recent posts...

Wednesday, December 13, 2006

2006'ன் சிறந்த பதிவர் - முதல் கட்ட வாக்கெடுப்பு

+ --------- + --------- + --------- + --------- +
அறிவிப்பு: முதல் கட்ட வாக்கெடுப்பு 22nd December 8.00 AM IST அன்று நிறுத்தப்பட்டு, இறுதி கட்ட வாக்கெடுப்பு அன்றே வெளியிடப்படும்.

15-Dec: 10.45 am IST: இதுவரை 207 ஓட்டு பதிவாயிருக்கு ஒவ்வொரு பிரிவிலும்.

மொத்தம் எம்புட்டு பேர் இருக்கோம் நம்ம கூட்டத்துல ?
எம்புட்டு பேர்னு தோராயமா தெரிஞ்சாதான், இத்தினி விழுக்காடு பதிவாயிருக்கு, இத்தினி விழுக்காடு ஓட்டு சாவடிக்கு வராம சீரியல் பாக்குதுன்னு சொல்ல முடியும் :).

+ --------- + --------- + --------- + --------- +
பின்னூட்டுவதில் பிரச்சனை இருந்தால், OTHER option உபயோகித்து ஊட்டவும்.
Thanks for the support!
+ --------- + --------- + --------- + --------- +

வணக்கம்.
இதுவரை சிபாரிசு செய்யப்பட்ட நூறுக்கும் மேலான பதிவர்கள் பெயரை, மூவர் குழு (பெயர் வெளியிட விரும்பாத) ஒன்று அலசி, ஆராய்ந்து, வகைப்படுத்தி, வரிசைப்படுத்தி வாக்கெடுப்புக்கு சேர்க்க வேண்டிய பெயர்களை அளித்து விட்டார்கள்.
ஆபாசம், தனிமனித தாக்குதல், copy & paste மட்டுமே கொண்ட பதிவுகளை consider செய்யவில்லையாம்.

பதிவர்களை அரசியல், சமூக-அக்கறை, பல்சுவை, ஆன்மீகம் என்று வகைப்படுத்தி இருக்கிறார்கள். ஒவ்வொரு பிரிவிலும் 5 பதிவரை தேர்ந்தெடுத்து வாக்கெடுக்க வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
எந்த ஒரு பதிவரும் ஒரு பிரிவில் 100% fit ஆகலையாம். மேலோட்டமாக பார்த்து அவர் மிகுதியாக எதைப்பற்றி எழுதுகிறார் என்று அலசியதை வைத்து அந்தந்த பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பல்சுவை பிரிவில் பலர் பொருந்தியதால், 5க்கு பதிலாக 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கவிதை, நகைச்சுவை என்ற பிரிவுகள் சேர்க்க முடியாததில் வருத்தமே.

என்னது? பேசினது போதுமா? ஓட்டுப் பெட்டி எங்கய்யா இருக்கா? இதோ கீழே.

கீழே கலர் கலரா ஐந்து ஓட்டுப் பெட்டி உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உங்களுக்கு பிடித்த ஒருவரை க்ளிக்கி, 'அனுப்பு + முடிவுகள் இதுவரை' லிங்கை சொடுக்கி உங்கள் ஓட்டை பதியவும். (மறவாமல் ஒவ்வொரு பெட்டியிலும் உங்களுக்கு பிடித்த ஒருவரை க்ளிக்கி, 'அனுப்பு'வை சொடுக்கவும். ஒவ்வொரு பிரிவிலும், தனித்தனியாக ஒட்டு போடணும்)

ஒவ்வொரு பிரிவிலும் அதிக வாக்கு பெறும் பதிவர்களை சேர்த்து இறுதி கட்ட தேர்தல் 22nd December அன்று நடைபெறும்.

Please vote. Thanks for the மூவர் குழு, and for everyone else for sending the suggestions.
இதில் பல குறைகள் இருக்கலாம். தெரியப்படுத்துங்கள். அடுத்த முறை குறையை களைந்து விடலாம்.
(கள்ள ஓட்டு கண்டு பிடித்து, கணக்கில் இருந்து கழிக்கவும் ஒரு எற்பாடு செய்தாயிற்று. கள்ள ஓட்டு போட முயற்சித்தால். எலியை அமுக்கும் பொத்தானில் ஷாக் அடிக்கும் :) )

(கீழே கலர் கலர் பெட்டி தெரியலன்னா, தேர்தல் அதிகாரி வரலன்னு அர்த்தம். கொஞ்ச நேரம் கழிச்சு மீண்டும் ட்ரை பண்ணினா வந்திடுவாரு)

Start the mujikkkkk.

