recent posts...

Sunday, October 25, 2009

கொசுவத்தி செய்வது எப்படி?

உங்க கிட்ட DSLR கேமிரா இருந்தா, iso100ம், ஷட்டர் வேகம் 15 விநாடிகள் கிட்டையும் வச்சுட்டு, ட்ரைபாடில் கேமராவை பொறுத்தி, டைமரை தட்டி விடவும்.

முக்கியமா, இருட்டு ரூமோ, இல்ல ராத்திரியோ இதை செய்யவும்.

(பிற்சேர்க்கை: இருட்டா இருக்கும்போது ஃபோக்கஸ் பண்ண முடியாதே, என்ன பண்றது என்ற பன்ச் கேள்வியை நாதஸ் ஞாபகப் படுத்தினார்.
இதை கையாள ரெண்டு வழியிருக்கு
1. உங்க ரூம் மேட்டையோ, அல்லது வேர ஏதாவது ஒரு பொருளையோ முன்னாடி நிக்க வச்சு, லைட்டப் போட்டு அந்த பொருளை ஃபோக்கஸ் செய்து கொள்ளவும். டைமர் போட்டு க்ளிக்கி விட்டு, கிடு கிடுன்னு லைட்டை அணைத்து விட்டு, நண்பரை தள்ளி விட்டு, அந்த இடத்தில் நீங்க நின்னு கொசுவத்தி சுத்தவும்.
2. கேமரா ஃபோக்கஸை manual மோடில் போட்டி விட்டு, மேற் சொன்னபடி, எத்தையாவது முன்னால் நிற்க வைத்து, லைட்டைப் போட்டு, ஃபோக்கஸ் செய்தபின், டைமரைப் போட்டு, லைட்டை அணைத்து விட்டு, க்ளிக்கி, கொசுவத்தி சுத்தவும்.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :)
)

கேமராக்கு முன்னாடி போய் நின்னு, ஒரு டார்ச்சையோ சுறு சுறு வத்தியையோ எடுத்துக்கிட்டு, கலைத் துவமா சுத்தவும்.

சுத்தினா, இப்படியெல்லாம் பண்ணலாம்:


ஆர்வம் முத்திட்டா இப்படியும் பண்ணலாம்:



ரொம்ப முத்திட்டா, உங்க முகமெல்லாம் வரஞ்சு பழகலாம். நான் என் முகத்தை ஈஸியா வரஞ்சுட்டேன் :)


பி.கு: இதை ஏன் PiTல் போடாமல், இங்க போட்டேன்னு யாராவது யோசிச்சீங்கன்னா, அங்க மொக்கைக்கு இடமில்லை. பயலுவளெல்லாம் படிப்பை முடிச்சுட்டு, research பண்ற லெவலுக்கு பட்டைய கெளப்பறாங்க. பயமா இருக்கு. :)

23 comments:

SurveySan said...

இப்படி மொக்கை போடரது தப்புன்னா சொல்லுங்க, நிறுத்திடறேன்.

அவன நிறுத்த சொல்லு, இவன நிறுத்த சொல்லுன்னெல்லாம் டயலாக் விடமாட்டேன் :)

SurveySan said...

கண்ணு மூக்கெல்லாம் எப்படி தனித் தனியா வரும்படி வரன்ஷேன்னு சொல்ல மறந்துட்டேன்.

ரொம்ப யோசிச்சு மண்ட காயவேணாம். டார்ச்சை ஆஃப் பண்ணி, திரும்ப ஆண் பண்ணி சுத்தினா போறும்.

ஆனா, ஒரு ஆர்ட்டிஸ்ட்டிக் டாலண்ட் இருக்கணும் இதுக்கெல்லாம் ;)

SurveySan said...

btw, நெருப்பை வச்சு விளையாடும்போது, சாக்கிரதையா இருங்க. டார்ச் சேஃப்.

சுறு சுறுவத்தி, அகல் விளக்கு, தீப்பிட்டி, தம்மு எல்லாம் சுத்தி ஏதாச்சும் ஆனா, கொம்பேனியார் பொறுப்பு லேது ;)

ஆயில்யன் said...

//பயலுவளெல்லாம் படிப்பை முடிச்சுட்டு, research பண்ற லெவலுக்கு பட்டைய கெளப்பறாங்க. பயமா இருக்கு.//

hundred ஒரு வார்த்தை :)))))))

ஆயில்யன் said...

/ட்ரைபாடில் கேமராவை பொறுத்தி, டைமரை தட்டி விடவும்//

பெங்களூர் கொரியரு எனக்கு டிரைப்பாட் ரிமேட் சிஸ்டமும் வாங்கி தர்ற வரைக்கும் மீ த வெயிட்டீங்க்!!!

ஆயில்யன் said...

//சுறு சுறுவத்தி, அகல் விளக்கு, தீப்பிட்டி, தம்மு எல்லாம் சுத்தி ஏதாச்சும் ஆனா, கொம்பேனியார் பொறுப்பு லேது ;)///

வெவரம்லே :))

ராமலக்ஷ்மி said...

சின்ன வயதில் கம்பி மத்தாப்பை இப்படி சுத்தி சுத்தி விளையாடுவேன். பொறி புறப்படும் ஜூவாலை பாயிண்ட் கோடுகளாகி ஜாலம் காட்டும் அதில். அதை அழகாய் படங்களாகக் கொண்டு வந்து விட்டீர்கள்://ஆர்வம் முத்தி// //ரொம்ப முத்தி//:)))! பாராட்டுக்கள். அழகாய் வந்துள்ளன.

Anonymous said...

