தங்கமணிகளுக்கு தங்கமணி என்று பெயர் தந்த படம் அக்னி நட்சத்திரம். ஜனகராஜு, 'தங்கமணி ஊருக்கு போயிட்டா எஞ்சாய்'ன்னு கத்திக்கிட்டு அலப்பறை பண்ணுனது எல்லாருக்கும் ஞாபகம் இருக்கும்.
தங்கமணி ஊருக்கு போயி, தனியா கொஞ்ச நாட்கள் கெடைச்சா நல்லாதான் இருக்கும்னு, எல்லாருக்கும் தோன்றுவது இயல்பே (இல்லியா?).
சில உறவுகளையும் நட்புகளையும் காப்பாத்திக்க 'distance is good'னு சொல்லுவாங்க. எப்பவுமே இல்லன்னாலும், கொஞ்ச நாள் இப்படி விலகி 'distance'டா இருந்தா, உறவுக்கு உறம் போட்ட மாதிரி, "பிரிந்தவர் மீண்டும் சேர்ந்துவிட்டால்"னு டூயட் பாடர அளவுக்கு ஒரு வலு கிட்டும். உறவு கெட்டியாகும். பாசத்துக்கு பவர் கிட்டும். வாழ்க்கை மேம்படும்.
நானும் பலமா கனாக் கண்டுக்கினுதான் இருந்தேன்.
என்னென்னமோ பிளானெல்லாம் போட்டேன். அட்வான்ஸ்டா யோசிச்சு, நச் போட்டியெல்லாம் கூட ஆரம்பிச்சு வச்சேன். தெனம் ஒரு பதிவு 'தங்கமணி இல்லாத நாட்கள் 1,2,3,4,5...'ன்னு எடுத்து ஒரு காமெடிக் கதம்பமா தொடுக்கலாம்னும் நெனச்சேன்.
அந்த நாளும் வரத்தான் செய்தது.
ஆனா பாருங்க, என்ன மாயமோ தெரீல, என்ன கொடுமையோ புரீல, 'தங்கமணி ஊருக்கு போயிட்டா' எஞ்சாய்னு கத்திக்கினே ஏர்போர்ட்லேருந்து வீட்டுக்கு வந்தவன், காலியா இருக்கர வீட்டை பாத்ததும் ஆஃப் ஆயிட்டேன்.
கொடுமை அதோட நின்னுதா? ராத்திரி எட்டு மணிக்கு டாண்ணு பசிக்குது. கொஞ்ச நாளைக்கு, 'ஸ்டாக்'ல இருக்கர தோச மாவையும், 'சாம்பாரையும்' வச்சு ஓட்ட முடிஞ்சது.
அப்பாலிக்கா, சாம்பார் போரடிச்சு போய், சமைக்க வேண்டிய கட்டாயம்.
கொடுமைல பெரும் கொடுமை, இந்த பாத்திரம் தேய்கிரது. என்னதா டிஷ் வாஷரெல்லாம் இருந்தாலும், கைல தேச்சு வச்சாதான் எல்லாம் வெளங்குது.
காலைல எழுந்து ப்ரேக்ஃபஸ்ட்டையும் நாமளே பண்ணிக்கிட்டு, மதியானத்துக்கும் எதையாவது ஏற்பாட்டை பண்ணிக்கிட்டு, பொட்டிய தூக்கி ஆஃபீஸுக்கு போலாம்னு ஷூவை தேடினா, ஸாக்ஸை காணும். தொவைக்க வேண்டியதெல்லாம் அப்படியே கெடக்குது.
திரும்ப டயர்டா சாயங்காலம் வூட்டுக்கு வந்தா, சாப்பாட்டை ரெடி பண்ணவே எட்டு ஒம்போதாயிடுது. இதுல எங்கேருந்து வலைய மேயரது? பதியரது?
