வாங்க வாங்க வாங்க!
நில்லுங்க. சௌக்யமா?
முக்கியமான ரெண்டு விஷயம் சொல்லப் போறேன் (ரெண்டாவது அதி முக்கியம்). காது கொடுத்து கேளுங்க.
மொத மேட்டரு. தலைப்பின் முதல் வார்த்தையப் பத்தி ~ அதாவது, பாட்ஷா காரு பத்தி :)
பாட்ஷா பெருசா, சிவாஜி பெருசான்னு வச்ச சர்வேல, பாட்ஷா காரு பிச்சு ஒதரிட்டாரு.
நீங்களே கீழ பாருங்க. வாக்காதவங்க, வலது பக்கத்துல இருக்கர பொட்டியில வாக்குங்க.
ஷங்கருக்கு இந்த சர்வே ரிஜல்ட்ட அனுப்பலாம்னு இருக்கேன் :)
ஷங்கரின் முகவரி தெரிஞ்சவங்க பின்னூட்டுங்க. நன்னி :)
ரெண்டாவது, ரொம்ப முக்கியமான மேட்டரு.
நேத்துதான் 'என்ன பாவம் செய்தனை ~ Feelings பா'ன்னு ஒரு பதிவ ரொம்ப பீலிங்க்ஸோட போட்டேன். படிக்காதவங்க படிச்சுடுங்க.
என்னடா நம்ம ஊரு இப்படி இருக்கே, இப்படியே பூடுமான்னு ஒரே கவல.
சும்மா பொலம்பி ஒண்ணும் ஆகப் போரதில்லன்னு ஒருத்தர் பின்னூட்டினாரு.
இன்னொருத்தர், பொலம்பி, 'அரிப்பை' சொரிஞ்சு விட்டுக்கலாம், ஆனா, திரும்ப அவனவன் அவனவன் வேலையப் பாக்கப் போயிருவான்னு பின்னூட்டினாரு.
இன்னொரு அனானி, ஒரு நல்ல ஐடியாவ சொன்னாரு. பொலம்பரதோட நிக்காம, இணையம் தந்த வசதியில் ஏதாவது பண்ணலாமேன்னு.
வளத்துவிட்ட சமூகத்துக்கு என்ன பண்ண முடியும்? வரிஞ்சு கட்டிகிட்டு களத்துல எறங்கி பொரட்சி எல்லாம் என்னால பண்ண முடியாது. வருஷத்துக் ஒரு தரம் உண்டியல்லயும், சில dot orgக்கும் கொடுக்கர காசுல ஒண்ணுமே ஆகப் போரதுல்ல.
அதனால, ஒரு முடிவு பண்ணிட்டேன்.
கூடிய விரைவில் ஒரு இணைய தளம் தொடங்கலாம்னு முடிவு. நம்ம அறிவ ஒழுங்கா யூஸ் பண்ணி, சுலபமா செய்யக் கூடியது இது ஒண்ணு தான்.
இணைய தளத்தில், நம் ஊரில் இருக்கும் ப்ரச்சனைகளை (civic problems) மாநிலம், நகரம், ஊராட்சி, பேரூராட்சி, MLA தொகுதி, MP தொகுதி, வட்டம் வாரியா அரங்கேற்றலாம்.
ஒவ்வொரு ப்ரச்சனைக்கும், ப்ரச்சனை சார்ந்த புகைப்படங்கள், வீடியோ போன்ற வகையராக்களை சேர்த்து, நல்ல அடித்தளம் நாட்டலாம்.
மாநில, நகர, தொகுதி, வட்டம் வாரியாக report தயாரித்து, எங்கு ப்ரச்சனைகள் அதிகமாக உள்ளது என்ற சார்ட் எல்லாம் கொடுத்து, ஒரு உபயோகமான தளமாக மாற்றலாம்.
இன்னும் படிப்படியா நறைய பண்ணலாம், ஆனா மொதல்ல ஆரம்பிக்கணும் :)
தனியாளா இதப் பண்ண முடியாது. PhaseI நான் பண்ணி முடிச்சப்பரம், உங்கள்ள சிலர உதவிக்கு அழைக்கிறேன். :)
இப்ப உங்க உதவி தேவை. தளத்துக்கு என்ன பெயர் வைப்பது?
.ORG ஆ இருக்கணும். பெயர் availableஆ இருக்கணும் :)
(availability இங்க பாத்தா தெரியும் http://smallbusiness.yahoo.com/domains/ )
பெயர் catchyயா இருக்கணும், நம் எண்ணத்தை ப்ரதிபலிக்கணும்.
