பதிவர் அனுராதா ஈ.மடலில் சில விஷயங்களைத் தெரியத் தந்தார்.
நம்மில் பலருக்கு பெயரளவில் மட்டுமே தெரிந்த கேன்ஸர் என்ற கொடிய நோயைப் பற்றிய உபயோகமான குறிப்புகள் இவை. ஆங்கிலத்தில் அவர் அனுப்பியதை, சின்ன மாற்றங்களோடு JustSurveys.blogspot.comல் பதிந்துள்ளேன்.
அதை தமிழாக்கமாகத் தந்தால், நன்றாகயிருக்கும் என்று விருப்பத்தைத் தெரிவித்திருந்தேன் (ஈஸியா கேட்ருவோம்ல). அவரும், சிரமம் பாராமல், மொழிபெயர்த்துத் தந்தது கீழே.
கண்டிப்பா எல்லா விஷயத்தையும் படிங்க, குறிப்பா கடைசி சில பாயிண்ட்ஸ், தெரிந்து கொள்ள வேண்டியது, அதி முக்கியம்.
கேன்ஸர் யாருக்கு வேணும்னாலும் வரும். அது வந்தா வாழ்வே மாயம் கமல் மாதிரி, ஸ்டைலா சால்வைய போத்திக்கிட்டு பாட்டெல்லாம் பாட முடியாது. வாழ்க்கையை பொரட்டிப் போடும் அபாயம் உண்டு.
ஸோ, வருமுன் காப்போம்!
தேவையான விஷயங்களை சுவாரஸ்யமாக தயாரித்து அனுப்பிய அனுராதாவுக்கு ஒரு ஓ!
இனி தொடர்வது, அனுராதாவின் பகிர்வு!
புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்தளிக்கவேண்டாம்!!!
ஆம் நாம்தான் நமது உடலின் புற்றுநோய் கிருமிகளுக்கு அவற்றிற்கு பிடித்த விதவிதமான விருந்து வைத்துக் கொண்டிருக்கிறோம்.
கேன்சர் என்று கேட்கும்போதே கூட வரும் வார்த்தைகள் கீமோதெரபி, ரேடியேஷன். இவற்றை மட்டுமே கேன்சருக்கு எதிராக முயற்சி (மட்டுமே) செய்துவரும் சூழலில் அமெரிக்காவில் இருக்கும் Johnhopkins மருத்துவமனை கடைசியாக வேறு சில வழிகளும் இருக்கிறது என்று சொல்லியுள்ளனர்.
1. ஒவ்வொரு மனித உடலில் இருக்கும் கேன்சர் கிருமிகள் லட்சக்கணக்காக பெருகும் வரையில் மருத்துவ பரிசோதனைகளில் தெரிவதில்லை. டாக்டர்கள் தங்களது பேஷன்ட்களிடம் கேன்சர் முற்றுலுமாக அழிக்கப்பட்டுவிட்டன என்றால் நமது விருந்தாளி கண்டுபிடிக்கப்படும் அளவு வளரவில்லை என்பது மட்டுமே நிஜம்.
2. நமது விருந்தாளிகள்(கேன்சர் கிருமிகள்) நமது வாழ்நாளில் நமது உடலுக்கு 6 முதல் 10 முறை வருகை தருகின்றன. என்னவோ நாம் கோக், பெப்சி குடுத்து கூப்பிட்டமாதிரி.
3. நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும்வரை அவை வாலாட்டாமல் திரும்பி போய்விடுகின்றன. நம் வீட்டில் நல்ல ராஜபாளையம் மற்றும் டாபர்மேன் வகை நாய்கள் இருக்கும்வரை திருடன் திருட முடியாமல் திரும்பப் போய்விடுவதைப் போல.
4. புற்றுநோய் வருவதற்கு காரணம் உண்டா என்ன? நிச்சயம் உண்டு. அதில் முக்கியமானதாக நியூட்ரிசியன்ஸ் (புரதம்) பற்றாக்குறையை கூறலாம். இதற்கு பரம்பரை, சுற்றுச்சூழல், உணவு, வாழ்க்கைமுறை என பல காரணம் உண்டு.
5. இந்த பற்றாக்குறையை நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்திக் கொள்வதின் மூலம் சரி செய்யலாம். எப்படி என்ற கேள்வி எப்பவும் போல வந்திருக்குமே. வேறென்ன அதேதான் உணவு.
