வேளா வேளைக்கு சாப்பிட சோறு, காலையிலிருந்து மாலைவரை ஒக்காந்துட்டுவர ஒரு ஆபீஸு, அங்க கொஞ்சமா ஆணி, பிக்கல் பிடுங்கலில்லாத குடும்பம், பாசமான நட்பு வட்டம், ஆரோக்கியமான தேகம், மொத்தத்தில் மண்ட கொடச்சலில்லா வாழ்க்கை.
இன்ஷாஹ் அல்லா, இந்த மாதிரி வாழ்க்கை இருந்துட்டா மத்த விஷயங்களுக்கு கொஞ்சம் அதிகமாவே நேரம் கெடைக்குது.
நெட்ல பொழுத கழிக்கவும், போட்டோக்கள் பிடித்துத் தள்ளவும், ஊர் சுத்தவும் அதிகப்படியா நேரம் கிடைக்கும்.
இதன் கூடவே, இன்னொரு விஷயம், சுத்தியிருக்கும் சமுதாயத்தை பத்தி யோசிக்க முடியுது.
அதில் இருக்கும் பல ப்ரச்சனைகளைப் பத்தியும் யோசிக்க முடியுது.
(டேய், அடங்கு, இன்னான்ற இப்ப?)
யோசிக்கரது மட்டும்தான் முடியுது. சமூக அவலங்களைத் திருத்த ஒண்ணும் பண்ண முடியரதில்ல.
அப்பப்ப, ஏற்படும், ஷமூக-ஷேவா அரிப்பை, சொறிஞ்சுவிட்டுக்க ஏதாவது சின்ன சின்னதா செய்ய முயற்சிப்போம். மிக்காரும், இவை, ஒரு சின்ன டொனேஷன் குடுக்கரதோட முடிஞ்சுடும்.
மத்தபடி, ஊரில் இருக்கும், civic problems, அஃதாவது, ரோடு சரியில்ல, தண்ணிப் பிரச்சனை இந்த மாதிரி மேட்டருக்கெல்லாம், விடுமுறைகளில் ஊருக்கு போகும்போது, வெறும் பொலம்பலுக்கு மேல வேற ஒண்னும் பண்ணறதில்ல.
வயசும் ஆயிட்டே போவுது. ஏதாவது உருப்படியா செய்யலாமேன்னு ஒரு நாள் யோசிச்சப் போ, நம்ம ஊரில் இருக்கும், civic problems ஐ வெளிச்சம் போட்டு காட்ட ஒரு இணைய தளம் ஆரம்பிக்கலாமேன்னு தோணிச்சு.
Deccan Chronicle பேப்பர்ல வர மாதிரி "Who is ruining my City?" பக்கம், ஏற்படுத்தும் சின்ன தாக்கத்தையாவது ஏற்படுத்தலாமேனு யோசனை வந்துது.
உங்க கிட்டயும் இந்த மாதிரி தளத்துக்கு என்ன பேர் வெக்கலாம்னு யோசனை கேட்டிருந்தேன். FixMyIndia.Org பேரு நல்லா இருந்ததால, அத உடனே வாங்கியும் போட்டாச்சு.
அப்பரம் என்ன? வழக்கம் போல, சோம்பேறித்தனத்தின் உச்சத்தில், உல்லாசமாய் பொழுத கழிச்சுட்டு, தினம் ஒரு சிக்கனை முழுங்கிட்டு, விடுமுறையெல்லாம் சுபமா முடிச்சுட்டு, fixmyindia.org கெடப்புல போட்டுட்டேன்.
ஒரு ப்ரயோஜனமான தளமா மாத்தணுங்கறதால, நெறையவே வேலை இருக்கு.
'Design' (மனசுக்குள்ளயே) முடிச்சாசு. இனி வேலைய தொடங்கணும்.
இந்த மேட்டர் பத்தி யோசிக்கும்போது தருமி சார் ஒரு விஷயம் சொன்னாரு.
நம்ம அரசாங்கமே, இந்த மாதிரி ப்ரச்சனைகளை மக்கள் பதிய, ஒரு தளம் வச்சிருக்காம்.
இன்னிக்கும் இதப் பத்தி ஒரு பதிவு போட்டிருக்காரு பாருங்க.
அவர் எழுப்பிய ஒரு ப்ரச்சனைக்கு பதில் வந்திருக்காம். கேட்க்கவே ரொம்ப சந்தோஷமா இருந்தது.
ஆனா, இதை உபயோகிப்பவர் எண்ணிக்கை ரொம்ப கொறவா இருக்காம்?
நம்ம அரசாங்கம் இந்த மாதிரி ஒரு விஷயத்தைப் பண்ணி பொதுவில் வைத்ததே பெரிய விஷயம். அதுவும், அதில் பதியும் கேள்விகளுக்கு, பதிலை வேறு தருகிறார்களாம்.
நம்மளால முடிந்தவரை இதை உபயோகித்து, மிக மிக அத்யாவசிய தேவைகளை எடுத்துச் சொல்லலாம்ல?
தயவு செய்து, தாமதிக்காமல், இந்த தளத்தை பயன்படுத்தி, உங்க சுத்து வட்டாரத்துல இருக்கர ப்ரச்சனைகளை அந்த இணையதளத்தில் ஏற்றுங்கள் நண்பர்களே!