=============== =============== =============== =============== ===============
21-Dec-06: வாக்கெடுப்பு முடிவடைந்தது. பதிவான வாக்குகளின் விவரங்கள் கீழே:

(வாக்களித்து வெற்றிறிறிறிறிறி அடைய செய்த உள்ளங்களுக்கு நன்றிறிறிறிறிறி!)
இறுதி வாக்கெடுப்பு பற்றிய அறிவிப்பு தனி பதிவில் இங்கே:
=============== =============== =============== =============== ===============















=============== =============== =============== =============== ===============



இந்த Survey பற்றிய விளம்பரம் உங்கள் பதிவில் போட்டால் ரொம்ப நல்லாருக்கும். இந்த பக்கத்திர்க்கு லிங்க் கொடுக்கவும்.

Survey-san

50 comments:

SurveySan said...

mike testing...

பொன்ஸ்~~Poorna said...

எத்தனை நேரம் காத்திருந்தும் பொட்டி(கள்) காணோமே?

SurveySan said...

பொன்ஸ்,

மெய்யாலுமா? எனக்கு தெரியுதே.
refresh செய்து பார்க்கவும்.

கடல் கடந்து இருந்தால் வருவதர்க்கு சற்று தாமதம் ஆகலாம்.

What browser are you using? IE or FireFox is ideal.

SurveySan said...

பொன்ஸ், உங்க ஏரியாவில் இருப்பவர்கள் வேறு யாருக்காவது வேலை செய்யுதானு பாக்கலாம். வேற யாருக்காவது வேலை செஞ்சா கொஞ்சம் சிரமம் பாக்காம ஒரு ஆட்டோ பிடிச்சு அங்க போய் ஓட்டு போடுங்க :)
(என் பதிவில் உள்ள பழைய சர்வே ஏதாவது ஒன்னு முயற்சி பண்ணி பாருங்க. எதுவுமே வேலை செய்யலன்னா settings பிரச்சனை. நான் பிறகு அதர்க்கு step-by-step fix அனுப்பரேன்).

கீழே இருப்பவை தான் ஐந்து பிரிவுகளில் உள்ள பெயர்கள்.



2006 - சிறந்த பதிவர் ( பல்சுவை - பிரிவு அ )
கானா பிரபா (http://kanapraba.blogspot.com)
தமிழ் சசி (http://thamizhsasi.blogspot.com)
சந்தோஷ பக்கம் (http://santhoshpakkangal.blogspot.com)
ராமச்சந்திரன் உஷா (http://nunippul.blogspot.com)
வெட்டிப்பயல் (http://vettipaiyal.blogspot.com)

2006 - சிறந்த பதிவர் ( பல்சுவை - பிரிவு ஆ )
பெனாத்தல் சுரேஷ் (http://penathal.blogspot.com)
மதி கந்தசாமி (http://mathy.kandasamy.net/musings)
கப்பி பய (http://kappiguys.blogspot.com)
செல்வநாயகி (http://selvanayaki.blogspot.com)
நெல்லை சிவா (http://vinmathi.blogspot.com)

2006 - சிறந்த பதிவர் ( ஆன்மீகம் - பிரிவு இ )
கோ. இராகவன் (http://iniyathu.blogspot.com)
குமரன் (http://abiramibhattar.blogspot.com)
SK (http://aaththigam.blogspot.com)
அபு முஹாய் (http://abumuhai.blogspot.com)
ஜெயராமன் (http://vaithikasri.blogspot.com)

2006 - சிறந்த பதிவர் ( சமூக அக்கரை - பிரிவு ஈ )
அசுரன் (http://poar-parai.blogspot.com)
செல்வன் (http://holyox.blogspot.com)
சபாபதி சரவணன் (http://wewakeananda.blogspot.com)
Bad News India (http://badnewsindia.blogspot.com)
செந்தழல் ரவி (http://tedujobs.blogspot.com)

2006 - சிறந்த பதிவர் ( அரசியல்++ - பிரிவு உ )
லக்கி லுக் (http://madippakkam.blogspot.com)
குழலி (http://kuzhali.blogspot.com)
WeThePeople (http://wethepeopleindia.blogspot.com)
ப்த்ரி (http://thoughtsintamil.blogspot.com)
ரவி ஸ்ரீநிவாஸ் (http://ravisrinivas.blogspot.com)

SurveySan said...

