recent posts...

Sunday, December 30, 2007

Benazir Bhuto ~ ஒரு புகைப்படக்காரரின் பார்வையில்

Benazir Bhutto தனக்குப் பிறகு தனது கணவரை PPPன்(Pakistan Peoples Party) அதிபராக நியமிக்க வேண்டும் என்று (உயிலில்) விருப்பம் தெரிவித்திருந்தாராம்.
அவரது கணவர், தனக்கு பதவி வேண்டாம் என்று சொல்லி 19 வயது மகனை அந்தப் பதவியில் நியமித்துவிட்டாராம்.

பெனாஸிரை கொன்றது அல்-கொய்தா இல்லை என்று கூறப்பட்டு வருகிறது.

வெறிகளிலேயே தலையாய வெறி இந்த பதவி வெறிதான் போல இருக்கு.

அடேங்க்கப்பா, எவ்ளோ கொலைகள், எவ்ளோ இழப்புக்கள். தாங்க முடியலடா சாமி.

ஒரு பக்கம், பெனாசிரின் துணிச்சல் பாராட்டப்பட வேண்டியது.
இவ்ளோ மிரட்டல்கள் இருந்தும், தைரியமா வந்திருக்காங்களே.

இன்னைக்கு இணையத்தில் கண்ட ஒரு slide-show உங்கள் பார்வைக்கு. John Moore என்ற புகைப்படக்காரர் பெனாஸிரின் கடைசி நாள் புகைப்படங்களை வெளியிட்டு, கமென்ட்டரியும் சொல்றாரு.

Slide-Showல் நாலாவது படம் என்னை வெகுவாக கவர்ந்தது.

பெனாஸிரைக் கண்டதும் பாக்கிஸ்தானிய பெண் ஒருவரின் முகத்தில் தெரியும் உண்மையான மகிழ்ச்சி அழகாக படம் பிடிக்கப் பட்டிருந்தது. எவ்ளோ நம்பிக்கையா இருந்திருக்காங்க அந்தப் பெண்மணி. ஐயோ பாவம்.

தெகிரியமானவங்க மட்டும் படத்த பாருங்க.
சில படங்களில் இரத்தம் இருக்கு.

Click here to view a slide show and hear commentary of John Moore from Getty Images

பெனாஸிரின் ஆத்மா சாந்தி அடைய அல்லாஹ் அருள் புரியட்டும்.
அந்த பிரதேசத்தில் அமைதி வரவும் அருள் புரியட்டும்.
கேடு நினைப்பவர்கள் கெடட்டும்!

:(