recent posts...
Friday, December 29, 2006
சதாம் தூக்கிலிடப்பட்டார் - அவசர சர்வே
சதாம் உசேன் Friday 10pm EST மணி அளவில் தூக்கிலடப்பட்டார்.
மேலும் விவரங்கள் இங்கே: Click here to read the news
என்னதான் அவன் ஒரு சர்வாதிகாரி என்று தெரிந்தாலும், பல உயிர்களை கொன்றவன் என்று தெரிந்தாலும், அவனை தூக்கிலிட்ட செய்தி ஒரு துக்கம் கலந்த பயம் கலந்த ஒரு கன நிலையை தந்தது. சந்தோஷம் வரவில்லை.
இதே சதாம் நமது இனத்தவரை கொன்று குவித்திருந்தால் வேறு மாதிரி இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
நாளை ஈரான் அதிபருக்கும் இன்னும் மற்ற அமெரிக்க அரசை அடிவருடாத புரட்சி தலைவர்களுக்கும் இதே நிலை வரும் என்பதில் ஐயம் இல்லை.
சதாம் தூக்கிலிடப்பட்டது கண்டனுத்துக்குரியதோ? atleaast, extradict செய்திருக்கலாமோ?
உங்களுக்கு மனநிலை எப்படி இருக்கு?
அதுவே இன்றைய அவசர சர்வே!
Subscribe to:
Post Comments (Atom)
33 comments:
அமெரிக்க சர்வாதிகார சதி இது.
//சனிக்கிழமை 10pm EST மணி அளவில் தூக்கிலடப்பட்டார்.//
இந்த நேரம் சரியா?
i am aasath
This should be cotemned by world peoples whom trust the Democracy.
Who gave the rights to hanged Sadam to USA.
It is the Robberry of Life of every third worlds' Life of Leaders.
ஒரு கொடுங்கோலன் மறைவுக்கு ஒரு சர்வே!
அதற்கு துக்கித்து 60%!!
வெல்க தமிழகம்!
அனானி,
////சனிக்கிழமை 10pm EST மணி அளவில் தூக்கிலடப்பட்டார்.//
இந்த நேரம் சரியா? //
வெள்ளிக்கிழமை தான் சரி. நேத்து செய்தி CNNல் படித்தபோது saturday என்று பார்த்த மாதிரி ஞாபகம். பிழையோ?
thanks for pointing out!
aasaath,
//It is the Robberry of Life of every third worlds' Life of Leaders. //
மரணதண்டனை தவறானது! ஆனால் அது ஒரு அப்சலுக்கு வழங்கும்போது சரி என்று தோன்றுகிறது.
வேறு சிலருக்கு வழங்கும்போது தவறு என்று தோன்றுகிறது.
Perspective changes!
SK,
//ஒரு கொடுங்கோலன் மறைவுக்கு ஒரு சர்வே!
அதற்கு துக்கித்து 60%!!
//
இப்பொழுது 71%. நம் மக்கள் மென்மையானவர்கள் சார். யாருக்கு சங்கடம் என்றாலும் வருத்தப்படும் குலம் :)
I think in Sadams case, people are sympathetic not because Sadam was killed, but because he was probably killed by the USA in a 'staged' way.
SK,
//ஒரு கொடுங்கோலன் மறைவுக்கு ஒரு சர்வே!
அதற்கு துக்கித்து 60%!!//
சர்வே எடுத்ததனால் தானே நம்மவரின் மென்மை புரிந்தது :)
வாழ்க தமிழகம்!
//சர்வே எடுத்ததனால் தானே நம்மவரின் மென்மை புரிந்தது :)
வாழ்க தமிழகம்! //
அதனால்தானே இலங்கைப் படுகொலைகளை இன்னமும் சகித்து, ஒரம் கட்டி வருகிறது!
வெல்க தமிழகம்!
தண்டனை கொடுத்தவன் கெட்டவனாக இருந்தபோதும் செத்தவன் கெட்டவன்தானே, அதை நினைத்து இந்த நாளில் சந்தோசப்படுங்க சாமி.
