நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு மிருகம் ஒளிந்திருக்கும்.
வளர்ந்த முறை, படித்த படிப்பு, பழகிய நண்பர்கள் இவர்களைப் பொறுத்து, மிருகத்தின் % கூடக் கொறச்சு இருக்கும்.
ஒரு மனுஷன் எப்படி வேணா இருக்கலாம். சைகோ, நார்மல், அப்-நார்மல், ஜாலிப் பேர்வழி, ஜொள்ளர், திருடன், நல்லவன், ரொம்ப நல்லவன், புத்திசாலி, etc.. அடுத்தவனுக்கு தொல்லை தராத வகையில் இருக்கும்போது, எப்படி வேணா இருக்கலாம்.
ஆனா, பொது வாழ்க்கைன்னு வந்து, நாம் சொல்வதும், செய்வதும் மற்றவர்களின் வாழ்க்கையில் உரசும் போது, கொஞ்சம் யோசிச்சு தான் ஒவ்வொரு விஷயமும் சொல்லணும், செய்யணும்.
அப்படி செய்யலன்னா, நமக்கும், சிலதுகளுக்கும் வித்யாசம் தெரியாம போயிடும்.
இன்றைய அவசர யுகத்தில் நம் எல்லாருக்குள்ளும் அந்த 'மிருகம்' கொஞ்சம் ஓவராவே தெரியுது. குறுக்கு வழி உபயோகிப்பதிலும் சரி, கண்ணியம் குறைந்து நடப்பதிலும் சரி, இப்பெல்லாம் ஒரு 'பய பக்தி' இல்லாம போயிடுச்சு.
ஊர்ல லஞ்சம் கொடுப்பதில் தொடங்கி, அடுத்தவன் உழைப்பை சுரண்டி உண்பது வரைக்கும், கொஞ்சம் கூட கூச்சப்படாம அஸால்டா பல மேட்டரு செய்யறோம்.
திருட்டு சி.டி வாங்கரது, கள்ளச் சந்தையில் பொருள் வாங்குவது, வரி கட்டாமல் நிலம் வாங்குவது, அலுவலக நேரத்தில் வெட்டியாய் பொழுதைக் கழிப்பது, பொய் பித்தலாட்டம், எட்டு போடாமல் லைஸன்ஸ் வாங்குவது, இப்படி பல விஷயம் கூச்சமே இல்லாம, செய்ய ஆரம்பிச்சுட்டோம்.
சரி சரி சரி. மேட்டருக்கு வரேன்.
கெட்ட குணங்களில் மிகவும் மோசமானது, அடுத்தவன் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப் படுவது. இந்த express யுகத்தில், பள்ளி கல்லூரி நாட்களிலும் சரி, இன்றைய அலுவலகங்களிலும் சரி peer-pressure ரொம்ப ஜாஸ்தி.
நம்மை ஒத்தவர்கள், நம்மை விட பெரிய வளர்ச்சி அடையும்போது, ஒரு விதமான கலக்கமும், பயமும், விரக்தியும், பொறாமையும் கலந்த ஒரு தினுசான மன ஓட்டம் இருக்கும்.
தள்ளு வண்டி விக்கரவங்க ரெண்டு பேர்ல, ஒருத்தன் உணவு விடுதி தொடங்கினாலும்,
உணவு விடுதி வச்சிருக்கரவங்க ரெண்டு பேர்ல, ஒருத்தர் 3 ஸ்டார் ஓட்டல் தொடங்கினாலும்,
10,000 சம்பளம் வாங்கரன்வங்க ரெண்டு பேர்ல, ஒருத்தன் 30,000 வாங்கத் துடங்கும்போதும்,
கூடவே ஆணி புடிங்கிட்டி இருந்தவன், டகால்னு விமானம் ஏறி on-site செல்லும்போதும்,
கீழே விடப்பட்ட மற்றவருக்கு ஒரு மன சஞ்சலம் ஏற்படும்.
