recent posts...

Monday, December 28, 2009

Times of India - புடிச்சிருக்கு

இம்முறை, சென்னைக்குச் சென்றிருந்த போது கண்ட பல மாற்றங்களில், ஒரு குட்டி மாற்றம் எங்க வீட்டில் வாங்கும் தினசரி பேப்பர் மாறியிருந்தது.

படிக்கரமோ இல்லியோ, ஒரு கெத்துக்காக, The Hindu வாங்குவது, அநேகம் வீடுகளில் வாங்குவது வழக்கம். எங்க வீட்லயும் அப்படித்தான்னு நெனைக்கறேன்.

இந்த தடவ பாத்தா, Hindu போய், ஸ்லீக்கா, Times Of India வந்து கொண்டிருந்தது.

முதல் ஸ்பரிசத்திலேயே, ஒரு வித்யாசம் தெரிந்தது. நல்ல வாசிப்பு அனுபவம் தந்தது.
இந்தப் பக்கம் அந்தப்பக்கம் சாயாமல், பேலன்ஸ்டா செய்திகள் வந்த மாதிரி தெரிந்தது.
(நுண்ணரசியல் புரியா ஜென்மம் நானு)

நிறைய பாஸிட்டிவ் செய்திகள் கண்ணில் பட்டது.
குடிமகனுக்கு தேவையான விஷயங்களும் கண்ணில் பட்டது. முக்கியமா, லஞ்சம் வாங்கி Vigilence மூலமா மாட்டறவங்க பத்தி, தினசரி ஒரு செய்தியாவது கண்ணில் பட்டது.
அதைத் தவிர Right to Information (RTI) வச்சு அவரு இத்தை செய்தார், இவரு அதை செய்தாருன்னும் செய்திகள் வருது.

நல்ல தொகுப்பு.

மிக முக்கியமாய், என்னை வெகுவாக கவர்ந்த விஷயம், ஒவ்வொரு செய்தியிலும் இடம்பெறும் புகைப்படம் ஒரு mug-shot போலல்லாமல், மிகவும் நேர்த்தியான கோணத்தில், ரசனையுடன், திறம்பட எடுக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 3ஆம் தேதி, கண்ணில் பட்ட ஒரு படம்.
'சென்னையில் மழை'யை இப்படி படம் போட்டு காமிச்சா, நல்லாத்தேன் இருக்கு. :)


I recommend, Times of India.

9 comments:

SurveySan said...

photo மக்கள்ஸ் யாராவது மழையை இப்படி எடுத்திருக்கீங்களா? உங்க படங்களை பகிருங்கள்.

ராமலக்ஷ்மி said...

வந்துட்டேன்:)!

பெங்களூர் வந்த புதிதில் Deccan Herald. அப்புறம் இப்போ one decade-க்கும் மேலாக TOI-தான். நீங்கள் சொல்லும் விஷயங்களுடன் ஒத்துப் போகிறேன். அதே போல செய்திகளுக்கென அவர்கள் பிரயத்தனத்துடன் வரைந்து வாங்கி வெளியிடும் படங்களும் அருமையே.
[கொசுறு: என்னுடைய பல பதிவுகளில் நன்றி: TOI என இருக்கும்:)!]

இப்போது ஒரு மாதமாக சனிக்கிழமை தோறும் ஆறு ரூபாய்க்கு (சொல்லி வைக்கணும்) The Crest Edition என 44 பக்கங்களுக்கு சகல விஷயங்களையும் அலசும் இணைப்பைக் கொடுக்கிறார்கள். அவசியம் வாசிக்க வேண்டிய ஒன்று.

SurveySan said...

ராமலக்ஷ்மி, வருகைக்கு நன்னி! :)

///சகல விஷயங்களையும் அலசும் இணைப்பைக் கொடுக்கிறார்கள்///
அப்ப கண்டிப்பா crest வாங்க மாட்டோம். நாங்க சும்மா ஒரு 'பந்தாக்கு'தான் பேப்பர் வாங்கரது ;)

அதிஷா said...

சென்ற மாதம் நிக்கான் நடத்திய பத்திரிக்கையாளர்களுக்கான புகைப்பட போட்டியின் முதல் இரண்டு பரிசுகளையும் டைம்ஸ் ஆப் இந்தியா நிருபர்களே வென்று பலரது வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்டனர்.

டைம்ஸ்- ஹிந்துவை விழுங்கிக்கொண்டிருக்கிறது

Veliyoorkaaran.. said...

நான் டைம்ஸ் ஆப் இந்தியாவில் இரண்டு ஆண்டு காலம் சென்னையில் பணி புரிந்ததை நினைவுபடுத்தி பார்க்கிறேன்........படிக்கும்போது மட்டுமல்ல...பணிபுரியும்போதும் ஒரு சுகமான பரிட்சயம்...இந்தியாவின் எதிர்காலம் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையிடம்...ஹிந்து தமிழகத்தில் மட்டும்தான் இருக்கிறது என்பதால் டைம்ஸ் கூடிய விரைவில் ஹிந்துவை கபளீகரம் செய்துவிடும் அபாயமும் இருக்கிறது..என் தாழ்மையான அபிப்ராயம் ஹிந்து டைம்ஸை விட தரமான பத்திரிக்கை..டைம்ஸில் வடக்கு இந்திய சாயல் இருப்பதை அவர்களால் தவிர்க்க முடியாது..தொடர்ந்து வாசியுங்கள் உங்களுக்கு தெரியும்.... :)

முகிலன் said...

நான் பெங்களூரில் இருந்த சமயத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவை இங்லிஷ் தினத்தந்தின்னு தான் சொல்லுவோம். இப்ப இம்ப்ரூவ் ஆகியிருக்கலாம்.

pappu said...

காலேஜ்ல படிச்சது...

பந்தாவுக்கு சொன்னீங்களே... ஹி.. ஹி...

SurveySan said...

அதிஷா, Veliyoorkaaran, முகிலன், pappu,
danks for the visit.

sasi said...

aahhaaaa.. cmt kudukalam nu vanthaa....... ok ok.. i cmt from ur option... "thool"