நம்ம ஊரின் ப்ரதிப்லிப்பும் பெயரில் இருக்கணும் - (உ.ம் samachar.com)
janaganamana.org பாத்தேன் - ஆனா, already taken.
myindia.org பாத்தேன் - ஆனா, அதுவும் taken.
fixmyindia.org - எப்படி இருக்கு?
நல்ல பேரா யோசிச்சு சொல்லுங்க.
அப்படியே, சிம்பிளா ஒரு லோகோ வரஞ்சு அனுப்புங்க பாக்கலாம் (உ.ம் இந்திய வரை படத்து மேல, ஒரு band-aid ஒட்டர மாதிரி :) ).
இது எப்படி இருக்கு?
நம்மால முடிஞ்ச ஏதாவது ஒரு மாற்றம் செய்வோம்.
உதவிக்கு நன்றி!
ஐ ஆம் சீரியஸ் - இந்த தீவாளிக்கு ரிலீஸ் :)
பி.கு: உங்க பதிவுல இதப் பத்தி எழுதி, உங்க பெயர் suggestion அங்கயும் சொல்லலாம். எனக்கும் வெளம்பரம் கெடச்ச மாதிரி இருக்கும். நன்னி! :)
21 comments:
fixmyindia nalla irukku thala.
best wishes.
fixmyindia.org not available
saveindia.in ?
நக்கலா..பாட்ஷவா, சிவாஜியா இன்னு கேட்டுட்டு, பில்லான்னு சொன்னா எப்படி...
சர்வேசன்னா... முட்டா முருகேசனா..
:-))
கஸ்டப்பட்டு ,ஊரைவிட்டு வந்து வெளிநாட்டில் $ சம்பாரிக்கும்போது இந்தியாவின் Rs உயர்ந்தால் வருத்தமாத்தானே இருக்கும் என்று சொன்னீர்கள்? :-)))
No issues...just I am wondering how people change in a week ?
:-)))
***
களத்தில் இறங்கி செய்யாவிட்டாலும் நல்லது நடக்க வேண்டும் என்று நினைக்கவாவது ஒரு மனம் வேண்டும்.
உங்கள் முயற்சிகு வாழ்த்துகள்.
***
இந்த தளத்தைப் பர்க்கவும்.
http://www.civicsense.com
அதில் இடது பக்கம் இருக்கும்
Members Area -வில்
Complaint Monitor வழியாக பயணித்துப் பார்க்கவும்.
//நக்கலா..பாட்ஷவா, சிவாஜியா இன்னு கேட்டுட்டு, பில்லான்னு சொன்னா எப்படி... //
:) சாரி பார் த கன்ப்யூஷன். பில்லாவோ, பாட்ஷாவோ, என்ன போட்டாலும், உள்ள இழுத்துருதில்ல :)
அனானி,
//சர்வேசன்னா... முட்டா முருகேசனா.. //
ஏம்பா? நல்ல வேள மீட்டர் முருகேசனான்னு கேக்காம வுட்டியே :)
கல்வெட்டு,
//கஸ்டப்பட்டு ,ஊரைவிட்டு வந்து வெளிநாட்டில் $ சம்பாரிக்கும்போது இந்தியாவின் Rs உயர்ந்தால் வருத்தமாத்தானே இருக்கும் என்று சொன்னீர்கள்? :-)))
No issues...just I am wondering how people change in a week ?
//
அந்த எண்ணத்தில் இன்னும் மாற்றம் ஒண்ணும் இல்லை. அதான் சொன்னேனே, Rs உயர்ந்தா உயர்ந்துட்டுப் போகட்டும். ஆனா, 44 ரூபாய்க்கு கெடச்சுது, இன்னிக்கு போனா 39 ரூபாய்க்கே கெடைக்கணும் :)
உங்க வாழ்த்துக்கு நன்றி.
ஒரு வாரத்துல எந்த மாற்றமும் வரல. எப்பவுமே இருக்கும் அரிப்புதான். கொஞ்சம் நடவடிக்கையும் எடுக்கலாம்னு முயற்ச்சி :)
civicsense பாத்தேன் - அதிகமா யாரும் உபயோகிக்கலயோ? but, its a good start. I was thinking something in the same lines - will make it more catchy/flashy/pully :)
கல்வெட்டு, பேரு suggestions சொல்லலியே?
இது அன்னியன் மேட்டர் மாதிரி இருக்கு...அந்த பேரு எற்கனவே இருக்கு, அதனால "ஆனியன்" அப்படின்னு வைங்க....உள ஊளாயி.. சும்மா விளையாட்டுக்கு.. நல்ல பேரா, கதவுல காலை முட்டுக் கொடுத்து, விட்டத்த பார்த்து யொசிச்சு சொல்லுறோம்..
