நண்பர் வீட்ல விருந்து போன வாரம்.
Channel மாத்திட்டே இருக்கும் போது சூர்யா டி.வி ல நேத்து எதேச்சயா இந்த பாட்டு வந்தது
ஒரு சிரி கண்டால் அது மதி, இது மதினு பாட்டு சூப்பரா இருந்தது.
(அதாவது, ஒரு smile இருந்தா போதுமாம்).
கேக்கும்போதே இது கண்டிப்பா நம்ம ராசா தான் போட்டிருக்கணும்னு தோணிச்சு.
நேரம் கிடைக்கும்போது தேடிப்பிடிச்சு அலசினா ராசாவேதான். படம் பேரு Ponmudipuzhayorathu (2005).
ஆனால் இதுல ராஜாவின் ஏதோ ஓரு தமிழ் பாடலின் தாக்கம் இருக்கர மாதிரி தோணுது.
என்ன பாட்டுன்னு தெரியல.
உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்களேன்.
22 comments:
ஒரு கிளி உறங்குது
ஒரு மயில்
அனானி, பாட்டோட லிங்க் இருந்தா போடுங்களேன். என்ன படம் இது?
நான் மிகவும் ரசித்த ஒரே மலையள பாடல் இதுதான். மிகவும் பிடிக்கும். எனக்கும் உங்களுக்கு தோன்றியது போலவே தோன்றியது எங்கேயோ கேட்டது போல். நானும் இணையத்தில் இது பற்றி ஆராய்ச்சி நடத்தினேன். சிலருக்கு அது மகராஜனோடு (சதிலீலாவதி) போலவும், சிலருக்கு காதல் கவிதைகள்(கோபுர வாசலிலே), சிலருக்கு என் கனவில் முழுதும் நீயே(இளையவன்) போலவும் தோன்றுகிறதாம். எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. ஆனால் இந்த பாட்டு மாதிரித்தான் என அறுதியிட்டு கூற முடியவில்லை. ஆனால் மனுஷன் கலக்கியிருக்காரு. சூப்பர்!
"ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ"... இது கூட மாதிரிதான்...
கோபுரவாசலிலே படத்தின் காதல் கவிதைகள் பாட்டின் இரண்டாவது பாரா வும் இந்த பாட்டின் இரண்டாவது பாரா வும் ஒரே மாதிரி இருப்பதாக படுகிறது.
லொடுக்கு,
//ஆனால் இந்த பாட்டு மாதிரித்தான் என அறுதியிட்டு கூற முடியவில்லை. ஆனால் மனுஷன் கலக்கியிருக்காரு. சூப்பர்!//
எனக்கும் அப்படி தான் தோணுது.
ராஜா ராஜாதான் :)
லொடுக்கு
//ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ"... //
அட ஆமாங்க , கிட்ட தட்ட இதே சாயல்ல அந்த பாட்டும் ஆரம்பிக்குது (யாராவது ராகம் தெரிஞ்சவங்க அலசிட்டு சொல்லுங்களேன்)
லட்சுமி,
//கோபுரவாசலிலே படத்தின் காதல் கவிதைகள் பாட்டின் இரண்டாவது பாரா வும் இந்த பாட்டின் இரண்டாவது பாரா வும் ஒரே மாதிரி இருப்பதாக படுகிறது.//
இரண்டாவது பாரா வரிகள் ஒரே மாதிரி இல்லன்னு தான் நெனைக்கறேன். ஆனால், interlude musicல நிறைய resemblance இருக்கு.
இந்த tuneல கண்டிப்பா ஒரு கிக் இருக்கு.
ஆனால், இசைக் கோர்வையை கேட்டால், ராஜா அதிகம் சிரமப் பட்டு 'வேலை' செஞ்சதா தெரியல :)
(டப்புக்கு ஏத்த மாதிரி outputஆ)?
//SurveySan said...
இந்த tuneல கண்டிப்பா ஒரு கிக் இருக்கு.
ஆனால், இசைக் கோர்வையை கேட்டால், ராஜா அதிகம் சிரமப் பட்டு 'வேலை' செஞ்சதா தெரியல :)//
:)
ஒன்னா ரெண்டா...நாலஞ்சு பாட்டுக நினைவுக்கு வருதே. அத்தனையையும் சொல்லீட்டாங்க எல்லாரும். அதே நேரத்துல சர்வேசன் சொல்றாப்புல ராஜா செரமப் பட்டு வேலை செஞ்சாப்புல தெரியலை.
வாங்க ராகவன்.
ராஜா வரவர 'துட்டுக்கு' ஏத்த மாதிரி தான் இசை எல்லாம் கோக்கறாரு. :)
எனக்கு என்னமோ இந்த பாட்டு கஜிராஹோ கனவிலே சிற்பம் கண்ணில் மிதக்குதே... பாட்டுதான் ஞாபகத்துக்கு வருது.
