குறும்பு என்றவுடன் நினைவுக்கு வருவது பள்ளிக் காலம் தாங்க.
ஒன்றில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும்போது பெரிதாக குறும்பு செய்த ஞாபகம் ஒன்றும் இல்லை.
மிஞ்சி மிஞ்சி போனா, பக்கத்து பென்ச் கனகராஜ், 'முச்சா' போக வெளியில் போனால், அவன் ஸ்லேட்டில் எச்சை துப்பி துடைத்து பளிச்சாக்கி ஒரு குரங்கு வரைந்து கீழே அவன் பேரை எழுதுவது ஒன்றே நினைவுக்கு வருகிறது.
ஆறாவது, ஏழாவது படிக்கும்போது குறும்பு ஒரு படி மேலே போய் physical attack லெவலுக்கு வளந்தது. எதிர் பெஞ்ச் கனகராஜ், டீச்சர் கேள்வி கேட்க்கும்போது எழுந்து நின்று கை கட்டி பவ்யமா பதில் சொல்வான். அவன் உட்காரும் முன், அவன் பெஞ்சில் சாக்பீசால் கிறுக்கி வைத்து விடுவோம். உட்கார்ந்தவுடன் அவன் நீல நிஜாரில், நாங்கள் போட்ட map ஒட்டிக் கொள்ளும். எதையோ சாதித்ததை மாதிரி, கடைசி பென்சில் நானும், ரமணியும், ஜானும் புளகாங்கிதம் அடைவோம்.
எட்டாவது, ஒம்பதாவது படிக்கும்போது அறும்பு மீசையுடன் திரிந்த காலம். சிவகாமியையும், வித்யாவையும், நிர்மலாவையும் கவர கடைசி பென்ச் கோஷ்டிகள் என்னென்னவோ செய்த காலம். சேஷ்டைகள் அதிகம் செய்த காலம் இதுதானோ?
pant போட தொடங்கிய காலம்.
tuck-in எல்லாம் பண்ணி, ஷூ, பெல்ட் எல்லாம் போட்டு வளைந்து வரும் முதல் பென்ச் கோஷ்டி un-fair advantage உடன் பெண்டு பிள்ளைகளை வசீகரம் செய்த காலம்.
அப்பெல்லாம் பெண்டுகளை attract பண்ண நம்மால முடிந்தது சில 'வில்லன்' ஐடம்ஸ் செய்வதுதான்.
Science வாத்தியார் கேள்வி கேட்டால் முன் பென்சு சுந்தரம் எழுந்து பதில் சொல்வான். அவன் பதில் சொல்லி முடிப்பதர்க்குள், கடைசி பென்ச் வில்லன்ஸ் ஆகிய என் கோஷ்டி, பேப்பர் ஒன்றை பெரிசா கிழித்து வால் செய்து, அதை சுந்தரின் belt loop'ல் மாட்டி விடுவோம்.
வகுப்பு முடிந்ததும், சுந்தரம் வாலுடன் திரியும் அந்த சில நிமிடம், சாதனையாளர்களாகிய எங்கள் மேல் சில பெண்டுகள் பார்வை விழும்.
ஹ்ம்ம். அதெல்லாம் நல்ல நாட்கள்.
தமிழ் சுட்டு போட்டாலும் வராது. தமிழ் ஆசிரியை, கடைசி பென்ச் வாசிகளை, எருமை, நாயே, பண்ணி, கழுதை, எருமை, நாயே, பண்ணி என்று மாறி மாறி பாசத்துடன் விளித்த காலம்.
கணக்கு வாத்தியார், க்ளாஸில் குறும்பு அதிகம் செய்தால், வகுப்பின் முன்னால் வரவழைத்து, குனியச் சொல்லி பத்து சாத்து சாத்துவார். ஆனால், வலிக்காது. அடி வாங்கும்போது, குனிந்த நிலையில் பெண்டுகளை பார்த்து ஒரு Rambo சிரிப்பு சிரித்து, 'இதெல்லாம் எம்மாத்திரம்' என்ற ரேஞ்சில் திரிந்த காலங்கள்.