எனக்குத் தெரிஞ்சு, நம்மை விட வயசுல சின்னவங்க, நமக்கு மேல உயரும்போது இந்த 'சஞ்சலம்' அதிகமா இருக்கும்.
என்னடா இது, வாழ்க்கைய வேஸ்ட் பண்ணிட்டோமோன்ற ரேஞ்சுல தோணும்.
என் "எட்டு மெகா சாதனைகள்" படிச்சிருப்பீங்க (ஹி ஹி). படிக்காதவங்க இப்ப படிச்சுடுங்க.
அந்த பதிவுல, என் எட்டு சாதனைகள் படித்ததும் (டிஸ்கியும் பின்னூட்டமும் படிப்பதர்க்கு முன்னால்), உங்கள் மன ஓட்டம் எப்படி இருந்தது.
நல்லா யோசிச்சு, கீழே உள்ள பொட்டில வாக்கு போடுங்க.
பொய் சொல்லப் படாது :)
பதிவர்களில் யாராவது, அனுபவஸ்தர்கள் இருந்தா, என் சிந்தனைகளுக்கு மறுப்போ, ஆதரவோ தெரிவித்து, மேல் விஷயங்கள் தெரியப் படுத்துங்கள்.
உங்க சொந்த வாழ்க்கையில் நடந்த உதாரணங்கள் சொன்னாலும் ஓ.கே :)
அமெரிக்க நண்பர்களுக்கு, Happy July 4th! சிக்கன் ஊரிக்கிட்டிருக்கா? :).
நன்றி!
பி.கு: 'டாப் எட்டர்' சர்வே போடணும். உங்களுக்குப் பிடித்த 'எட்டரின்' URL பின்னூடுங்க. ஒரு சர்வே போட்டுடலாம் :)
17 comments:
டாப் எட்டர்னா தெக்கிக்காட்டானைச் சொல்லலாம்.
உங்க டாப் எட்டுச் சும்மச் சொல்றீங்களோனு பார்த்தேன். இப்ப சீரியஸா படிச்சுட்டு மறுபடி பின்னூட்டரேன்.:))))
//உங்க டாப் எட்டுச் சும்மச் சொல்றீங்களோனு பார்த்தேன்//
இதுல எந்த மாற்றமும் இல்லீங்க.
அந்த 8 படிக்கும்போது, உங்க மன நிலை எப்படிங்கறதுதான் கேல்வி.
டிஸ்கி படிக்கரதுக்கு முன்னாடி :)
தெக்கிட்டான் URL?
சுத்த அபத்தம், உன்னையே முன்னிருத்துவது !!
சொரிந்துகொள்ள ஒரு survey ?
roll back
- survey வாசகன்
அட அனானி,
பதிவ முழுசா படிக்காம ஏதாவது சொல்லப் படாது.
ஆப்ஷன் 2 தானோ உங்களுக்கு? :)
முழசா படிச்சுட்டு டென்ஷன் ஆவுங்க சார்.
thekittan top 8
http://thekkikattan.blogspot.com/2007/07/blog-post.html
எனக்கு பிடித்த எட்டில் ஒன்று:
http://jannal.blogspot.com/2007/07/blog-post.html
இந்த சர்வேயில் இருக்கு எதனுடனும் என் மன நிலையை ஒப்பிட முடி்யவில்லை.
"எப்பா!! செம பெரிய தல போல இருக்கு,இவரு கிட்ட இருந்து கொஞ்சம் டிஸ்டென்ஸ் மெயின்டெயின் பண்ணனும்பா" என்று தான் தோன்றியது.
அதில் தாழ்வு மனப்பான்மை சேர்ந்திருந்தாலும், பீறிட்டுக்கொண்டு வந்தது என்று சொல்ல முடியாது .இவர் வேறு ஒரு அலைவரிசை,நாம் பெரிதும் சாதிக்காத பிரிவு,அதனால் இவரின் ரேஞ்சே வேற என்று தான் தோன்றியது!!
ஆனால் நிச்சயமாக பொறாமை இல்லை.