தமிழ்நாட்டு முஸ்லீம்களின் இந்த போக்கு மிகவும் ஆபத்தானது, இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் கூட இது ஆபத்தானது, உண்மையில் முஸ்லீம்கலின் உணர்வு இந்த வகையானதே இது பொதுவாக அனைத்து முஸ்லீம்கலிடமும் கானப்படும் மனநிலை , உண்மையை உராய்ந்து பார்க்கவேண்டும் சதம் நல்லவனா? கெட்டவனா? அவன் கெட்டவன் கெட்வன் அழிக்கப்படவேண்டியவனே, மற்றப்படி அமெரிக்க நீதி வழங்கியதுதான் தவறு, அதற்காக கெட்டவனை மன்னிக்கமுடியாது.
SK,
//அதனால்தானே இலங்கைப் படுகொலைகளை இன்னமும் சகித்து, ஒரம் கட்டி வருகிறது!
வெல்க தமிழகம்!!//
இலங்கை பிரச்சனையையும் மட்டுமா சகித்தோம்? உள்ளூரில் இருக்கும் ஊழல், சுரண்டல் இதை எல்லாம் சேர்த்துத்தானே சகித்தோம்.
வாய்ச்சொல்லில் வீரர்களாயிற்றே நாம். எல்லா பிரச்சனையை பற்றியும் உண்மையான மென்மையான உள்ளத்துடன் அரட்டை அடிப்போம்.
activity தான் மிஸ்ஸிங்.
ஒரு சர்வே போட்டு, 'இலங்கை பிரச்சனையில் ஈழ குடும்பங்கள் பலியாவது 1. துக்கம் அளிக்கிறதா 2. துக்கம் இல்லை 3. dont care என்று சர்வே போட்டால், நிச்சயம் நம்மவர்கள் துக்கம் அளிக்கிறது என்று மென்மையாக வாக்குவார்கள்.
வாழ்க தமிழகம்!
தமில்,
//தண்டனை கொடுத்தவன் கெட்டவனாக இருந்தபோதும் செத்தவன் கெட்டவன்தானே, அதை நினைத்து இந்த நாளில் சந்தோசப்படுங்க சாமி.//
செத்தவன் கெட்டவந்தான். அவனை விட கெட்டவர்களையெல்லாம் தூக்கில் போட்டாச்சா?
மீடியா காட்டும் விஷயம் மட்டுமே நமக்கு தெரிந்த பட்சத்தில், மீடியாக்கள் திரித்து கூறிய பல விஷயங்களில் சதாம் பல லட்சம் மக்களை கொன்றவன் என்ற விஷயமும் ஒன்றாயிருக்கலாமோ?
யாருக்குங்க தெரியும் என்ன நடக்குதுன்னு, பொம்மலாட்டம் மாதிரி CIA பண்றதெல்லாம் தான் நமக்கு தெரியுமா?
ஒரு நாட்டின் அதிபர் அதிகாரத்தில் இருக்கும் போது நாட்டைக் காப்பதற்காக எடுக்கும் எந்த முடிவையும் பின் வரும் அரசுகள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி தீர்ப்பு வழங்குமானால், உலகின் அத்தனை தலைவர்களும் தூக்குமேடைக்குப் போக வேண்டியவர்களே.. இதை முதலில் உணரவேண்டும். கொடுங்கோலன் என்று சொல்பவர்கள் ஒருநிமிடம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். என்ன கொடுங்கோல் இழைக்கப்பட்டது சொல்பவர்களுக்கு.. ம் ம் கொடுங்கோலன் என்று சித்தரித்தால் நம்பிவிடக்கூடியவர்கள் தமது சிந்திக்கும் திறனை அடகு வைத்து விட்டார்கள் என்றுதான் கொள்ள வேண்டும். அமெரிக்காவிற்கு இன்றைக்கு சதாம் எதிரியாக இருக்கலாம், ஆனால் இந்தியாவிற்கு சதாம் செய்த உதவிகள் ஏராளம். மன்மோகன் சிங் அரசு ஒரு சிங்க அரசாக இந்தத் தண்டனைக்கு எதிராக கொஞ்சம் உரக்கவே எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும்.
