-------------- -------------- -------------- --------------
வாக்கெடுப்பு முடிந்தது.
"தமிழ்மணம் 'கருத்து' சுதந்திரம் தடைகிறதா?" என்ற கேள்விக்கு "இல்லை (பொதுத் தளத்தில் எழுத்தொழுக்கம் வேண்டும்)" என்ற பதிலே பெருவாரியாக பதியப் பட்டது.
% விவரங்கள் கீழே:
ஆமாம் (என்ன வேண்டுமானாலும் எழுதுவது அவரவர் விருப்பம்)(23%)
இல்லை (பொதுத் தளத்தில் எழுத்தொழுக்கம் வேண்டும்) (69%)
கருத்தில்லை (5%)
கவலை இல்லை (3%)
so, தீர்ப்பு: "இல்லை - பொதுத் தளத்தில் எழுத்தொழுக்கம் வேண்டும்"
.
-------------- -------------- -------------- --------------
ச ச ச. இந்த பொறுப்பான பதவி வகித்தாலே தொல்லைதான்.
நாட்டில் நடக்கும் முக்கிய விஷயங்களை பற்றி எல்லோரும் நினைப்பது என்ன என்று கருத்துக் கணிப்பு நடத்தும் இந்த 'சர்வே-சன்' பதிவி ரொம்ப பேஜார்.
மீட்டிங் போலாம்னு கிளம்பினா, நண்பரின் அவசர 'தந்தி'.
"சர்வேசா, தமிழ்மணத்தில் சலசலப்பு. பதிவர் ஒருவர் துரத்தப்பட்டார். கருத்து சுதந்திரத்துக்கு ஆபத்து. காப்பாத்து. எல்லார் கருத்தையும் கணித்துக் கூறு"
அட என்னப்பா இது என்று, சற்றே சலிப்புடன் கீழே உள்ள இன்றைய சர்வே. யோசித்து உங்கள் கருத்தை தெரியப்படுத்தவும். நன்றி ;)
(seriously, What is your take on this?)
;);););););););););)
11 comments:
கலக்கு தல.
தமிழ்மணம் எடுத்த சரியான முடிவுதான் அது. நல்ல விசயங்கள் பரிமாறப் பட்டால், எல்லோரும் வரவேற்பர். அவதூறான விசயங்கள் படைப்பிக்கப் படுகையில், இதுபோன்ற நிகழ்வுகள் தேவையான ஒன்றுதான். வெல்டன் தமிழ்மணம்!
கலக்கரேன் தல ;)
அருண்,
//தமிழ்மணம் எடுத்த சரியான முடிவுதான் அது. நல்ல விசயங்கள் பரிமாறப் பட்டால், எல்லோரும் வரவேற்பர். அவதூறான விசயங்கள் படைப்பிக்கப் படுகையில், இதுபோன்ற நிகழ்வுகள் தேவையான ஒன்றுதான். வெல்டன் தமிழ்மணம்! //
நல்ல கருத்து. ஆனால், இந்த 'தூக்குவது', ஒருதலை பட்சமாக செயல்படக்கூடாது.
அன்பான திராவிட உள்ளங்களே,
விஷம் தோய்ந்த மேலாதிக்க உத்தி எவ்வளவு நளினமாக எல்லா இடங்களிலும் வேர் பரப்பி, தன்னுடைய நிலைப்பாட்டை உறுதி செய்து கொள்ளுகிறது என்பதனை இன்னும் ஒருமுறை பார்க்கிறோம்.
இந்த உத்தி ஒரு நேர்க்கோடு போல செவ்வனே அமைந்திருப்பதை தமிழ்மண வரலாற்றை நெடுங்காலமாக அறிபவர்கள் உணர முடியும்.
பெயர் குறிப்படுவது முறையல்ல என்றாலும், சில நேரங்களில், பெரிது வாய்ந்த நன்மையை கருதி அதை செய்ய வேண்டியிருக்கிறது.
நண்பர் பாலசந்தர் கணேசன் அவமானப்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தட்டார்.
தோழர் நியோ திட்டமிட்டு கழிக்கப்பட்டார்.
