recent posts...

Thursday, December 06, 2007

லஞ்சப் பெருச்சாளிகள் - முடிவுரை!

தஞ்சம் பொழைக்க ஊரு விட்டு ஊரு வந்து பல வருஷம் ஆச்சு.
ஆனாலும், ஒவ்வொரு வருஷமும், விடுமுறையை சென்னையில் கழிப்பது வாடிக்கை. ஒரு வருஷமும் 'மிஸ்' பண்ணதில்லை.

வெளிநாடுகளில் இருக்கும் வசதி வாய்ப்புகள், 'ஈஸி' லைஃப் ஸ்டைல் எல்லாம் பழகப் பழக, நம்மூரில் இருக்கும் பல ப்ரச்சனைகள், பூதாகரமாகத் தோன்றும்.
விடுமுறையில் வரும்போது, நம்மால வீட்ல இருக்கரவங்களுக்கும் 'ஸெம' டார்ச்சர் இருக்கும்.
'இதுல ஏன் இவ்ளோ தூசியா இருக்கு'
'ஏன் குப்பைய வெளீல போடறீங்க'
'எல்லாத்தையும் அடுக்கி நீட்டா வைங்க'
'ஏன் இவ்ளோ எண்ணை சேக்கறீங்க சமையல்ல'
'ட்ரைவர், laneல ஓட்டுங்க சார். ஏன் அலைபாயறீங்க'
'ரெட்ல நில்லுங்க. மத்தவங்க நிக்கலன்னா பரவால்ல. நீங்க நில்லுங்க'
இப்படி கசா முசான்னு எல்லாத்துக்கும் கேள்வி கேட்டு, நம்ம அடைந்த நன்மை, வையகம் பெறட்டும்னு, எல்லாருக்கும், சகட்டு மேனிக்கு, அட்வைஸு அள்ளித் தெளிப்பேன்.
இதனால், எரிச்சல் அடஞ்சவங்க பல பேரு. (தொர வந்துட்டார்யா வந்துட்டார்யா).

ஆனா, இம்முறை வந்த போது, சென்னை ரொம்பவே பிடிச்சு போச்சு.
முக்கிய காரணம், வெயிலே இல்லாத குளு-குளு நாட்கள் அதிகமானதால் இருக்கலாம்.

இதைத்தவிர, ஏகப்பட்ட மாற்றங்கள் ஒரே வருடத்தில்.
சகட்டு மேனிக்கு கட்டப்பட்டுள்ள ஐ.டி.பார்க் என்ன, தெருக்கு தெரு இருக்கும் ஸ்பென்ஸர்ஸ், சுபிக்ஷா, ரிலையன்ஸ் கடைகள் என்ன, வீட்டுக்கு 10 ஸெல் ஃபோன்ஸ் என்ன, 10 நிமிஷத்துக்கு ஒருமுறை வரும் ஃப்ளை-ஓவர்ஸ் என்ன, சிட்டி செண்டர் மாதிரி ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் என்ன, அடேங்கப்பா.

எல்லா பயலும் பி.ஸியா இருக்கான். என்னமா செலவு பண்றாங்க்ய.

$க்கு 39ரூ மாத்திட்டு அலையர நமக்கே முழி பிதுங்குது. ஆனா, லோக்கல் ஆசாமிகள், 100ரூ கொடுத்து, அஸால்ட்டா 'அழு(not ழ)கிய தமிழ் மகன்' பாக்கறான். வாழ்க வளர்க! :)

சரி, இனி 'தலைப்பு' விஷயத்துக்கு வருவோம்.

இந்த முறை சென்னையில் சப்-ரெஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் ஒரு வேலை ஆகவேண்டியிருந்தது. அதை பற்றிய முந்தைய கிருக்கல் இங்கே.

முந்தைய பதிவில் சொன்னதைப் போல, அந்த 'வேலையை' செய்து முடிக்க, லீகலா, ரூ100 fees கட்டி, form பூர்த்தி செய்து கொடுத்தால், 1 மணி நேரத்தில் நமது கைக்குக் கிட்ட வேண்டும்.

ஆனா, எல்லாருக்கும் தெரிஞ்ச மாதிரி, நம்மூரு சப்-ரெஜிஸ்ட்ரார் அலுவலகங்கள் பல, லஞ்சப் பெருச்சாளிகளின் கூடாரம்.
கைநாட்டு வாங்கும் ப்யூன் முதல், சப்-ரெஜிஸ்ட்ரார் வரை, 'மாமூல்' வாங்காமல் மூச்சு கூட விடமாட்டார்கள்.

அப்பப்ப, எவனாவது, விஜிலன்ஸ்ல போட்டுக் கொடுப்பான். விஜிலென்ஸும் திடீர் விசிட் அடிச்சு, ஒருத்தர அரெஸ்ட் பண்ணிட்டுப் போகும், அவரும் அடுத்த நாளே பெயிலில் வந்துடுவாரு. வாடிக்கையா நடக்கரது இந்த கூத்தெல்லாம்.