திருவடியான்,
நல்ல கருத்துக்கள்.
ஒருவனை கொடுங்காலன் ஆக்குவதும், காந்தி ஆக்குவதும், மீடியாவினால் மிக சுலபமாக செய்யக்கூடும்.
தொலைவில் இருந்து பார்க்கும் நமக்கு எதை எடுப்பது எதை விடுப்பது என்று தெரியாமல் பெரிய குழப்பங்கள்.
WMD அல்வா சாப்பிட்ட சுவையே இன்னும் வாயை விட்டு அகலவில்லை. அதுக்குள்ள தீர்ப்பு வேற வழங்கி தூக்குல வேற போட்டுட்டாங்கிய.
ஹ்ம். ஒன்னுமே புரியல.
இப்ப அடுத்தது மீடியா மேல பழியா?
கொஞ்சம் குர்த் இன மக்களையும், ஷியைட்டுகளையும் கேட்டுவிட்டு பின் வந்து பதிவிடுங்கள்.
கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்.
திறந்த மனம் இருந்தாலே போதும்.
ஓ! அதான் இறந்தவர்கள் எல்லாம் நம்மவர்[தமிழர்] இல்லை எனச் சொல்லியாகி விட்டதே!
//என்ன கொடுங்கோல் இழைக்கப்பட்டது சொல்பவர்களுக்கு//
அப்ப அண்டையில் மடிபவர்கள்?
அது யாரோ!!
அது எதற்கு இப்ப? அதை விடுங்கப்பா!
இப்போதைக்கு சதாமை வைத்து, பதிவிடுவோம்!
தனது நாட்டுக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்யட்டும், அதற்காக தனது நாட்டு மக்களையே விசவாயு அடித்து கொன்ற ஒரு கொடூரனுக்காக குரல் கொடுப்பது மடமைத்தனம், அந்த குழந்தைகளும் சதாமுக்கு எதிராக சதி செய்தார்கள் என்பது மடமையிலும் மடமை. எந்த ஒரு இனத்தை அழிக்கும் சர்வாதிகாரிக்கும் இதுதான் முடிவு. முஸ்லீம்களுக்காக இந்தியா குரல்கொடுக்கப்போய் சொந்த செலவில் சூனியம் வங்கிக்கொள்ளாது என நம்புவோம். ஏனெனில் முஸ்லீம் சமூகம் ஒருபோதும் இந்தியாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கபோவதில்லை. அவர்களுக்கு இந்தியாவை விட பாகிஸ்தானும் ,ஆப்கானிஸ்தானும்,பங்களாதேசும் முக்கியமானவை
விசவாயு அடித்துகொல்லப்பட்டது திரிபு என்பது, மனிதாபிமானமற்ற செயல், ஏனெனில் அந்த சமுதாயத்தை சேர்ந்த ஒருவன் என்னுடன் சேர்ந்து வேலை செய்கிறான். சதாமின் சமுதாயத்தை சேர்த ஒருவனும் என்னுடன் வேலை செய்கிறான், அவனும் சதாம் செய்தது பிழை என்றுதான் கூறுகிறான், ஆனால் அமெரிக்கா நீதி கொடுத்தைத்தான் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இனப்பற்று காரனமாக சதாமை ஆதரிக்கிறான், பொதுவான முஸ்லீம்களும் இதேபோக்கு உடையவர்கள்தான். அவர்கள் ஏனோ உன்மையை உராய்ந்து பார்க்கமறுக்கிறார்கள்.
SK,
//கொஞ்சம் குர்த் இன மக்களையும், ஷியைட்டுகளையும் கேட்டுவிட்டு பின் வந்து பதிவிடுங்கள்.//
குஜராத்திலும், பம்பாயிலும் கூட இஸ்லாமியர்கள் இந்துக்களை கொன்றதும், இந்துக்கள் இஸ்லாமியர்களை கொன்றதும் நடந்தது.