6. கீமோதெரபி மூலம் நடத்தப்படும் என்கெளன்ட்டரில் கேன்சர் கிருமிகள் கொல்லப்படுவதோடு எலும்பு மஜ்ஜை, ஜீரண உறுப்புகள் போன்றவற்றில் வளரும் சில நல்ல அணுக்களும் போட்டுத்தள்ளப் படுகின்றன. இதனால் வேறென்ன, நமது குடல், கிட்னி (தலையில் இருப்பது இல்லை), இருதயம் போன்றவை மண்டையைப் போடும் வாய்ப்பு மிக அதிகம்.
7. ரேடியேஷன் கேன்சர் கிருமிகளை அழிக்கும் போது உடலின் வெளிப்பகுதியில் உள்ள பல நல்ல அணுக்கள், திசுக்கள் போன்றவற்றை ஸ்வாஹா செய்து விடுகிற்து. தனக்கு ஒரு கண் போனாலும் பக்கத்தில் இருப்பவருக்கு 2 கண் போகணும் என்பது குறிக்கோள்.
8. கேன்சரின் ஆரம்பக்கட்டத்தில் கீமோதெரபி, ரேடியேசன் போன்றவை கேன்சரின் அளவைக் குறைக்கும் என்பது நிஜம். இருந்தாலும் தொடர்ந்து உபயோகம் எந்த பயனும் இல்லை.
9. இந்த தொடரும் சிகிச்சையினால் உடலில் தங்கும் சில கெமிக்கல்ஸினால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி ஒன்று குறையலாம் இல்லை மொத்தமாக அழிக்கப்படலாம். இது வேறு சில வியாதிகளுக்கு பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்கும்.
10.இந்த சிகிச்சை முறைகளினால் கேன்சர் கிருமிகள் உருமாற்றம் அடைகின்றன். நம்ம தலைவர் சிவாஜியில் இருந்து M.G.R ஆன மாதிரிதான். நான் நிரந்தரமானவன் எனக்கு ஒரு அழிவில்லை என்று பாடிக்கொண்டே அவை ஆடிக்கொண்டிருக்கும். ஆபரேஷன் என்று யோசிப்பது புரிகிறது. நம்ம தலைவர் எத்தனை ஆபரேஷன் வைத்தாலும் முளைத்து வந்துகொண்டிருப்பார்.
11. ஏதோ வழி என்று சொல்லிவிட்டு ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று யோசிப்பது புரிகிறது. கிளைமேக்ஸ் வந்தாகிவிட்டது. ஒரே வழி கேன்சர் கிருமிகளுக்கு சாப்பாடு போடாமல் இருப்பதுதான்.
கேன்சர் கிருமிகளுக்கு உணவளிப்பவை
a. சர்க்கரை கேன்சர் கிருமிகளின் கொடை வள்ளல்
சர்க்கரையை நிறுத்துவோம். கேன்சர் கிருமிகளை பட்டினி போடுவோம். (அவ்ளோதாங்க) அதற்கு பதிலாக தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை உபயோகப்படுத்துவது ரொம்பவும் நல்லது. முயற்சி செய்து பாருங்களேன்.
b. உப்பு
ஆமாங்க இதுவும்தான். டேபிள்சால்ட் எனப்படும் உப்பை வெள்ளையாக்க கலக்கப்படும் கெமிக்கல் வேறென்ன அதுவும் கெடுதல்தான். (ஏங்க உப்புன்னா வெள்ளையாத்தானங்க இருக்கும் அதுவுமா ங்கற உங்க கேள்வி புரியுது. அதுவுந்தாங்க). உப்பில்லா பண்டம் குப்பையிலே னு நம்ம பெரியவங்க சும்மா இருக்காம சொல்லி வச்சுட்டு போய்ட்டாங்க. அப்புறம் எதைத்தான் சாப்பிடறதுன்னு தானே கேக்கறீங்க. நம்மகிட்டதான் கைவசம் கடல் உப்பு இருக்கே. அதாங்க கிலோ 2 ரூபாய்க்கு கிடைக்குமே அதேதான்.
c. அடுத்தது பால்
வெள்ளையா இருக்கற எதையுமே தொடமுடியாது போல இருக்கே. என்னங்க பண்றது. கேன்சர் கிருமிக்கு தேவையான Mucus எனப்படும் முக்கியமான விஷயம் பால்-ல கொட்டிக்கிடக்கு. அதனால பாலுக்கு பதிலாக இனிப்பில்லாத சோயாபால் எடுத்துக்கறது பெட்டர்.
d. அசைவம் வேண்டவே வேண்டாம்.