இப்ப இருக்கர, ரியல் எஸ்டேட் சூட்டில், எல்லாரின் வருமானமும் கொழிக்கிறது.
ஒவ்வொரு வேலைக்கும் ஒரு 'நிர்ணயிக்கப்பட்ட' amountஐ, மொய்ப் பணமாக தானாகவே தந்து விடுகிறார்கள் அனைவரும்.
இதனால், 'கேட்க்கும்' வேலையும் மிச்சம் நம்ம பெருச்சாளிகளுக்கு.

லஞ்சம் வாங்குபவர்களை விட, லஞ்சம் கொடுப்பவர்கள் பெரிய குற்றவாளிகள் என்பது என் எண்ணம். வேல ஈஸியா முடியணும்னு, நம்மளும் கொடுத்து கொடுத்து பழக்கப்படுத்திட்டோம்.
அப்பப்போ, ஏதோ ஒரு நல்லவரு, விஜிலென்ஸு போய், ஒரு ஃப்ரிக்ஷன் கொடுக்கறாரு.
எல்லாரும் விஜிலன்ஸுக்கு போனா, இந்த லஞ்சப் ப்ரச்சனை எப்பவோ முடிந்திருக்கும்.

என் தேவைக்காக நான் சப்-ரெஜிஸ்ட்ரார் அலுவலகம் போகும்போது, தீர்மானமாக, லஞ்சம் கொடுப்பதில்லை என்று முடிவு செய்துவிட்டேன்.

கட்ட வேண்டிய fees மட்டும் கட்டி ஃபார்ம் கொடுத்தா, நெனச்ச மாதிரியே போட்டு அலக்கழிச்சாங்க.
"நாளைக்கு வாங்க ரெடி ஆயிடும்"
"நாளன்னைக்கு வாங்க. ப்ரிண்டர்ல இங்க் இல்ல"
"ப்ரிண்டர் மெக்கானிக் வரல. ரெண்டு நாளு ஆகும்"
"ரெஜிஸ்ட்ரார் ஹெட்.ஆபீஸ் போயிட்டாரு. 4 மணிக்கா வாங்க"
"லா எல்லாம் பேசாதீங்க சார். ப்ரிண்டர் சரியானா கொடுத்துடப் போறோம். போய்ட்டு நாளைக்கு வாங்க"

மூணு நாளு, வீட்டுக்கும் ரெஜிஸ்ட்ரார் ஆபீஸுக்கும், வண்டிக்கு பெட்ரோல் ஊத்தி லோல் பட்டதுக்கு, 'லஞ்சமே' கொடுத்திருக்கலாம்னு, தோணும் அளவுக்கு ஒரு எரிச்சல் உண்டாக்கினாங்க.

விஜிலன்ஸு போற அளவுக்கெல்லாம், மன தைரியமும் இல்ல, நேரமும் இல்ல. விரக்தியின் உச்சத்துக்கே போயிட்டேன். நாலாவது நாள், வழக்கமான பெருச்சாளிகள் சீட்டில் இல்லாத நேரம்.

அலுவலகத்தில் தட்டச்சு செய்யும் இருவரிடம் பேச்சுக் கொடுத்து விஷயத்தைச் சொன்னேன்.
"அடப்பாவமே, இதுக்கா இப்படி இழுத்தடிக்கறாங்க" என்று உண்மையான வருத்தத்துடன் பேசினார்கள்.
"நீ பேசாம அந்த ஃபார்ம் மாதிரியே வெளீல ப்ரிண்ட் பண்ணிட்டு வந்துடு சார்" என்று ஐடியா கொடுத்தார்கள்.
ஆனால், வெளியில் இருந்த ஹெட்-க்ளார்க், அதை உடனே மறுத்துவிட்டார், "அதெல்லாம் செல்லாது, அப்படி பண்ணா" என்றார். (அவரும், மொய்ப்பணம் வராத கடுப்பில் இருப்பது, அவரின் பார்வையிலேயே தெரிந்தது).

மற்ற கீழ்-நிலை அலுவலர்கள், எல்லோரும் விஷயம் அறிந்து, ஆளுக்கொரு அட்வைஸ் கொடுக்க ஆரம்பித்தார்கள்.
"இதே பொழப்பு சார் இவங்களுக்கு. எதையும் சுலுவா முடிக்க வுடமாட்டாங்க. கெட்டு போன ப்ரிண்டர சரி பண்ணாம 10 நாளாச்சு. மெக்கானிக்க கூப்டாதான வருவான். அவசரமா தேவங்கறவங்க, அவங்களே ப்ரிண்டர கொண்டாந்து எடுத்துனு போறாங்க. பேசாம, நீயும் ஒரு ப்ரிண்டர கொண்டாந்துரு " என்ற ரீதியில் ஐடியாக்களும் அங்கலாய்ப்புகளும்.

நானும், மேலே கீழே அலைந்ததில், ப்ரிண்டர் எல்லாம் ஒண்ணும் தேத்த முடியல.