நிறைய பாடல்களின் சாயல் தெரிகிறது.
இது மட்டும் இல்லை.
எங்க காலப் பாட்டு
பாக்கியலட்சுமி என்று ஒரு படம்.
''அதில் ஆடச் சொன்னாலும் ஆடுகிறேன்
பாடச் சொன்னாலும் பாடுகிறேன்''
கீழே கொடுக்கும் பாடலின் முதல் வரி
''காதல் என்றால் கடையில் வாங்கும்''
இந்த வரிகளின் இசை ''வானம் எனக்கொரு போதிமரம்//
நாளும் எனக்கொரு சேதிதரும்''
என்ற பாடலில் அப்படியே எதிரொலிக்கும்.
சொன்னால் தப்பு இல்லையே:-))
Yes It's Ilayaraja's music only. Our kasu meala kasu charmi and other guy dances for this song.. Did you listen artinkari orathu of Ilaya rajaa?? That too a great song.. My 2 year old daughe love to sing that all the time...
mahesh
தம்பி,
//எனக்கு என்னமோ இந்த பாட்டு கஜிராஹோ கனவிலே சிற்பம் கண்ணில் மிதக்குதே... பாட்டுதான் ஞாபகத்துக்கு வருது.//
கஜிராஹோ கனவா - தெரியலயே. என்ன படம் அது?
ராத்திரியில் பூத்திருக்கும் அட்டகாசமா மேட்ச் ஆகுதுங்க.
வல்லி சிம்ஹன்,
//இந்த வரிகளின் இசை ''வானம் எனக்கொரு போதிமரம்//
நாளும் எனக்கொரு சேதிதரும்''
என்ற பாடலில் அப்படியே எதிரொலிக்கும்.
சொன்னால் தப்பு இல்லையே:-)) //
சொன்னா தப்பிலைங்க. ராஜாவின் கொலைவெறிப் படை லீவுல போயிருக்காங்க.
:)
அனானி,
//Did you listen artinkari orathu of Ilaya rajaa?? That too a great song.. My 2 year old daughe love to sing that all the time...
//
Yes. just heard it. that is not like a typica mallu song though.
பாசில் இயக்கத்தில் வெளிவந்த படம்.
படம் பேரு ஒரு நாள் ஒரு கனவு.
இளையராஜா தான் மீஜிக். மலையாள டைரக்டர், அதுவும் மலையாளப்பாடலின் சாயல், குரலும் ஒரே மாதிரி இருக்குது.
ஒரு முறை கேட்டு பாருங்க.
நிறைய ஒற்றுமை இருக்கு!
தம்பி,
//இளையராஜா தான் மீஜிக். மலையாள டைரக்டர், அதுவும் மலையாளப்பாடலின் சாயல், குரலும் ஒரே மாதிரி இருக்குது.
ஒரு முறை கேட்டு பாருங்க.
நிறைய ஒற்றுமை இருக்கு//
உண்மைதான். நிறையவே ஒற்றுமை இருக்கு. இந்த பாடலுக்கும் அவ்வளவு 'வேலை' செய்யல போல :) துட்டுக்கு ஏத்த மாதிரி மீஜிக் கலவை கொடுக்கராரு இப்பெல்லாம் ?
//உண்மைதான். நிறையவே ஒற்றுமை இருக்கு. இந்த பாடலுக்கும் அவ்வளவு 'வேலை' செய்யல போல :) துட்டுக்கு ஏத்த மாதிரி மீஜிக் கலவை கொடுக்கராரு இப்பெல்லாம் ?//
:)
ஐயா! சந்தடி சாக்குல ராசாவுக்கு ஆப்பு வைக்காதீங்க. நானும் ராசாவுடைய கொலைவெறி ரசிகர்களில் ஒருவன். சொல்லிப்புட்டேன்.
ராசா கலக்கி கொடுப்பவையே இவ்வளவு சுவை என்றால்.....
லொடுக்கு,
//ஐயா! சந்தடி சாக்குல ராசாவுக்கு ஆப்பு வைக்காதீங்க. நானும் ராசாவுடைய கொலைவெறி ரசிகர்களில் ஒருவன். சொல்லிப்புட்டேன்.
ராசா கலக்கி கொடுப்பவையே இவ்வளவு சுவை என்றால்.....
//
I am the escape. என்ன வுட்டுடுங்க. ஆமாம், இந்த பாட்ட எங்க கலக்கி கொடுத்தார்.. காபி/பேஸ்ட் இல்ல செஞ்சிருக்காரு :)
வெல், ராசா ராசா தான்.
Post a Comment