ள திருட்டு ப்ளூரே, திருட்டு HD யும் வந்துடும் பாருங்க :) //
அதுலேயுமா!!!!?
ஆதிபகவன்,
//அதுலேயுமா!!!!? //
கண்டிப்பாங்க.
மனிதம் குறையுது.
வர வர, Virtues னா என்ன, எவ்ளோ வெலைன்னு கேப்பாங்க!
//தேவா முதல், ஸ்ரீகாந்த் தேவா வரை யார் இசை அமைத்தாலும் ஓடிச் சென்று MP3க்களை download செய்யும் கள்வர்கள் நம்மில் மிகையானவர்கள். (என்னது இல்லியா? நெஞ்சத் தொட்டு சொல்லு ராசா).//
No NEVER.Only JLO,Black eyed peas...etc...hehe
அனானி,
//No NEVER.Only JLO,Black eyed peas...etc...hehe//
ஆஹா.. தேவா கூட மன்னிச்சு விட்டுடுவாரு தல.
ஆனா, JLO, Black eyed peas, இவங்களுது சுட்டா, வெள்ளக்கார மாமா சும்மா விட மாட்டாரு. download செய்யரவங்கள தேடி வந்து ஆப்படிக்கராங்களாம். சாக்குரத.
ஹ்ம். மூணாவது இதுவரைக்கும் யாருமே சூஸ் பண்ல.
வாழ்க பாரதம்!
(சரி, தூக்கம் வருது. நாளைக்கு சந்திப்போம்).. வோட்டு போடுங்க. பின்னூடுங்க. வர்டா!
//ஆஹா.. தேவா கூட மன்னிச்சு விட்டுடுவாரு தல.
ஆனா, JLO, Black eyed peas, இவங்களுது சுட்டா, வெள்ளக்கார மாமா சும்மா விட மாட்டாரு. download செய்யரவங்கள தேடி வந்து ஆப்படிக்கராங்களாம். சாக்குரத.//
don't worry.There is a scapegoat who will take all the blame for me.hehe.enna thala...we all smart people ok!we won't get caught.
ஒரிஜினல் வாங்க வேண்டும் என்ற எண்ண கொண்டவர்களுக்கு இது உதவும்.
(என்னைப் போன்றவர்களுக்கு)
10ரூபாய்கு ஒரிஜினல் வித்தா கூட பக்கத்து வீட்ல ஓ சி வாங்கி பாக்குற ஆளும் இருக்கு.
//முதல் அவுங்களை ஒரிஜினல் ம்யூசிக் போடாமே திருட்டு ம்யூசிக் போடறத நிறுத்த ஸொல்லு. நாங்க ஒரிஜினல் டிவிடி வாங்காமே திருட்டு டிவிடி வாங்குறத நிறுத்திடுறோம்//
இதேதான் நானும் சொல்ல வந்தேன்...
ஒழுங்கான கதையோட எத்தனை படம் வருது...திருப்பி திருப்பி அதே கதைக்கு வேற வேற கலர் அடிச்சு படம் எடுக்கறாங்க...இந்த படங்கள திருட்டு விசிட ல பாக்கறதே அதிகம்....
anony,
//don't worry.There is a scapegoat who will take all the blame for me.hehe.enna thala...we all smart people ok!we won't get caught.
//
haha. I dont care anyway. Beware. The mamas here are very shrewd. They may be tracking you already if you are constantly downloading. To deter people, they just random 'arrests' - so, depends on your luck you may or may not get caught.. :)
வெங்கட்ராமன்,
//ஒரிஜினல் வாங்க வேண்டும் என்ற எண்ண கொண்டவர்களுக்கு இது உதவும்.
(என்னைப் போன்றவர்களுக்கு)
10ரூபாய்கு ஒரிஜினல் வித்தா கூட பக்கத்து வீட்ல ஓ சி வாங்கி பாக்குற ஆளும் இருக்கு. //
ஓசியில் இறவல் கொடுப்பதும் வாங்குவதும் பெரிய குத்தம் இல்ல. காபி செய்வது தான் தவறு.
