பதிவ படிக்காதவங்க படிச்சுட்டு வாங்க.
அவர் பதிவில், ரொம்ப நியாயமான கேள்விகள் கேட்டிருக்காரு.
அதாவது, "ஒரு வேளை உணவுக்கே வழியில்லாமல், பல கோடி குடும்பங்கள் தினந்தோறும் அவதிப்படும் நம்மூரில், இப்படி கோடிகளைக் கொட்டி, தங்கத்தில் கோயில் கட்டுவது மிக அவசியமா?"ன்னு கேட்டிருக்காரு.
இப்படிச் செலவு செய்யும் கோடிகளை வேறு மாதிரி செலவு செய்து, ஏழைகளுக்கு உதவலாமே என்பது நியாயமான கேள்வி.
யோசிச்சுப் பாத்தீங்கன்னா, நம் ஒவ்வொருவரும் கூட, நம் அன்றாட, மிக அவசியமான, தேவைக்கு மட்டும் செலவு செய்து கொண்டு, மீதம் உள்ள சம்பாத்யத்தை, பொதுவுக்கு செலவு செய்தால், ஊரே சுபிட்சமாதான் இருக்கும்.
ஆனா செய்வோமா? நம்ம வருங்காலத்துக்கு சேத்து வைக்கணும், பேரன் பேத்திக்கு சேத்து வைக்கணும், அவசர ஆத்தரத்துக்கு சேத்து வைக்கணும்ணு, ஒவ்வொருவருக்கும், ஈயாமல் இருக்க, ஒவ்வொரு காரணங்கள் இருக்கும்.
தப்புன்னு சொல்ல வரல. இதுதான் வாழ்க்கை. வேற வழியில்ல இப்படிதான் இருக்க முடியும்.
'Survival of the fittest' - இதுதான இயற்கை நியதி?
நலிந்தவர்களைக் காப்பாத்தத்தான், ஒரு சமூக ஏற்பாடா, அரசாங்கத்த உருவாக்கி வச்சிருக்கோம்.
ஏழைகள் கஷ்டப் படுவதும், கீழ் மட்டத்தில் அவதிப்படுபவர்களின் நிலை சகிக்க முடியா அளவில் கீழே கீழே போய் கொண்டிருப்பது, ரொம்ப ரொம்ப ரொம்ப வேதனையான விஷயம்.
ஆனா, அவங்க நிலை சரியாக, ஊரில் தனியாரால் செய்யப்படும், மற்ற செலவுகளை கொறச்சா போதுமா? அதெப்படி, கஷ்டப் படறவங்களுக்கு நன்மை செய்யும்?
சிங்கப்பூர்ல பாத்தீங்கன்னா, பொருளாதாரம், சோர்வடையும்போது, புதுசா ரெண்டு ரயில் நிலையம் கட்டுவாங்க, பல புதிய கட்டிடங்கள கட்டுவாங்க, புதுசா ரோடு போடுவாங்க. இப்படி ஏதாவது, ஒரு புதிய வேலைய உருவாக்கி, பொருளாதார வளர்ச்சிக்கு புத்தியிர் குடுப்பாங்க. (தெரிஞ்சவங்க, விளக்கமா சொல்லுங்கய்யா)
அதே போல், நம்மூரில், பணத்தை முடக்கி வைக்காமல், எதையாவது, கட்டிக்கொண்டே இருத்தல் நலம்னுதான் எனக்குத் தோணுது.
சாமி இருக்கோ இல்லியோ, கணக்கில் வராத கருப்பு பணமெல்லாம், கோயிலா மாறி சில ஆயிரம் பேருக்கு, வேலை வாய்ப்பும், கோயிலை சுற்றியுள்ள சில ஆயிரம் பேருக்கு வாழ்வாதாரமாவும் இருந்தா நல்லதுதானே?
திருப்பதி மலைக்கு மேல அந்த கோயில் இல்லாம இருந்திருந்தா அந்த ஊரில் இவ்ளோ வளர்ச்சி வந்திருக்குமா?
எனக்கு தெரிஞ்சு வேலூர் இன்னும் கொஞ்ச வருஷத்துல, தமிழக வரை படத்தில் முக்கிய ஊராகப் போகுது, இந்த பொற்கோயிலினால்.
நீங்க என்ன நெனைக்கறீங்க.
பின்னூட்ட கருத்தும், விளக்கமா சொல்லுங்க.
அப்பதான், மத்தவங்களும், விவாதிக்க வசதியா இருக்கும்.