சற்று முன் வந்த செய்தி, பொன்ஸ் வாக்கிடும் பகுதியில் பிரச்சனை நீங்கி வாக்குபதிவு இனிதே துவங்கியது :)

SurveySan said...

சற்றுமுன் வந்த செய்தி.

முன்னிலை விவரங்கள் இதுவரை:

அ பிரிவில் வெட்டிப்பயல் 56%
ஆ பெனாத்தல் சுரேஷ் 46%
இ குமரன் 34%
ஈ செந்தழல் ரவி 51%
எ லக்கி லுக் 46%

Anonymous said...

Kalla ottu vandhaa inna thala pannuva?

Anonymous said...

ஏங்க தெரியாமத்தான் கேக்கேன்.. இந்த பட்டியல்ல இருக்கறவங்க யாருமே (ஜிரா மற்றும் பத்ரியைத்தவிர) நடுநிலையா எழுதறவங்களா தெரியலையே..

இந்த பட்டியல்ல அசுரன் பெயரைப் பார்த்து சிரிப்பதா அழுவதா என தெரியவில்லை. நாகரீகமாக எழுத தெரியாத இவர் எப்படி சிறந்த பதிவாளர் பட்டியலில் இடம் பெறலாம்..

அது சரி.. இந்த உஷா மேடம்? இவர் பெயர யார் சாமி பரிந்துரை செய்தது.. கர்மம்டா சாமி..

இதுக்கு ஒரு சர்வே வேற.. போய்யா நீயும் ஒன் சர்வேயும்..

SurveySan said...

கள்ள ஓட்டு கண்டுபிடிக்க ஏற்பாடு பண்ணி இருக்கு. top-5 தேர்ந்தெடுப்பதர்க்கு முன், கள்ள ஓட்டை களைந்து விட்டுத்தான் அறிவிப்பு வரும். :)

SurveySan said...

அனானி,

//ஏங்க தெரியாமத்தான் கேக்கேன்.. இந்த பட்டியல்ல இருக்கறவங்க யாருமே (ஜிரா மற்றும் பத்ரியைத்தவிர) நடுநிலையா எழுதறவங்களா தெரியலையே..
//

நடுநிலைன்னு ஒண்ணு கெடயாதுங்க. either positive or negative.
with us or against us.

நடுன்னு சொல்றதெல்லாம் போலி.

//இந்த பட்டியல்ல அசுரன் பெயரைப் பார்த்து சிரிப்பதா அழுவதா என தெரியவில்லை. நாகரீகமாக எழுத தெரியாத இவர் எப்படி சிறந்த பதிவாளர் பட்டியலில் இடம் பெறலாம்..
அது சரி.. இந்த உஷா மேடம்? இவர் பெயர யார் சாமி பரிந்துரை செய்தது.. கர்மம்டா சாமி..
//


வெறும் ஒரு பதிவை வைத்து முடிவு எடுக்கலீங்கோ. இந்த வருடம் வந்த எல்லா பதிவையும் மேலோட்டம் பாத்து கூட்டி கழிச்சு போட்டிருக்காங்க சார்.

வேற யார அந்த எடத்துல போட்டிருந்தா நல்லா இருந்திருக்கும்னு சொல்லுங்க. அடுத்த வருட சர்வே போடும்போது கணக்கு போட உதவியா இருக்கும்.

Anonymous said...

