ராத்திரி ஒரு பத்து மணிக்குமேல சென்னைய சுத்திப் பாக்க ஆரம்பிச்சீங்கன்னா, வாழ்க்கையின் கீழ் நிலை மக்கள் பலர் , வீடில்லா கொடுமையால், இரயில் நிலையங்களிலும், பஸ்-ஸ்டாப்பிலும் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.
"ச பாவம" என்று தோன்றுவது ஒரு புறம் இருக்கும்.
'அட எப்படிதான் இப்படியெல்லாம் வாழறாங்களோன்னு' இன்னொரு புறம் தோணும்.
வீடு இருக்கரவங்க மட்டும் ஒழுங்கா வாழறாங்களா என்ன? பல இடங்களில் பாத்தீங்கன்னா, சரியான ரோடு இருக்காது, வீட்டுக்கு முன்னாடி சாக்கட தேங்கி நிக்கும். ஆனா, அத மாத்த எந்த நடவடிக்கையும் எடுக்காம, அதுக்கெல்லாம் நாங்க immuneஆயிட்டோங்கர மாதிரி வாழ்வாங்க.
அவிகளப் பாக்கும்போதும், 'அட, எப்படித்தான் இப்படியெல்லாம் இருக்காங்களோன்னு' தோணும்.
ஆனா, நாளாக நாளாக, எங்க வீட்டுக்கு முன்னாடியும் ரோடு சரியில்லாமப் போச்சு, எங்க வீட்டுக்கு முன்னாடியும் சாக்கடைய தோண்டிவிட்டு, தேங்க வச்சு கப்பாக்கிட்டானுவ. நானும் ஒண்ணும் பெருசா செஞ்சு கழட்டாம, பத்தோட ஒண்ணு பதினொண்ணா வாழப் பழகிட்டேன். இப்ப என்ன பாத்து எவனாவது, 'அட எப்படித்தான் இப்படியெல்லாம் இருக்கானோ''ன்னு ஆச்சரியப்பட்டா, 'கொஞ்ச நாள் பொருங்க சார், உங்களுக்கும் இதேதான் ஆவும்னு' வில்லத்தனமா நெனச்சுக்க வேண்டியதுதான் போல.
இப்படித்தான், சில வருஷங்களுக்கு முன், திருவொற்றியூரில் ஒரு நண்பனைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவன் இருந்த தெருவே கொஞ்சம் வித்யாசமா இருந்திச்சு.
அந்தத் தெருவில் எல்லா வீடும், கால்-வாசி தரை மட்டத்துக்கு கீழ இருந்தது.
அதாவது, வீட்டு ஜன்னலின் பாதி பூமிக்குள்ள இருந்ததுன்னா பாத்துக்கோங்களேன் (மிகைப் படுத்தல).
தெருவிலிருந்து, அவன் வீட்டுக்குள்ள போக, அஞ்சு படிக்கட்டு கீழ எறங்கி போகணும்.
அட, இது என்னடா மடத்தனமா இப்படி வீடு கட்டிருக்கீங்களே, மழ வந்தா என்னடா பண்ணுவீங்கன்னு கேட்டேன்.
அதுக்குதான் இத வச்சிருக்கோம்னு ஒரு தண்ணி-மோட்டர காமிச்சான். தண்ணி தேங்கினா, மோட்டர் வச்சு வெளீல தள்ளணுமாம்.
அட கெரகம் பிடிச்சவனே, கிண்டி சப்-வேல தண்ணி நிக்கும், மோட்டர் வச்சு அடிப்பான் பாத்திருக்கேன். அத எந்த மடப்பயன் கட்டினானோன்னு ஒவ்வொரு தடவையும் நெனச்சுப்பேன். அதாச்சும் பரவால்ல, ஊர் சொத்து, தண்ணி தேங்சிச்சுன்னா, சப்-வேல போகாம ரோட்ல எகிரி குதிச்சு ஓடிடலாம்.
வீட்ல தண்ணி தேங்கர மாதிரி ஏண்டா இப்படி தெரு அளவுக்கு கீழ கட்டினேன்னு கேட்டேன்.
வீடு கட்டினவங்க ஒழுங்கா ஒயரமாதான் கட்டினாங்க. அது என்னாச்சின்னா, தெருவுக்கு தார்-ரோடு போடுவாங்க, அஞ்சு வருஷத்துக்கு ஒரு தரம், எலக்ஷனுக்கு முன்னாடி. ஒவ்வொரு தடவ ரோடு போடும்போதும், கெரகம் புடிச்சவனுங்க, ஏற்கனவே இருக்கர ரோட ஒடச்சு அப்புறப் படுத்தாம, சும்மா கெளரிவிட்டு, அதுக்கு மேலயே புது ரோடு போடறானுங்கோ.