பத்தாவதில், படிப்பு மேல் கொஞ்சம் பயம் வந்த காலம். பத்தாவது பெயில் ஆன சில கேசுகள், தற்கொலை செய்து கொண்டதாக ஷோபனா-ரவி சொல்லிக்கேட்ட காலம். ஒரு கிலியுடன் கஷ்டப்பட்டு எல்லாம் படிக்க முயன்ற காலம்.
குறும்பு செய்வது கொஞ்சம் மறந்து, படிப்பிலும், விளையாட்டிலும் முழு கவனம் செலுத்திய காலம்.
கப்பில் மாதிரி போலிங்கும், ஸ்ரீகாந்த் மாதிரி பேட்டிங்கும், மரடோனா மாதிரி கோலும் போட முயன்ற காலம். பெக்கரும், ஸ்டெபியும் பாட புத்தகத்தின் அட்டையை அலங்கரித்த காலம். Laos, Burkina Faso stamps முதல் பென்ச் கோஷ்டீஸ் கலெக்ட் செய்த காலம்.
சில பெண்டுகளும் அதை செய்யும்.
பெண்டுகளிடம் இல்லாத burkina faso வும், laos வும், பயலுவளிடம் இருந்து exchange-offerல் வாங்கி இனாமாக பெண்டுகளுக்கு கொடுத்த காலம். exchange-offerல் கைமாறுவது நைனாவிடம் முதல் நாள் அடம்பிடித்து, அடிவாங்கி அழுது வாங்கிய கலர் பென்சில், காம்பெஸ் (compass), டிவைடர் (divider), ஸ்கேல் (scale) இந்த மாதிரி ஏதாவது ஒரு ஐடம்.
பத்தாவது எப்படியோ பாஸ் பண்ணி (அதுவும் distinctionல), டாக்டர் எல்லாம் ஆக வேணாம்னு முடிவு பண்ணி ( :) ), பயாலஜியை புறம்தள்ளி, MPC (math, physics, chemistry) எடுத்த காலம்.
+1 வாழ்க்கை சொர்கம் தாங்க. முகப்பரு மறைக்க clearasil/fair & lovely கம்பெனியை பணக்காரராக்கிய காலம்.
மணிரத்தினமும், சத்யா கமலும், 007ம், SPB யும் பிடித்த காலம்.
இளையராஜா பாடல்கள் கேட்டால் என்னென்னமோ ஆன காலம். கஷ்டப்பட்டு சேத்த 5 ரூபாய பழைய TDK/Sony cassetteல ராஜா பாட்டு record பண்ண வைத்த காலம்.(MP3 songs எல்லாம் இல்லீங்க அப்ப).
முதல் மீசை, முதல் காதல் (first love, ஹ்ம்ம்ம்), முதல் சண்டை, முதல் மரணம் எல்லாம் அரங்கேறிய காலம்.
சக மாணவர்கள் சிலர், சுரேஷ்/நதியா ரேஞ்சில் சுற்றிய காலம்.
அதை எல்லாம் கண்டு பொறாமையில் கொதித்த காலம்.
ஆற்றாமையை, சுரேஷ்/நதியாவின் சைகிள் டயரில் காற்றை பிடுங்கி விட்டு, காட்டிய காலம்.
(சைகிள்ல காத்து இல்லன்னா சுரேஷுக்கு கொண்டாட்டம் தான். காலார நடந்து ரோடெல்லாம் வறுப்பானே. கடங்காரன் :) )
இந்த வயசில் செய்த குறும்பில், எடுத்துச் சொல்லும்படியான பெருமைக்குரிய ஒரே குறும்பு - science lab sessionக்கு எல்லாரும் batch batchஆ கிளம்புவாங்க.
கடைசி பென்ச் கோஷ்டியாகிய நாங்கள் வழக்கம் போல் இதிலும் கடைசிதான்.
குரங்கு கையில் பூமாலை கணக்கா, சக மாணவக் கண்மணிகளின், சோத்து மூட்டை எங்கள் கையில் கிடைக்கும் பொன்னான நாட்கள் அவை. கண்மணிகள் எல்லாம் lab முடிந்து திரும்ப வருவதர்க்குள், ஐயர் ஆத்து தயிர் சாதம் முதல், செட்டியார் வீட்டு கட்டு சாதம் வரை ஒரு பிடி பிடித்து, சமத்தா ஒன்றும் தெரியாத நல்லவர்கள் போல் எழுந்து lab'ல் சில buretம், pipetteம் உடைக்க கிளம்பிடுவோம்.
