நம்மில் பலர் மேற்படிப்புக்காக அயல் நாடுகளுக்குச் சென்று, கல்வி முடிந்தவுடன் அங்கேயே வேலைக்கும் சென்று 'செட்டில்' ஆனவர்கள்.
இன்னும் சிலர் வேலை வாய்ப்பு தேடி வெளிநாடு சென்று தங்கி விட்டவர்கள்.
மேலே உள்ள இரு தரப்பினரும் வெளிநாட்டைத் தேடிச்சென்ற நோக்கம் ஒன்று தான் - சொந்த ஊரில் சுலபத்தில் கிடைக்காத 'quality life' தேடிப்பிடித்து அடைவதே அது.
வெளிநாட்டுக்குச் செல்லும் option கிடைக்காத/விரும்பாத கூட்டமும் ஊரில் உண்டு. விடுமுறையில் ஊருக்குச் செல்லும்போதெல்லாம், இந்த கூட்டத்தினரும், சொந்த குடும்பத்தினரும் 'எப்படா மொத்தமா விட்டுட்டு வரப்போற. போறும்டா' என்று அங்கலாய்ப்பார்கள்.
முதல் முறை புறப்படும்போது, உயிர் நண்பர்களிடம், "மச்சி ரெண்டு வருஷம் ட்ரை பண்ணிட்டு திரும்பி வந்துடறேன்டா. வூட்ட பாத்துக்கோடா" என்று கண்ணீர் மல்க சொன்னவர்கள், இரண்டு வருடம் முடிந்ததும், "மச்சி அடுத்த வருஷம் வந்துடலாம்னு இருக்கேண்டா. project பாதில இருக்கு. வுட்டுட்டு வரமுடியாது" என்று டபாய்ப்பார்கள்.
இதைத்தான் X+1 syndrome என்று நாமகரணம் சூட்டி நம்மாட்கள் வருடா வருடம் கொண்டாடுகிறார்கள்.
வருடங்கள் கணக்கு வைத்து சிலர், லட்சங்கள் கணக்கு வைத்து சிலர்.
"10 லட்சம் சேத்துட்டு கெளம்பி வந்துடறேண்டா" என்று அரம்பித்து, பத்து இருபதாகி, இருபது ஐம்பதாகி, லட்சம் கோடியானாலும் திரும்ப மாட்டார்கள் இந்த சிலர்.
இந்தத் திரும்பா மனத்திர்க்கு முக்கிய காரணம் என்னவாயிருக்கும்? Its entirely based on the individual. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு காரணங்கள்.
சொன்னபடி திரும்பி போனவர்களும் உண்டு (நெம்ப கம்மி ஆனால் :) )
திரும்பிப் போகாமல் இங்கேயே 'extensions' போடச் செய்வது எது?
எனக்குத் தெரிந்த பட்டியல்:
1) பணம் பணம் பணம்
2) Quality of life
3) சொந்த ஊரில் பணம் கிடைத்தாலும், இங்கிருப்பது போன்ற 'சுலப' வாழ்க்கை இல்லை.
பட்டியல் போட்டு காரணத்தை கண்டுபிடிக்கத் தான் நினைத்தேன். since its based on individual, I can possibly not include all options. அதனால், உங்கள் காரணங்களை பின்னூடுங்கள்.
சர்வே இல்லாமல் பதிவு போட முடியாது (police பிடிச்சிடும் :) ).
அதனால், இன்றைய சர்வே கீழே. நன்றாக யோசித்து வாக்களியுங்கள்:
நன்றி! அப்படியே, வெளம்பரம் போட்டு நண்பர்களையும் படிச்சு வாக்களிக்கச் சொல்லுங்க.
labels: return to india; more dollars; quality of life;
15 comments:
இன்னுமொரு அய்ந்தாட்டுத்திட்டந்தான்!
உடலும் பணமும் இங்கே உள்ளமும் உறவும் அங்கே!