(தயவு செய்து, உண்மையான ப்ரச்சனைகளை மற்றும் அதில் ஏற்றுங்கள்.
சும்மா, வெளையாட்டுக்கு, எதையாவது எழுதிப் போட்டு, அந்த தளத்தின் வளர்ச்சியை குறைத்து விடாதீர்கள்)
சரி, இப்ப இந்த பதிவின் தலைப்புக்கு வாரேன்.
FixMyIndia.Org முகவரியை, நம் அரசாங்கத்தின் தளத்திர்க்கு திருப்பி விட்டுள்ளேன். நம்மால முடிஞ்சது இப்போதைக்கு இதுதேன்.
(இப்படி பண்ணலாமா, என்னென்னா ப்ரச்சனைகள் வரும்னெல்லாம் இன்னும் விசாரிக்கல. தெரிஞ்சவங்க சொல்லுங்க)
ரோடு சரியில்லையா? தெருவிளக்கு ப்ரச்சனையா? அரசாங்க இயந்திரம் சரிவர இயங்கவில்லையா? மறக்காம FixMyIndia.Org போய், ஒரு புகாரை பதியுங்கள்.
FixMyIndia.Org now, points to http://darpg-grievance.nic.in
உங்க பதிவில் வலது மூலையில், அனைவர் கண்ணில் படும்படி, இந்த தளத்திர்க்கு ஒரு லிங்க் போடுங்க. நன்றி!
இதுதான் நம்ம லோகோ. எப்படி இருக்கு? பெட்டரா ஐடியா இருக்கரவங்க, வரையத் தெரிஞ்சவங்க, வரஞ்சு அனுப்புங்களேன் ;)
நன்றி! நன்றி! நன்றி!
16 comments:
நல்ல கிராபிக்ஸ் பண்ண தெரிஞ்சவங்க, ஒரு நல்ல லோகாவா வரஞ்சு கொடுங்க.
நல்லாயிருந்தா, அதையே தளத்தின், லோகோவா வச்சுப்பேன்.
நன்னி!
கருத்த சொல்லுங்கப்பா.
1. ஆஹா நல்லா இருக்கு
2. ஓ.கே. சுமாரான ஐடியா.
3. வேற வேல இல்லியா?
4. கருத்தில்லை என்பதே கருத்து.
இப்படி ஏதாவது சொல்லிட்டுப் போங்கப்பு.
SurveySan,
நல்லது! நன்றி!
ம்ம்...லோகா
2. ஓ.கே. சுமாரான ஐடியா. :(
தென்றல்,
நன்றி! நீங்களாவது வந்தீங்களே ;)
49 பேர் நச் கதைப் போட்டியில், இதுவரை.
பல கதை எழுதிய 'நச்'மன்னர்கள், போட்டிக்கான கதையை 23க்குள் சொல்லிடுங்க. :)
how to type in tamil?
anony, look for e-kalappai.
or unicode converters.
Great Idea. Please do not use the our Flag in your logo. Honestly putting a band-aid on top, does not tell the message.
muthusudha, Thanks for your comment.
//Honestly putting a band-aid on top, does not tell the message.//
what else will?
:)
'நச்' போட்டியில் 50 participants தொட்டாச்சு :)
பேட்ஜ் ஏதாவது ரெடி பண்ணிட்டு சொல்லிங்க அண்ணாச்சி!! :-)
CVR
Badge? you mean logo for fixmyIndia?
for now, it is the band-aided-flag :)
I mean a badge that can be added as widget in my blog!!
Click panna relevant site-ku poraa maari
gotcha,
I use this for now
http://bp2.blogger.com/_ZEDdS10HD4g/Rqg-PG0UriI/AAAAAAAAANY/CGdKpfRmzyU/s320/india.jpg
(see top right on my page :) )
முத்துசுதா சொன்னது போல் தான் எனக்கும் தோனியது.கொடியின் மேல் பிளாஸ்திரி அவ்வளவாக எடுபடவில்லை.
இந்த முயற்சி நல்லது தான்,செய்துதான் பார்ப்போம் என்ற நிலையில் தான் இருக்கிறது இப்போதைக்கு.இதை மாவட்ட நிலைக்கு கொண்டுவந்து யாராவது பார்த்து நிஜமான உதவி கிடைத்தால் சந்தோஷம் தான்.
希望大家都會非常非常幸福~
「朵朵小語‧優美的眷戀在這個世界上,最重要的一件事,就是好好愛自己。好好愛自己,你的眼睛才能看見天空的美麗,耳朵才能聽見山水的清音。好好愛自己,你才能體會所有美好的東西,所有的文字與音符才能像清泉一樣注入你的心靈。好好愛自己,你才有愛人的能力,也才有讓別人愛上你的魅力。而愛自己的第一步,就是切斷讓自己覺得黏膩的過去,以無沾無滯的輕快心情,大步走向前去。愛自己的第二步,則是隨時保持孩子般的好奇,願意接受未知的指引;也隨時可以拋卻不再需要的行囊,一路雲淡風輕。親愛的,你是天地之間獨一無二的旅人,在陽光與月光的交替之中瀟灑獨行.......................................................................................................................................................................................................................................................................................................
Post a Comment