recent posts...

Monday, December 21, 2009

வாவ்வ்வ் துபாய்!

துபாய் வழியா சென்னை போனா, போகும் வழியில் துயாயையும் சுத்திப் பாத்திடலாம்னு, இம்முறை எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் புக்கியிருந்தேன்.
மக்கள்ஸ் சொன்ன மாதிரி, அநேகம் இடங்களையும் பாத்தாச்சு.

அமக்களமான ஊர் துபாய். எடுத்த படங்களில் சில கீழே தொகுத்துள்ளேன். மேல் விவரங்கள், பதிவாக, ஜெட் lagகெல்லாம் போனப்பரம் வரும் :)

பழைய கால துபாயை நினைவூட்டும் ஒரே விஷயம் இந்த 'ஆப்ரா' தோணி. சில்லரை காசுக்கு, இக்கரையிலிருந்து அக்கரை கொண்டு விடராங்க்ய.

எக்கானமிக்கு உதவலாம்னு தோணிச்சு. ஆனா, படம் மட்டும் புடிச்சு எல்லா கடையிலிருந்தும் எஸ்கேப்
Desert Safari போன போது, எங்களுக்கு முன்னால் போன ஜீப் போட்ட வட்டம். என்னமா ஓட்ராங்க்ய. பின்னாடி சீட்ல இருந்த கொரியன் பொண்ணு அழுதுடுச்சு.

ஒட்டகம், என் வெயிட்டு தாங்குமான்னு டவுட்டு இருந்தது. பாவம், என்னையும் தாங்கிச்சு. அதுக்கு மேலையும் தாங்கிச்சு.
300dhs (துபாய் திர்ஹம்) இருக்க வேண்டிய desert safari, 125dhs விக்கறாங்க. 200dhsக்கு விற்க வேண்டிய dinner cruise, 100dhsக்கு விக்கராங்க. கூட்டமும் கம்மி.
நம்ம ஊருல ஆடு மாடு மேயர மாதிரி, இங்க ஒட்டகம் ரோட்டை கிராஸ் பண்ணுது. ஹார்ன் அடிச்சு லொள்ளு பண்ணாம, அது போர வரைக்கும் வெயிட் பண்ணி போராங்க.
Desert Safari பெருசுங்களை விட, வாண்டுகள்தான் ரொம்ப என்சாய் பண்றாங்க. மணல்ல பெரண்டு பெரண்டு வெளையாடராங்க. மணலும், ஜலிச்ச மணல் மாதிரி நைசா இருக்கு.
விற்பனைக்கு வச்சிருந்தாங்க. வெலை ஜாஸ்தி. வழக்கம் போல், போட்டோ மட்டும் எடுத்துட்டு எஸ்கேப்.
ராத்திரிதான் களை கட்டுது. பாலைவனத்தின் உள்ளே இந்த மாதிரி செட்டப் போட்டு, பாட்டை போட்டு, ஆட்டமும் போட்டு, ரம்யமான பொழுது போக்கு.
அக்கா சூப்பரா ஆடினாங்க. பல பேரை ஆடவும் வச்சாங்க. க்ளிக்கி க்ளிக்கி கேமராவின் க்ளிக்கர் தேய்ந்தது தனிக் கதை ;)
கட்டடங்கள் ஒவ்வொண்ணும் ரம்யமா கட்டியிருக்காங்க. பெத்தையா மட்டும் இல்லாம, ஒரு ரசனையோடையும் இருக்கு. ஷாப்பிங் மால்ஸ் ஒவ்வொண்ணும், பப்பளான்னு இருக்கு. அம்பட்டன் கடைகூட மின்னுது. சரவணா பவன், லீ மெரிடியன் லுக்ல இருக்கு
சாலையும் அமக்களம். ஏழு லேனு. சார் படம் தான், பல எடத்துலையும் வச்சிருக்காங்க. சிலை வடிக்கத் தெரியாதா இவிகளுக்கு? நம்ம ஊர்லேருந்து எக்ஸ்போர்ட் பண்ணலாமே?
ஏழு ஸ்டார் ஹோட்டலாம். ஈ.மெயிலில் வந்த இந்த ஹோட்டலில் புகைப்படம் பாத்ததும் தான், துபாய் பாக்கணும்னு எண்ணம் ஸ்பார்க் ஆச்சு. இதில் தங்கும் காலம் எப்ப வருமோ?
பனை மர ஓலை வடிவில் அமைந்திருகும் ஒரு குட்டித் தீவின் உள் இது. ஓரத்தில் Atlantis ஹோட்டல். கடல்ல மணலையும் கல்லையும் போட்டு, இப்படியெல்லாம் கட்டணும்னு தோணிருக்குதே,அடேங்கப்பா, என்னா ஒரு visionary அந்தாளு?
உலகிலேயே உயரமான கட்டிடம் இதுதான். ஜனவரி 2010ல் பால் காய்ச்சி கிரஹப்ரவேசம் பண்றாங்களாம். 160 மாடிகளாம். 2684 அடி உயரமாம்.
துயாய் மெட்ரோ. இந்த வருஷம்தான் ஆரம்பிச்சிருக்காங்க. நான் வருவேன்னு தெரிஞ்சிருக்கும் போல :) செம வசதியா இருந்தது.
அழகோ அழகு மெட்ரோ. தொடச்சு பள பளன்னு வச்சிருக்காங்க மொத்த ஊரையும். மெட்ரோ கேக்கணுமா?
துபாய் க்ரீக்.
- ஓவரா செலவு பண்ணி, எக்கானமி ஆட்டம் காணுது. பல இடங்களில் கண்கூடா தெரியுது. Dinner cruise போன தோணி. பேரம் பேசாமலே, பாதி விலைக்கு டிக்கெட் தராங்க.