ஒவ்வொரு தடவையும் இப்படிப் பண்ணும்போது, தெருவின் உயரம் 1/4 அடி வரை அதிகமாகும்.
மூணு படிக்கட்டு மேல ஏறி வீட்டுக்குள்ள போகர மாதிரி ஒயரமா வீடு கட்டி வச்சிருந்தாங்க.
இப்படி 1/4 அடி ரோடு ஏற ஏற, ஒவ்வொரு படிக்கட்டா தியாகம் பண்ணானுங்க.
எவனாவது வாயத் தொறந்து கேட்டானா?
இன்னும் ரெண்டு படிக்கட்டு இருக்கே, இன்னும் ஒரு படிக்கட்டு ஒயரம் இருக்கேன்னு விட்டானுங்க.
சில வருஷத்துல, ரோடும், வீடும், ஒரே லெவலுக்கு வந்துடுச்சு. அப்பவாவது கேட்டானுங்களா?
வீட்ட சுத்தி சொவர கட்டி, கேட்டுல ஒரு பாத்தி கட்டி, மழைத் தண்ணி வீட்டுக்குள்ள வராத மாதிரி செஞ்சாங்க. (அடேங்கப்பா, ஐன்ஸ்டீன் தோத்தாண்டா உங்க கிட்ட)
இன்னும் ரெண்டு எலக்ஷன் முடிஞ்சது, சில இடைத்-தேர்தல், கவுன்ஸிலர் தேர்தல்னு முடிஞ்சது. இன்னும் ரெண்டு தடவ ரோட போட்டாங்க. இப்ப என்னாச்சு? ரோடு இன்னும் மேல போயிடுச்சு.
இப்பவாவது ஏண்டா இப்படி பண்றீங்கன்னு கேட்டானா? இல்லியே!
திரும்ப, ஐன்ஸ்டீன் மூள உபயோகிச்சு, ரோட்லேருந்து, அழகா ரெண்டு படிக்கட்டு வீட்டுக்குள்ள போக, ஸைட்ல, ஒரு சருக்கு மரம் மாதிரி ஒண்ண கட்டிட்டான். டூ-வீலர் கொண்டு போகவாம்.
இப்படி சில காலம் போச்சு. இந்த காலத்துலதான், தண்ணிய வெளீல தள்ள மோட்டர், பக்கெட்டு ஏற்பாடெல்லாம் பண்ணான்.
இப்படியே, பரிணாம வளர்ச்சி அடஞ்சு அடஞ்சு, ஜன்னல் எல்லாம் பூமிக்குள்ள போகர அளவுக்கு, தெரு வளர்ந்துடுச்சு.
ஜன்னல் எல்லாம், பர்மனெண்ட்டா ஸீல்ட் இப்ப.
அஞ்சாறு வருஷத்துக்கு முன்னாடி இந்தத் தெருவையும் அந்த வீட்டையும் பாத்து, 'அட, எப்படித்தாண்டா வாழறீங்க இந்த மாதிரியெல்லாம். ஒரு வார்த்த அந்த ரோடு போடற காண்ட்ராக்ட்டரையும், கவுன்ஸிலரையும், கேக்கமாட்டீங்க?"ன்னு சலிச்சிக்கிட்டு வந்தேன்.
இப்ப என்னடான்னா, எங்க தெருவிலயும் இதே கூத்து நடக்குது. 1/4 அடி இவ்ளோ வருஷமா வளந்தது கவனிக்காம வுட்டதுல, இப்போ, தெருவும், வீட்டு அளவுக்கு வளந்துடுச்சு.
சுத்தி, great-wall கட்டியாச்சு. பாத்தியெல்லாம் கூட கட்டியாச்சு.
ஆனா, ரோடு வழக்கம் போல மோசமாயிடுச்சு, அடுத்த ரோட போடப் போறாங்க.
இந்த தடவ ரோடு போட்டா என்னாகும்? தெரு உயரும். வீடு கீழப் போகும்!
அடுத்ததா ஒரு தண்ணி-மோட்டார் வாங்கி, நானும் மழைக்கால கோதாக்கு தயாராகவா, இல்ல ரோடு போடறவன, இருக்கர ரோட கொத்தி தூரப் போட்டு, அதே லெவல்ல புது ரோட போடுய்யான்னு அடாவடி பண்ணவா?
நான் சொல்லிக் கேப்பாங்களா? ராவோட ராவா, முதுகுல டின்னு கட்டிட்டாங்கன்னா?