நானும் பல இடங்களில், (லண்டன், சுவிஸ், அமெரிக்கா, சிங்கப்பூர், மலெசியா ஆகிய இடங்களில் 6மாதம் முதல் 1 வருடம் (சில இடங்களில் 6 மாதம், சில இடங்களில் 1 வருடமென) இருந்திருக்கிறேன்...ஆனா நம்ம ஊரு மாதிரி ஏதும் எனக்கு ஒத்துவரவில்லை....
இதேமாதிரி, எப்படியாவது பாரின் போய் செட்டில் ஆகிடனும் என்று துடிக்கும் இளைஞர்களாகியா நான், லக்கி மாதிரி ஆளுங்க எவ்வளவு பேர் இருக்காங்க என்பதை அறிய ஒரு சர்வே போட்டா சூப்பரா இருக்கும்...!!!
//இன்னுமொரு அய்ந்தாட்டுத்திட்டந்தான்!
உடலும் பணமும் இங்கே உள்ளமும் உறவும் அங்கே! //
அதே அதே. நமக்கும் அதே. ஆனால் ஐந்தாண்டு கொஞ்சம் ஓவர் தேன் :)
//நானும் பல இடங்களில், (லண்டன், சுவிஸ், அமெரிக்கா, சிங்கப்பூர், மலெசியா ஆகிய இடங்களில் 6மாதம் முதல் 1 வருடம் (சில இடங்களில் 6 மாதம், சில இடங்களில் 1 வருடமென) இருந்திருக்கிறேன்...ஆனா நம்ம ஊரு மாதிரி ஏதும் எனக்கு ஒத்துவரவில்லை....
//
அப்டியா? அப்ப ஊர்ல செட்டில்டா, இல்ல இத சொல்லிக்கிட்டே இன்னும் ரவுண்ட் அடிக்கறீங்களா?
////இதேமாதிரி, எப்படியாவது பாரின் போய் செட்டில் ஆகிடனும் என்று துடிக்கும் இளைஞர்களாகியா நான், லக்கி மாதிரி ஆளுங்க எவ்வளவு பேர் இருக்காங்க என்பதை அறிய ஒரு சர்வே போட்டா சூப்பரா இருக்கும்...!!!
////
போட்டுட்டா போவுது. இக்கரைக்கு அக்கரை பச்ச ரவி. ஊர்ல நல்ல துட்டு வந்தா, அங்கணயே இருங்க :)
43% ஆளுங்க திரும்பிடுவேன்னு சொல்றாங்க.
நல்லதுதான்.
I hope 42% loves to come back. may be the circumstances ... Namma India thaan ' THE BEST '
MaNi
AKL-NZ
// Namma India thaan ' THE BEST //
Yes! You are right!
இத க்ளோஸ் பண்ணிரவமா?
எதுக்கு திரும்பி வரணும். திறமை இருந்தும் பட்ட அவமானங்கள் போதாதா? (அலுவலகத்தில்). ஒரு நியமான காரணத்திற்கு கூட விடுமுறை எடுக்க முடியாது. மேலாளரை சோப்பு போட்டுக் கொண்டே இருக்க வேண்டும். வாரத்திக்கு 70 மணி நேர வேலைக்காகவாக் திரும்பி வரச் சொல்லுகிறீர்கள்.
எனது நண்பர் ஒருவரின் அனுபவம் இது.
நண்பர் கல்யணமாகதவர் வளைகுடா நாடொன்றில் நல்ல சம்பளம் ஒரு 3 வருடம் கழித்து " நமம ஊரு போல ஆகுமா" என்று வேளையை விட்டு விட்டு தமிழ் நாட்டிற்கு திரும்பி விட்டார்.