நன்றி!
பி.கு1: 'நச்'னு ஒரு கதைப் போட்டியில், 32 பேர் ஆட்டையில் இதுவரை. நீங்களும் கதை எழுதலாமே? முயற்சி பண்ணுங்க (நல்ல வேள, $25னு ஒரு உயர்-எல்லைய சொல்லியிருந்தேன், இல்லன்னா :) ) கதைகள் படிக்கவும், கலந்துக்கவும், இங்க
பி.கு2: ஒன்றுக்கு மேற்பட்ட கதையை இதுவரை எழுதியுள்ளவர்கள், எந்தக் கதை போட்டிக் கதை என்பதை, போட்டி கடைசி நாளான, டிசம்பர் 23க்குள் சொல்லிவிடவும். ஒரு பின்னூட்டமாக சொல்லலாம் அல்லது, கதைக்கு 'சர்வேசன் நச் போட்டிக் கதை'ன்னு 'tag' வச்சிடுங்க.
22 comments:
WHEN YOU ADD A SURVEY DO NOT POST YOUR VIEWS ON THE TOPIC.
YOU ARE DIRECTING YOUR READERS OPINION TO WHAT YOU THINK IS RIGHT.
THIS IS MY HUMBLE OPINION
அனானி,
(எங்கேயோ கேட்ட குரல் மாதிரி இருக்கே? :) )
உங்க கருத்து ஏற்புடையதே.
இனி, முடிந்தவரை, என் கருத்தை, தனிப் பதிவில் சொல்லப் பார்க்கிறேன். ;)
கருத்துக்கு நன்னி!
தேவையில்லா பணவிரையம்னு சொல்றவங்க, விளக்கம் சொல்லிட்டுப்போங்க.
உங்க நெனப்ப சொன்னாதான, உங்க பக்க நியாயங்கள் புரியும் ?
இதுவும் ஒரு விதத்தில் மக்களின் ஏற்றதாழ்வுகளை ஏற்ப்படுத்தவே முனையும் ஒரு செயல். இதனால் ஒரு சிலர் அதிகம் ஏற்றம் பெருவர் குறிப்பாக மேல்தட்டுமக்கள். ஒரு கட்டுமானம் என்றால் அதனால் நமக்கு ஏதாவது பயன் இருக்கவேண்டும் இதனால் இந்த பயன் இருக்கிறது மக்களை முட்டாலாக்குவதுமட்டும்தான். அனைத்து பணமும் தங்கமும் வெள்ளியுமாக மாறி இருகிறது இந்த வேலைகளை செய்ப்வர்கள் ஒன்று அடுத்தட்டு மக்கள் அல்ல தங்கத்தில் வாங்கும்போதும் விற்க்கும்போதும் சேதாரம் கழிவுஎன்றுகூறி மக்களை சேதாரக்கழிவாக்கிய ஜீவல்லரி வேலை செய்யும் பணக்காரர்களையே மேலும் பணக்காரார் ஆக்கி இருக்கிறது. இடி மழை பெய்யும்போது கூட ஒரு ஏழை அந்த இடத்தில் ஒதுங்கமுடியாது நாழி ஆயிட்டுது நடை சாத்தனும் என்று கூறுவார்கள். சர்வேசன் அவர்கள் வேண்டுமானால் வேலூர் சென்று அந்த கோயில் கட்டுமான பனியில் யார் யாருக்கு எவ்வளவு பனம் கொடுக்கப்பட்டது என்று சர்வே செய்து பார்க்கலாம் உங்களக்கு உண்மை விளங்கும். நானும் வேலூருக்கு அருகில் இருப்பவன் தான் அடிக்கடி வேலூர்செல்லும் போது நன்பர்களிடம் அந்த கோவிலை பற்றியும் விவாதித்ததுண்டு.
THANK YOU SURVEYSAN
தல, இதுக்கும் சர்வே போட்டாச்சா? கலக்குங்க
இப்போதான் நண்பனோட இத பத்தி ஒரு அரை மணி நேரம் விவாதம் செஞ்சிட்டு வந்தேன்.
இது என்னோட எண்ணம் மட்டுமே. பாப்போம் மக்கள் என்ன சொல்றாங்கன்னு???
ஆனா இப்போ அடிப்படை தேவையே பூர்த்தியாகாம பல மக்கள் இருக்கும்போது, புதுப்புது கோவில்களும், இத்தனை தங்கப் பூச்சுகளும் தேவைதானா?