இல்லை எனக்கு அசைவம் இல்லாத சாப்பாடு யோசிக்கவே முடியாதுன்னு நினைக்கறவங்க மீன், கொஞ்சமே கொஞ்சம் கோழி சேத்துக்கோங்க. எதுக்கும் அசைவம் இல்லாம சாப்பிட்டு பழகுங்களேன். உங்களால் முடியாதா என்ன?
e. உங்க சாப்பாடுல 80% காய்கறிகள் (அது கறி இல்லைங்க காய்கள் மட்டும்தான்), காய் ஜூஸ், தானிய பருப்பு வகைகள், கொஞ்சமா பழ வகைகள் இருக்கற மாதிரி பாத்துக்கோங்க.
மீதி 20% வேகவைக்கப்பட்ட உணவு வகைகள் எடுத்துக்கோங்க. உடலில் ஆரோக்கியமான அணுக்கள் வளர காய்கறி ஜூஸ் ரொம்ப முக்கியம்.பச்சைக் காய்கறிகள் 2,3 தடவை எடுத்துக்கோங்க. தப்பில்லை. ஆனா அதையும் நல்லா கழுவிட்டு சாப்பிடுங்க.
f. காபி, டீ, சாக்லெட் பெரிய டாடா (பிர்லா, அம்பானி கூட) சேர்த்து சொல்லிடுங்க.
கிரீன் டீ பிடிக்கும்னா எடுத்துக்கோங்க. கேன்சர் வராம தடுக்க உதவும்.
g. தண்ணீர் இதுகூடவா? அதானே கேள்வி. ஆமாங்க. அதுவும்தான்.
நல்லா சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மட்டும் குடிங்க.
12. அசைவ உணவு வகைகள் ஜீரணம் ஆகறது கொஞ்சம் லேட் ஆகும் அதோட இல்லாமல் ஜீரண உறுப்புகளுக்கு நிறைய வேலை குடுக்கறதால நம்மல மாதிரிதான் வேலையை பெண்டிங் வச்சிடும். அந்த மாதிரி மிச்சமாகிற உணவு வகைகள் கேன்சர்க்கு ரொம்ப வசதி.
13. கேன்சர் கிருமிகளோட மேற்புறத்தோல் ஒரு கடினமான புரோட்டின் கவர் இருக்கு. நம்ம அசைவம் கம்மியா சாப்பிடறது இல்லை சாப்பிடாம இருக்கறது மூலமா நோய் எதிர்ப்பு கிருமிகளை நேரா இந்த கேன்சர் கிருமிகளோட போராட டைம் குடுக்கறோம். இதுனால கேன்சர் கிருமிகளை அழிக்கறது ஈஸியா இருக்கும்.
14. மத்தபடி மினரல்ஸ் (மினரல் வாட்டர் இல்லைங்க), விட்டமின்ஸ் இதெல்லாம் டாக்டர் ஆலோசனையோட எடுத்துக்கறது நம்ம உடம்பில் இருக்கற போராட்ட குணமுள்ள கிருமிகள் வளர நல்லது. அப்புறம் இந்த போர் வீரர்கள் கேன்சர் கிருமிகளை கவனிச்சுப்பாங்க.
15. இதெல்லாம் விட கேன்சர்ன்றது உடம்பு, மனசு சம்பந்தப்பட்ட விஷயம். கொஞ்சம் முன்னெச்சரிக்கையும், நிறைய பாசிட்டிவாவும் இருக்கறது கேன்சர் எதிர்த்து போராட பெரிய பலம் குடுக்கும்.
நிறைய கோபம், பிடிவாதம், எல்லார் மேலயும் வெறுப்பு இருந்தா என்னங்க பண்ணப்போறோம்? இதுனால நம்ம உடம்புல ஒரு தீவிர தன்மை உருவாகறது கேன்சர்க்கு ரொம்ப செளகரியமா இருக்கும். அதனால வாழ்க்கையா ரொம்ப லைட்டா எடுத்துக்கோங்க. சாதாரணமா இருங்க. எதுக்கும் ஓவரா ரியாக்ட் பண்ணாதீங்க. சந்தோஷமா இருங்க.
16. நம்ம உடம்புல ஆக்ஸிஜன் சரியான அளவுல இருக்கும் போது கேன்சர் அண்டாது. அதுனால உடற்பயிற்சி செய்யறதும், மூச்சுப்பயிற்சி செய்யறதும் ஆக்ஸிஜன் அளவை சரியா வச்சுக்க உதவி செய்யும். ஆக்ஸிஜன் தெரபினு வந்திருக்கற புது வழியும் நல்லதுதான்னாலும் நம்ம கைவசம் வெண்ணையை வச்சிக்கிட்டு எதுக்கு அலையணும்.
