"ப்ரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவராக வந்தது உங்களுக்கு ஓ.கே வா?" என்பதே இன்றைய கேள்வி.
என் பார்வையில், அவங்களுக்கு ஒரு 'கரிஸ்மா' இருக்கர மாதிரி தெரியல.
ஆனா, நாட்டை வழி நடத்த கரிஸ்மா தேவையில்லை.
நேர்மை,நாணயம்,தன்நம்பிக்கை,புத்திசாலித்தனம்,ஆளும் திறன் இதெல்லாம் இருந்தாலே போதும்.
ப்ரதீபா பாட்டீல் பத்தி, பலவாறான அவதூறுகள் ஊடகங்களில் காணக் கிடைக்கிறது.
அவங்க பேக்ரவுண்ட் அவ்ளோ ப்ரைட்டா இல்லியாமே?
வங்கிக் கடன் மோசடி, அது இதுன்னு நிறையவே கரும்புள்ளி இருக்கே?
எது சரி, எது கப்ஸான்னு யாருக்கு தெரியும்?
கலாம் பர்ஸனலா நல்லவரோ, கெட்டவரோ, ஆனா அவருக்கு ஒரு நல்ல மதிப்பு இருந்தது அனைவர் மனதிலும். Having him as our president gave a positive attitude in our mindset.
Does Prathiba give the same chime? குடியரசுத் தல ஒண்ணும் பெருசா செய்ய முடியாதுன்னாலும், இது ஒரு அலங்காரப் பதிவியாச்சே, அலங்காரப் பொருள் நல்லா இருப்பதுதானே, நமக்கு நல்லது?
ஒரு பெண் குடியரசுத் தலயாகி இருப்பது, பெருமையான விஷயம் தான், பட்...
உங்க கருத்து என்ன?
பி.கு1: 1,00,000 பைஸா வெல்லுங்கள். தேச பக்தியைக் காட்டுங்கள் :)
பி.கு2: பாட்டுக்கு பாட்டு எ,எ,ய,யா ல நிக்குது. மைக்க புடிக்கரீயளா?.
16 comments:
ஊழல் இருக்கா, அது பொய்யா, மெய்யான்னு நிரூபிக்கிறதைவிட,
அவுங்கமேலே ஊழல் இருக்கலாமோன்னு நினைக்கவைக்கும் அளவு
செய்திகள் வந்துக்கிட்டு இருக்கறதையெல்லாம் படிக்கும்போது,
120 கோடி மக்களில் ஊழல் என்ற எண்ணமே வராத ஓரு ஆள் இல்லாமப் போச்சேன்னு
வருத்தமாத்தான் இருக்கு(-:
துளசி கோபால்,
//120 கோடி மக்களில் ஊழல் என்ற எண்ணமே வராத ஓரு ஆள் இல்லாமப் போச்சேன்னு
வருத்தமாத்தான் இருக்கு(-: //
வருத்தம்தான் எனக்கும். என்ன பண்ரது?
ஊழல் நம் மனங்களை விட்டகல, இன்னும் சில நூறு வருஷமாவது ஆகும்.
அதுக்குள்ள global warming ப்ரச்சனையால, உலகம் அழிஞ்சுடும் :)
அதிகாரமில்லாத பதவி யார் வந்தா என்ன?. நாம நல்லவங்களை தேர்வு செஞ்சா அவங்களும் நல்லவங்களை தேர்வு செய்ய போறாங்க
//நாம நல்லவங்களை தேர்வு செஞ்சா அவங்களும் நல்லவங்களை தேர்வு செய்ய போறாங்க //
அட, ஆமா.
தப்பு நம்ம மேலதான் இருக்கு :)
ஊழல் வழக்குகள் எல்லாம் இப்போ வெளிய வருதுன்னா ஏன் முன்னாடியே வரலை?