உங்கத் தெருவில இந்த மாதிரி எல்லாம் ப்ரச்சனை இல்லியா?
எனக்குத் தெரிஞ்சு, ரோடு-காண்ட்ராக்ட் எடுக்கரவங்க, இருக்கும் ரோட்டை சுத்தமா அப்புறப் படுத்திட்டு, புது ரோடு போடணும்னுதான் காண்ட்ராக்ட் ரூல்ஸ் சொல்லுதுன்னு யாரோ சொல்லி எங்கேயோ கேட்ட ஞாபகம். உங்களுக்குத் தெரியுமா?
இத எங்க முறையிடுவது?
இந்த மாதிரி பொதுப் ப்ரச்சனைகளை வெளியில் கொண்டுவந்து, புகார் செய்ய வேண்டியவர்களிடம் செய்து, வேலை செய்யாதவங்கள செய்ய வச்சு, தப்பு செஞ்சவங்கள தண்டிச்சு, ஊர ஓரளவுக்கு சுபிக்ஷமா மாத்தத்தான் அரசாங்கம், ஒரு புகார்-பெட்டி தளம் பண்ணி வச்சிருக்கு (தற்சமயம் fixmyindia.org அங்கேதான் கொண்டு விடும்). இந்த சென்னை உயரமாகும் மேட்டர, ஆங்கில வடிவமாக்கி, ஒரு புகாரை அதில் போட உள்ளேன்.
FixmyIndia.blogspot.com என்னும் தளத்தை ஒரு கூட்டு முயற்சியாக இந்த மாதிரி ப்ரச்சனைகளையெல்லாம் வலையேத்தி, ஏதாவது ஒரு மாற்றம் வரச்செய்ய விருப்பம்.
இந்த சென்னை உயரமாகும் விஷயத்துக்கு, எழுதியுள்ள புகார் இங்கே உள்ளது. பாத்து, உங்க கருத்தை சொல்லுங்க. அதில் ஏதாவது மாற்றம் செய்யணும்னாலும் சொல்லுங்க.
இதை, வரும் திங்களன்று, நமது அரசாங்க புகார்-பெட்டியில், போடலாம் என்று எண்ணம்.
வேறு எப்படி இதுக்கு வெளிச்சம் காட்டுவதுன்னும், விஷயம் தெரிஞ்சவங்க சொல்லுங்க.
பி.கு1: FixmyIndia.blogspot.comல் சேர விருப்பமுள்ளவர்கள், பின்னூடுங்கள். உங்களை memberஆக்க, அழைப்பை அனுப்பி வைக்கிறேன். நீக்கள் blogger கணக்கு வைத்திருக்க வேண்டும். இங்க தருமி பண்ண மாதிரி, ஒரு சமூகப் ப்ரச்சனைய பத்தி, ஆராஞ்சு, புகார் தயாரித்து, புகார் பெட்டியில், ஆங்கிலத்தில் பதிவது, முதற்கட்டம். அடுத்த கட்டங்கள் என்னென்ன, கூட்டாக கலந்தாலோசிப்போம். சின்னதாயேனும் ஒரு மாற்றம் கொண்டு வர, சின்னதா ஒரு முயற்சி இது, அம்புடுதேன்.
பி.கு2: ஊரு விட்டு ஊரு வந்து, ஒவ்வொரு லீவுக்கும் திரும்பி வரும்போது, சென்னையில் பல விஷயங்கள் உயர்வது சந்தோஷத்தைத் தந்தாலும், இந்த தெரு 'உயர்வு' செம டார்ச்சர்!!!
பி.கு3: பதிவர்கள் அனைவரும், மாதத்துக்கு ஒரு 'பொதுப் ப்ரச்சனை' பத்தி பதிவு எழுத வேணும் என கேட்டுக் கொள்கிறேன். அப்படியே பொது விஷயங்களில் உங்கள் அக்கரை கூடிக் கூடி, ஒரு நாள், நீங்களே, Councillorஆகவோ, MLA MPயாகவோ, மாறும் அபாயம் நடக்கலாம். :)
பி.கு4: யாராவது, விஷயம் தெரிஞ்சவங்க, ஒருவன் அரசியல்வாதி ஆகணும்னா என்னென்ன basic விஷயங்கள் தெரிஞ்சிருக்கணும்னு பதிவ போடுங்களேன். அதாவது, நம்ம ஊர் civics, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி, ஒன்றியம், வட்டாட்சி, இந்த அமைப்பு பற்றியெல்லாம் ஒரு பாடம் நடத்துங்களேன். தெரிஞ்சுக்க உபயோகமா இருக்கும். 'TamilNadu politics for Dummies©" மாதிரி ஒரு முயற்சிய எதிர்பாக்கறேன் ;)
பி.கு5: இந்த ரோடு உயரமா ஆயிட்டிருக்கே, இத தத்ரூபமா யாராவது எந்தத் தெருவிலயாவது படம் புடிச்சு அனுப்பினா உபயோகமா இருக்கும். நன்றி!