இந்த நேரம் பாத்து ஆஃபீஸ்லையும் ஆணியப் புடுங்க்கோ புடுங்குன்னு புடுங்க வுடறாங்க. சிவாஜிய ப்ராஜக்ட் மேனேஜராக்கி கிண்டலடிச்ச வெனை.
வார நாட்களாவது பரவால்ல, ஆஃபீஸ், ஆணி, சமையல்னு ஓடிடுது.
வீக் எண்டு கொடுமையிலும் கொடுமை.
இன்னும் எப்படித்தான் மிச்சம் இருக்கர நாட்களை ஓட்டரதுன்னு நெனச்சா மேல் மூச் கீழ் மூச் வாங்குது. யார் கண்ணு பட்டுதோ ?
நான் 'எஞ்சாய்'னு கத்தரேனோ இல்லையோ, என் சுற்றமும் நட்பும், 'சர்வேசனின் தங்கமணி ஊருக்கு போயிட்டா, எஞ்சாய்'னு, லைன் கட்டி நிக்கரானுவோ.
வூட்ல, கை கட்டி வாய் பொத்தி, ஜெயில் கைதி வாழ்க்கை வாழர 'அடக்கமான' ரங்கமணிகள் இவர்கள்.
பாவம், அவங்களாவது 'எஞ்சாய்' பண்ணட்டும்னு, என் தனிமையை பல்லக் கடிச்சுக்கிட்டு, பொறுத்துக்கிட்டு தியாகச் சுடரா மாறிட்டேன்.
மெழுகுவத்தி எரிகின்றது...
தனிமை கொடுமை.
தங்கமணிகள் இனிமை.
ஹாப்பி வெள்ளி! :)
25 comments:
அட்டகாசம்:)))))))!
உங்களைச் சொல்லல. பதிவைச் சொன்னேன்.
என் சோகக் கதை கிண்டலாப் போச்சு. :)
அட்டகாசம் --- தங்கமணி பத்தி சொல்லியிருக்கிற கமெண்ட்ஸ் - ஆண்டவா எப்படியாச்சும் ஊருக்கு போயிருக்கற சர்வே வூட்டுக்காரம்மிணி கண்ணுல படணும் அப்படின்னு வேண்டிக்கிடறேன் :))))
//தனிமை கொடுமை.
தங்கமணிகள் இனிமை.//
இது என்னாது...?????
ஆஹா சொ.செ.சூ
//நான் 'எஞ்சாய்'னு கத்தரேனோ இல்லையோ, என் சுற்றமும் நட்பும், 'சர்வேசனின் தங்கமணி ஊருக்கு போயிட்டா, எஞ்சாய்'னு, லைன் கட்டி நிக்கரானுவோ. //
எஸ்ஸு :))
என் பொண்டாட்டி ஊருக்கு போயிடுச்சே
இப்புடி லிங்க் எல்லாம் கொடுத்து பார்க்க வேற சொல்லுவாங்களே இப்புடி? :))
:)))))))) இப்ப சிச்சுவேஷனுக்கு தகுந்த பாட்டு “ என் சோகக் கதையை கேளு தாய்க்குலமே”
பதிவு இல்ல இல்ல புலம்பல்கள் அருமை
நல்ல பதிவு.
சத்தியமான உண்மை. ஒரு ஆறு மாதகாலம் நான் தனிமையில் இந்தக் கொடுமையை அனுபவித்திருக்கிறேன்
ஆகாககாகா, யோசிக்க வச்சுட்டீங்க
'ஹ்ம். அந்தோ பரிதாபம்',
'ஹ்ம்!'
Danks everyone! :)
சர்வேசன், போட்டிக்கு அனுப்பின கதையில சின்னதா கொஞ்சம் சேர்க்கலாமா. 30 வரைக்கும் டைம் இருக்கே
உங்க தங்க்ஸ் கிட்ட உங்களப்பத்தி நல்லபடியா சொல்றேன். போன பின்னூட்டத்துக்கு ஒகே சொல்லுங்க :)
///சின்னதா கொஞ்சம் சேர்க்கலாமா. 30 வரைக்கும் டைம் இருக்கே//
november 15th varaikkum, you can add/modify/delete :)
16th mudhal, 'lock' panniduven.