எல்லாம் சரிதான், முதலில் நீங்கள் யார்? தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமல் இது மாதிரியான சர்வேக்கள் எடுப்பது எத்தனை தூரம் நியாயமானது? இதை எடுப்பவர் யாரென்று தம்மை வெளிப்படுத்திக்கொள்வது தான் தார்மீக கடமையாக இருக்கும்.... இதே காரணத்தினால் இட்லிவடை பதிவில் சிறந்த பதிவர்கள் போட்டியில் வாக்களிக்கவில்லை, தேவைப்படின் விரிவாக பேசலாம். எனவே என் பெயரை வாக்கெடுப்பிலிருந்து நீக்கிவிடுங்கள்

நன்றி
குழலி

பின்குறிப்பு
நானும் இரண்டு மணி நேரமாக பின்னூட்டம் போட போராட ஒவ்வொரு முறையும் பீட்டா பிளாக்கர் அனுமதிக்காததால் அனானிமசாக இதை போடுகிறேன், இந்த பின்னூட்டத்தை என் பின்னூட்ட சேகரிப்பு பதிவிலும் இடுகிறேன்.

http://kuzhalifeedbacks.blogspot.com/2006/08/15-2006.html#c116608682529920486

Anonymous said...

நல்ல முயற்சி. ஓரளவுக்கு எதிர்பார்த்த பதிவர்களையே போட்டிருக்கீங்க, எங்க, காத்து கருப்பெல்லாம் வந்துடுமோன்னு பயந்தேன். :)

Anonymous said...

உஷாவுக்குப் பதில், பொன்ஸ் கூட போட்டிருக்கலாம். பல பத்திரிக்கைகளில் அவரது படைப்புகள் வந்திருக்கின்ற பிரபல்யம் ஒரு காரணமாயிருக்கலாம், இங்கும் அவரை சிபாரிசு கமிட்டி சிபாரிசு செய்திருப்பதற்கு.

சபாபதி சரவணன் ஓரிரு பதிவுகளில் நன்கு தெரிந்தார். மற்றபடி தெரியவில்லை.

லக்கிலுக் திமுக அனுதாபி. டைம் பாஸ் காமெடி பண்ணுபவர், குழலி ரவுடிகளுக்கு வக்காலத்து வாங்குபவர்.
இவர்களும் ஒரு வகையில் பாப்புலர்தான்.

பரவாயில்லை, அப்படி இப்படி எதிர்பார்க்கப்பட்ட பதிவுகளே பரிந்துரைக்கப் பட்டிருக்கின்றன.

ஓட்டு போட்டாச்சு, அடுத்த கட்டத்துக்கு ஆவலாயிருக்கிறேன்.

நமக்கு தனி ப்ளாக் எல்லாம் கிடையாதுங்க, அதுனால, கருத்து மட்டும்தான்.

ஏற்கனவே ரவிசங்கர், குப்பை பதிவுகள் அதிகம்னு சொல்லியிருக்கிறார், நாம வேற ஏன் குப்பை போடணும் :)

http://thamizhthendral.blogspot.com/2006/12/2.html

வல்லிசிம்ஹன் said...

துளசி கோபால் எந்த வகையிலும் இல்லையா?:-(
இட்லிவடை காணோம்?:-)

SurveySan said...

குழலி,

//எல்லாம் சரிதான், முதலில் நீங்கள் யார்? தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமல் இது மாதிரியான சர்வேக்கள் எடுப்பது எத்தனை தூரம் நியாயமானது?//

என்னை வெளிப்படுத்திக் கொண்டு என்ன ஆவப்போது? I didnt choose the names.

சாரி சார், வாக்கெடுப்பு ஆரம்பமாகி விட்டதனா, பெயரை இனி எடுக்க இயலாது.
வாக்கெடுப்பில் வெற்றி பெற்றால் அடுத்த கட்ட வாக்கெடுப்பின் போது வேண்டுமானா, உங்கள் பெயரை எடுத்து விட மூவர் குழுவுக்கு சொல்கிறேன்.

sorry for the trouble!

Anonymous said...

60 வயதானாலும் இன்னும் இளைஞராகவே இயங்கி, நல்ல பல கருத்துகளை வழங்கியிருக்கிற மூத்த பதிவாளர் டோண்டு அவர்கள், ஆன்மீக சுடரொளி கண்ணபிரான், எ.அ. பாலா அவர்கள், சிந்தனை மிகுந்த எழில், அரசியல் விமர்சகர் இட்லிவடை - இவர்கள் இல்லாத பதிவுலகமா? ஆனால் இவர்கள் பெயரெல்லாம் காணோம்.

உங்களுக்கு தமிழ் பதிவுலக நாயகர்களை பற்றி அடிப்படை அறிவு கூட இல்லை என நினைக்கிறேன்.

Anonymous said...

