'நச்' கதைகளுக்கு விமர்சனங்கள் எழுத சொல்லி எல்லாரையும் கேட்டிருந்தேன்.
பதிவர் Srikanth டகால்னு குதிச்சு, குட்டி குட்டியா விமர்சனம் எழுத ஆரம்பிச்சிட்டாரு. அவருக்கு சர்வே கமிட்டியின் மனமார்ந்த நன்றீஸ்!
விமர்சனங்கள் இதுவரை: - by Srikanth
0 ========= 0 ========== 0 ========= 0
சன் டீவியில் கால்மேல் கால் போட்டு படங்களை கண்ணாடி டம்ப்லருக்குள் கல் போட்டு குலுக்கின குரலில் விமர்சிக்கிறாரே அவரையே குருவாக நினைத்து வணங்கி விமர்சன வேலையை செய்கிறேன்...
வினையூக்கி: ஜெனியும் நானும் லேப்டாப்பில் பார்த்த பேய்ப்படம்
கதை ஒரு evil dead மாதிரி ஒரு கல்ட் கதை முயற்சித்து இருக்கிறார் என்று நினைக்கிறேன். கதை சுவாரசியமாக ஆரம்பித்து சட்டென்று முடிந்து விட்டது.... சுவாரஸ்யம் கெடாமல் இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம்... பரவாயில்லை... பேய்ப்படம் - பப்படம்.
TBCD: பழக்க வழக்கம் !
சிறுகதையில் ஒரு ஹைக்கூ போல :) நாலு வரி ஜோக்குக்கும் சிறுகதைக்கும் நடுவில் இருக்கிறது... நன்று.. பழக்க வழக்கம் - துணுக்கு தோரணம்.
நிலா ரசிகன் - ஒரு நடிகையின் கதை
கதை ஆர்வத்தை தூண்டி சப்பென்று முடிந்து விட்டது... நடிகையின் கதை என்றது கொஞ்சம் 'கவர்ச்சி' இருக்கும் என்று பார்த்தால் அவர் - இவர் என்று யாரோ பெரிசை சொல்வது போல் கதைஎங்கும் வருகிறது... பரவாயில்லை... - ஒரு நடிகையின் கதை - அடுத்த கதைக்கு விதை
மோகந்தாஸ் - கடவுள் என்னிடம் கரைச்சல் செய்த பொழுதொன்றில்
நிஜமாகவே நடந்தது போல் எழுதி இருக்கிறார். கதையின் முடிவும் யூகிக்க முடியாமல் நச் என்று இருந்தது. அருமை - க எ க செ பொ - ந பொ! (நல்ல பொழுதுபோக்கு)
கார்த்திக் பிரபு - அப்போ நீ தூங்கியிருப்ப !!!
கொஞ்சம் பெரிய கதை - இதை நச் சிறுகதை என்று சொல்லலாமா தெரியவில்லை... இருந்தாலும் பிரயாண அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில் நன்றாக அனுபவித்து எழுதி இருக்கிறார்... பரவாயில்லை - அப்போ நீ தூங்கியிருப்ப - அசதி
கோவி கண்ணன் - நச்சின்னு ஒரு கதை - அப்பா(வி) !
நச் என்று கதை வேண்டும் என்று சொன்னதற்காக எழுதப்பட்ட parody கதை என்று நினைக்கிறேன். பரவாயில்லை - அப்பா(வி) - அப்பப்பா(வி) :)
பாசமலர் - ஆசைக்கு ஏது வெட்கம்?
வித்தியாசமான கதை - முன்பெல்லாம் ரேடியோவில் விவிதபாரதியில் நாடகம் கேட்போம் - பதினைந்து நிமிட நாடகம் - ஏனோ அதுதான் நினைவுக்கு வந்தது.. பரவாயில்லை - ஆசைக்கு எது வெட்கம் - யாருக்கும் வெட்கமில்லை
செல்வன் - பூனைக்கு மணி கட்டியவள்
புதிய சிந்தனை - ஓரின சேர்க்கையை வித்தியாசமான கோணத்தில் அணுகியிருக்கிறார் - கதை கொஞ்சம் யோசிக்க வைக்கிறது - அருமை - பூனைக்கு மணி கட்டியவள் - ஆராய்ச்சி மணி
ஜெகதீசன் - தப்பா நினைக்க மாட்டயே?
கதை வழக்கமான கதை - வழக்கமான பாணி - ஆனால் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. பரவாயில்லை - தப்பாக நினைக்க மாட்டாயே - தயக்கம்
ramachandranusha(உஷா) - நானே நானா?