//ஆனா, ஒரு ஆர்ட்டிஸ்ட்டிக் டாலண்ட் இருக்கணும் இதுக்கெல்லாம் ;)//

:)

Anonymous said...

/சின்ன வயதில் கம்பி மத்தாப்பை இப்படி சுத்தி சுத்தி விளையாடுவேன். //

அட ஆமாம் ராமலஷ்மி, நானும் இது மாதிரி மத்தாப்புல செய்து விளையாடிருக்கேன்.

Truth said...

நல்லா எடுத்திருக்கீங்க.
இந்த லேசர் டார்ச்சுல இன்னும் நல்லா வருமாமே.

ஊடகன் said...

ஐயோ மக்கா எப்படி இப்படியெல்லாம் யோசீக முடியுது..........
நீங்கள் ஒரு கிராம விஞ்ஞானி என்றல் மிகையல்ல .............

ரவிஷா said...

தங்கமணி ஊருக்கு போயிட்டா இப்படித்தான் சுருள் சுருளா விட்டு பொழுது போக்குவீங்க போலிருக்கு!

SurveySan said...

aadharavu aliththa periya ullangalukku nanni.

mokkai thodarum.

:)

பாலா said...

அண்ணாத்த,

பிக்ஸார்ல நான் சுத்துன கொசுவத்திய பாத்து.. எல்லாம் அரண்டு கீறாங்க.

நீங்க நெசமாவே.. சுத்திட்டீங்க! கலக்கல் ட்ரிக்! :) :)

நாதஸ் said...

Any Pre-focussing ?

I hope it is manual foucssing :)

SurveySan said...

ஆயில்யன், ooviya, சின்ன அம்மிணி, Truth, ஊடகன், ரவிஷா, ஹாலிவுட் பாலா, நாதஸ்,

நன்றீஸ்!!!!

SurveySan said...

Truth, laser வச்சு முயற்சி பண்ணலை. ஆனா, கலக்கலா வரும்னு, இந்தம்மா படம் பாத்தா தெரியுது. ஆனா, ஆயிரம் இருந்தாலும், வசதிகள் இருந்தாலும், 'ஆர்ட்டு திறன்' முக்கியம் :)

http://hacknmod.com/wp-content/old/pics/1536-1.jpg

SurveySan said...

நாதஸ்,

குட் பாயிண்ட்.

சேத்துட்டேன்.

பிற்சேர்க்கை: இருட்டா இருக்கும்போது ஃபோக்கஸ் பண்ண முடியாதே, என்ன பண்றது என்ற பன்ச் கேள்வியை நாதஸ் ஞாபகப் படுத்தினார்.
இதை கையாள ரெண்டு வழியிருக்கு
1. உங்க ரூம் மேட்டையோ, அல்லது வேர ஏதாவது ஒரு பொருளையோ முன்னாடி நிக்க வச்சு, லைட்டப் போட்டு அந்த பொருளை ஃபோக்கஸ் செய்து கொள்ளவும். டைமர் போட்டு க்ளிக்கி விட்டு, கிடு கிடுன்னு லைட்டை அணைத்து விட்டு, நண்பரை தள்ளி விட்டு, அந்த இடத்தில் நீங்க நின்னு கொசுவத்தி சுத்தவும்.
2. கேமரா ஃபோக்கஸை manual மோடில் போட்டி விட்டு, மேற் சொன்னபடி, எத்தையாவது முன்னால் நிற்க வைத்து, லைட்டைப் போட்டு, ஃபோக்கஸ் செய்தபின், டைமரைப் போட்டு, லைட்டை அணைத்து விட்டு, க்ளிக்கி, கொசுவத்தி சுத்தவும்.

SurveySan said...

PiT ல போடரளவுக்கு மேட்டர் வந்துடுச்சே :)

இராம்/Raam said...

சர்வ்ஸ்,

நம்ம பிட்’லே விழியன் சொல்லி கொடுத்த மாதிரி நானும் கம்பி மத்தாப்பிலே பண்ணேன் பாருங்க...

Flickr URL's :- Name
Star
Heart

முக்காலி இல்லாமே சுவத்திலே சாஞ்சுக்கிட்டே எடுத்துட்டேன்.. :)

SurveySan said...

Raam, thanks for the refresher.

my comment in PiT post

==========
SurveySan said...
Dhool!

nakshathiram super.

indha F mode, shutter speed, manual mode pathi konjam vilaavariya pottaa prayojanama irukkum. ;)

November 17, 2007 8:05 PM
===============

varusham odudhuuuuuu! :)

ராமலக்ஷ்மி said...

//நம்ம பிட்’லே விழியன் சொல்லி கொடுத்த மாதிரி நானும் கம்பி மத்தாப்பிலே பண்ணேன் பாருங்க...

Flickr URL's :- Name
Star
Heart //

சின்ன அம்மிணி எங்கிருந்தாலும் ஓடி வாங்க. நம்ம சின்ன வயசு விளையாட்டு இவர்களிடம் எப்படி வித்தையாய் ஜாலம் செஞ்சுருக்குன்னு பார்க்க வேண்டாமா:))?

@ சர்வேசன்,

//ஆயில்யன், ooviya, சின்ன அம்மிணி, Truth, ஊடகன், ரவிஷா, ஹாலிவுட் பாலா, நாதஸ்,

நன்றீஸ்!!!!//

என் பேர் எங்கேங்கறேன்:( ?

SurveySan said...

ராமலக்ஷ்மி,

////என் பேர் எங்கேங்கறேன்:( ?///

உங்களுக்கு பெஷலா தனியா ஒரு பதில் போடலாம்னு நெனச்சு, மறந்துட்டேன் :)
ஜாரி!

வருகைக்கு நன்றீஸ் பலப் பல :)