recent posts...

Wednesday, July 04, 2007

பாட்ஷா vs சிவாஜி

60 கோடி போட்டு எடுத்த சிவாஜி படத்துல எனக்கு புடிச்சது பாடல்கள் எடுத்த விதம் மட்டுமே. பல்லேலக்கா விதிவிலக்கு, அந்த தொப்பை டான்ஸ் சகிக்கல.
நயன் தாரா, பாட்டு முழுக்க, ஒரே மாதிரி சிரிச்சுக்கிட்டே, குலுங்கிக் கொண்டே இருந்தாங்க. நல்லால்ல!

தோட்டாதரணி தான் படத்தோட ஹீரோ!

எல்லோரும் சொல்ர மாதிரி கே.வி ஆனந்தின் கேமரா எனக்கென்னமோ அவ்ளோ பெருசா தெரியல. சில இடங்களில் ஓவரா ஷேக்காகி தலைவலி தான் வந்தது எனக்கு.

ரஜினியை பார்ப்பது ஒரு சந்தோஷம் தான்.

குறிப்பா, அந்த மொட்ட ரஜினி, ஸ்டைலா கண்ணாடிய மண்டைக்கு பின்னாடி போடும் சீன், ரியலி சூப்பர்ப்! :)

250 கோடி போட்டு சீரியஸா கல்லூரி, ஆஸ்பித்திரி என்று ஒரு பக்கம் கட்டிக் கொண்டிருப்பவர், அடுத்தடுத்த சீன்களில், ஷ்ரெயா பின்னாடி பழகச் செல்லும் காட்சிகள், சிரிக்கும் படி இருந்தாலும், லாஜிக்க லாரில ஏத்தி நசுக்கும் விதம் இருந்தது.
ரஜினி படத்துல, லாஜிக்கெல்லாம் ஒரு மேட்டரே இல்லன்னாலும், லேசான நெருடல் இருந்தது படம் பாக்கும்போது.

சுமன், சுத்தமா ஒத்து வரல -- சத்யராஜ் அந்த ரோல்ல இருந்திருந்தா, படம் இன்னொரு பரிமாணத்தை எட்டியிருக்கும். :)

இரண்டாம் பாதி, நல்லா ஜாலியா விரு விருன்னு போச்சு. ஆனாலும், தூள் மாதிரி படத்தில், வில்லனை பழிவாங்கும் intelligence, இங்க காணும்.

மொத்தத்தில், ரஜினி என்ற மெகா மெகா ஸ்டாரை, ஷங்கர் என்ற மெகா மெகா டைரக்டர், சரியா பயன் படுத்திக்கலன்னே எனக்கு தோணுது.

இன்னும் அருமையா, ஊருக்கு உபயோகப் படும்படியும், சரித்திரத்தில் இடம் பிடிக்கும் படியும் ஒரு படமா எடுத்திருக்கலாம்.

பாட்ஷா பாக்கும்போது அதிர்ந்தது (குறிப்பா, 'எனக்கு இன்னோர் பேரும் இருக்கு' என்ற வசனம், அடேங்கப்பா, சிம்ப்ளி சூப்பர்ப்), சிவாஜி பாக்கும்போது, எனக்கு அதிரல!

பாட்ஷா படக் கதையை இந்த்த மாதிரி நல்லா செலவு பண்ணி எடுத்திருந்தா, நாயகன் மாதிரி, times top listல வந்திருக்கும். ஹ்ம். மிஸ் பண்ணிட்டாங்க :)

ஆயிரம் இருந்தாலும், ரஜினி ரஜினி தான். அந்த மேஜிக் இன்னும் இருக்கு!

சிவாஜி பாத்திட்டீங்களா? பாட்ஷா பாத்திருப்பீங்க. எதுங்க டாப்பு?


பி.கு1: HelpVinay.ORG மறக்காதீங்க ப்ளீஸ்.இன்னும் 4 நாள்தான் இருக்காம். :(

பி.கு2: கீழே உள்ள படம் Nikon D80யில் போன வாரம் எடுத்தது.
நல்ல படங்கள் எடுக்க டிப்ஸ் தேவையா? இங்க போய் அடிக்கடி பாருங்க.


இது பழையது. Canon S410 + Adobe


பி.கு3: சிவாஜி பாத்தாச்சு. ஆனா வழக்கமான $10 கொடுத்துதான் பாத்தேன். :)

நன்றி!

11 comments:

Anonymous said...

வழக்கமான $10 ஆ? $16 இல்லீங்களா? எங்கே பார்த்தீங்க? Park-லயா இல்ல camera 3 cinema-லயா?

-சுந்தர் ராம்ஸ்

SurveySan said...

Camera 3 தாங்க. $10 தான் இப்ப. போன வெள்ளிக்கிழமைதான் பாத்தேன். :)

SurveySan said...

அட, பாட்ஷா தான் டாப்புல போவுது இதுவரை :)

SurveySan said...

பாட்ஷால புடிச்சது என்ன, சிவாஜில புடிக்காதது என்ன,
சிவாஜில புடிச்சது என்ன,
பாட்ஷால புடிக்காதது என்ன

பின்னூடுங்க!

Anonymous said...

excellent pictures

Anonymous said...

BATSHA RULES. SIVAJI IS NOWHERE NEAR.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பாட்ஷா ரஜினி படம் ...சிவாஜி சங்கர் படம்.

SurveySan said...

ஆஹா! பாட்ஷா கலக்குறாருங்க!!

ஆனந்தக் கண்ணீர் வருது :)

SurveySan said...

Basha still rocks!

சதங்கா (Sathanga) said...

//மொத்தத்தில், ரஜினி என்ற மெகா மெகா ஸ்டாரை, ஷங்கர் என்ற மெகா மெகா டைரக்டர், சரியா பயன் படுத்திக்கலன்னே எனக்கு தோணுது. //

ரஜினி மெகா மெகா ஸ்டார் சரி. சங்கர் யாரு, எப்படி அவர மெகா மெகா டைரக்டர்னு சொல்றீங்க ? ப்ரமாண்டம் தான் மெகா-வா ?

SurveySan said...

sorry for the late reply Sathanga :)

Mega = Brammaandam :)