recent posts...

Sunday, December 30, 2007

சிறந்த 'நச்' கதை - Finalists + தகவல்கள்

வணக்கம் நண்பர்களே.

57 'நச்' கதாசிரியர்கள் பங்கு பெற்ற 'நச்னு ஒரு கதைப் போட்டி'யின் முதல் கட்ட வாக்கெடுப்பு நடந்து முடிந்துள்ளது.

மூன்று கட்டமாக நடந்த வாக்கெடுப்பில், அதிக வாக்குகள் பெற்ற டாப்-2 'நச்' கதைகள் இவைதாம்.
கூரு 1:
மொத்த வாக்குகள்: 143, செல்லாதவை 28 (unapproved)
9. அரசியல்வாதி (21) (16.94%)
12. தப்பா நினைக்க மாட்டயே? (23) (18.55%)

கூரு 2:
மொத்த வாக்குகள்: 107, செல்லாதவை 14 (unapproved)
29. ஜன்னல் வெச்ச ஜாக்கெட்காரி (15) (15.96%)
23. சங்கு சுட்டாலும் வெண்மை தரும்!! (14) (14.89%)
28. என்னால் அவள் இரண்டு மாதம் (14) (14.89%)

கூரு 3:
மொத்த வாக்குகள்: 99, செல்லாதவை 21 (unapproved)
44. சென்னைக் காதலும், திருச்சிக் காதலும் (18) (23.08%)
47. எதுனா வேல இருந்தா குடு சார் (18) (23.08%)

(மேலே உள்ள முடிவுகள் 10.15pm PSTக்கு எடுக்கப் பட்டது. நீங்கள் உரலை சொடுக்கினால், வாக்குகளின் எண்ணிக்கை சற்று வித்யாசப் பட்டு இருக்கலாம். some unapproved votes may still be coming, but the above is the official result.)

57 கதாசிரியர்களுக்கும், முதல் சுற்றில் வாக்களித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!

இனி இறுதிக் கட்ட வாக்கெடுப்ப பத்தி பாக்கலாமா?

வாக்கெடுப்பில் ஈ.மெயில் கொண்டு approve செய்யும், புதிய முயற்சி கொண்டுவந்ததால், சில பேர் வாக்களிக்காமலே இருந்திருப்பார்கள் என்று பரவலாக ஒரு கருத்து இருந்தது.
ஆனால், மேலே உள்ள எண்ணிக்கை, திருப்திகரமாகத் தான் இருக்கிறது.
நிறைய பேர் வாக்களித்து, ஈ.மெயில் படித்து, அப்ரூவ் செய்யாமல் விட்டு விட்டிருக்கலாம். அது ஓரளவுக்கு எதிர்பார்த்ததுதான்.

கடந்த வருடம் 'சிறந்த பதிவர்' வாக்கெடுப்பின் போது, முதல் சுற்றில் 300+ வாக்குகள் வந்தன. இறுதிச் சுற்றில் 120+ வாக்குகள் வந்திருந்தது.
அதை வைத்து பார்க்கும் போது, முதல் சுற்று நல்ல விதமாக முடிந்ததாகத் தான் தெரிகிறது.

இந்தப் போட்டி ஆரம்பித்ததே இரண்டு காரணங்களுக்காகத்தான்.
1) நம் பதிவர்களை ஊக்குவித்து, நல்ல சூழலை உருவாக்கத்தான். அறிவிப்பு வந்ததில் இருந்து 100 'நச்' கதைகளாவது அரங்கேறியிருக்கும். இதுவே நம் அனைவருக்கும் கிடைத்த வெற்றி :)
2) ஒரு தொண்டு நிறுவனத்துக்கு நம்மாலான ஒரு சிறு உதவி. வருடக் கடைசியில் இப்படி ஒன்று செய்துவிட்டால், வருடம் முழுதும் போட்ட மொக்கைக்கு ப்ராயச்சித்தம் செய்வதாய் கணக்கில் வரும் என்று நம்பிக்கை :)

57 கதைகளில் 7 கதைகளை இறுதிச் சுற்றுக்கு எடுத்துச் செல்ல இருந்த வேளையில் ஒரு சிறு யோசனை.
எல்லாரும், மிக்க ஆர்வமுடன் கலந்து கொண்ட போட்டி இது.
50 கதைகளை, அப்படியே விட்டு விட மனசு கேக்கல.