20 comments:
நானும் "ஆட்டைக்கு" வர்ரேன்; சேர்த்துக்குங்க.
இன்னும் கொஞ்சம் விளக்கம் தேவை. நீங்கள் புதிதாக அமைத்துள்ள இணையப் பக்கத்தில் எழுதினாலே போதுமா?
இல்லை, குறைகளை நேராக எழுதிவிட்டு இதில் நகலைப் பதிய வேண்டுமா?
தருமி சார், நீங்க சொல்றதுக்கு முன்னாடியே உங்களுக்கு 'invite' அனுப்பிட்டேன்.
///இன்னும் கொஞ்சம் விளக்கம் தேவை. நீங்கள் புதிதாக அமைத்துள்ள இணையப் பக்கத்தில் எழுதினாலே போதுமா?
இல்லை, குறைகளை நேராக எழுதிவிட்டு இதில் நகலைப் பதிய வேண்டுமா?////
இத, நம்ம எல்லாரும் சேந்து தான் முடிவு பண்ணனும்.
நான் என்ன நினைக்கறேன்னா,
1) ஆங்கிலத்தில் ப்ரச்சனையை fixmyindia.blogspotல் பதியணும்.
2) தமிழில் உங்க வழக்கமான தளத்தில், கொஞ்சம் விலாவாரியா அலசி, மக்கள்ஸ்கிட்ட, feedback கேட்டு, ஆங்கிலப் பதிவை அட்ஜஸ்ட் பண்ணலாம்.
3) புகார் பெட்டியில், திருத்தப்பட்ட, ஆங்கில contentஐ சேர்த்துவிடலாம்.
4) நமக்கு வரும் follow-upsஐ ஆங்கில ப்ளாகில், அப்பப்ப update செய்வோம்.
அடுத்த கட்டத்தை அப்படியே, மெருகேத்துவோம்.
இதுவரை நீங்க போட்டிருக்கர, புகார்களையும் அங்க வலையேத்தலாம்.
ஒரு பத்து பேர், சேந்துட்டா, yahoo group create பண்ணி, முன்னேறுவோம்.
என்ன சொல்றீங்க?
ஒளவைப் பாட்டி பாடிய "வரப்புயர" என்பது நினைவுக்கு வருகிறது!!
இப்போ வந்தா நம்ம ரோடுகளைப் பார்த்து .. என்ன பாடுவார்?
சொல்ல மறந்துட்டேன்,
fixmyindia.blogspot.comல் முடிந்தவரை ஆங்கிலத்திலேயே கருத்துக்களும், பின்னூட்டங்களும் இருந்தால் சிறந்தது.
ஐயா,
இது இந்த (1/4 உயரும்) ப்ரச்சனை எங்க ஊரிலேயும் இருக்கு. 10 வருடத்திற்கு முன்பு கட்டிய வீட்டில் 4 படிகள் இருந்தது. கடந்த முறை வீட்டுக்கு சென்ற போது 1 படி மட்டுமே இருக்கு. அப்போ எல்லாம் ட்விஸ் 50 வண்டியை மேலே எத்தனும்ன்னா ரொம்ப கஷ்டமாக இருக்கும். இப்போ ரொம்ப சுலுவாக இருக்குது. அதுதான் சந்தோசம்.
அப்புறம் என்னையும் இந்த ஆட்டையில் சேர்த்துகிறீர்களா.
இதுக்கு பதிவு போடனுமா இல்லை கருத்து கந்தசாமியா இருந்தா பரவாயில்லையா.
anandha, உங்களுக்கு invite அனுப்பி வைக்கிறேன்.
பதிவெல்லாம் எழுதணுமான்னு கேக்கறீங்க. பக்க பலமா இருந்தாலே போதும். எல்லாரும், சேந்துட்டாலே பலம்தானே. ஏதாச்சும் ப்ரயோஜனமா பண்ணுவோம். எனக்கும் பெருசா எழுத வராது, நாம cheer பண்ணாலே கூட போதும் :)
Anandha, உங்க ஈ.மெயில் ஐ.டி வேணும். invite அனுப்ப.
I can also join
Interesting!!
என்னுடைய வாழ்த்துக்கள்!!
என்ன அச்சுன்னு அப்பப்போ செய்தி கொடுங்க!!