துடிப்பான தமிழர் நண்பர் முத்து (தமிழினி) விரட்டியடிக்கப்பட்டார் (இது குறித்து எனக்கு ஐயப்பாடு உண்டு. அவர் இன்னும் உணர்வோடு இருக்கிறார் என்று நம்புகிறேன்)
இப்போது, செயலாற்றல் மிகுந்த விடாது கருப்பும் பலியாக்கப்பட்டு விட்டார்.
உண்மையில் தமிழ்மணம் மேல் எனக்கு வருத்தமில்லை. விடாது கருப்பின் சமீப பதிலடிகளை வரன் கடந்த ஒன்று என பிண்ணனி காரணியாக தமிழ்மணம் நிறுத்தியிருப்பது மிக வலுவான தாங்கியாக இருப்பதால, மேலாதிக்க உத்தியின் நஞ்சு அவரை உசுப்பி விட்டது எனற உண்மை தொய்விழந்து விட்டது.
ஆனாலும், இன்னும் ஒருமுறை மேலாதிக்க உத்தியிடைய கோரமுகமும், அதன் இருப்பும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
எஞ்சியுள்ள திராவிட உணர்வுகளுக்கு சுண்ணாம்பு தடவப்பட்டிருக்கிறது.
அன்புடன் தமிழன்,
இதுவரை வந்த ஓட்டுக்கள் 'பொது இடத்தில் எழுத்தொழுக்கம் தேவை' என்பதை சொல்லி இருக்கு.
சரியான சாய்ஸ் தானே அது?
// இதுவரை வந்த ஓட்டுக்கள் 'பொது இடத்தில் எழுத்தொழுக்கம் தேவை' என்பதை சொல்லி இருக்கு.
சரியான சாய்ஸ் தானே அது?
//
மகத்தான நோக்கம் ஒன்றை சுட்டிக் காட்டி, அதன் பெயரால் ஒரு சார்பாக நிகழ்த்தப்பட்ட அநீதியை மறைக்கலாமா?
நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில், நீங்கள் நிற்கும் தளத்தை பொருத்தது.
துலக்கமாக சொல்லுவதென்றால், 'மாமியார் உடைத்தால் முருங்கைக்காய். மருமகள் உடைத்தால் மிக்ஸி'
நேசமுடன் வெங்கடேஷ், பாரா, அருண் வைத்யநாதன், அன்னியன் வெங்கடரமணி, ஹல்வா சிட்டி விஜய் ... இப்படி தொடரும் கதையை யார் சொல்வதாம்? கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வக்கில்லாத ஜென்மங்களால் தான் கொடூரமான குடும்பத்தினரையே வசைபாடும் வக்கிரம் அரங்கேறி வருகிறது. அதற்கு ஜால்ரா தட்டுபவர்களும் அதே போன்ற வக்கிர மனம் படைத்தவர்கள் தான். திராவிடம் என்ற பெயரில் அநியாயம் புரிபவர்களை உண்மை திராவிடர்கள் என்றைக்கோ அடையாளம் கண்டு கொண்டு விட்டார்கள்.
பல வலைத் தளங்களிலும், மன்றங்களிலும் விளையாட்டு காண்பித்து காறித்துப்பப்பட்டு விரட்டப்பட்டு, இப்போது இங்கேயும் (பலமுறை) துப்பப்பட்டு விட்டதால், அடுத்த மடத்தை நோக்கி நகரவும்.
கட்டுப்பாடு அவசியம் கண்டவர் கண்டதைச் சொல்லக்கூடாத வார்தைகளால் சொன்னால் நன்றாக இருக்காது.
o.k. நாட்டாமைங்க எல்லாம் தீர்ப்பு சொல்லிட்டாங்க.
தமிழ்மணம் தன் வேலையை ஒழுங்காகவே செய்கிறது. "பொது இடத்தில் எழுத்தொழுக்கம் வேண்டும்" என்பதே தீர்ப்பு.
so, எல்லாரும் இதை மனதில் வைத்துக்கொண்டு நல்ல விஷயங்களை நல்ல விதமாக எழுதுவோமே!
Idhu nachchu!
Post a Comment