(Chemistry labல் செய்யும் குறும்புக்கு தனி பதிவே போடலாம். அதெல்லாம் இங்க வேணாம் :) )
Class கட் அடித்து, சினிமா பார்த்த காலமும் இதுதான். அப்படியாக +1 முடிந்தது.
+2 படிக்கும்போது குறும்பா? அப்படீன்னா? என்னும் அளவுக்கு மாறி, முட்டி மோதி படித்தது தான் நினைவுக்கு வருகிறது. எல்லாத்துக்கும் ஒரு ட்யூஷன், படிப்பதர்க்கே நேரம் பத்தல, குறும்புவது எங்கே நடப்பது.
ஆனால், சுரேஷ்களும்/நதியாக்களும் தங்கள் பணியை செவ்வனே செய்த காலம்.
டச் விட்டு போயிடக் கூடாதுன்னு அப்பப்ப சைக்கிளில் காத்து எறக்கிவிட்டும், வூட்டுக்கு தெரியாம சினிமா பார்ப்பதும் மட்டும் தொடர்ந்தது.
இது தாங்க நம்ம பள்ளிக் குறும்பு.
இப்ப படிக்கர பசங்கள மாதிரி cell phone, digital camera இதெல்லாம் இல்லாத காலம். இதெல்லாம் கையில இருந்திருந்தா குறும்பு வேற மாதிரி போயிருக்குமோ?
college குறும்பும், office குறும்பும் ஒரு தனி பதிவா அடுத்த வருஷம் போடறேன்.
அது சரி, இதிலென்ன சர்வே எடுப்பது என்று யோசித்த போது தோன்றியவை கீழே உள்ள ரெண்டு சர்வே-ஸ்.
உங்கள் சாய்ஸ், சூஸி, தனித் தனியா க்ளிக்குங்க :)
பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.
பொறுமையுடன் படித்த உள்ளங்களுக்கு நன்றி!!!
--------------------------------------------------------
2006'ன் சிறந்த பதிவருக்கு ஓட்டு போடாதவங்க இங்கே சொடுக்கி போடுங்க: 2006'ன் சிறந்த பதிவர் - முதல் கட்ட வாக்கெடுப்பு
மேலே உள்ள link ஐ, உங்கள் பதிவில் போட்டீங்கன்னா, நல்லா இருக்கும். நன்றி!
முன்னணியில் இதுவரை: வெட்டிப்பயல், பெனாத்தல் சுரேஷ், குமரன், செந்தழலார், Wethepeople ஆகியோர் இருக்காங்க.
உங்களுக்கு பிடித்த பதிவரை தேர்ந்தெடுக்கள். இதுவரை 220+ ஓட்டுகள் பதிவாகி உள்ளன.
நன்றி! நன்றி! நன்றி!
--------------------------------------------------------
17 comments:
இந்த பதிவு எழுத காரணமாயிருந்த தேன்கூடுக்கும், டைட்டில் வழங்கிய சிறிலுக்கும் நன்றிகள்.
தேன்கூடு தொடர்ந்து இந்த போட்டிய நடத்தி என்ன மாதிரி எழுதத் தெரியாதவனையும் எழுதத் தூண்டோணும்.
veleela sollida maatteengale?
நல்லா எழுதியிருக்கீங்க... கொஞ்சம் எழுத்துப் பிழைகளை சரி செய்த பிறகு இட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. தவறாக எண்ண வேண்டாம்.
//சர்வே-சனின் - குறும்பிய காலங்களும், அதர்க்கான சர்வே-யும்... //
//அறும்பு மீசையுடன் //
//முடிப்பதர்க்குள்//
//எருமை, நாயே, பண்ணி,//
//கப்பில் மாதிரி போலிங்கும்//
//படிப்பதர்க்கே நேரம் பத்தல//
//இப்ப படிக்கர பசங்கள //
அடுத்த சர்வே -
Survey-சன் பதிவுகளில் சராசரி எவ்வளவு எழுத்துப் பிழைகள் காணலாம் -
1) ஒன்றிற்கு கீழாக
2) ஒன்றிற்கு மேல்
3) அட போங்கப்பா அதெல்லாம் யாரு படிக்கிறது?
4) ரொம்ப பேசற நீ.... special aappu வரப் போகுது பாரு...