யோகா செய்ங்க, நிறைய நடங்க, புது நண்பர்கள், மனசு விட்டு பேசுங்க.
அவ்ளோதான். போயே போச்செல்லாம் இல்லை. வராமலே தடுத்திடலாம் கேன்சர் நோயை. என்ன சொல்றிங்க.
சில முக்கியமான விஷயங்கள்: பெரிய நோ நோ
1. மைக்ரோ வேவ்ல பிளாஸ்டிக் பாத்திரங்கள் கண்டிப்பா வேண்டாம்
2. தண்ணீர் பாட்டிலை ஃப்ரீஸரில் வைக்க வேண்டாம்
3. பிளாஸ்டிக் பேப்பர் சுத்தி மைக்ரோவேவ் ல எதுவும் வைக்கவேண்டாம்
பிளாஸ்டிக்கு பதிலா ஓவன்க்குன்னே விக்கற பாத்திரங்கள் யூஸ்
பண்ணிக்கோங்க.
இதெல்லாம் நம்ம நல்லதுக்கு தானேங்க...
வருமுன் காப்போம்!
12 comments:
மக்களே, feel free to copy/paste, share this with your friends and loved ones.
http://kuttiescorner.blogspot.com/2008/01/blog-post_3266.html
நன்றி
நீங்க சொன்னத செஞ்சாச்சி
feel free to copy/paste, share this with your friends and loved ones.
அட நீங்க எல்லாம் தாங்க friends and loved ones.
அந்த அம்மாவை கிரந்தி தழயை அரைச்சு குடிக்கச்சொல்லுங்க...
கேன்ஸருக்கு ரேடியேஷனும் தேவையில்ல, கீமோதெரபியும் தேவையில்ல...
பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கைவிடப்பட்ட கேன்ஸர் நோயாளியை எங்க ஏரியாவில் ஒரு மூலிகை மருத்துவர் இந்த தழையை வெச்சே குணப்படுத்திட்டார்...
இப்ப நல்லா இருக்கு அந்த அம்மா...எனக்கு ஆச்சர்யமா போச்சு - இது நான் கண்கூடா பார்த்தது...
ரவி,
//அந்த அம்மாவை கிரந்தி தழயை அரைச்சு குடிக்கச்சொல்லுங்க...//
எந்த அம்மாவ? ஓ, நீங்க, anuratha மேடம சொல்றீங்க. அவிக (http://anuratha.blogspot.com/) வேற.
இவங்க anuradhaN, கவிதை எழுதரவங்க.
தேவையான நல்ல பதிவு சர்வேசன், நன்றி
நானே கேன்சரை பற்றி ஒரு பதிவு போட வேண்டும் என்று நினைத்திருந்தேன்!!
மிக உபயோகமான பதிவு!
கில்லியிலும் போட்டாச்சு!! :-)
வாழ்த்துக்கள்!
உங்களுக்கும் அனுராதாவிற்கும்! :-)
//தேவையான நல்ல பதிவு சர்வேசன்//
ripeetu
good post... Thanx
நல்ல பதிவுங்க சர்வேசன்..சில விஷயங்கள் புதுசா தெரிஞ்சுகிட்டேன்......அதோட இதையும் சேத்துக்கோங்க.......நம்ம எல்லாரும் வருடா வருடம் போய் சோம்பேறிதனப் படாம ஒரு கம்ப்லீட் செக்கப்(physicals) செய்துக்கணும்.....!!
//தண்ணீர் இதுகூடவா? அதானே கேள்வி. ஆமாங்க. அதுவும்தான்.
நல்லா சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மட்டும் குடிங்க//
எந்த தண்ணி(ர்)-ன்னு இன்னும் தெளீவா சொல்லிடறது நல்லது சர்வேசன்! :-))
பயனுள்ள பதிவு! Will tag and circulate!
அனுராதா அம்மாவைப் போலவே, நண்பனின் தாயார் இந்நோயில் அவதியுறும் போது, நான் அருகில் இருந்ததால், இதன் கொடுமை தெரியும்!
//அந்த அம்மாவை கிரந்தி தழயை அரைச்சு குடிக்கச்சொல்லுங்க...//
கிரந்தித் தழையா?
ஒரு படமோ, சிறு பதிவோ போடுங்க ரவி!
நல்ல பதிவு ... இதயத்தின் ஆழத்தில் இருந்து உங்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்....
கிரந்தி தழை எங்கே கிடைக்கும்
Post a Comment