60ஆவது ஆண்டு நினைவு நாளில் காந்திக்குத் தரும் பரிசா இது?

அவர் செய்த தவறுகளைப் பட்டியலிடுங்கள், பதிவாக்குங்கள். அதில் தவறில்லை.
ஆனால், மறைந்த ஒரு மா-மனிதனை, இப்படிக் கேவலப் படுவது, மிகவும் கீழ்தரமானது, என்று மிகத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம் தேசத்துக்கு, கனவிலும் கூட அவர் ஒரு துரோகத்தையும் இழைத்ததில்லை.
இப்படி freeஆ நம்ம எல்லாரும் நினைத்ததை எழுத முடிவதற்கு, காந்தி ஒரு முக்கிய காரணம் என்பது அடியேன் கருத்து.
தவறை திருத்திக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்,
-சர்வேசன்.
9 comments:
இதப் படிக்கரவங்க, உங்க கருத்தையும் சொல்லிட்டுப் போங்க.
"செய்தி விமர்சனம்" பதிவர் செய்வது, சரியா தவறா?
வன்மையான?
வண்மையான?
சர்வேஸன், காந்தியாரைப் பற்றி எனக்கு மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. கடைசி நேரத்தில் அவர் காங்கிரஸ் தலைவர்களுக்கு விட்டுக்கொடுக்காமல் இருந்து இருந்தால் நாட்டின் பிரிவினையை தவிர்த்து இருக்கலாம் என்பது என் அபிப்பிராயம். பெரியவர்கள் பொறுப்பில் இருப்பவர்கள் செய்யும் சிறு தவறு கூட பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்.
ஆனால் காலமோ கடந்தாகிவிட்டது. அதைப்பற்றி எல்லாம் விவாதித்து பயனில்லை.
அந்த பதிவில் ஒரு காமன்ட் கூட இல்லை. நீங்க போட்ட பதிவை பாத்துவிட்டுதான் எல்லாரும் அங்கே போவார்கள் போலிருக்கு. இதுக்கு சும்மாவே விட்டு இருக்கலாமே?
மிக வன்மையாக கண்டிக்கதக்கது.
ஸர்வேஸன் அவசரத்துல அந்த பதிவைப்பத்தி எழுதாம விட்டுட்டேன். இது சாக்கடைத்தண்ணீ வாரி இறைக்கும் இன்னொரு பதிவு. ஒரு ஸர்வே எடுத்து இந்த மாதிரி பதிவுகளை பட்டியல் போட்டா என்ன மாதிரி கிறுக்கன்கள் அதெல்லாம் பாக்காம இருப்போம்! இந்த மாதிரி பதிவெல்லாம் ஹைலைட் பண்ணாதீங்க!
//வன்மையான?
வண்மையான?
//
Both can be used !
"என் வன்மையான கண்டனத்தைப் பதிகிறேன்..."
Me too :(
இந்த மாதிரி லூஸுத்தனமான பதிவுகளை ஏன் ஹை லைட் பன்ணுரீங்க :)
திவா சொன்ன மாதிரி இப்ப எல்லாரும் ஒரு தடவ போய் பாத்துட்டு வர்ராங்க
//வன்மையான?
வண்மையான?//
வன்மை-தான் சரி. வண்மை-ன்னா வள்ளல் தன்மை. பிரதிபலன் பாராது தாராளமாச் செய்யும் குணம்.
Thanks everyone.
///அந்த பதிவில் ஒரு காமன்ட் கூட இல்லை. நீங்க போட்ட பதிவை பாத்துவிட்டுதான் எல்லாரும் அங்கே போவார்கள் போலிருக்கு. இதுக்கு சும்மாவே விட்டு இருக்கலாமே?
////
i know - but, i cant read something and not react, if i have some feedback :)
Post a Comment