recent posts...

Sunday, December 06, 2009

லஞ்சப் பெருச்சாளிகள்... தொடரும் எரிச்சல்

வருஷம் என்னமா ஓடுது பாருங்க.
அதுக்குள்ள ரெண்டு வருஷம் ஓடிடுச்சு!

எதுக்குள்ள? - சப்-ரெஜிஸ்ட்ரார் அலுவலகத்தில், லஞ்சம் கொடுக்காமல் ஒரு வேலையை முடிக்க, நான் பட்டபாடு முடிந்து, ரெண்டு வருஷம் ஆச்சு.

இப்ப, மீண்டும் இந்த அரசாங்க இயந்திரத்திடம் ஒரு சின்ன மேட்டர் முடிக்க வேண்டிய தேவை வந்துள்ளது. ரெண்டு வருஷத்துக்கு முன் சப்-ரெஜிஸ்ட்ரார், இப்ப நகராட்சி அலுவலரிடம் வேலை முடிக்கணும்.

ஃபார்ம் பூர்த்தி செய்து, 20ரூபாய் கொடுத்தா, உடனே கையில் தரப்படவேண்டிய பிறப்பு சான்றிதழுக்காக இந்த புதிய தலைவலி.

நகராட்சி அலுவலகத்துக்குப் போனேன்.
ஃபார்ம் பூர்த்தி செய்து, 20ரூபாயுடன் அதை நகராட்சி அலுவலகத்தில் இருக்கும் கிளார்க்கிடம் நீட்டினால், "நூத்தி இருபது ரூபா கொடுங்க"ன்னு வாய் கூசமா அப்பட்டமா லஞ்சம் கேட்டான் கெரகம் புடிச்சவன்.

"20 ரூபாதானே. என்னாத்துக்கு நூத்தி இருவதுன்னு" நான் கேட்டதுக்கு, "நூத்தி இருபது கொடுங்க. இன்னிக்குத்தான சர்ட்டிஃபிகேட் வேணும்?னு ஒரு எதிர் கேள்வி கேட்டான்.

எனக்கு ஒரு ரூபாய் கூட, அதிகமாய் கொடுப்பதில், உடன்பாடில்லை. அதுவும், இந்த மாதிரி சாக்கடைத்தனமாக கொஞ்சம் கூட கூசாமல் லஞ்சம் கேட்கும் பெருச்சாளிகளைப் பார்த்தால், ரத்தம் கன்னாபின்னான்னு கொதிக்க ஆரம்பிச்சுடுது.

என் ஒரே, drawback என்னான்னா, வரும் கோபத்தை வார்த்தைகளால் அள்ளிக் கொட்ட முடியாதது. மென்னு முழுங்கி, "அதெல்லாம் தர முடியாது. இருபது ரூபாதான்"ன்னு கூற மட்டுமே முடிந்தது.

"ஒரு வாரம் கழிச்சு வாங்க"ன்னு சொல்லிட்டான்.

எனக்கு, இந்த சர்ட்டிஃபிக்கேட்டின் தேவை இருந்தாலும், சரி என்னதான் பண்றான்னு பாக்கலாம்னு கெளம்பி வந்துட்டேன்.

கேவலம் நூறு ரூவாய்க்கு,, இந்த மண்ட கொடச்சலும், மேலும் பலமுறையும் அலையுணுமான்னு நீங்க கேக்கலாம், என் நண்பர்கள் பலரும் கேட்டது போல்.

சும்மா, பொலம்பிக்கிட்டே மட்டும் இருந்தா, எப்பதான் விடிவு வரும், இந்த பெருச்சாளிகளிடம் இருந்து?
அதுவும், போன முறையாவது, கொஞ்சம் வயசான பெருச்சாளி. இம்மூறை, முப்பதுகளில் இருக்கும் ஒரு இளைஞன், இப்படி கூசாம லஞ்சம் கேக்கறான்.

நம் தலைமுறையும் இப்படித்தான் இருக்கப் போவுதுங்கரத நெனச்சா, ரொம்பவே வேதனையா இருக்கு.

அரசாங்கம், பல நல்ல விஷயங்களை செஞ்சுக்கிட்டு தான் இருக்கு. e-governance பல இடங்களில் இயங்கி வருகிறது. இந்த கெரகம் பிடிச்சவங்க முகத்தை பார்க்காமல், வீட்டிலிருந்தபடியே இணையம் மூலமாக சான்றிதழ்களை பெறும் வகை இருக்கிறது. ஆனா பாருங்க, என் நகராட்சியின் (பல்லவபுரம்) e-governance தளம் வேலை செய்வில்லை. (இல்ல, வேணும்னே அதை ஆஃப் பண்ணி வச்சிருக்காங்களான்னும் தெரியலை).