கண்ணபிரான் ரவி சங்கர் பதிவை ஒரு முறை படிக்க சொல்லுங்கள்... ஆன்மீகத்தில் அவருக்கும் முக்கியமான ஒரு இடமுண்டு...

Anonymous said...

மாயவரத்தான் இல்லாத தமிழ் வலையுலகா? நீர் யாருன்னு தெரிஞ்சிடுச்சுப்பா.

SurveySan said...

அனானி,

//நல்ல முயற்சி. ஓரளவுக்கு எதிர்பார்த்த பதிவர்களையே போட்டிருக்கீங்க, எங்க, காத்து கருப்பெல்லாம் வந்துடுமோன்னு பயந்தேன். :) //

நன்றி. இவங்கள சேக்கணும், இவங்கள சேக்கக்கூடாது என்றெல்லாம் 'திட்டமிட்டு' எதையும் பண்ணல. மார்க் போட்டு அதன் அடிப்படையில்தான் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

எனக்கே கொஞ்ச சங்கடம் இருக்கு - சிறில், பொன்ஸ், கடல் கணேசன், சிவகுமார் இவங்க எல்லாம் இல்லாதது.

But, those in the list, deserve more than anyone else (according to the மூவர் :) )

SurveySan said...

அருண் சென்னை,

//பரவாயில்லை, அப்படி இப்படி எதிர்பார்க்கப்பட்ட பதிவுகளே பரிந்துரைக்கப் பட்டிருக்கின்றன.
ஓட்டு போட்டாச்சு, அடுத்த கட்டத்துக்கு ஆவலாயிருக்கிறேன்.
நமக்கு தனி ப்ளாக் எல்லாம் கிடையாதுங்க, அதுனால, கருத்து மட்டும்தான்.//

இறுதி கட்ட பதிவு Dec-22 அன்று கொடுக்கப்படும். நானும் ஆவலுடன் % மாறுவதை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

சும்மா எழுதிப் பாருங்க. சுமாராவது எழுத முடியும். பேசரத அப்படியே தட்டச்சுங்க படிங்க அம்சமா இருக்கும். சிவகுமார்னு ஒருத்தர் எழுதறார் பாருங்க, அந்த மாதிரி சிம்பிளா எழுத முயலுங்கோ.

SurveySan said...

revathinarasimhan,

//துளசி கோபால் எந்த வகையிலும் இல்லையா?:-(
இட்லிவடை காணோம்?:-) //

எனக்கும் வருத்தந்தேன்.
இட்லிவடை 'செய்தி' பிரிவில் சேர்க்கப்பட்டார். ஆனால், கடைசியில் அந்த பிரிவை வாக்கெடுப்பில் சேர்க்க வேணாம்னு சபைல முடிவு பண்ணிட்டாங்க.

(என்னயே காணும் லிஸ்ட்ல. அத பத்தி யாரும் வருத்தப்பட்டு கேக்க மாட்டீங்களா? :( )

SurveySan said...

அனானி,

//60 வயதானாலும் இன்னும் இளைஞராகவே இயங்கி, நல்ல பல கருத்துகளை வழங்கியிருக்கிற மூத்த பதிவாளர் டோண்டு அவர்கள், ஆன்மீக சுடரொளி கண்ணபிரான், எ.அ. பாலா அவர்கள், சிந்தனை மிகுந்த எழில், அரசியல் விமர்சகர் இட்லிவடை - இவர்கள் இல்லாத பதிவுலகமா? ஆனால் இவர்கள் பெயரெல்லாம் காணோம்.
உங்களுக்கு தமிழ் பதிவுலக நாயகர்களை பற்றி அடிப்படை அறிவு கூட இல்லை என நினைக்கிறேன்.//


எல்லாரும் எல்லாமும் பெறவேணும் என்ற எண்ணம் நல்லது தான்.
ஆனால், செலக்ட் பண்ணி இருக்கர ஆளுங்களும் deserves their place.

SurveySan said...

அனானி,

//கண்ணபிரான் ரவி சங்கர் பதிவை ஒரு முறை படிக்க சொல்லுங்கள்... ஆன்மீகத்தில் அவருக்கும் முக்கியமான ஒரு இடமுண்டு... //

கண்டிப்பாய் இடம் கொடுத்திருக்க வேண்டிய பதிவர்தான்.
எதை எடுப்பது எதை விடுப்பது என்ற அளவில் எழுதுகிறார்கள் ஆன்மீகம் பற்றி எழுதுபவர்கள்.