கொஞ்சம் யோசிச்சம்னா எல்லாரும் காபி அடிப்பதை குறைத்துக் கொள்ள வாய்ப்புகள் அதிகம்.
Syam,
//இதேதான் நானும் சொல்ல வந்தேன்...
ஒழுங்கான கதையோட எத்தனை படம் வருது...திருப்பி திருப்பி அதே கதைக்கு வேற வேற கலர் அடிச்சு படம் எடுக்கறாங்க...இந்த படங்கள திருட்டு விசிட ல பாக்கறதே அதிகம்.... //
நியாயமா இதெல்லாம்? பிடிக்காதத பாக்காம இருக்கலாம். தப்பில்ல. ஆனால், பிடிக்காதத ஏன் காபி அடிச்சோ திருட்டு விசிடிக்காரன பணக்காரன் ஆக்கியோ பாக்கணும்?
இப்ப நம்மள்ள programmers நிறைய பேர் இருப்பாங்க. அங்க இங்க தேடி எடுத்து வெட்டி ஒட்டி code எழுதாமயா இருக்காங்க? வெட்டி ஒட்டினதால சம்பளம் கம்மியா வாங்க முடியுமா?
Babble,
//தல,
இந்த பழக்கத்த ஆரம்பிச்சி வச்சது, பேராசை பிடிச்ச சிடி/டிவிடி விற்கும் நிறுவனங்கள் தான். அவங்க வச்ச யானை விலை/குதிரை விலை தான் கள்ள வியாபாரம் பெருக காரணம்//
யானை விலைல விக்கரதுக்கும் காரணம் இருந்தது. செய்மான செலவு ஜாஸ்தி அப்ப. இப்ப அதெல்லாம் குறையுது. ஸோ, இனி ஒரிஜினல் மட்டும் வாங்க முயற்சிக்கலாம்.
//சாமி/மம்மி சத்தியமா இதுவரைக்கும் இல்ல, இனியும் இருக்காது. (5%)//
ஆஹா யாருங்க சார் அது. கொஞம் விளக்கமா, எப்படி முடிந்தது இந்த கட்டுப்பாடான நிலைன்னு எடுத்து சொல்லுங்களேன். (சீரியஸா கேக்கரேங்க)
சாமி/மம்மி சத்தியமா இதுவரைக்கும் இல்ல, இனியும் இருக்காது 5 %
ஹாஹா நம்பாதேள். ஏதோ ஆத்திக கோஷ்டி போல தெரியுது.
பேசமால் எல்லாரும் vcd/cd/dvd/mp3 என்று எதுவுமே பார்க்கமால் /கேட்கமால் இருங்கள்.இந்த பிரச்சனையே வராது.யாரச்சும் திருட்டு தனமா வங்குவாங்க.அதை நான் அப்படியே பார்த்துவிட்டு வந்துருவேன்.எப்படி என் ஐடியா?என்ன பண்ணுறது?திருட்டு விசிடி வாங்கவே காசு இல்லை.இதுல எங்க ஒரிஜினல்?
//ஹாஹா நம்பாதேள். ஏதோ ஆத்திக கோஷ்டி போல தெரியுது.
//
ஹஹா. நல்ல காமெடி. அதுக்குத்தான் மம்மியும் சேத்து போட்டேன். ஆத்திகக்காரர்கள் அதையும் நம்ப மாட்டாரோ?
அனானி,
//யாரச்சும் திருட்டு தனமா வங்குவாங்க.அதை நான் அப்படியே பார்த்துவிட்டு வந்துருவேன்.எப்படி என் ஐடியா?என்ன பண்ணுறது? திருட்டு விசிடி வாங்கவே காசு இல்லை.இதுல எங்க ஒரிஜினல்?
//
திருட்டு சொத்து தான் திருடினாலும், அடுத்தவன் திருடனத தான் அனுபவிச்சாலும் பாவம் தான் சார்.