ஜனாதிபதி பதிவிகு இவங்க பெயரை முன்மொழிஞ்ச பிறகுதான் அவங்க மேல இருக்குற தப்பெல்லாம் தெரிய வந்துதாமா?
உண்மைலயே தப்பு செஞ்சிருந்தாக்கா அப்பவெ பிடிச்சி உள்ளே போட ஏன் யாரும்(அதாவது அவங்க ஊழல்/தப்பு செஞ்சிருக்காங்கன்னு சொல்றவங்க) நடவடிக்கை எடுக்கலை?
////நாம நல்லவங்களை தேர்வு செஞ்சா அவங்களும் நல்லவங்களை தேர்வு செய்ய போறாங்க //
இது பாயிண்டு!
சிபி,
நடவடிக்கை எல்லாம் அப்பவே எடுத்திருக்காங்க. ஆனா, ஏனோ எல்லாம் 'அமுக்கப்' பட்டது.
இப்ப, ஸ்பாட்லைட் கெடச்சதும், திரும்ப நோண்டிப் பாத்திருக்காங்க.
யாரையும் நம்பரதுக்குல்ல :(
hmm. 75% ஆளுங்களுக்கு புடிக்கலையா :)?
அது எல்லாம் இருக்கட்டும்.
எங்க தலைக்கு வாழ்த்து சொன்னீங்களா?
இந்த பதிவில் உள்ள போட்டோ எடுக்கப்பட்டதை டீவியில் பார்த்தேன்...அதற்கு முன் மேடம் பிரஸ் முன் வந்து நன்றி சொன்னார் எதனையோ வாயில் மென்றுகொண்டே. இவரெல்லாம் நமது நாட்டின் சார்பாக உலகம் முழுதும் அறியப்படப் போகிறார்...வெட்கம்.....வெட்கம்...
இ/வரை/தை எப்படி கவர்னராக்கினார்கள் என்பதே கேள்விக்குறியாகிறது....
இந்த பெண்ணின் பின்னால் அவரது குடும்பமே ஆட்டி வைத்துக்கொண்டிருந்தது இதுவரையில். இனி சோனியா மற்றும் மன்மோகன் பொம்மையும் சேர்ந்து ஆட்டிவைக்கப்போகிறார்கள் அவ்வளவே.
இவர் தமது வெற்றியை தேர்தல் கமிஷன அறிவித்தபின் முதலாக பிரஸை மீட் பண்ணியதை டீவியில் பார்த்தீர்களா?...எதனையோ வாயில் மென்றபடி வந்தார். மீடியா முன் தான் ஒரு பிரசிடெண்ட் எலெக்ட் என்பதை அறிந்து நடந்துகொண்டவராக அந்த செயல் காட்டவில்லை...ஏதோ ஒரு படிப்பறிவு, பொது அறிவில்லாத குடும்பத்தலைவி போல நடந்து கொள்கிறார்....வெட்கம்.....வெட்கம்....
இவர் அமைச்சராக, கவர்னராக என்ன கிழித்திருப்பார் என்பதற்கு இதே சான்று...
//இவர் தமது வெற்றியை தேர்தல் கமிஷன அறிவித்தபின் முதலாக பிரஸை மீட் பண்ணியதை டீவியில் பார்த்தீர்களா?...எதனையோ வாயில் மென்றபடி வந்தார். மீடியா முன் தான் ஒரு பிரசிடெண்ட் எலெக்ட் என்பதை அறிந்து நடந்துகொண்டவராக அந்த செயல் காட்டவில்லை...ஏதோ ஒரு படிப்பறிவு, பொது அறிவில்லாத குடும்பத்தலைவி போல நடந்து கொள்கிறார்....வெட்கம்.....வெட்கம்....
///
hmm. kashtam!
as expected
என்னுடைய இந்தப் பதிவைப் பாருங்கள்.
சிபி, கண்டிப்பா நீங்க பாக்கணும்.
ராங்....பெரிய ராங்....
I agree :)
Post a Comment