/*என்ன போட்டாலும், உள்ள இழுத்துருதில்ல /* இது என்ன அதிருதில்ல..க்கு போட்டியா
Hi Surveysan
For domain suggestions, try nameboy.com. I'm using it for a long time. It's really good.
Nalla muyarchi, vazthukaL.
I think I have decided the name :)
but I will wait for more suggestions :)
PETITIONINDIA is available except com . i think it is best to get attraction
nice suggestion.
FixMyIndia
or
PetitionIndia
both are equally striking ?
நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்
என்னால் முடிந்தவரை, இல்லை இல்லை முழுதும் உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருக்க விருப்பம்
worthindia, makkalpakkam, peoplesofindia, reformersofbaratham
Thanks Nachiyappa.
I will get in touch.
சர்வேசன்,
இது நல்ல முயற்சி. குறை சொல்வதாக நினைக்க வேண்டாம். இந்த இணைய தளங்கள் அனைத்தும் பெரிய மாற்றத்தை கொண்டு வந்த மாதிரி தெரியவில்லை. petitiononline போன்ற தளங்கள் துவக்கத்தில் நன்றாக இருந்த மாதிரி தெரிந்தாலும் சில நாட்கள் கழித்து அதுவும் just another website ஆக மாறி விட்டது. காரணம் அதை யாரும் மதிப்பதில்லை. மிஞ்சி போனா என்ன பண்ணுவாங்க காகிதத்தில் ஒரு நாலு பெட்டிசன் போடுவாங்க அவ்வுளவு தான் என்கிற மனப்பான்மை. மக்களின் மனோபாவம் மாறாத வரை இந்த முயற்சிகள் அனைத்தும் புல்லுக்கு இறைத்த நீர் மாதிரி தான். எனவே இது மாதிரியான முயற்சிகளை விட வசதியற்ற குழந்தைகளுக்கு படிப்பறிவு அளித்தல், அவர்களின் குறிக்கோள்களை அடைய உதவுதல் போன்றவற்றை செய்தால் இன்றைக்கோ அல்லது நாளைக்கோ இல்லாமல் சிறிது வருடங்களுக்கு பிறகு ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.அவர்களை நல்ல குடிமக்களாக வளர்க்க முயற்சி செய்தால் போதும் நாளைய இந்தியாவை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். அதனால் தான் அப்துல்கலாமின் முயற்சியான குழந்தைகளின் மீது அக்கரை மற்றும் அவர்களை செம்மைபடுத்தும் கருத்தில் நான் மிகவும் உடன்படுகிறேன். பெரியவர்களை இதற்கு மேல் திருத்த முடியாது. ஒட்டுப்பதிவை விடுமுறை நாளாக அனுபவிக்கும், பொது பிரச்சனை என்றால் காத தூரம் ஓடும், பிடித்த நடிகனின் பிறந்த நாளுக்கு காவடி எடுக்கும், அவனோட படத்தின் முதல் காட்சியை பார்க்க எதை விற்றாவது டிக்கெட் வாங்கும், கட் அவுடுக்கு பீர் அபிஷேகமும், நடிகைகளுக்கு எதிராக துடைப்பம் மற்றும் செருப்புடன் அலையும் கூட்டத்தை திருத்த முடியும் என்றா நினைக்கிறீர்கள்? Sorry, Im not trying to discourage you or your efforts, Its is very good initiative, but we got to think of the darker side before doing this.
சந்தோஷ்,
// இந்த இணைய தளங்கள் அனைத்தும் பெரிய மாற்றத்தை கொண்டு வந்த மாதிரி தெரியவில்லை//
உண்மைதான்.
வெகு சில இணைய தளங்கள், ஒரு சில மனிதர்களையாவது மாற்றும் வல்லமையுடன், மாற்றிக் கொண்டுதான் இருக்கிறது.
புகார் பெட்டி ஸ்டைலில் ஒரு இணையதளம் என்ன பெரிய மாற்றங்கள் செய்யும் என்று உண்மையில் தெரியவில்லை.
During my drive today, I started thinking about how this can make a difference. It really depends on the reach it will eventually have.
may be down the lane, we can aggregate the 'issues' and place an ad in popular news papers to evoke some actions.
lets see.
i havent started anything on this yet - i will do it slow.
If it fails, the only benefit is me keeping in touch with my tech. side :)
Post a Comment