SurveySan said...

அனானி,

//மாயவரத்தான் இல்லாத தமிழ் வலையுலகா? நீர் யாருன்னு தெரிஞ்சிடுச்சுப்பா. //

நான் யாருமில்லீங்கண்ணா. மாயவரத்தானுக்கு யாருக்கு சீரியஸ் ரெக்கமண்டேஷன் பண்ணல. சும்மா லுலுலுவாய்க்கு பண்ணி இருந்தாங்க.
(btw, மாயவரத்தான் பதிவை பாத்தேன். அவரு template மாத்த சொல்லுங்க. ஓவரா கண்ணுல அடிக்குது கலரு)

Anonymous said...

//அவரு template மாத்த சொல்லுங்க. ஓவரா கண்ணுல அடிக்குது கலரு//

அவரு பதிவ எட்டி பாத்துட்டுயா. போ உன் ip வச்சு நீ யாருன்னு சொல்ல போராரு.

SurveySan said...

அனானி,

//அவரு பதிவ எட்டி பாத்துட்டுயா. போ உன் ip வச்சு நீ யாருன்னு சொல்ல போராரு.//

ஏங்க வேற வேல இல்லயா அவருக்கு?

சபாபதி சரவணன் said...

சர்வேசா, ஏன்யா.... ஏன்???

நான் பாட்டுக்கு ஓரமாத்தானே போய்க்கிட்டு இருந்தேன். என்னைய தூக்கி இங்கன போட்டு, சுத்தி அர்னால்டும், சிர்வர்ஸ்டரும், மைக்டைசனும், முகமது அலியும், அடி தாங்க முடியலப்பு. கொல கேசுல உள்ளே போகப்போற :-)

நிற்க.

நான் சொற்ப எண்ணிக்கையிலேயே பதிவிட்டிருக்கிறேன். எழுத்துலகிலும், பதிவுலகிலும் பங்களிப்பை தீவிரப்படுத்த ஆவலிருந்தாலும், உடல்நிலை சற்றும் இடமளிக்க மறுக்கிறது. என்னைவிட தகுதி வாய்ந்த பலர் இந்த பட்டியலில் இல்லை என்பது வருத்தமளிக்கிறது. எனக்கு இங்கு இடமளித்தது தவறான முடிவு என்ற என் எண்ணத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

நன்றி.

தோழமையுடன்,
சபாபதி சரவணன்

SurveySan said...

சபாபதி சரவணன் சார்,

//நான் பாட்டுக்கு ஓரமாத்தானே போய்க்கிட்டு இருந்தேன். என்னைய தூக்கி இங்கன போட்டு, சுத்தி அர்னால்டும், சிர்வர்ஸ்டரும், மைக்டைசனும், முகமது அலியும், அடி தாங்க முடியலப்பு. கொல கேசுல உள்ளே போகப்போற :-)
//


என்னங்க இது, போட்டா, ஏன் போட்டன்றீங்க? போடலன்னா ஏன் போடலன்றாங்க. என்ன பண்ணுவது. பொது வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமா?

உங்க பேர போடலன்னா 'மூவர் குழுவில்' ஒருவர் மாடியிலிருந்து குதிச்சிடுவேன்னாரு. ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதமாம் :)
நானும் படிச்சேன் நீங்க எழுதின சில பதிவுகளை.
அந்த மாதிரிதாங்க எழுதணும். தொடரட்டும் பணி.

(தற்போதைய நிலவரப்படி, செந்தழல் ரவி நொறுக்கி நுங்கு கொடுத்துடுவாரு போல இருக்கே உங்களுக்கும், மத்தவங்களுக்கும்) - sorry, better luck next time :)

seriously, keep up the good work! no matter how the results turn up.

Anonymous said...

\\\ஏங்க தெரியாமத்தான் கேக்கேன்.. இந்த பட்டியல்ல இருக்கறவங்க யாருமே (ஜிரா மற்றும் பத்ரியைத்தவிர) நடுநிலையா எழுதறவங்களா தெரியலையே\\\

இத பத்திரியே ஒத்துக்கொள்ளமாட்டாரப்பா.....

SurveySan said...

