பெர்ஷியன் மொழிப் படங்கள் பல மிகவும் சுவாரஸ்யமானவை. இரானிய இயக்குநர்கள் சிலர் நம்மூர் சத்யஜித்ரேயைப் போல் மிகத் திறமையானவர்கள்.
படத்தில் ரிச்னஸ் அவ்வளவு காணக்கிடைக்காத லோ-பட்ஜெட் படங்களானாலும், பார்ப்பவரை 2 மணி நேரமும் கட்டிப் போடும் ரகத்தைச் சேர்ந்தன இந்தப் படங்கள்.
மஜீத் மஜீதி என்னும் இயக்குநரின் Children of Heaven, இதுவரை பார்க்காதவர்கள், உடனே தேடிப் பிடித்து பார்த்துவிடுங்கள்.
என்னடா இது, எப்பப் பாத்தாலும், துப்பாக்கி, குண்டு, அடிதடின்னு மீடியாக்கள் சித்தரிக்கும் மத்தியக் கிழக்கு நாட்டில் இருந்து இந்த மாதிரி ஒரு கதையா? அதை இவ்வளவு அழகாகவும் எடுத்திருக்கிறார்களா என்று உங்களை வியப்பில் ஆழ்த்தும்.
Baran, The Color of Paradise போன்ற இவரது படங்களும் அருமை ரகம். கண்டிப்பா பார்க்க வேண்டிய படம். (மேலும் பல அருமையான படங்களின் லிஸ்ட் காண இங்கே க்ளிக்கலாம்).
Siddiq Barmak என்ற இயக்குநரின் Osama திரைப்படம் இன்று தான் பார்த்தேன்.
பெர்ஷியன் மொழியில் அமைந்திருந்த இந்தத் திரைப்படம் மஜீதியின் படங்களைப் போலவே, மெல்லிய ஸ்பரிசத்துடன் நகர்ந்து சென்றது.
தலீபான் அரசின் கீழ், ஆப்கானிய மக்கள் பட்ட அவஸ்தையை எடுத்துக் காட்டியிருந்தது படம்.
கணவனை இழந்த பெண்கள், வெளியே சென்று வேலை செய்ய முடியாமல், பசியால் வாடும் அவலம்.
கண்மூடித்தனமான சில மதக் கோட்பாடுகளின் உச்ச கட்ட தீவிரவாதம் காணும்போது, அடி மனதில் பயம் கவ்வியது.
அப்பாடி, எப்படித்தான் இருந்தாங்களோ அந்த ஊர்ல. ஐயோ பாவம். என்ன பாவம் செய்தனை என்ற நம்ம புலம்பல் எல்லாம் கால் தூசுக்கு சமானம், அந்த ஊர் பெண்களின் கஷ்டத்தைப் பார்க்கும்போது.
காபூலில் நடந்த ரஷ்ய எதிர்ப்புப் போரில் கணவனை இழந்த பெண் மருத்துவர், அவருடைய இள வயது பெண், வயதான தாயார், இவர்கள் ஒரு சின்ன ரொட்டிக்காக படும் அவஸ்தையைச் சித்தரித்துத் துவங்குகிறது படம்.
தாலீபான் தீவிரவாதிகளின் மதக் கோட்பாடுகளாய் படத்தில் காட்டுவது,
பெண் ஆண் துணை இல்லாமல் வெளியே செல்லக் கூடாது;
பெண் வேலைக்குச் செல்லக் கூடாது;
கணவன் அருகில் இருக்கும்போது பெண் வாய் திறந்து மற்றவரிடம் பேசக் கூடாது;
கால் விரல்கள் கூட வெளியே தெரியாதவாறு உடை இருக்க வேண்டும்;
etc...
இதைத் தவிர, அவர்களின் காட்டுமிராண்டித்தனமான தண்டனை முறைகள் சிலவும், மேலோட்டமாக எடுத்துக் காட்டப்பட்டது,
தவறு செய்யும் பெண்ணை கல்லால் அடித்துக் கொல்வது;
ரிப்போர்ட்டரை, துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது;
etc...
இவ்வளவும், பொது மக்கள் முன்னிலையில் அரங்கேறும் கொடுமை வேறு.
கணவனை இழந்த அந்த பெண் மருத்துவர், ஒரு வேளை உணவுக்கு பல வகையில் கஷ்டப் பட்டு, கடைசியில், தன் பெண்ணை, ஆணாக வேடம் பூணச் செய்து, ஒரு கடையில் வேலைக்கு அமர்த்துவாள்.