இனப்படுகொலைகள் நடக்காத இடம் உலகத்தில் எங்கும் கிடையாது.
இனக்கொலைகள் நடப்பதர்க்காக அந்த நாட்டின் தலைவனை தூக்கு மேடை ஏற்றுவது நியாயமா?
சதாமே நேரில் சென்று விஷவாயு பைப்பை திறந்து விட்டாரா? அதற்கு ஆதாரம் எல்லாம் வெளி உலகிர்க்கு சரியாக காட்டிய பிறகு இந்த செயலை செய்திருந்தால் இவ்வளவு எதிர்ப்பு மனதில் தோன்றி இருக்காது.
அமெரிக்காவில் அதிகார்களுக்கு image damage-control செய்வதற்காகவே அவசர தூக்கு கொடுக்கப்பட்டது போல் அப்பட்டமாக தெரிகிறது.
நாளை மன்மோகனை தூக்க வேண்டுமென்றால் CNN'ல் ஒரு வருடம் தொடர்ந்து இந்தியாவை பற்றி இல்லாததும் பொல்லாததும் காட்டி, 2008ல் படை எடுத்து வந்து ஆக்கிரமித்து விடலாம். யார் எதிர்ப்பார்கள்?
I understand, சதாம் did atrocities. but, so did the Bushes and Blairs and Musharafs and ....
btw, என்னை பொறுத்தவரை உண்மையான தண்டனை தூக்கு கயிறு கிடையாது. Life-sentencing is what people like Sadam deserves.
Thamil,
//அமெரிக்கா நீதி கொடுத்தைத்தான் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.//
என்னாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
விஷவாயு கொடுத்து கொன்றது உண்மையாக இருக்கலாம். ஆனால், அதை சாட்சியுடன் உலகிர்க்கு எடுத்துக் காட்டி பின்னர் செய்திருக்கலாமோ.
ஈராக்கியனுக்கு, ஈராக்கிய நீதிபதி தீர்ப்பு வழங்குவதெல்லாம் சரிதான். but, this has drawn world wide attention. அவங்களுக்குள்ளேயே எல்லாம் முடிவு செஞ்சு தூக்குக் கயிறை இழுத்தது தப்பு.
பிறகு எதர்க்கு UN போன்ற அமைப்பெல்லாம்?
In a negative scale of zero to -10 for bad deeds (0 for less bad and -10 for worst) Saddam qualifies -9, and bush -2.
If they both kill each other why indian muslims, commies and stupid pinkos go "cry baby" ?
ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் நேற்றைய ஏகாதிபத்தியன் போட்ட எலும்புத்துண்டை நக்கிய நாய்கள் நம் காம்ரேடுகள். இஸ்லாமியர் பற்றி ஒன்றும் சொல்லும்படி இல்லை. என்றுமே சொந்த மண்ணை அடுத்தவனுக்காக விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு அவர்களுடையது (சொந்த அன்னையை விற்பது போல).
-சுயமரியாதையுள்ள இந்தியன்.
I just saw few footages of Sadams yester years and his growth through the years since he started as an assasin.
also footages of some of his atrocities, which included punishing his so-called enemies;
punishments included shooting by a firing squad, chopping the head off, limbs off, tongues off, stone pelting etc...
என்னதான் அமெரிக்கா தன் சுய நலனுக்காக சதாமுக்கு இந்த தண்டனை வழங்கினாலும், சதாமுக்கு இது ஏற்ற தண்டனைதான் என்று இப்பொழுது தோன்றுகிறது.
So, சர்வே-சனின் final தீர்ப்பு:
சதாமை தூக்கில் போட்டது மிகச் சரி!
I hope this sets up an example for other dictators and serves as a deterrant.
sarvey சன்,
சதாமின் தூக்கு ஏன் பலருக்கு கவலை அளிக்கிறது என்பது யோசிக்கவேண்டிய விஷயம்.!