வெயில் காலம் தான் தாங்க முடியாதாம். கொளுத்திக் காயப் போட்டுடுமாம். இந்த வாரம் மழையெல்லாம் பெஞ்சு குளு குளுன்னு இருந்தது. (நல்ல மனசிருக்கரவங்க வந்தா மழை வராம என்ன பண்ணுமாம்)

30 comments:

SurveySan said...

பதிவர் சந்திப்பு ஏதாச்சும் இருந்திருந்தா நம்மாளுங்களை பார்த்திருக்கலாம் ;)

ஷங்கி said...

ஆகா, படங்களெல்லாம் அருமை!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ சந்திப்புன்னா சந்திச்சிட்டுத்தான் மறுவேலை உங்களுக்கு :) பட்மெல்லாம் நல்லா இருக்கு..

சென்ஷி said...

:-(

நாஞ்சில் பிரதாப் said...

தலைவா ஒரு வார்த்தை வர்றீங்கன்னு சொல்லிருந்தா... தாரை தம்பட்டை எல்லாம் போட்டு அமர்க்களப்படுத்தியிருப்போமே... படம் கலக்கல் பெல்லி டான்ஸ் ஆடுன அக்கா போட்டோ இன்னும் ரெண்டு போட்டுருக்கலாம்...

Ulagalavi said...

இந்த துபாய் சேக் துபாய் சேக் ன்னு சொல்வாங்கலே அவர் தானா போட்டோ இருக்கரவர்

Ulagalavi said...

Splendid Photos :)

SurveySan said...

ஷங்கி, நன்றீஸ்.

முத்துலெட்சுமி, ///ஓ சந்திப்புன்னா சந்திச்சிட்டுத்தான் மறுவேலை உங்களுக்கு////
ஹீ ஹீ :)

சென்ஷி, நாஞ்சில் பிரதாப்,
:(
மீட் பண்ணலாம்னு தான் இருந்தேன். ஆனா பாருங்க, யாரும், எங்க வீட்டுக்கு வாங்கன்னு பாசமா கூப்பிடலை. வரலாம்னு இருக்கேன்னு ரெண்டு மாசத்துக்கு முன்னமே பதிவ போட்டதுக்கு யாரும் பாசிட்டிவ்வா பின்னூட்டலை. ( யப்பா, ஐ ஆம் த எஸ்கேப் ;)).
(seriously, இருந்த 1 1/2 நாள்ள எதுவுமே பண்ண முடியல்ல)

Ulagalavi, ஷேக்கேதான் அவரு. நல்லவரு, வல்லவரு.

