புது வருடத்தை வரவேற்று குத்தாட்டம் ஆட மல்லிகா ஷெராவத்துக்கு Marriott நிறுவனம் பல லகரங்களை வாரி இறைத்திருக்கிறதாம்.
வ்லை தளத்தில் கிடைத்த தகவலின் படி 75 லட்சங்கள், 45 நிமிட ஆட்டத்துக்கு அளிக்கப் பட்டதாம்.
ஆட்டத்தை கண்டு களிக்க நம் கணவான்கள், சில ஆயிரங்களை வாரி வழங்கினார்களாம்.
ஹ்ம். நல்லா இருந்தா சரி.
45 நிமிடம் வியர்வை சொட்ட சொட்ட உழைத்துத்தான் இந்த லகரங்களை பெற்றுள்ளார், அதனால் வவுத்தெரிச்சல் படத் தேவை இல்லை என்பதை சக பதிவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆஸ்திரேலியர்கள் உடன் ஆடினார் என்றும் செய்தி இருந்தது, ஆனால் வலையில் நான் கண்ட சக-ஆட்டக்காரர்கள், நம்மூர் கந்தசாமி, முனுசாமி போல் தான் இருந்தார்கள். :)
இது இப்படி இருக்க, நம்மூர் சிகாமணிகள், சன் தொலைக்காட்சியில், சின்னத்திரை serial-killers எல்லாரையும் சேர்த்து ஒரு குத்தாட்டம் அரங்கேற்றினார்கள்.
புது வருடத்தை கொண்டாடுவதில் தவறில்லை - ஆனால், நம் கலாச்சாரச் சின்னமான, பொங்கல் திருநாள், தீபாவளி போன்ற பண்டிகைகள் அன்று இந்த அளவு கொண்டாட்டம் காணப்படுவதில்லையே?
"என்னங்க தீபாவளிக்கு வெடி வெடிக்கலையா?" என்று கேட்டால் "யாரும் இப்பெல்லாம் வெடிக்கரது இல்ல தம்பி" என்று பதில்.
பொங்கலுக்கு கரும்பு வாங்குவது கூட பலர் வீட்டில் இல்லாமல் போனது.
கலாச்சாரச் சின்னங்கள் out-of-fashion ஆவதும், புதியன (குத்தாட்டம்) புகுவதும் உலக நியதியா?
சைனாவிலும், சிங்கப்பூரிலும் - Chinese new year, ஐரோப்பாவில் - Harvest festival, Christmas அமெரிக்காவில் - halloween, Christmas போன்ற அவரவர் கலாச்சார சின்னங்கள் கொண்டாடப் பட்டுதான் வருகின்றன.
நாம் தான் வழுக்குகிறோம்.
வழுவாமல் இருக்க என்ன செய்வது ?
என்னால் முடிந்தது ஒரு சர்வே போடுவது. போட்டுட்டன்.
5 comments:
இப்படி சர்வே போட்டா, பின்னூட்டம் கெடைக்காதோ?
இதுல முக்கியமான ஒரு கேள்வி வந்திருக்கனும்.
ஆமாம். இதுக்கு நான் தான் காரணம், என் தேவைகளை மற்றவர்கள் தீர்மானிக்க அனுமதிப்பதுதான் காரணம்.
நன்மனம்,
//ஆமாம். இதுக்கு நான் தான் காரணம், என் தேவைகளை மற்றவர்கள் தீர்மானிக்க அனுமதிப்பதுதான் காரணம். //
ரொம்ப நல்ல option. 100% உண்மை இதுதான்.
என்னோட ஓட்டு 2 & 5, ஆனா 2 க்கு மட்டும் தான் ஓட்டு போட்டேன்..மறுபடியும் 5 க்கு போட்டா கள்ள ஓட்டு ஆகிடும் இல்ல...கோட்டர்,பிரியானி குடுக்காம கள்ள ஓட்டு போடுறது இல்லனு பாலிசி :-)
வாங்க Syam,
//என்னோட ஓட்டு 2 & 5, ஆனா 2 க்கு மட்டும் தான் ஓட்டு போட்டேன்..மறுபடியும் 5 க்கு போட்டா கள்ள ஓட்டு ஆகிடும் இல்ல...கோட்டர்,பிரியானி குடுக்காம கள்ள ஓட்டு போடுறது இல்லனு பாலிசி :-)
//
கள்ள ஓட்டு போடலன்னா தூக்கம் வராதேங்க. இருட்டின பிறகு நைஸா வந்து 5க்கு போட்டுடுங்க. நான் யார்டயும் சொல்ல மாட்டேன் :)
Post a Comment