இறுதிச் சுற்றுக்கு, வெறும் வாக்கெடுப்பு மட்டும் இல்லாமல் (கொலைவெறிப்படைஸ், நோட் த பாயிண்ட்), நடுவர் குழுவின் கருத்தையும் சேர்த்துக் கொள்ளலாமேன்னு சிலர் ஐடியா கொடுத்தாங்க.

நல்ல ஐடியாதான்னு, நானும் நம் சக பதிவர்கள்/நண்பர்களை கருத்துக் கேட்டேன்.
அவங்களும் உடனே ஓ.கே சொல்லிட்டாங்க.

அப்பரம் என்ன? இறுதிக் கட்ட வாக்கெடுப்புக்கு ரெடி ஆகிட்டோம், almost :)

1) இறுதிக் கட்ட வாக்கெடுப்பும், ஈ.மெயில் approval அடிப்படையில் இயங்கும்.
2) மேலே உள்ள டாப்-7 இறுதிக் கட்ட வாக்கெடுப்பில் இருக்கும்
3) நடுவர்கள் ஐந்து பேர், முதல் கட்டத்தில் விடுபட்டுப் போன 50 கதைகளில், ஏதாவது ஒன்றை இறுதிச் சுற்றுக்கு எடுத்துக் கொள்ளலாம்னு ஆளுக்கொரு wild-card (நன்றி: விஜய் டி.வி ஜோடி#1) கதையை ரெக்கமண்ட் பண்ணுவாங்க.
4) ஒரு கதையை ஒன்றுக்கு மேற்பட்ட நடுவர் ரெக்கமண்ட் பண்ணினால், அந்தக் கதை ஆட்டோமேட்டிக்கா, இறுதிச் சுற்றுக்கு, டாப்-7னுடன் சேர்த்துக் கொள்ளப்படும்.
5) மேலே உள்ள #4 ரூல் படி ஒன்றும் தேறவில்லை என்றால், ஐந்து கதைகளில், அதிக வாக்குகள் பெற்ற முதல் மூன்று கதைகளை ஆட்டையில் சேர்த்து டாப்-10 லிஸ்ட் உருவாக்கப் படும்.
6) இறுதிச் சுற்றின் வாக்கெடுப்பு, ஜனவர் 2 2008 11.00 AM IST (கிட்டத்தட்ட) ஆரம்பிக்கப்படும்.
7) நடுவர்கள், வாக்கெடுப்பில் இடம் பெறும் எல்லா கதைகளுக்கும் மதிப்பெண்கள் போட்டு எனக்கு அனுப்புவார்கள்
8) நடுவர்கள் மதிப்பெண்ணின் averageம், வாக்கெடுப்பு %ம், 50:50 கலந்து, ஜனவரி 4 9.00 AM IST (கிட்டத்தட்ட) அன்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

நடுவர்கள் யார் என்பது, முடிவுகள் அறிவிக்கப்படும் அன்று தெரிவிக்கப்படும்.

ஓ.கே வா?

உங்கள் அனைவருக்கும், மீண்டும் மீண்டும் நன்றி!

இதுவரை அளித்த ஒத்துழைப்புக்கும், இனி வரப்போகும் ஒத்துழைப்புக்கும் மனமார்ந்த நன்றிகள்!

57 கதாசிரியர்களும், மற்ற கதைகளுக்கு, நச்னு ஒரு விமர்சனம் எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன். (atleast, உங்களை விட அதிக வாக்குகள் வாங்கிய கதைக்காவது எழுதுவீங்கன்னு நம்பறேன் ;) )

21 comments:

குசும்பன் said...

என்னது என் கதை அடுத்த ரவுண்டுக்கா? அவ்வ்வ்
நிஜமாதான் சொல்றியா (நன்றி கற்றது தமிழ்)

SurveySan said...

குசும்பன்,

நானும் திரும்ப திரும்ப வெரல் விட்டு கூட்டிக் கழிச்சு பாத்தேன். நெஜமாவே உங்க கதை அடுத்த ரவுண்டுக்கு வந்துடுச்சு.

just kidding :)

வாழ்த்துக்கள் :)

இராம்/Raam said...