தெரிஞ்சு செய்வதெல்லாம் பாவந்தேன்!
:)
இந்த Survey யை பாருங்க, இது கிறிஸ்தவர்களின் சர்வே
http://www.tamilchristians.com/modules.php?name=Surveys&op=results&pollID=10&mode=&order=0&thold=0
குமார்
அனானி,
நகல் எடுக்கலாம்னு 75% க்கு மேல வாக்கு போட்டுருக்காங்க.
Virtues குறையுது சார். எங்க போயி முடியப் போவுதோ.
ஏம்ப்பா.. சிறுவயசில கணக்கு நோட்டுல காப்பியடிச்சு வச்ச ஈ-யையே இன்னும் எடுக்க மனசு வரல.. நாங்கள்ளாம் போயி தியேட்டர்லயும், காசு குடுத்து சிடி வாங்கி படம் பாக்குறதாவது..ஹி..ஹி.. நல்லா காமிடி பண்றயா நீயி..
(அப்பிடியும் இல்லன்னா உலக தொல்லக்காச்சியில மொதோமொறையா காட்டுறப்போ பார்த்துக்குவோம்..)
-இப்படிக்கு,
ஒன்னாம் நம்பர் ஓசி டிக்கட்டு.காம்
சாமி/மம்மி சத்தியமா இதுவரைக்கும் இல்ல, இனியும் இருக்காது.
அப்படினு பொய் சொல்ல தெரியாது
நன்பகளிடம் மட்டும் சில நேரம் எடுப்பதுண்டு...:)
மத்தபடி நாங்க காசு குடுத்துதான் வாங்குவோம்....:)
minnal, supernga. appadiye thodarattum. kaasu koduththu vaanguvadhe sirandhadhu :)
திருட்டு விசிடியும் காசுகொடுத்துதான் வாங்கவேண்டும், இணையத்தில் இலவசமாக இறக்கலாம், ஒறிஜினல் வேண்டும் என்றால் றிப்பில் இறக்குங்கள் இன்னமும் கொஞ்சம் பொறுத்தால் 100% ஒறிஜினல் dvd-Rஇல் இறக்கலாம் தரமும் சூப்பர், நான் இறுதியாக திரையில் பார்த்த படப் ஹேராம், மற்றதெல்லாம் ஹீ............ஹீ.........உண்மையை சொல்வதால் நான் கெட்டவன் அல்ல:-)
//நியாயமா இதெல்லாம்? பிடிக்காதத பாக்காம இருக்கலாம். தப்பில்ல. ஆனால், பிடிக்காதத ஏன் காபி அடிச்சோ திருட்டு விசிடிக்காரன பணக்காரன் ஆக்கியோ பாக்கணும்?//
அப்ப கறுப்புப்பணத்தை சினிமாவில் முதலிடும்பெரிய கிரிமினல்களும், ஆடியோ கம்பனிகளும் (சோனி போன்றவை) பணக்காரராவது தப்பில்லையா?
அநியாய விலைக்கு விற்றுத்தானே அவர்கள் பணக்காரர் ஆகிறார்கள்?
நியாயமான விலைக்கு, பெரும்பாலான மக்களால் வாங்கக்கூடிய வில்லைக்கு விற்கும் நம்மாளுங்க, திருட்டு வட்டு விற்பவங்க காசு பண்ணினா அது எந்த வகையில தவறு?
ஒரிஜினல் பயன்படுத்த வேணும் , திருட்டு வட்டுக்களை ஒழிக்கவேண்டும் என்கிற வியாதி, இந்த கறுப்புப்பணத்தை பெருக்கும் ஆட்களின் மூளைச்சலவையால் வருவது.
இவளவு பேசறீங்களே, நீங்க எத்தனை மென்பொருட்களை ஒரிஜினலாய் பயன்படுத்தியிருக்கீங்க?
உங்கள் வின்டோஸ் நாணயமான பிரதியா?
Post a Comment