அனானி,

//இத பத்திரியே ஒத்துக்கொள்ளமாட்டாரப்பா..... //

சரியா சொனீங்க.

நடுநிலைன்னு ஒண்ணு கிடையவே கிடையாது எதிலும்.
:)

SurveySan said...

சிலருக்கு அவங்க அபிமானிகள் பெயர் இல்லண்ணு கஷ்டம் இருக்கலாம்.

எல்லாரையும் போட்டு குலுக்கி எடுக்காம இப்படி பிரிவா பிரிச்சு எடுப்பது நல்லது என்று தோன்றியதால் இப்படி.

அவரில்லை இவரில்லை என்று வசை பாடாமல், லிஸ்டில் இடம் பெற்றிருப்பவர்களை ஒரு வாய் வாழ்த்தலாமே ladies and gentlemen?

btw, லிஸ்டில் இடம்பெற்றிருக்கும் அன்பர்கள், தங்கள் பெயர் போட்டியில் வேணாம்னு நெனைக்கலாம் (குழலி சார் மாதிரி). but, it is too late. சிபாரிசு stateலயே சொல்லி இருந்தா ஏதாவது பண்ணி இருக்கலாம்.

so, இறுதி கட்ட போட்டியில் பெயர் தேர்ச்சி பெற்றால், பெயரை சேர்த்துக் கொள்ளணுமா வேணாமானு சொல்லிடுங்க இப்பவே.

இறுதி கட்டத்தில் ஐந்து பேர் இல்லன்னா, ஐந்தாவதா என் பெயரை போட்டுக்கரேன் :)

SurveySan said...

Flash News:

as of now, the following bloggers are in the lead in the individual categories:

சந்தோஷ பக்கம் (http://santhoshpakkangal.blogspot.com)

பெனாத்தல் சுரேஷ் (http://penathal.blogspot.com)

குமரன் (http://abiramibhattar.blogspot.com)

செந்தழல் ரவி (http://tedujobs.blogspot.com)

WeThePeople (http://wethepeopleindia.blogspot.com)

The election commissioner has received a few complaints about booth rigging and 'kalla' votes.
So far 47 votes have been found with 'kalla' lakshanam.
When voting ends on 22/12, 'kalla' votes will be subtracted before final 5 are announced. :)

If you haven't voted, please vote!

Anonymous said...

'2006n SIRANHA PATHIVAR'
BUT 2006n MOSAMAANA SURVEY.

Anonymous said...

'சமூக அக்கரை'.
சமூகம் என்ற ஆற்றின் அடுத்த கரையில் இருப்பவர்களைச் சொல்கிறீர்களா?
உண்மையில் 'அக்கறை'யாகத்தான் கேட்கிறேன் ;-)

SurveySan said...

//'சமூக அக்கரை'.
சமூகம் என்ற ஆற்றின் அடுத்த கரையில் இருப்பவர்களைச் சொல்கிறீர்களா?
உண்மையில் 'அக்கறை'யாகத்தான் கேட்கிறேன் ;-) //

:) எனக்கும் அக்கறை இருக்கரதால டக்குனு மாத்திட்டேன்.

SurveySan said...

அனானி,

//'2006n SIRANHA PATHIVAR'
BUT 2006n MOSAMAANA SURVEY//

அப்படீங்களா? அதுக்கொரு சர்வே எடுத்து verify பண்ணிட்டா போச்சு :)

Anonymous said...

அக்கறையா மாத்தினது சரி. இனிமேலும் இதே 'அக்கறை' தொடர்தால் சரி.
இதேமாதிரி 'அக்கரை'யில புலம்புறவங்க தமிழ்வலைப்பதிவுகளில ஏராளம் ஏராளம். அவங்களும் திருந்தினா நல்லது.

அதேமாதிரி, 'நொறுக்கி' ங்கிறதையும் மாத்தி தமிழை 'நொருக்காம' இருந்தா நல்லது. பின்னூட்டத்தில மாத்த முடியலைனாலும் இனிமேல் சரியா எழுதினாப் போதும்.

SurveySan said...

//அதேமாதிரி, 'நொறுக்கி' ங்கிறதையும் மாத்தி தமிழை 'நொருக்காம' இருந்தா நல்லது. //

thanks anony.
All credit goes to my tamil teacher :)

அபூ முஹை said...