ஒரு வயதான 'தட்டச்சும்' பெண்மணி ஒருவர் வந்து ஒரு பழைய ஃபார்ம் கொடுத்தார். "சார், இதுல இருக்கர மத்த விஷயத்த white-ink போட்டு அழிச்சு, ஒரு xerox எடுத்துட்டு வாங்க. நான் உங்க வெவரத்தை டைப் பண்ணித் தரேன். அத எடுத்துக்கிட்டு போய் கையெழுத்து வாங்கிடலாம். ப்ரிண்டர் வேல செய்யலன்னா, இந்த மாதிரி பண்ணிக் குடுக்கலாம் தப்பில்லல" என்று நம்பிக்கை ஊட்டினார்.

'Customer Service'ன் எல்லைக்கே இட்டுச் சென்றார் அந்தப் பெண்மணி. அவர் அந்த சப்-ரெஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் இருந்து கொண்டு, மொய்ப் பணம் இல்லாமல், இப்படி உதவியது தான் வியப்பிலும் வியப்பு.

நானும், சடுதியில் அவரின் ஐடியாப் படி, white-ink அடித்து, xerox செய்து,அவரிடம் கொண்டு வந்து கொடுக்க, அவரும் ஒரு 30 நிமிடம் மெனக்கட்டு, என் விவரங்களை தட்டச்சிக் கொடுத்தார்.

முடிந்ததும், அதை ரெஜிஸ்ட்ராரிடம் கொடுத்து, கையெழுத்துக் கேட்டேன் "என்ன சார், இப்படி எல்லாம் கொடுக்கக் கூடாது சார். Laserல தான் அடிக்கணும். ப்ரிண்டர் சரியானதும் வாங்க. ரெடி பண்ணிடலாம் வாங்க, என்றார்".

ஜிவ்வ்வ்வ்னு ஏறிச்சு எனக்கு. அடக்கிக் கொண்டு, "அதெல்லாம் பரவால்ல சார். இந்த அளவுக்கு இருந்தா போதும், நான் மெனேஜ் பண்ணிக்கறேன், கையெழுத்துப் போடுங்க" என்றேன்.

வேண்டா வெறுப்பாக, கையெழுத்துப் போட, "லஞ்சப் பணம் கொடுக்காமல்" வேலை முடிந்த சந்தோஷத்தில், எஸ்கேப் ஆனேன்.

லஞ்சப் பெருச்சாளிகள் நிறைந்திருக்கும் இடத்திலும், சில பேர் இன்னும் நேர்மையாகத் தான் இருக்கிறார்கள். ஊர் இன்னும், டோட்டல்-டேமேஜ் ஆகாததுக்கு இந்த மாதிரி நல்லவர்கள் தான் காரணம்.

அதிகப் படியா நேரம் இருந்து, இந்த மாதிரி இன்னொரு காரியம் நடக்கணும்னா, அடுத்த முறை, கண்டிப்பா விஜிலென்ஸு துணையை நாடுவேண்டும் என்று தீர்மானமாக முடிவு செய்திருக்கிறேன். நம்மால் முடிந்த எரிச்சலை நாமும் அவர்களுக்குத் தருவோம்.

எல்லாரும் சேந்து குட்டோ குட்டுனு குட்டுவோம். என்னிக்காவது திருந்துவானுங்க கெரகம் புடிச்சவனுங்க!

உதவிய, அந்த 'வயதான அம்மணிக்கு' என் மனமார்ந்த நன்றிகள்.
திருந்தாத பெருச்சாளிகள், திருந்த, என் கடவுளர்கள் உதவட்டும்.

லஞ்சம் வாங்கும் ஒவ்வொரு கையும், ஏதாவது ஒரு நாள் விளங்காமல் போகட்டும்!
லஞ்சம் கொடுக்கும் ஒவ்வொரு கையும், ஏதாவது ஒரு நாள் நன்றாக வலிக்கட்டும் (ஹி ஹி) :)

விஷயம் தெரிஞ்சவங்க யாராச்சும் (விக்கிபசங்க? மக்கள் சட்டம்??), விஜிலென்ஸு பத்தியும், அங்கு புகார் கொடுக்கும் முறை பற்றியும் விலாவரியா எழுதினா ரொம்ப உபயோகமா இருக்கும். செய்வீங்களா?

நன்றி!

பி.கு: நச்சுனு ஒரு கதைஸ் படிச்சீங்களா படிச்சீங்களா? 19 பேர், இதுவரை கோதாவில். அப்ப நீங்க?

:)

4 comments:

SurveySan said...

Thanks for the 'anony' for emailing Vigilance details. I will try to translate and post some day soon.

Anonymous said...

லஞ்சம் வாங்கும் ஒவ்வொரு கையும், ஏதாவது ஒரு நாள் விளங்காமல் போகட்டும்!
லஞ்சம் கொடுக்கும் ஒவ்வொரு கையும், ஏதாவது ஒரு நாள் நன்றாக வலிக்கட்டும்

repeatu

Anonymous said...

福~
「朵
語‧,最一件事,就。好,你西.......................................................................................................................................................................................................................................................................................................

SurveySan said...

அடுத்த தலைவலி ஆரம்பம்... விவரங்கள் விரைவில் :)