நாந்தான் இப்படி இருக்கேன்னா நீங்களுமா?
மக்களே,
சத்தியமா நான் சர்வேசன் இல்லீங்க. ரெண்டு பேருக்கும் ஒரே சூழ்நிலை அவ்வளவுதானுங்கோவ்வ்..
சமையல்கட்டுல எனக்கு பிடிக்காத ஒரே வேலை... பாத்திரம் துலக்குவது. உங்களுக்குமா?
இளா, ஸேம் ப்ளட்.
அரசூரான், உங்களுக்கும் எனக்கும் மட்டுமில்லீங்க. எல்லாருக்கும் பிடிக்காத மேட்டரு இந்த பாத்திரம் கழுவரது ;)
/////நான் 'எஞ்சாய்'னு கத்தரேனோ இல்லையோ, என் சுற்றமும் நட்பும், 'சர்வேசனின் தங்கமணி ஊருக்கு போயிட்டா, எஞ்சாய்'னு, லைன் கட்டி நிக்கரானுவோ.
வூட்ல, கை கட்டி வாய் பொத்தி, ஜெயில் கைதி வாழ்க்கை வாழர 'அடக்கமான' ரங்கமணிகள் இவர்கள். /////
அந்த ரங்கமணிகளின் தங்கமணி போகும்போது, அந்த ரங்கமணிகளைப்ப் போலவே, நானும் 'எஞ்சாய்' கத்துவேன் என்பதை இங்கே சொல்லிக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன் ;)
தங்கமணியோடு சேர்ந்து நானும் சிரிக்கிறேன்...சிரிக்கிறேன்...சிரிச்சுக்கிட்டே இருக்கிறேன். நிழலின் அருமை....நல்லாவே தெரிஞ்சிருக்கு.
இதெல்லாம் பரவாயில்லே சார், நாம சமைச்சதை நாமளே சாப்பிடனும் பாருங்க, அது தான் மிக மிக கொடுமை.
இந்தப் பதிவு தங்ஸுக்காக எழுதிட்டீங்க... அப்புறம் நிஜமெல்லாம் எப்போ எழுதப் போறீங்க !
நானானி, நன்னி.
///நிழலின் அருமை....நல்லாவே தெரிஞ்சிருக்கு.//
:)
பெ.சொ.வி,
// நாம சமைச்சதை நாமளே சாப்பிடனும் பாருங்க, அது தான் மிக மிக கொடுமை//
ஹிஹி. எனக்கு டமில்ல புடிக்காத ரெண்டாவது வார்த்தை தற்புகழ்ச்சி.
இருந்தாலும், சொல்லிக்கறேன், ஐ ஆம் எ குட் குக், ஸம்டைம்ஸ் பெட்டர் குக் :)
சிக்கனை வச்சு, பி.எச்.டி மட்டும் தான் பண்ணலை :)
தருமி,
////இந்தப் பதிவு தங்ஸுக்காக எழுதிட்டீங்க...////
right on! ;)
////அப்புறம் நிஜமெல்லாம் எப்போ எழுதப் போறீங்க /////
இங்கதான் ப்ரச்சனையே. அனானிமட்டி கொஞ்சம் கொஞ்சமா கொறஞ்சுக்கிட்டே வருது. இனி, உண்மை எல்லாம் எழுதரது கஷ்டம் ;)
அதே வெறுமையைப் பார்த்து தற்பொழுது தான் இடஞ்சு போயிருக்கேன்... உங்க பதிவையும் பார்க்குறேன்.
எல்லாம் சரி ...
”தங்கமணிகள் இனிமை”. இது புதுசா இருக்கே... கத்துக்கொள்ளணும்.
ஏறக்குறைய எல்லா ரங்கமணிகளின் கதையும் இது தான்.
Post a Comment