சிறுவனின் பெயர்தான் 'ஒஸாமா'.
ரொம்ப நாள் அதுவும் நீடிக்காது.
தாலிபான், அந்தச் 'சிறுவனை', இழுத்துச் சென்று, தீவிரவாதி ஆக்க ட்ரெயினிங் கொடுப்பார்கள்.
பாதியில் இது சிறுவன் அல்ல, சிறுமி என்று தெரிந்ததும், சிறுமிக்கு தண்டனையாக ஒரு கிழட்டு தாலிபான் தாத்தாவுடன் மனைவியாக அனுப்பி வைத்துவிடுவார்கள்.
தாத்தாவுக்கு ஏற்கனவே நாலைந்து மனைவிமார் இருப்பர்.
'ஒஸாமா' இந்தச் சூழலில் மாட்டி அவதியுறும் காட்ச்சியுடன் படத்தை முடித்துவிடுகிறார்கள்.
என்னடா இது இப்படி எல்லாம் கூட கஷ்டப் படராங்களே இந்த காலத்துல என்று தோன்றியது, படம் முடிந்தவுடன்.
அடிப்படை வசதிகள் இல்லை, புழுதி பறக்கும் சாலைகள், இடிந்து விழக் காத்திருக்கும் வீடுகள், உணவுக்கு காஞ்சு போன ஒரு ரொட்டி, வெளிச்சத்துக்கு ஒரே ஒரு இராந்தல் விளக்கு. மயக்கமே வந்துவிட்டது இதைப் பார்த்து.
இவர்களை விடவும் கஷ்டப்படும் பல ஊர்கள் உலகில் உண்டு என்பதும் நினைவுக்கு வந்தது.
சில கிருக்கர்களால், ஒட்டு மொத்த சமுதாயமும் படும் வேதனை சொல்லி மாளாது.
ஒஸாமா பின் லேடன் செய்த கேடுகெட்ட 911 சம்பவத்தினால் விளைந்த ஒரே நல்ல காரியம், புஷ்ஷின் கையால், தாலிபான் தகர்க்கப்பட்டதுதான்.
1999ல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், கடத்தப்பட்டு, Rupin Katyal என்ற இள வயது பயணி கொல்லப் பட்டதும், இதே தாலிபானின் துணண கொண்டுதான்.
ஈவு இறக்கமற்ற இந்த கும்பல் ஒழிந்தது 911 என்ற தீமையில் விளைந்த நண்மை!
'ஒஸாமா' கெடச்சா பாருங்க!
தீயர்கள் திருந்தட்டும்!
அல்லாஹு அக்பர்!
பி.கு1: ஜன கன மன பாடுங்க. பரிசை வெல்லுங்க.
பி.கு2: தமிழ்நாட்டில் பார்க்க வேண்டிய இடங்கள் இவை
5 comments:
hi,
eppdi ivlo energetic aa neraya ezhuthareenga.Any tips..?? :)
sowmya, நல்லா கேட்டீங்க ஒரு கேள்வி :)
நானே எழுத ஆரம்பிச்சு 10 மாசம் ஆகப் போவுது, இன்னும் உருப்படியா ஒண்ணுமே எழுதலியேன்னு ஒரு பீலிங்க்ல இருக்கேன் :(
சர்வேசன்,
நல்ல விமர்சனம். உங்களின் விமர்சனத்தைப் படித்ததும் படத்தைப் பார்க்க வேணும் என ஆவலாக இருக்கிறது.
இப் படங்களை எங்கே வாடைக்கு எடுக்கலாம்? அமெரிக்காவிலோ அல்லது கனடாவிலோ உள்ள சாதாரன திரைப்பட வாடகைக் கடைகளில் எடுக்கலாமா?
அல்லது எனது ஈரானிய நண்பர்களைத்தான் கேட்க வேணும். :-))
தலிபான் ஆட்சியில் இருந்தபோது, உதைபந்தாட்டப் போட்டிகளுக்குப் போனால், உங்களின் அணி goal அடித்தால் கை தட்டி ஆரவாரம் செய்யக் கூடாது. அப்படிக் கை தட்டி ஆரவாரம் செய்தால் கை சரி. goal அடிச்சால் ஆசனத்தை விட்டு எழும்பி நின்று இன்சா அல்லா எனச் சொல்லவேணுமாம்.
விளையாட்டிலையும் மத்ததைத் திணிக்கும் முட்டாள்தனத்தை என்னவென்று சொல்வது?
Thanks Vetri.
I got the DVD from my local library in Calif.
ofcourse throwing out Saddam qualifies too.
Post a Comment