சர்வேசன் அவர்களே,
முந்திய பின்னூட்டம் நகைச்சுவை என்று நினைத்துக்கொண்டு இடப்பட்டது. த்வறாக நினைக்க வேண்டாம். ஸ்மைலி போட விட்டுபோச்சு... :-)))))
தொடர்ந்து எழுதுங்கள் தொய்வில்லாமல்.
10 & 12 வகுப்பில் மட்டும் குறும்புகளை தவிர்த்து[குறைத்து] ஏதோ கொஞ்சம் படிப்போம்னு நினைச்சிருக்கிறீங்க பாருங்க அதுக்காக உங்களை பாராட்டனுங்க!!
குறும்புகள் அனைத்தும் ரசிக்கும் படியாக இருந்தது!!
தோடா, கும்பல்ல பாதி மொதல் பென்சு கேஸா :)
//veleela sollida maatteengale? //
அனானி, நீங்க என்ன போடறீங்கன்னு எனக்கு எப்படி தெரியும்.
அப்படியே தெரிஞ்சாலும் எந்த அனானின்னு தேடறது :)
ஜமாய்ங்க.
Sridhar,
//நல்லா எழுதியிருக்கீங்க... கொஞ்சம் எழுத்துப் பிழைகளை சரி செய்த பிறகு இட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. தவறாக எண்ண வேண்டாம்.//
நம்ம அறிவுக்கு எட்டினது இவ்வளவுதாங்க.
எல்லா பெருமையும் என் தமில் டீச்சருக்குதான் :)
(seriously, முயற்சி செய்து திருத்திக் கொள்ளப் பார்க்கிறேன் )
நன்றி, =)
Sridhar,
//முந்திய பின்னூட்டம் நகைச்சுவை என்று நினைத்துக்கொண்டு இடப்பட்டது. த்வறாக நினைக்க வேண்டாம். ஸ்மைலி போட விட்டுபோச்சு... :-)))))
தொடர்ந்து எழுதுங்கள் தொய்வில்லாமல். //
கவலையே படாதீங்க. ஸ்மைலி போடலன்னாலும் நகைச்சுவை தான்னு நெனச்சுக்குவேன்.
நமக்கு தமில்ல பிடிச்ச ஒரே வார்த்த 'ஸ்மைல்' தாங்க. :)
வாங்க Dr.Divya,
//10 & 12 வகுப்பில் மட்டும் குறும்புகளை தவிர்த்து[குறைத்து] ஏதோ கொஞ்சம் படிப்போம்னு நினைச்சிருக்கிறீங்க பாருங்க அதுக்காக உங்களை பாராட்டனுங்க!!
குறும்புகள் அனைத்தும் ரசிக்கும் படியாக இருந்தது!! //
பாராட்டுக்கு நன்றி. 10,12 ல கூட ரொம்ப ஒண்ணும் படிச்சு கிழிச்சுடல.. ஏதோ கொஞ்சம் அம்புடுதேன் :)
இன்னும் பல விஷயம் இருக்கு... ஆனால், இங்கே ரொம்ப மொதல் பென்சு கோஷ்டிகள் இருக்கு, அதனால் அப்பாலிக்கா பாக்கலாம் :)
அனானி,
//தோடா, கும்பல்ல பாதி மொதல் பென்சு கேஸா :)//
அட, ஆமாம்பா.. சுந்தர், கனகராஜ் இந்த கும்பல்ல இருக்கீங்களாபா?
pinnoot kayams.
50%க்கு மேல் , மொதல் பென்சு கேசா? சரியா போச்சு.
அப்ப, கடைசி பென்சு கோஷ்டி பசங்க எல்லாரும், பெரிய ஆளாகி வேலை எல்லாம் செய்து பிசியா இருக்காங்களா? இங்க யாரையும் காணோமே?
இந்த மொத பென்சு கோஷ்டிங்கள நம்ப முடியாது சர்வேசா.
என்னய்யா கதை எழுத சொன்னா கத வுட்டுருக்க.
இதெல்லாம் தேராது.
குறும்பிய காலங்களுக்கு வாக்களித்த ரசிகர் பட்டாளத்துக்கு நன்றீஸ்.
ivlo vishayam nadandhirukkaa. naangellaam pazama irudhuttom.
Post a Comment