குப்பன்.யாஹூ said...

u should post the reality of Dubai, where 10 bachelors staying in 1 room, 10 people sharing 1 bathroom, 1 toilet.

2 or 3 families sharing 1 kitchen etc

SurveySan said...

Kuppan, i had that in mind, when i saw a big group of indian labourers in front of a building.

i was told, they lead a very troubled life in dubai for a few dhs.

this post is only share pics. will let the Dubai'ians to write the actualities :(.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[SurveySan said...
பதிவர் சந்திப்பு ஏதாச்சும் இருந்திருந்தா நம்மாளுங்களை பார்த்திருக்கலாம் ;)]]]

ஏன் ஸார் கதை விடுறீங்க..?

மெட்ராஸ் வந்தும் முகம் காட்டாம ஓடி ஒளியறீங்க..? இதுல பதிவர் சந்திப்பு இருந்தான்னு பேச்சு வேற..???

குசும்பன் said...

//பதிவர் சந்திப்பு ஏதாச்சும் இருந்திருந்தா நம்மாளுங்களை பார்த்திருக்கலாம் ;)//

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு:)))

ராமலக்ஷ்மி said...

எல்லாப் படங்களும் அருமை. ஜீப்பு வட்டம் அழகு.

//சிலை வடிக்கத் தெரியாதா இவிகளுக்கு?//

அதானே? இப்படி அசத்துற மாதிரி 160 மாடிக் கட்டிடம் கட்டினாப் போதுமா:)?

SurveySan said...

உண்மைத் தமிழன்,

Avvvvv :(

குசும்பன், Danks! :)

ராமலக்ஷ்மி, must be some religious reasons. idol worship panna maattaangale.

அநன்யா மகாதேவன் said...

almost oru complete dubai roundup. unga photos ellam superb. You mustve liked IBN Batuta Mall's Architectural Beauty. As Kuppan rightly pointed out, this is just a hyped up city with so much pains and sufferings underneath. People toil to survive here. Especially the labourers' plight is really painful. During Summer, I have seen their buses going to and fro, it is horribly hot, No Ac in the bus, Still most of them are sleeping and drooping down their windows. I have a drop of tear for their miserable lives. Anyway,Thanks for the roundup. Its months since weve been to Dubai. I guess you forgot to mention the pathetic Traffic within the city which made us flee from Dubai. We are now refugees @ abudhabi, a much better, smaller and a more peaceful place to live. :)நீங்க தானே கமெண்ட் எழுது எழுதுன்னு போட்ருக்கீங்க, அதான் ஏதோ என்னால முடிஞ்சா மாதிரி சின்னதா ஒரு கமெண்ட்,ஹீ ஹீ

SurveySan said...

அநன்யா மகாதேவன்,

danks. சம்மரில் வந்திருந்தா மத்தவங்க படும் கஷ்டம் புரிஞ்சிருக்கும்.
நிறைய லேபரர்ஸ் வேலை செய்வதை பாத்தேன். நீங்க சொல்ர மாதிரி, சுள்ளுனு வெயிலடிச்சா அவங்க நெலமையெல்லாம் ரொம்பக் கொடுமை.

இம்புட்டு செலவு பண்ற ஷேக், இவங்களுக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா டப்பு கொடுத்து, வருங்காலத்தை திடப் படுத்தலாம்.
:(

அநன்யா மகாதேவன் said...

அதெப்படிப்பா Labourersகெல்லாம் செலவு பண்ணுவாரு? எவ்ளோ ப்ரோஜெக்ட்ஸ் இருக்கு.. புதுசு புதுசா பிட்லிங் கட்ட வேணாமா? வாடகைக்கு வரதுக்கு ஆளுங்க இருக்காங்களோ இல்லையோ, கட்டிகிட்டே இருக்கணும். அப்போ தான் கௌரவமா இருக்கும். அக்கான். கன்னாபின்னா பின்னான்னு கடனை வாங்கிட்டு முழி பிதுங்குது.இவங்களுக்கு இந்த வறட்டு கெளரவம் தேவையா?

அது ஒரு கனாக் காலம் said...