என்று நண்பர் சண்முகக்கனி கேட்டிருக்கிறார் ,
கண்டிப்பாக இந்த பொற்கோவிலினால் வேலுர் ஒரு சிறந்த சுற்றுலாத் தளமாக விரைவில் மாறிவிடும் அப்படி ஆகும் பட்சத்தில் இந்த கோவிலைச் சுற்றியிருக்கும் எத்தனையோ மக்களுக்கு நிரந்தர வருமானத்துக்கு வழி வகக்கக் கூடியதாக இருக்கும்.
மேலும்,
சரி, அவ்வளவு பக்தி இருக்குதுன்னா பாழடைந்த நிலையில் எத்தனையோ பழைய கோவில்கள் இருக்கு. அதையெல்லாம் புதுப்பிக்கலாமே.
என்றும் கேட்டிறுக்கிறார், என்னுடைய தாழ்மையான கருத்து என்னவெனில், ராஜராஜ சோழன் என்றவுடன் நமக்கு நினைவு வருவது சரித்திரப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில்,அன்று கட்டிவைத்த அந்தக் கோவில் அவர் பெயரையும் நினைவுப் படுத்திக் கொண்டிருக்கிறது,அதே சமயத்தில் இன்றைக்கும் பலருக்கு வாழ்வாதாரமாகவும் இருக்கிறது,ஆனால் பாரி பெரிய கொடை வள்ளல்,தன்னிடம் உள்ள செல்வங்களையெல்லாம் ஏழைகளுக்கு வாரி வழங்கியவர்,அவர் வழங்கிய கொடை அவர் காலத்தோடு முடிந்து விட்டது,இந்த பொற்கோவிலும் கண்டிப்பாகக் காலத்தை விஞ்சி நிறைய பேருக்கு வாழ்வாதாரமாகவும், இதை கட்டியவரின் பெயரை நாளைய சரித்திரத்தில் இடம் பிடிக்கவும் செய்யும்.இன்றய நிகழ்வு நாளைய சரித்திரம்.
how many 'undiyals' inside the temple? the canadian marble temple has one beautiful handcrafted undiyal every 10 feet.(in case you forget.)
invest once and then keep collecting more money for ever.
If thers a temple IPO, I will buy it.
--aathirai
புரட்சி தமிழன்,
புதிய கட்டுமானப் பணி துவங்கும்போது, அதனால் விளையும் நன்மை பலருக்கும் உண்டு.
பணம் படைத்தவனுக்கு, அதிகம் உண்டு என்பது உண்மையே.
ஆனால், ஏழைக்கும் ஓரளவுக்கு அதனால் நன்மை உண்டு.
பணத்தை பூட்டி வைப்பதைக் காட்டிலும், இந்த மாதிரி ஏதாவது ஒன்று செய்வது நல்லதுதானே?
நாடோடி இலக்கியன்,
//இன்றய நிகழ்வு நாளைய சரித்திரம்.//
நச்!
ப்ரேம்குமார்
//இப்போதான் நண்பனோட இத பத்தி ஒரு அரை மணி நேரம் விவாதம் செஞ்சிட்டு வந்தேன். //
விவாத மேட்டர பகிருங்கள்!
anony,
//invest once and then keep collecting more money for ever.
If thers a temple IPO, I will buy it.
--aathirai//
actually its,
invest once and keep collecting and try to help others and help yourself ;)
யாருங்க அது ராஜ ராஜ சோழன் கட்டினான் அவன் பேரு காலத்துக்கும் நிக்குதுனு அதோடு இதை ஒப்பிடுவது, ராஜ ராஜ சோழன் சந்ததி யாராவது கோவில் வருமானத்தை அனுபவிக்கிறாங்களா?
ஆனால் இக்கோவிலைக்கட்டி அதில் வரும் வருமானத்தை யாரோ ஒருவர் தானே அனுபவிக்க போறார்.
இக்கோவிலை கட்டியவர் ஒன்றும் உத்தோமத்தமர் அல்ல, ஒரு காலத்தில் ரவுடித்தனம் செய்தவர், கொலை வழக்கெல்லாம் இவர் மீது உண்டு, ஹவால வேலைகள் செய்பவர் என்று இவர் மீது புகார் உண்டு. திடீர் என ஆன்மீக அவதாரம் எடுத்து விட்டார்.
