recent posts...

Saturday, December 08, 2007

சுவாரஸ்யமான ஒரு பதிவு - இங்க் பேனா

சில பேரெல்லாம் எழுதரத பாத்தா ஒரு ஏக்கப் பெருமூச்சுதான் வரும்.
இன்னாமா எழுதராங்க.

இதெல்லாம் அதா வரதுதான் போல?

இங்க பாருங்க தேசிகன்னு ஒருத்தரு, 'இங்க் பேனா' பத்தி விலாவாரியா எழுதியிருக்காரு.

சும்மா நச்னு இருக்கு.

இங்க் பேனா பத்தி எழுதணும்னெல்லாம் எப்படிங்க தோணுது?
அருமை அருமை!

பழைய ஞாபகம் எல்லாம் ஜிவ்வ்வுனு தட்டி விட்டுட்டாரு.

படிச்சு பாருங்க!

;)

பி.கு:
'நச்'னு ஒரு கதை போட்டிக் கதைகள் படிச்சீங்களா? போட்டியில் கலந்துக்காதவங்க உடனே சேருங்க. 'நச்'னு ஒரு கதை எழுதி பதியுங்க. பரிசுப் பணமெல்லாம் உண்டு. கலக்குங்க!

11 comments:

Anonymous said...

//இங்க பாருங்க தேசிகன்னு ஒருத்தரு//

தேசிகன்னு ஒருத்தரா? இவ்வளவு நாளா நீங்க அவர படிச்சது இல்லையா?

சிறந்த வலைபதிவாளர்கள்ன்னு சர்வே எல்லாம் நீங்க போட்டிருந்ததினால தேசிகன் போன்ற நெடுநாளைய பிரபல வலைபதிவர்கள்ல்ல எப்படி தவறவிட்டீர்கள் என்று ஆச்சர்யமாக இரூக்கிறது.

வெற்றி said...

சர்வேசர்,
சுட்டிக்கு மிக்க நன்றி. இப்படி தாம் படித்ததைப் பரிந்துரை செய்வதன் மூலம் தவறவிட்ட நல்ல பதிவுகளை வாசிக்க உதவியாக இருக்கும்.

தொடர்ந்தும், நல்ல பதிவுகளை இப்படி வெளிச்சம் போட்டுக் காட்டுங்கள்.

/* சில பேரெல்லாம் எழுதரத பாத்தா ஏக்கப் பெருமூச்சுதான் வரும்.
இன்னாமா எழுதராங்க. */

உண்மைதான். உங்களின் பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருபவன் எனும் வகையில், ஆட்சேபனை இல்லையெனின், குறை நினைக்க மாட்டீர்கள் எனும் நம்பிக்கையில் உங்களுக்கு என் அன்புக் கோரிக்கை ஒன்று[feedback].

நீங்கள் பதிவுகள் எழுதும் போது தமிங்கிலிஸ் கலக்காமல் எழுத முயற்சிக்கலாமே! உங்கள் பதிவுகளில் நீங்கள் அளவுக்கு அதிகமாக தமிங்கிலிஷ் சொற்களைப் புழங்குகிறீர்கள் என நினைக்கிறேன்.

ஒன்றில் முழுமையாக ஒரு சொல்லை ஆங்கிலத்தில் எழுதுங்கள். அல்லது தமிழில் எழுதுங்கள். இரண்டும் கெட்ட நிலையாக தமிங்கிலிசில் எழுதாமல் விட்டால் நன்றாக இருக்கும். உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படிப்பவன்/வாசகன் எனும் வகையில் என் feedback.தயவு செய்து தப்பாக எடுக்காதீர்கள்.

SurveySan said...

அனானி,

நான் இப்பதாங்க அவர் பதிவுகள பாக்கறேன். சூப்பரா எழுதியிருக்காரு.

2006 பட்டியல்ல யாரும் தேசிகன் பெயரை சிபாரிசு செய்யவில்லை. அவர் தமிழ்மணத்திலும் இல்லைன்னு நெனைக்கறேன்.
அதனால தான் என் கண்ணுல படல. :)

லூஸ்ல விடுங்க, இனி கரீட்டா கவனிக்கறேன் ;)

SurveySan said...