CVR, //எப்பா!! செம பெரிய தல போல இருக்கு,இவரு கிட்ட இருந்து கொஞ்சம் டிஸ்டென்ஸ் மெயின்டெயின் பண்ணனும்பா" என்று தான் தோன்றியது.
அதில் தாழ்வு மனப்பான்மை சேர்ந்திருந்தாலும், பீறிட்டுக்கொண்டு வந்தது என்று சொல்ல முடியாது//
:) 'அப்ப, ஒன்னியும் தோணலப்பா' குத்திடுங்க.
சர்வேசன்,
இன்னும் உங்களின் எட்டுப் பதிவை வாசிக்கவில்லை. வாசித்த பின்னர் வாக்குப் போடுகிறேன்.
பதிவு பற்றி: கருத்துக் கணிப்புக்கு மிகவும் அருமையான முன்னுரை எழுதியிருக்கிறீர்கள். உண்மையில் இதுவரை நான் வாசித்த உங்களின் பதிவுகளில் மிகவும் பிடித்த பதிவு இதுதான் என்றால் மிகையல்ல. பாராட்டுக்கள்.
/* கெட்ட குணங்களில் மிகவும் மோசமானது, அடுத்தவன் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப் படுவது */
உண்மை. இக் கருத்தை அய்யன் வள்ளுவர் அன்றே இடித்துரைத்திருக்கிறார்.
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்
பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுளி உய்த்து விடும்
பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தையும் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்திவிடும்.
[நன்றி: திருக்குறள் தெளிவுரை, மு.வரதராசனார்]
வெற்றி,
//இதுவரை நான் வாசித்த உங்களின் பதிவுகளில் மிகவும் பிடித்த பதிவு இதுதான் என்றால் மிகையல்ல. பாராட்டுக்கள்.
//
ரொம்ப ரொம்ப நன்றி வெற்றி.
சீரியஸா எதையாவது சொல்லலாம்னு எழுதினது அடு.
:)
இந்த நேரத்தில் மிகவும் தேவையானதும் கூட :)
அட என ஆரம்பித்து, அடப்பாவி என்னா கதை வுடுறான் என நினைத்தேன். டிஸ்கி படைக்கும் முன்னரே. இப்போ எந்த ஆப்ஷன் எடுக்க? :)
கொத்ஸ்,
'அட'க்கு ஒண்ணு
'கப்ஸா'க்கு ஒண்ணுன்னு, ரெண்டா போட்டுடுங்க.
(கள்ள ஓட்டு போடுவது எப்படின்னு, Amazonla ஒரு புக் கிடைக்கும் பாருங்க :) )
எட்டுப் பதிவுக்கு வாக்கு போட்டுட்டேன்.
ஆஹா, நமக்கு நடுவுல இப்படி ஒருத்தரா?
வாழ்த்துக்கள்
நன்றி சந்த்ரவதனா! :)
'டாப் எட்டர்' யாருன்னு URL பின்னூடுங்க!
சர்வேசன்,
முதலில் உங்க எட்டு படித்தது ஆடிப்போயிட்டேன், அடேங்கப்பா... இப்படி ஒரு ஆள் நம்மை வேற எட்டு போட கூப்பிடறாரு... சைலன்டா ஒதுங்கிடவேண்டியதுதான், உங்க ரேஞ்சுக்கு முன்னாடி நான் தம்மாதூண்டா இருக்கறமாதிரி ஒரு பிரம்மை... இந்தியாவுக்கு சேவை செய்ய US வேலையை விட்டு வந்தீங்கன்னு படிச்சதும், பயங்கரமா ஆச்சர்யப்பட்டேன்,அப்புறம் ஒரு புறம் சந்தோஷம், இவ்வளவு வெயிட்டான ஆளு நம்மை போய் 8 போட கூப்பிடறாரு... ஆனா டிஸ்கி படித்தது... அடங்கொக்கமாக்கா... நல்லா சிரிச்சேன் ;)
"படிக்கவேயில்லை" என்றொரு ஆப்ஷன் தராததை மென்மையாகக் கண்டிக்கிறேன் :)
Post a Comment