இது குறித்து ரொம்ப நாட்களுக்கு முன்னரே முதலில் பதிவிட்டது சிவபாலன் தான், அப்போதே சில தகவல்களை சொல்லி இருக்கேன்.
திருப்பதி மூலம் அவ்வூர் வளர்கிறது, ஆனாலும் அக்கோவில் மீது அரசுக்கு கட்டுப்பாடு உள்ளது. இந்த கோவில் முழுக்க முழுக்க தனியார் வசம் உள்ளது.அரசின் கட்டுப்பாட்டுக்கு இதை ஒப்படைக்க சொல்லுங்கள் பார்ப்போம்!
இந்த கோவில் என்பது முழுக்க முழுக்க தனியாரின் வியாபார கேந்திரம் ஆக தான் வாய்ப்புள்ளது.பக்தியை விலைப்பேசும் எத்தர்களின் கூடாரம் ஆகி விடும்!
வவ்வால்,
ஆதார பூர்வமா தெரிஞ்சா, இந்த கோயிலுக்கு bad publicity கொடுப்பதில் தப்பில்லை.
தனியார்தா இருந்தாலும், ஒரு MGM Kishintha மாதிரி இருந்துட்டுப் போகட்டும்.
;)
சர்வேசன் நெசமாத்தான் சொல்றீங்களா ?? எப்படி இதை ஒரு பொழுது போக்கு பூங்காவுக்கு ஒப்பிட முடியுது ?! அது மக்களை சந்தோஷப்படுத்தும் .. ஆனால் இது ??? மக்களின் நம்பிக்கையை வைத்து சம்பாதிக்கும் ஒரு பிழைப்பு இல்லையா ..
இந்த கோயிலின் நிர்வாகத்துக்கு எவ்வளவு வருமானம் வரும் ? அதோடு , அதைச்சுற்றியுள்ள கடைகள் , ஹோட்டல் , பிச்சைக்காரர்கள் என எவ்வளவு வருமானம் வரும் .. அதைப்போய் ஒப்பிட்டு .. அதற்காகவாவது வரட்டும் என்பது போல இருக்கு ...
யாத்ரீகன், இத கட்டினவங்க நோக்கம் முழுசா யாரூகும் தெரியாத பட்சத்தில், நெகடிவ்வா ஒண்ணும் சொல்ல முடியாது.
குஜராத்தீஸ் பல ஊர்களில், ப்ரமாண்டமா கோயில் கட்டி வச்சிருப்பாங்க. அதே மாதிரி, டெல்லியிலும், லோட்டஸ் டெம்பிள் மாதிரி கலையம்சம் பொறுந்திய கோயில்கள் இருக்கும்.
அந்த வரிசையில இத பாக்கறேன்.
'ஓரளவுக்கு' கடவுள் நம்பிக்கை உள்ள எனக்கே, கோயில்கள் நிம்மதியையும் மன அமைதியையும் கொடுக்கும்போது, உண்மையில், சக்தி இருக்குன்னு நெனைக்கறவங்களுக்கு இந்த மாதிரி கலைஅம்சம் உள்ள கோயில்கள் நல்லதுதானே?
கண்டிப்பா இத கட்டினவன், லாபம் பார்க்க வாய்ப்பிருக்கு. ஆனா, நான் சொன்ன மாதிரி, அவனைத் தவிர மற்றவர்களுக்கும் பண லாபம் உண்டு.
சிலருக்கு, பண லாபம்,
பலருக்கும், மன லாபம்.
புது முயற்சிகளை வரவேற்க்கணும்.
தவறு நடக்காமல் இருக்க அரசை வலியுறுத்தணும் என்பதே என் கருத்து. சம்பளம் கொடுத்து, போலீஸ், கோர்ட்டெல்லாம் அப்பரம் எதுக்கு வச்சிருக்கணும்? ;)
:)
bala, thanks for your comment.
but, i couldnt post it because you named names with a qualifier ;)
N.Suresh, thanks for sending Antonys details as I requested here
http://nsureshchennai.blogspot.com/2007/12/blog-post_16.html
இந்த ஆளுக்கு எப்படி இவ்வளவு பணம் வந்ததுன்னு யாருக்காவது தெரியுமா? இந்த சாமியாரோட பூர்வீகம் தெரியுமா?
சிலரோட பினாமி இந்த "அம்மா நாராயணி" பேர்ல இருக்கிற ஆசாமி.
ஏன் இன்னும் இன்காம்டாக்ஸ் ரெய்ட் பண்ணாமல் இருக்கிறாங்கன்னா அவ்வளவு பவர்புல் பினாமி.