பெரிதாக எதிர்பார்த்து கனவாக முடிந்தது கதை - ஆனாலும் நச் கொஞ்சம் குறைவு தான் சொல்லிய விதம் நன்றாக இருந்தது - பரவாயில்லை - நானே நானா - ஏனோ தானோ
மற்ற கதைகளின் விமர்சனங்கள் Srikanth பக்கத்தில் பார்க்க இங்கே க்ளிக்கவும்.
நன்றி..
0 ========= 0 ========== 0 ========= 0
டிசம்பர் 23, கடைசி நாள்.
52 பேர் இதுவரை போட்டியில் உள்ளனர். கதைகளைப் படியுங்கள். ஊக்குவியுங்கள்.
கதை அனுப்பாதவங்க அனுப்புங்க. ஒண்ணுக்கு மேற்பட்ட கதை எழுதினவங்க, போட்டிக்கான கதையை சொல்லிடுங்க.
நன்றி!
;)
13 comments:
//
ஜெகதீசன் - தப்பா நினைக்க மாட்டயே?
கதை வழக்கமான கதை - வழக்கமான பாணி - ஆனால் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. பரவாயில்லை - தப்பாக நினைக்க மாட்டாயே - தயக்கம்
//
"படிக்க சுவாரஸ்யமாக இருந்தது"-- இது போதும் எனக்கு...:))
நன்றி!!!!!
yaarange, Srikanthukku sooda oru bournvita kodunga.
Srikanth, meedhi vimarsanamum thatti padhivaaa podunga. :)
சர்வேசன் சார்... இதோ என் கதை..
ஆட்டத்துல சேர்த்துடுங்க....
நன்றி
வீ எம்
கதை பெயர் : அரசியல்வாதி
http://arataiarangam.blogspot.com/2007/12/blog-post.html
வீ.எம்,சேத்தாச்சு?
யாரங்கே? 'சிங்கம்' முரளி கண்ணன் மட்டும் இன்னும் கதையனுப்பல.
கோவியார் போட்டிக் கதை எதுன்னு சொல்லல.
மத்தவங்கயெல்லாம் ஒரு தடவ கதை ரைட்டா இருக்கான்னு சரி பார்த்திடுங்க.
நன்றி!
சர்வேசன்,
போட்டிக்கான கதையாக
'நண்பனின் தங்கை... ' என்ற சிறுகதையை அளிக்க விரும்புகிறேன்
நினைவு படுத்தியதற்கு நன்றி !
Dear Survey-sun sir, my story link doesn't seem to be working. The URL got cut off. To avoid this, I have created a tinyurl - please update this URL:
http://tinyurl.com/2fhghq
கோவி, கதைய போட்டியில் ஏத்தியாச்சு :) நன்றி!
Srikanth, உரல் சரி பண்ணியாச்சு. மிச்ச விமர்ச்னம் சீக்கிரம் போடுங்களேன் ;)
Done sir. Yedho unga ukkuvippula ezhutharen :)
See:
http://manoranjitam.wordpress.com/
I have written review for about 25 stories. Rest will be updated there.
நன்றி Srikanth! :)
59 பேர் ஆட்டையில் இதுவரை.
இன்னும் 50 நிமிடங்கள் இருக்கு மணி அடிக்க.
அனுப்பாதவங்க அனுப்புங்க.
அந்த 'சிங்கம்' முரளி கண்ணன் யாருங்க? சிங்கத்த காணும்? :)
வணக்கம்
என் கதையையும் சேர்க்கலாமா?
http://mathu-naan.blogspot.com/2007/12/blog-post.html
மதுலா,
உங்க கதை நல்லாவே இருந்தது.
ஆனா, போட்டி வாக்கெடுப்பு ஆரம்பிச்சிட்டதால, உங்க கதைய ஆட்டையில் சேக்க முடியாது. மன்னிக்கவும். :(
希望大家都會非常非常幸福~
「朵朵小語‧優美的眷戀在這個世界上,最重要的一件事,就是好好愛自己。好好愛自己,你的眼睛才能看見天空的美麗,耳朵才能聽見山水的清音。好好愛自己,你才能體會所有美好的東西,所有的文字與音符才能像清泉一樣注入你的心靈。好好愛自己,你才有愛人的能力,也才有讓別人愛上你的魅力。而愛自己的第一步,就是切斷讓自己覺得黏膩的過去,以無沾無滯的輕快心情,大步走向前去。愛自己的第二步,則是隨時保持孩子般的好奇,願意接受未知的指引;也隨時可以拋卻不再需要的行囊,一路雲淡風輕。親愛的,你是天地之間獨一無二的旅人,在陽光與月光的交替之中瀟灑獨行.......................................................................................................................................................................................................................................................................................................
Post a Comment