ஒரு வாரம் கழிச்சு வரேன்னு சொல்லிட்டு வந்தாச்சு. இனி எத்தனை தடவ அலைய விடப் போறாங்கன்னு பாப்போம்.

சென்ற முறை இதே ப்ரச்சனை வந்தபோது, இனி லஞ்சம் யாராவது கேட்டால், விஜிலன்ஸில் போட்டுக் கொடுப்பேன்னு ஓரு தீர்மானம் மனசுக்குள்ள வச்சிருந்த்தேன். இம்முறை அதை செஞ்சு பாக்கலாமான்னு ஒரு வேகம் வருது, ஆனா அதை செயல்படுத்துவதை யோசிச்சா ஒரே தயக்கமா இருக்கு. எது எப்படி இருந்தாலும், ஒரு பைசா கூட லஞ்சம் கொடுக்காமல் தான் அந்த சான்றிதழை வாங்கப் போகிறேன். அதில் எந்த மாற்றமும் இல்லை.

என்னடா பண்ணலாம்னு இணையத்தை மேய்ந்த போது, கண்ணில் பட்ட சில ஹீரோஸின் தகவல்கள் கீழே பாருங்க.
நல்ல உத்யோகத்தில் இருக்கும் நாமே இப்படி சோம்பேரிகளாய் இரூக்கும்போது, படிக்காத பாமரனும், நம் கிராம வாசிகளும், வயதானவர்களும் எப்படி தைரியமா இந்த துரு பிடிச்ச அரசு இயந்திரத்தை எதிர்த்திருக்காங்கன்னு பாருங்க.
* கருங்கல்பாளையம் என்ற கிராமத்தில் இருக்கும், சசிகலா என்ற கூலித் தொழிலாளி, எட்டு மாத கர்பமாய் இருக்கும்போது, அரசின் மானியம் வாங்க Village administrative officerஇடம் கேட்டதர்க்கு, 100ரூ லஞ்சம் கேட்டானாம் அவன். கோபம் கொண்ட சசிகலாவும், கணவர் பச்சையப்பனும் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் கொடுத்து, VAOவை கையும் களவுமாக பிடித்து உள்ளே போட்டார்களாம்.

பெட்டிஷனை கூட பூர்த்தி செய்ய முடியாத, பள்ளியையே பார்த்திராத சசிகலாவுக்கு இருந்த தைரியமும், ரௌத்திரமும், படித்த நமக்கேன் இல்லாமல் போகிறது?

* கிருஷ்ணகிரியில், கருப்பண்ணன் என்ற விவசாயி தன் நிலப் பத்திரத்தின் நகலை கேட்டு விண்ணப்பித்தாரம். இங்கேயும், ராமானுஜம் என்ற VAO 200ரூபாய் லஞ்சம் கேட்டானாம். கோபம் கொண்ட கருப்பண்ணன், vigilenceல் உடனே புகார் கொடுத்து, ராமானுஜத்தை களி திங்க வைத்துள்ளார். கருப்பண்ணனுக்கு வங்கியில் கடன் பெற,இந்த நிலப் பத்திரம் அவசரமாக தேவைப் பட்டபோதும், படிந்து போகாம, இப்படி செய்துள்ளார் என்பது இங்கே கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒன்று.

* ஈரோட்டில், Pollution control boardல் லஞ்சம் பெருகுவதை கண்டித்து, நூற்றுக் கணக்கான விவசாயிகள் போராடி, Joseph Pandiaraj என்ற அதிகாரியை கைது செய்ய வைத்துள்ளனர்.

* Coimbatoreல் இரண்டு VAOக்களுக்கு ஆறு ஆண்டு சிறை தண்டனை பெற்றுத் தந்துள்ளனர், உள்ளூர் வாசிகள். கணபதி என்ற VAO 6000ரூபாய் லஞ்சம் கேட்டதால் உள்ளே தள்ளப்பட்டுள்ளார்.

* 150ரூபாய் லஞ்சம், ஒரு ஓய்வு பெற்ற ஏழை இராணுவ வீரரிடம் கேட்டதால், coimbatore medical collegeல் இருக்கும் ஒரு clerk கம்பி எண்ணுகிறார்.


இவ்ளோ ஹீரோஸ் ஸைலண்ட்டா தங்கள் ரௌத்தித்தை காட்டிக்கிட்டுத் தான் இருக்காங்க.
அவர்களுக்கு சாஷ்டாங்கமான நமஸ்காரம்!

படிச்ச நாமதான், சுலபவழி தரும் சுகத்தில், திக்கு முக்காடிப் போகி, ஓரடி முன்னேற்றப் பாதையில் எடுத்து வைக்கும் நாட்டை, பத்தடி ரிவர்ஸில் இழுத்து துரு பிடிக்க வைக்கிறோம்.