அது யாருங்க அபு முஹாய்? எம்பேரை மாத்தியெழுதிப் பழிவாங்க எத்தனை நாள் திட்டமுங்க?:)

அன்புடன்,
அபூ முஹை

SurveySan said...

அபு முஹை,

//அது யாருங்க அபு முஹாய்? எம்பேரை மாத்தியெழுதிப் பழிவாங்க எத்தனை நாள் திட்டமுங்க?:)
//

hai னு முடிஞ்சா ஹாய் தாங்க. hi தான் ஹை :)

அபூ முஹை said...

//hai னு முடிஞ்சா ஹாய் தாங்க. hi தான் ஹை :)//

அப்போ இனிமேல் pettai யை, பேட்டாய் என்றும் மதுரையை, மதுராய் என்றும் வாசிக்கச் சொல்றீங்க? :)

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

வாக்கெடுப்பில் என்னுடைய வலைப்பதிவும் இருப்பதை இன்றுதான் அறிந்தேன். மிகவும் நன்றி! ஆனால், தாங்கள் வாக்கெடுப்பு நடத்தும் முறையில் திருப்தி இல்லை. இவ்வாக்கெடுப்பில் என்னுடைய பதிவைச் சேர்க்க வேண்டாம்.

நன்றி!

-மதி

Anonymous said...

//thanks anony.
All credit goes to my tamil teacher :)//
அது சரி. தமிழில் பிழை திருத்தித் தொல்லை பண்ணுகிறாரே என்று ஆங்கிலத்தில் எழுதி தப்பிக்க முயற்சியா?!

பலே சர்வேசா.. இப்படித் தான்
'அக்கறை'யோடு சொல்பவர்களைத் திணற அடிக்கோணம்..

SurveySan said...

மதி கந்தசாமி,

//ஆனால், தாங்கள் வாக்கெடுப்பு நடத்தும் முறையில் திருப்தி இல்லை. இவ்வாக்கெடுப்பில் என்னுடைய பதிவைச் சேர்க்க வேண்டாம்//

எது திருப்தி இல்லைனு சொன்னீங்கன்னா, அடுத்த சர்வே போடும்போது கவனமா இருக்கலாமே. சொல்வீங்களா?

நீங்கள் கேட்டுக் கொண்டது போல், இந்த கட்டத்தில் வெற்றி பெற்றால், இறுதி வாக்கில் உங்கள் பெயரை சேர்க்கலை.

நன்றி!

SurveySan said...

அனானி,

//பலே சர்வேசா.. இப்படித் தான்
'அக்கறை'யோடு சொல்பவர்களைத் திணற அடிக்கோணம்..
//

எங்க தமில் டீச்சர் என்ன சொல்லிக் கொடுத்தோங்களோ இல்லியோ, மேலே நீங்க சொன்னது வஞ்சப் புகழ்ச்சி அணின்னு சொல்லி இருக்காங்க :)

SurveySan said...

நட்சத்திர பதிவாளர் வெட்டிப்பயலுக்கு வாழ்த்துக்கள்.

(நம்ம செலக்ஷன் கமிட்டியின் செயல் திறனுக்கு ஒரு சான்று, வெட்டிப்பயலின் நட்சத்திர பதிவர் தேர்வு :) )

SurveySan said...

பின்னூட்ட கயமைன்னா என்னங்க? தமக்கு தானே இப்படி போட்டுக்கரதா?

Anonymous said...

மேலே இருக்குதே அதான்.

SurveySan said...

இதுவரை
அ பிரிவில் 324
ஆ பிரிவில் 193
இ பிரிவில் 208
ஈ பிரிவில் 294
உ பிரிவில் 226

வாக்குகள் பதிவாகி உள்ளன.

வாக்களிப்போர் மறவாமல் எல்லா கட்டங்களிலும் தனித்தனியாக வாக்களிக்கவும்.

நன்றீஸ்.!


தற்போதைய முன்னணி நிலவரம்:
அ. வெட்டிப்பயல், சந்தோஷ பக்கம்
ஆ. பெனாத்தல்
இ. குமரன்
ஈ. செந்தழல் ரவி
உ. Wethepeople

கலக்குங்க!

SurveySan said...

pinnoot kayams.

வாக்களிக்க இன்றே கடைசி நாள்!