வந்து சுத்தி பார்த்துட்டு, பதிவும் போட்டாச்சா !!!!!!. உங்களுக்கு பின்னோட்டம் போட்டதா சின்ன ஞாபகம் ... சாதாரணமா எல்லாரும் பிஸீ தான், ( வெள்ளி , சனி ... பார்த்திருக்கலாம் ..) அடுத்த முறை பார்க்கலாம். ...

SurveySan said...

நம்ம தலைவரு எப்படி கவனிச்சுக்கராரு. இலவசமா எம்புட்டு தராரு. அதுல ஒரு பங்காவது, இந்த ஷேக்குக்கு தெரிய வேணாம்?

செய்யணும்னு நெனச்சா அழகா ஏதாவது திட்டம் செய்யலாம். இவிகளுக்கு ரிட்டையர்மெண்ட்டுக்கு ஏதாவது வசதி பண்ணி தரலாம், etc.

SurveySan said...

அது ஒரு கனாக் காலம்,

:) டைம் ஓடுது.
அடுத்த முறை கண்டிப்பா அதிக நாட்கள் இருக்க முயற்சி பண்றேன்.

JanuskieZ said...

Hi... Looking ways to market your blog? try this: http://bit.ly/instantvisitors

ரிஷபன் said...

படங்கள் எல்லாம் அழகு.

மீண்டும் என் கடையில் வியாவாரம் தொடங்கி இருக்கிறேன்.

Nataraj said...

தலைவா..முதல்ல என்ன dslr கேமரா யூஸ் பண்றீங்கன்னு சொல்லுங்க. படம் ஒன்னொன்னும் கண்ணுல ஒத்திக்க வைக்குது. very vibrant colors .
கண்டிப்பா UV , Polarization பில்ட்டர் எல்லாம் யூஸ் பண்றீங்கன்னு நெனைக்கிறேன். அதுக்கும் மேல photoshop பண்றீங்களா? ப்ளீஸ் சொல்லுங்களேன்.
am very thrilled on the output..

மத்தபடி, அடுத்த தடவை கண்டிப்பா துபாய் வழியா இந்தியா போனும்னு முடிவு பண்ணிட்டேன்.

SurveySan said...

ரிஷபன், நன்னி.

Nataraj, canon rebel xti.
ஆனா, என்ன கேமராங்கரது முக்கியமில்லை. எப்படி கட்டம் கட்டறோம், எப்படி post procssing பண்றோங்கரதே முக்கியம்.
I gimpd mostly for white balance;
some pics are 'dynamic photo Hdr'd.
no filters used.

Nataraj said...

Thanks Surveysan.

What is 'gimpd'? Seems its not a post processing thing. Pls advise.
And, what is 'dynamic hdr' thing? Is it part of photoshop? I think am good in 'kattam kattyfing' but so ignorant in post processing.

I know these q's r candidates for ur photo blog. If you can send a note to nattan@gmail.com, that will be great to. Thanks.

SurveySan said...

Nataraj, GIMP is like photoshop, buta open source tool.

'dynamic photo HDR' is again a post processing tool, which gives some stunning results. you can search for it in google and download and try.

Nataraj said...

தேங்க்ஸ் தலைவரே...அதெப்படி எல்லா நல்ல போடோக்ராபர்ஸ்-உம் "கேமரா மாடல்ல என்ன இருக்கு. படம் பிடிக்கிற ஆள்கிட்ட இருக்கு" அப்படிங்கிறீங்க :( ஆனா, யாரும் சலங்கை ஒலி கேமரால போட்டோ எடுக்கறது இல்லைங்கறது வேற விஷயம் :)

SurveySan said...

///எல்லா நல்ல போடோக்ராபர்ஸ்-உம் "கேமரா மாடல்ல என்ன இருக்கு. படம் பிடிக்கிற ஆள்கிட்ட இருக்கு" அப்படிங்கிறீங்க ///

ellam oru thannadakkam thaan ;)

வாசி said...

Hey survey,
got through PIT flickr group photo "Burj Dubai". As I see, you have covered important attraction. You came so near(stone throw distance) to my residence (the place where you took the photos of boat, and those chappals). felt sorry for not meeting you. As usual beautiful pictures.

siva

SurveySan said...

hi siva,

// felt sorry for not meeting you. // dont be sorry. mistake is mine :)

naan dhaan, yaaru kannulayum maattaama escape aayitten.