இதைப் படிக்கும் நீங்கள், இனி வரும் காலங்களில் லஞ்சம் கொடுக்கவோ, வாங்கவோ செய்தால், நானும், என் மற்ற வாசகர்களும், உங்கள் பெற்றோரும், உற்றாரும், குழந்தைகளும், உங்களை ஒரு சாக்கடைப் புழுவாக காண்பார்கள் என்று கருத்தில் கொள்க.

ஒண்ணு, Vigilence/லஞ்ச ஒழிப்புத் துறைக்கு போங்க, இல்ல, ஒரு பைசாவும் கொடுக்காம, அலஞ்சு திருஞ்சு வேலைய முடிச்சுக்கோங்க.

Say NO to சுலபவழி, please!


தொடரும்...

பி.கு1: வீட்டுக்கு ஆட்டோ வந்தா, காப்பாத்த வருவீங்கல்ல? ;)

பி.கு2: Fifth Pillar / ஐந்தாவது தூண் பத்தி தெரிஞ்சுக்கோங்க

Zero rupee note:

14 comments:

ரவி said...

எத்தனை பேருக்கு நீங்க சொல்ற விஷயம் ப்ராக்டிக்கலா பாஸிபுள் ?

எல்லாருக்கும் வர்மக்கலை தெரியுமா என்னா ?

Truth said...

http://www.india.gov.in/outerwin.php?id=http://cvc.nic.in/lodgecomp.htm

இது எப்படி வர்க் ஆகும்னு தெரியல. ட்ரை பண்ணுங்க.

SurveySan said...

ரவி, எல்லாருக்கும் ப்ராக்டிக்கலா பாசிபிள் தான், மனசிருக்கணும்.

ஈஸியா முடியுதுன்னு பண்ணி பண்ணிதான், இப்ப ரொம்ப எதார்த்தமா ஃபீஸ் கேக்கர மாதிரி கேக்க ஆரம்பிச்சிருக்காங்க.

ஒரு ரெண்டு நாள் மெனக்கெட்டு முடிச்சுக்கும் பொறுமை கூட இல்லாம, எல்லாரும் என்ன ராக்கெட்டா லான்ச் பண்ணப் போறோம்? :)

SurveySan said...

Truth, முயற்சி செய்றேன். எல்லா காதுலையும் ஓதி வைக்கலாம். ஏதாவது ஒருத்தர் சரி பண்ணா நல்லதுதானே.

கொடுமை என்னன்னா, எல்லா கதவு வாசலிலும், கொட்டை எழுத்துல பெயிண்ட் அடிச்சிருக்கு இப்படி:
லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் சட்டப்படி குற்றமாம். :)

SurveySan said...

Truth, that link is only for central govt employees.
municapal office is state.

SurveySan said...

ரவி, உங்க கிட்டேயிருந்து இந்த பதிலைஇ எதிர்பாக்கலை ;)

Kayal said...

Nice Post. I got my kids birth certificate and my grandpa's death certificate paying 120 rs each(i thought that shd be the fees paid :( ). I never had the patience to read thru the application even. i asked the guy and he told this amount and i gave.

SurveySan said...

matter success.

will explain shortly :)

CVR said...

I will be watching this space :)

SurveySan said...

CVR,

i will probably do a new post to provide the details :)

ரவி said...

சர்வேசர்(ன்)..

ஓட்டையை அடைக்காமல் பாத்திரத்தில் தண்ணீர் ஒழுகுது ஒழுகுது என்று கம்ப்ளெயிண்ட் கொடுத்தால் ??

விலைவாசிக்கு தகுந்தபடி நியாயமான ஏற்றத்தாழ்வற்ற சம்பளம் கொடுக்கவில்லை என்பதும் ஒரு குற்றச்சாட்டு...

http://tvpravi.blogspot.com/2009/10/blog-post_06.html

படிச்சு பார்க்கவும்.

ரவி said...

நிறைய பேசனும். போன் நம்பர் இருந்தா கொடுங்க. அல்லது எங்கிட்டாவது முக்காடு போட்டுக்கிட்டு வாங்க மீட் பண்ணலாம்...நானும் மெட்ராஸுல தான் கீறேன்..

SurveySan said...

அந்தாளுக்கு வேண்டிப்பட்டவகளா நீங்க?

///முக்காடு போட்டுக்கிட்டு வாங்க மீட் பண்ணலாம்...///

இப்போதைக்கு இதை சாய்ஸ்ல விட்டுக்கறேன் ;)

SurveySan said...

mudivurai inge
http://surveysan.blogspot.com/2009/12/happy-ending.html