சர்வேஸ்,

இந்த வாக்கெடுப்பில் எனக்கு நம்பிக்கையில்லை... :))


பின்னே என்னோட கதை அடுத்த ரவுண்ட்'க்கு வரலயே... :)

SurveySan said...

Raam,
//பின்னே என்னோட கதை அடுத்த ரவுண்ட்'க்கு வரலயே... :)//

எனக்கும் ரொம்ப வருத்தமா போயிடுச்சு உங்க கதை finals போகலியேன்னு.
ரெண்டு வேளையா சரியா சாப்பாடு கூட எறங்கல :)

வாழ்த்துக்கள் எனிவே!

wild-cardல ஏதாவது நடக்குதான்னு பாக்கலாம்.

Anonymous said...

Mr.Surveysan,
this looks like a plot to push the "fav" stories in the ring.

what is the problem in announcing the judges..?

SurveySan said...

Mr. anonymous,

//Mr.Surveysan,
this looks like a plot to push the "fav" stories in the ring.//

:) whose plot?

//what is the problem in announcing the judges..?//

I will be announcing their names when I announce the result.
I like to keep the suspense just for fun.
believe me, noone will plot anything. I am only trying to bring each one of us closer and closer through all this ;)

வினையூக்கி said...

அடுத்த சுற்றுக்கு முன்னேறிய கதாசிரியர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்

செல்வம் said...

அடுத்த சுற்றிற்கு சென்ற அத்தனை பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

என்ன எங்களுக்கெல்லாம் மார்க் போடப்போறீங்களா???

விடு ஜூட் :-)))))

Anonymous said...

I feel that some of the deserving/quality stories are in the list of final 7. Its a good idea to have the judges recommend 'wild-card' stories.

வீ. எம் said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்

வீ எம்

SurveySan said...

வினையூக்கி, நன்றீஸ். புத்தாண்டு வாழ்த்துக்கள் சார். :)

செல்வம், எல்லா கதைக்கும் மார்க் போடமாட்டாங்க. அதனால தப்பிச்சீங்க ;) புத்தாண்டு வாழ்த்துக்கள் :)

padma, I felt the same. lets see what the judges feel :)

வீ.எம், தங்களுக்கும் அதே அதே! :))

SurveySan said...

53 pending :)

சதங்கா (Sathanga) said...

Surveys

//50 கதைகளை, அப்படியே விட்டு விட மனசு கேக்கல. //

inga thaan neenga nikareenga. great.

but, i would suggest the judges goes by story line and not based on the authors publicity :)

அரை பிளேடு said...

அடுத்த சுற்றில் எனது கதை !!!!
அனைவருக்கும் நன்றி. நன்றி. நன்றி.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

SurveySan said...

சதங்கா, 1/2 ப்ளேடு, நன்றீஸ்.

1/2பிளேடு, வாழ்த்துக்கள்.


51 pending. :)

Radha Sriram said...

எல்லா finalists க்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்......!

ஜெகதீசன் said...

நன்றி!!
//
5) மேலே உள்ள #4 ரூல் படி ஒன்றும் தேறவில்லை என்றால், ஐந்து கதைகளில், அதிக வாக்குகள் பெற்ற முதல் மூன்று கதைகளை ஆட்டையில் சேர்த்து டாப்-10 லிஸ்ட் உருவாக்கப் படும்.
//
இது எப்படி சரியாக இருக்கும்?
கூரு 1 வில் இருக்கும் கதைகளைவிட கூரு 3 யில் இருக்கும் கதைகளுக்கு வாக்களிக்க, 2நாள் குறைவாக இருந்தது...

Unknown said...

Wishes for all the authors who have participated...

all the best for the stories moved to the final round...

Thanks for all the readers who have voted for their fav stories...

wishes and thanks for surveysan :)

and finally New year wishes to everyone!!!

( sorry for english :( )

ஜெகதீசன் said...

நன்றி!!!!

புத்தாண்டு வாழ்த்துக்கள்
:))

SurveySan said...

47 pending ;)

Anonymous said...

福~
「朵
語‧,最一件事,就。好,你西.......................................................................................................................................................................................................................................................................................................