:-)
சர்வே,
நம்மளையும் ஆட்டத்துல சேத்துக்கோங்கப்பா...என்னாலானதச் செய்றேன்..
தஞ்சாவூரா, Dan,
அனுப்பியாச்சு. நன்றீஸ்.
roads ப்ரச்சனைய புகார் பெட்டில போட்டாச்சுங்கோ.
விவரங்கள் தொடர்ந்து பதிகிறேன்.
//இந்த ரோடு உயரமா ஆயிட்டிருக்கே, இத தத்ரூபமா யாராவது எந்தத் தெருவிலயாவது படம் புடிச்சு அனுப்பினா உபயோகமா இருக்கும். நன்றி!//
அடுத்த மாசம் PIT போட்டி தலைப்பு தெரிஞ்சு போச்சே! - "உயரங்கள்"? :-)))
சில இடங்களில் மக்களே, சாலையைக் கிளறி விடறதும், வேகத் தடை போட்டுக்கறதையும் பார்த்துள்ளேன்! இங்கு எப்படி மிஸ் பண்ணாங்க-ன்னு தான் தெரியலை!
என்ன ஆச்சு-ன்னு தொடர்ந்து தகவல்கள் கொடுங்க சர்வேசன்!
சர்வே,
சரியாக நினைவில்லை, 2-3 ஆண்டுகளுக்கு முன்னர் ஜூவியில் இந்த சாலை உயர்வுப்பற்றி விரிவாக செய்தி வந்தது. அப்போது தான் பொதுப்பணித்துறையில் நடக்கும் மெத்தனங்களும் வெளிவந்தது.
அரசு இது போல சாலை உயராமல் சாலைப்போடுவதற்காக , பழைய சாலையை தானாகவே கொத்தி எடுத்து அதனுடன் தார் கலந்து பயன்ப்படுத்தும் எந்திரம் ஒன்றை வாங்கியதாம்(1990 களில் வாங்கியப்போது கிட்டத்தட்ட ஒரு கோடி) அந்த எந்திரம் பயன்ப்படுத்தினால் சாலைப்போட தாமதமாகிறது என்று ஓரம் கட்டி விட்டார்களாம் காண்டிராக்டர்கள், அதை விட அந்த எந்திரம் மூலம் போட்டால் சாலைப்போட ஆகும் செலவும் குறையுமாம், ஏன் எனில் சாலையில் இருக்கும் பழைய ஜல்லிகளையே பயன்படுத்திக்கொள்ளும், புதிதாக கொஞ்சம் சேர்த்தால் போதும்.
அப்புறம் அதிக தொகைக்கு ஏலம் எடுக்க முடியாது என்பது தான் முக்கியமானது.
வெளிநாட்டில் எல்லாம் கண்டிப்பாக அப்படித்தான் சாலைப்போடவேண்டுமாம்.
அப்படி ஓரம் கட்டப்பட்ட எந்திரம் சில நாட்களுக்கு பிறகு மாயமாய் மறைந்து விட்டிருக்கிறது. ஜூனியர் விகடனில் போய் கட்டுரை எழுதப்போவது குறித்து , அந்த எந்திரம் ஏன்ப்பயன்படுத்தவில்லை என்று கேட்டப்போது தான் ஒரு கோடி மதிப்புள்ள எந்திரம் எங்கே போனது என்று தெரியவில்லை, இங்கே தான் சார் நின்னுக்கிட்டு இருந்தது என்று பொதுப்பணித்துறையில் சொன்னார்களாம் :-))
இதான் நாட்டு நடப்பு! இது வரைக்கும் பொதுப்பணித்துறை எதுவும் செய்யவில்லை. சாலைகள் மட்டும் உயர்ந்துக்கொண்டே போகுது!
வவ்வால்,
இவ்ளோ நடந்துருக்கா? அடேங்கப்பா.
ஏதாவது செஞ்சாவணும், இல்லன்னா, அதள பாதாளத்துக்கு போயிடுவோம் கூடிய சீக்கிரம்.
ஜல்லியா கொட்டித் தள்ளறானுவ.
ஜூ.விக்கு திரும்ப ஞாபகப் படுத்திப்பாக்கலாம்.
Nakkeeran,
Nanri. sent the invite.
சர்வேசன், தருமியுடன் சேர்ந்து சமூகப் பணியில் - தேவையான ஒன்று - தொடர நல் வாழ்த்துகள்.
http://epaper.dinakaran.com/pdf/2010/07/28/20100728c_014101005.jpg
FYI
Alex Pandian,
thanks for sharing the info. very delighted to see it is being enforced now.
hats off to chennai corp.
Post a Comment