முடிந்தால் கொஞ்சம் விசாரித்துப்பாருங்கள்.........உங்களுக்கே புரியும்.
கனடாவில வந்து அம்மான்னு கூத்தடிச்சு கொஞ்சநாள் ஒரே அட்டகாசம். பிறகு கனடாவிற்க்கு விசா கொடுக்க மறுத்ததாக ஒரு தகவல்.
பிரேமானந்தாவைவிட பல வழிகளில் மோசமான,ஆபத்தான பேர்வழி.
what about building mosques and churches in grand scale? is that too "scams" ????
yaravathu sollungappa
வவ்வால் அவர்களே,
நான் ராஜராஜ சோழனையும்,வேலுர் பொற்கோவிலைக் கட்டியவரையும் ஒப்புமைப் படுத்தவில்லை,கலைநயமிக்க கோவில்களில் தஞ்சையும் ஒன்று ,அதனைக் காண நாள்தோறும் எத்தனையோ சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்,அதை வைத்து நிறையப் பேர் சிறுகடைகள் வைத்து பிழைக்கிறார்கள் அதே போல் ,இந்த பொற்கோவிலையும் காண சுற்றுலாப் பயணிகள் வரும் பட்சத்தில் அந்த பகுதி வளர்ச்சியடைய வாய்ப்பாக இருக்கும் என்பதைத்தான் சொல்ல வந்தேன்,ஒரு ஏழையின் பசிப்போக்க ஒரு மீனைத் தருவதைவிட ,ஒரு தூண்டிலைத் தரலாம் என்று சொல்வார்களே அந்த மாதிரி அர்த்தத்தில்தான் சொன்னேன்.
மற்றபடி இந்த கோவிலை வியாபார நோக்கோடு கட்டியிருந்தால் ,இதைவிட தரக்குறைவான செயல் இருக்கமுடியாது என்பதனையும் ஒத்துக்கொள்கிறேன்.இதைக் கட்டியவரின் வாழ்க்கைப் பிண்ணனியை நண்பர்களின் பின்னூட்டத்தில் பார்க்கும் பொழுது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.
முக்குக்கு முக்கு, சந்திற்கு சந்து சமாதியோ, சிலையோ வைக்கும் போது யாருக்கும் இந்த அறிவு வருவதில்லை. கோடிக்கணக்கில் செலவிட்டு 2 நாட்களுக்கு மாநாடு என்கிற பெயரில் கூத்தடித்து, பிரியாணி குவாட்டரில் மிதக்கும் போது அடித்தட்டு மக்களைப் பற்றி நினைவு வருவதில்லை.
ஹிந்து கோவில் என்றவுடனே வீரப்படைக்கு பிச்சைக்காரர்களுக்கு ஏன் குடுக்கவில்லை என்ற கேள்வி வந்துவிடும். கேட்கும் ஜந்துக்கள் தவறாமல் கோவிலுக்கு போய் வழிபாடு நடத்துபவர்கள் தான். ஆனால் பொதுவில் அதை தைரியமாகக் கூற அவர்களுக்கு வெட்கம். தன்னை தாமாகவே அடையாளம் காட்டிக் கொள்ள வெட்கப் படுமளவிற்கு செய்து, ஒரு பொய்யான வாழ்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இன்றைய தமிழர்கள். ஜாதி பார்தே தன்னையும் தன்னை சூழ்ந்துள்ளவர்களையும் ஒழித்து, சம்பந்தமேயில்லாத ஒரு அரசியல் கழிசடையை தெய்வமாக்கித் தொழுவதுதான் இன்றைய தமிழனின் வாழ்க்கைமுறை.
கோவில்களை மட்டுமே அரசு எடுத்து நடத்துகிறது. மற்ற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களெல்லாம் என்ன ஓசியிலா நடக்கிறது? அங்கெல்லாம் காணிக்கை கிடையாது? கிடைக்கும் பணமெல்லாம் எங்கோ போகிறது எனக் கேட்கும் துணிவு இங்கு யாருக்காவது உண்டா?
கோவில்கள் பெருகவேண்டும். இந்தியா இழந்த பெருமைகளை மீட்க வேண்டும். இந்தியனாகப் பிறந்த ஒவ்வொருவரும், தன்னை தானாகவே பிரகடனப்படுத்தி பெருமை கொள்ளும் நிலை வரவேண்டும்.
Post a Comment