வெற்றி, வாங்க வாங்க.

//நீங்கள் பதிவுகள் எழுதும் போது தமிங்கிலிஸ் கலக்காமல் எழுத முயற்சிக்கலாமே! உங்கள் பதிவுகளில் நீங்கள் அளவுக்கு அதிகமாக தமிங்கிலிஷ் சொற்களைப் புழங்குகிறீர்கள் என நினைக்கிறேன்.

ஒன்றில் முழுமையாக ஒரு சொல்லை ஆங்கிலத்தில் எழுதுங்கள். அல்லது தமிழில் எழுதுங்கள். இரண்டும் கெட்ட நிலையாக தமிங்கிலிசில் எழுதாமல் விட்டால் நன்றாக இருக்கும். உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படிப்பவன்/வாசகன் எனும் வகையில் என் feedback.தயவு செய்து தப்பாக எடுக்காதீர்கள்.//

மிகவும் சரியா சொல்லியிருக்கீங்க. என் தவறு எனக்கும் தெரியுது.
இத ஒரு 'ஸ்டைலா' நெனச்சு பண்றது இல்ல. அதா வரது.
இரண்டிலும் புலமை கம்மி, அதனால கூட இருக்கலாம்.

ஆனாலும், நீங்க சொல்ற மாதிரி, கலவை இல்லாமல் எழுத முயல்கிறேன்.

feedbackகுக்கு மிகவும் நன்றி :)

Sanjai Gandhi said...

ஆஹா... இன்னொருத்தர் பதிவுக்கு போங்கனு சொல்லியே ஒரு பதிவா? ம்ம்ம்.. கலக்கறிங்க அங்கிள். :P
ஆனாலும் நல்ல வேல தான் பண்ணி இருக்கிங்க.. நானும் படிச்சேன் அந்த பதிவ.. அருமையான பதிவு :)))

SurveySan said...

பொடியரே,

அங்கிள் எல்லாம் சொல்லப்ப்டாது.
அண்ணா சொல்லு அண்ணா சொல்லு.

அவ்வ்வ்வ்வ்! :)

Sanjai Gandhi said...

//SurveySan said...

பொடியரே,

அங்கிள் எல்லாம் சொல்லப்ப்டாது.
அண்ணா சொல்லு அண்ணா சொல்லு.

அவ்வ்வ்வ்வ்! :)//

சரிங்க அங்கிள் :P

SurveySan said...

பொடியரே,

கிர்ர்ர்ர்ர்ர். ரொம்பவே சோதிக்கறீங்க ;)

Anonymous said...

தேசிகனோட பதிவுல உள்ள நல்ல இடுகைக்கு விளம்பரம் கொடுக்கனும்னா நீங்க ஒவ்வொரு இடுகைக்கும் விளம்பரம் கொடுக்கனும்னா...

அவரோட 'ராமானுஜலு', சீனி கம், எல்லாம் படிச்சதில்லையா ?

நகைச்சுவையாகவும்,தெளிவாகவும் எழுதக்கூடிய அவரது பதிவு வெகுஜனத்தரத்துடன் இருக்கும்...

அதுக்குனு தனி வாசகர் வட்டம் இருக்கு ஓய் :)))

SurveySan said...

செ.ரவி, ஆளையே காணும்.
இதுவும், 'ப்ராக்ஸி' வேல மாதிரி தெரியுது? வை, அதர், ஆப்ஷன்?

தேசிகன், பத்து வருஷமா எழுதராருன்னு இப்ப தெரியும். ஏன் தமிழ்மணத்துல சேரலன்னு தெரியல.

//அவரோட 'ராமானுஜலு', சீனி கம், எல்லாம் படிச்சதில்லையா ? //

இல்ல, இனி படிக்கணும்.

ஏதோ, என்னால ஒரு ரெண்டு ரசிகர்கள் எக்ஸ்ட்ரா கடச்சா நல்லதுதானே ;)

Anonymous said...

福~
「朵
語‧,最一件事,就。好,你西.......................................................................................................................................................................................................................................................................................................