ஒரு 6 மாதம் கழித்து எனக்கு ஒரு மெயில் U.S வருகிறேன் ஏர் போர்ட் வரமுடியுமா என்று. நண்பரைச் சந்தித்ததும் "என்ன ஆச்சு தாய் நாட்டுப் பாசம் என்று கேட்டேன்". நண்பர் புலம்பித் தள்ளிவிட்டார்.
வீட்டிற்குப் போனதும் குடும்பதினர் அனைவரும் ஏன் நல்ல வேளையை விட்டு வந்து விட்டாய் புத்தி கீது கெட்டு விட்டதா என்று விலாசித் தள்ளி விட்டனராம். (அம்மா அப்பா உள்பட ). பின் வேலை தேட ஆரம்பித்தால் அதே கேள்வி இண்டர்வியூக்களிலும். (இங்கு வேறு மாதிரி ஏதாவது எடக்கு முடக்கு பேர்வழியோ அதனால் வேலையை விட்டு நீக்கி இருப்பார்களோ என்று சந்தேகம் ). இப்போது நண்பர் திருமணம் கூட தன் விருப்படி (காதல் திருமணம் அல்ல ) செய்து கொண்டார்.
மேலும் அயல் நாட்டில் உள்ள இந்தியர்களால் தான் இந்தியாவிற்கு அதிகளவு தகவல் தொழில் நுட்ப வேலை கிடைக்கிறது. அவர்கள் இந்தியா வந்து விட்டால் வேலை வாய்ப்பு குறைய வாய்ப்பு இருக்கிறது.
சுப்பு,
நீங்க சொல்வது போல் எல்லாருக்கும் ஆகரதுல்ல.
சிலருக்கு அப்படி அமைவது அமெரிக்காவிலும் கூட நடக்கும் விஷயமா.
'அமெரிக்கா' மாதிரி எல்லாமே வேணும்னா, இந்தியா போக கூடாது.
//மேலும் அயல் நாட்டில் உள்ள இந்தியர்களால் தான் இந்தியாவிற்கு அதிகளவு தகவல் தொழில் நுட்ப வேலை கிடைக்கிறது. அவர்கள் இந்தியா வந்து விட்டால் வேலை வாய்ப்பு குறைய வாய்ப்பு இருக்கிறது.
//
இது நல்ல பாயிண்ட்!! குட் one!
எல்லாரும் வரப்போரதில்ல எப்படியும். மிச்சம் இங்க இருக்கரவங்க பாத்து வேலையை அனுப்பி வைப்பாங்க :)
நான் இங்கே அமெரிக்கா ஒரு வருடம் என்று தான் சொல்லி வந்தேன். அப்புறம் அப்படியே ஆறு வருஷம் ஆச்சு.
என்னுடைய காரணங்கள்
1) இன்னும் பணம் வேணும்.
2) இந்தியாயாலெயும் போய் இதே குப்பையாதான் கோட்டை போறோம். இங்க சாம்பாரிக்கவவாவது செய்வோமே.
3)எனக்கு மட்டும்தான் இந்திய போகணும்னு ஒரு ஆசையாவது இருக்கு. மனைவி, பெற்றோர் 'நோ சான்ஸ்'
4) இந்திய வேலை கலாசாரம். வேலை தவிர பேர்சனல் நேரம் ரொம்ப கம்மீ. (ஜிம், படிப்பது , சுற்றுலா.. )
ஒண்ணு மட்டும் உறுதி. இந்தியாவுக்கு வரும் அந்த இனிய நாள் வெகு தொலைவில் இல்லை.
ரவி,
சூப்பருங்க.
//ஒண்ணு மட்டும் உறுதி. இந்தியாவுக்கு வரும் அந்த இனிய நாள் வெகு தொலைவில் இல்லை.
//
அந்த நாள் கூடிய விரைவில் வர வாழ்த்துக்கள்! கஷ்ட நஷ்டம் இருந்தாலும், நம்ம ஊர் மாதிரி வராதுங்க!
super survey!
Post a Comment