வஜ்ரா,
//சதாமின் தூக்கு ஏன் பலருக்கு கவலை அளிக்கிறது என்பது யோசிக்கவேண்டிய விஷயம்.! //
யோசிக்க ஒன்றுமில்ல. நம் மக்கள் மென்மையானவர்கள். அதுதான் காரணம்.
வாழ்க நம்மினம்!
sarvey சன்,
சமாதான நரி, ஜனநாயக ஜந்து அமெரிக்கா உலகிற்கு அளித்த "நீதி" க்கு எதிரான "ஆதிக்க எதிர்ப்பு சிந்தனைகள்" ஏன் பார்ப்பனர்களுக்கு கவலை அளிக்கிறது என்பது யோசிக்கவேண்டிய விஷயம்.!
நன்றி, சர்வேசன்.
இதில் இன, மத, காழ்ப்பு எதுவுமில்லை.
2007 ஒரு கொடுங்கோலனின் பிடியிலிருந்து தப்பித்ததே எனவே நான் அந்த 35000 இஸ்லாமிய மக்கள் சார்பில் மகிழ்கிறேன்!
குடியானவன்,
//சமாதான நரி, ஜனநாயக ஜந்து அமெரிக்கா உலகிற்கு அளித்த "நீதி" க்கு எதிரான "ஆதிக்க எதிர்ப்பு சிந்தனைகள்" ஏன் பார்ப்பனர்களுக்கு கவலை அளிக்கிறது என்பது யோசிக்கவேண்டிய விஷயம்.!
//
கவலைப்படுபவர்களின் கவலை இன அடிப்படையில் வருவது அல்ல என்றே தோன்றுகிறது.
SK,
//2007 ஒரு கொடுங்கோலனின் பிடியிலிருந்து தப்பித்ததே எனவே நான் அந்த 35000 இஸ்லாமிய மக்கள் சார்பில் மகிழ்கிறேன்!
//
கொடுங்கோலன் ஒருவன் குறைந்தது மகிழ்ச்சி தான். ஆனால், ஈராக்கிய மக்கள் இன்னும் துன்பத்திலிருந்து விடுபடவில்லை.
அட்டை போல் ஒட்டி, உள்ள இரத்தத்தை குடித்து விட்டுதான் அமெரிக்கா வெளியேறும்.
பாவம் ஈராக்கியன். சதாம் இருக்கும்போதும் துன்பம், மறைந்த பின்னும் துன்பம்.
இதை எல்லாம் பார்க்கும்போது நாம் புண்ணியம் செய்தவர்கள் என்று தான் தோன்றுகிறது.
ஆயிரம் இருந்தாலும், நம் நாடு போல் வருமா?
69% feels sad? ha ha.
USA made Sadam a martyr. hats off to them! idiots!
INDHA MAADHIRI SURVEY PODARA UNNA ULLA THALLINAADHAAN BUDHDHI VARUM.
AAYIRAM PERODA KAI VETTI ERINJAAN AVAN. AVANUKKU ANUDHABAMAA.
PONGADAA VENGAYANGALA.
//69% feels sad? ha ha.
USA made Sadam a martyr. hats off to them! idiots! //
You may be right!
anony,
//INDHA MAADHIRI SURVEY PODARA UNNA ULLA THALLINAADHAAN BUDHDHI VARUM.
AAYIRAM PERODA KAI VETTI ERINJAAN AVAN. AVANUKKU ANUDHABAMAA.
PONGADAA VENGAYANGALA//
கோவப்படாதீங்க. எல்லாருக்கும் அவங்க அவங்க கருத்துன்னு ஒன்னு இருக்குல்ல. கைய வெட்டினான் சரிதான். 25 வருஷம் கழிச்சு தூக்குல போட்டா எல்லாம் சரி ஆச்சா?
இதுக்குமுன்னாடி அனானி சொன்ன மாதிரி, இஸ்லாமிய (சுன்னி) வரலாறில் சதாம் 'தியாகி' மாதிரி சித்தரிக்கப்படுவார்.
//கொடுங்கோலன் ஒருவன் குறைந்தது மகிழ்ச்சி தான். ஆனால், ஈராக்கிய மக்கள் இன்னும் துன்பத்திலிருந்து விடுபடவில்லை.
அட்டை போல் ஒட்டி, உள்ள இரத்தத்தை குடித்து விட்டுதான் அமெரிக்கா வெளியேறும்.
பாவம் ஈராக்கியன். சதாம் இருக்கும்போதும் துன்பம், மறைந்த பின்னும் துன்பம்.
இதை எல்லாம் பார்க்கும்போது நாம் புண்ணியம் செய்தவர்கள் என்று தான் தோன்றுகிறது.
ஆயிரம் இருந்தாலும், நம் நாடு போல் வருமா?//
சர்வேசன்,
அட்டை போல் ஆக்கிரமித்து(?)
இரத்தத்தை அல்ல பெட்ரோல் என்று இருக்கவேண்டும். சொற்பிழையோ ?
கோவிகண்ணன்,
///சர்வேசன்,
அட்டை போல் ஆக்கிரமித்து(?)
இரத்தத்தை அல்ல பெட்ரோல் என்று இருக்கவேண்டும். சொற்பிழையோ ///
பெட்ரோல் எடுத்தால் கூட பரவாயில்லையே. இரத்தத்தையும் சேர்த்தல்லவா எடுக்கிறான் அமெரிக்கன்.
இவர்கள் செய்யும் கொடுமைகள், சதாமை மிஞ்சும் அளவுக்கு இருக்கின்றன.
Saddam thookil poda pattathu sariyaga irunthalum thavaraga irunthalum adhai seyal paduthiya murai THAVARU.
Sadam patri piragu ezhuthugiren, aanal mudhalil ingu silar solli iruppathu pola Indian Muslims nattu patru illathavargal illai.
Naan muslim aagave irunthalum INDIAN. Namathu military-l Indians ethanai per naatukkaga thangaludaya innuyirai thiyagam seithu irukkirargal.
Ellaridathilum Good-Evil undu. Oru silar seiiyum thavarugalai vaithu oru inathaiye pazhikkatheergal.
Sari visayathukku varuvom.
Sadam, Bin-Laden innum palar aarambathil CIA payirchi eduthavargal thaan. USA valarthu vitta ivargal, ippothu thangalai maatri kondu USA edhirpaalargal aagi vittathal USA avargalai azhikka thudikkirathu. Idhu varalaru.
Eppothume America-vin (CIA) seyal paadugal kurithu udane entha mudivukkum vanthu vidatheergal. Avargal ippothu seiyyum ovvoru seyalukkum unmayana artham innum 20 aandugalukku pinnal thaan vilangum.
Iraq makkal ellarum ippothu thangal sontha naattil oru Agathigal pola thaan irukkiraargal. Thinal 1 mani neram mattum thaan current enbathil aarambithu Uyirukku eppothum utharavaatham illatha nilai.
Ingu Masque-l gundu vedikkirathu. Unmayil oru Muslim theeviravathi kooda idhai seivana enbathu santhegam thaan. Oil-kaga USA seiyum pala akkiramangal veliye therivathu illai.
Innum solli konde pogalam. Aanal Sadam-ku marana thandanai kodutha Iraqi Judge oru bommai. Avvalavu thaan. Kayiru Bush kaiyil irukkirathu.
Thookkil pottal vethanai sila nodigal mattum thaan ayya. Aanal Sadam uyirudan chirayil irunthal pinnalil avan seitha seyalgalukkaga unmayana manathudan varutha pada koodum. Adhu podhume paavangal karaivatharku.
Aayul thandanai koduthu irukkalam enbathu ennudaya karuthu. Aanal unmayil thookil poda pada vendiyathu America-vin Ennangal thaan. Yean endral adhu kaalathal azhiyathathu.
An INDIAM MUSLIM from Baghdad, IRAQ
Post a Comment