ஜூலை 1, 2007 ஒரு மறக்க முடியாத நாளாக நெஞ்சில் பதிந்த நாள்.
கலிபோர்னியாவில் உள்ள Hayward நகரத்துக்கு வருகை தந்த SPB, ஜேசுதாஸ், சித்ரா, சுசித்ரா, ஷ்யாம் குழுவினரின் இசைப் ப்ரவாகம் தான் அதற்குக் காரணம்.
நாலு மணிக்கு துவங்க வேண்டிய கச்சேரி, வழக்கம் போல் ஒரு மணி நேரத் தாமதத்துடன் துவங்கியது. அதற்க்கு முந்தின இரவு Torontoவில் கச்சேரி இருந்ததாம். சரியான தூக்கம் கூட இல்லாம, அடித்து பிடித்து அடுத்த நாளே, Haywardல் கச்சேரி.
இந்த வயதிலும் இவர்கள் துள்ளித் திரிந்து, ஊர் ஊராக ரசிகர்களைத் தேடிச் சென்று, ஓடி ஆடி நம்மை மகிழ்விப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
நீங்க எப்படின்னு தெரியல, நான் SPB, ஜேசுதாஸின் மிகத் தீவிர ரசிகன்.
இவங்க எல்லாம் தமிழ் பாட்டு பாட வராம இருந்திருந்தா என்ன ஆகியிருக்கும்?
நெனைக்கவே பயமா இருக்கு. இவங்க பாடிக் கலக்கிய ஆயிரமாயிரம் பாடல்கள் நம் வாழ்வில் ஒவ்வொரு தருணத்திலும் கன்னாபின்னான்னு சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது.
அமெரிக்காவில், முதல் முறையாக இந்த மூன்று இமையங்களும் இணைந்து வருவதால், நல்ல வரவேற்ப்பு இருந்தது. 1300 பேர் அமரக்கூடிய அதி நவீன ஆடிட்டோரியம், நிறம்பி வழிந்தது.
மேடை அலங்காரம், மிக நேர்த்தியாக இருந்தது. ஒலி அமைப்பும் A+.
உள்ளே நுழையும்போதே, வெள்ளக்கார தொர ஒருத்தரு, உள்ள படம் எடுக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாரு. அப்பவும் விடாம, flash இல்லாம க்ளிக்கினே இருந்தேன். ஆனா, உருப்படியா ஒண்ணுமே வரல. ரொம்பவே நொந்து போயிட்டேன்.
திரை விலகியதும், முதல் பாடல் பாட, ஜேசுதாஸ் வந்தாரு.
வெள்ளை வெளேர் பளீர் ஜுப்பாவில் கலக்கலா இருந்தாரு தலைவரு.
மைக் புடிச்சு, "மஹா கணபதிம்னு" தன் கணீர் குரலில் தொடங்கி வச்சாரு. யப்பா, liveஆ அவர் கொரல் கேக்கறதே ஒரு த்ரில்லான அனுபவம்.
முதல் பாட்டு முடிந்ததும், டிக்கெட் காசு $50 திரும்பக் கெடச்ச மாதிரி சந்தோஷம் :)
தொடர்ந்து "அம்மா என்றழைக்காத உயிரில்லையே" என்று கலக்கினார்.
சென்னையைச் சேர்ந்த ஷ்யாம் குழுவினரின் பின்னணி இசை, அமர்க்களமா இருந்தது.
அடுத்ததா, ஆஜானுபாகுவா வந்து நின்னாரு நம்ம SPB. சிலரை பார்த்தவுடன் ஒரு சந்தோஷம் வரும். SPB அந்த ரகம். Black&Black suit போட்டுக்கிட்டு டக்கரா வந்தாரு.
விசிலும், கைதட்டலும் அடங்கவே சற்று நேரமானது. சத்தம் அடங்கியதும் "சங்கீத ஜாதி முல்லை, காணவில்லை" என்று பாடத் துடங்கினார். மீண்டும், விசில் கைதட்டல்.
இந்த, புல்லரிக்கும் என்பார்களே - அந்த அனுபவம் எனக்கு.
என்னா மாதிரி பாட்டு, அது, அத, தலைவரு 20 அடி முன்னால் நின்னுக்கிட்டு, ரசிச்சு பாடராரு. இதவிட வேறென்னங்க வேணும் வாழ்க்கைல? அடேங்கப்பா, ஆனந்தம் ஆனந்தம் :)
நம்ம மக்கா, பாடலின் நுணுக்கங்கள் பாடும்போது, கைதட்டி, விசில் அடித்து திக்கு முக்காடிட்டாங்க.
SPBம், இப்பெல்லாம், இந்த மாதிரி நல்ல பாட்டு யாரும் கம்போஸ் பண்றதில்லை என்று வருத்தப்பட்டார்.
தொடர்ந்து "வண்ணம் கொண்ட வெண்ணிலவே" பாடி மயக்கினார். ரசிகர் ஒருவர் "இந்த மாதிரி இன்னொரு பாட்டு கம்போஸ் பண்ணு தல" என்று கேட்டபோது, "கண்டிப்பா" என்று பதிலளித்தார்.
நான் ஆவலுடன் எதிர்பார்த்த சித்ராவின் பாடல் அடுத்தது. ஜானகிக்கு அடுத்து, சித்ரா நம்ம லிஸ்ட்ல டாப்பு. முதல் முறை அவரின் நிகழ்ச்சி நேரில் பார்ப்பதும் அன்றே.
என்ன ஒரு அடக்கம் அவங்க கிட்ட. அடேங்கப்பா.
மெதுவா பேசிக்கிட்டு, மைக்க புடிச்சு "ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே"ன்னு பாடி அசத்திட்டாங்க.
அப்படியே, சி.டி ல கேக்கர மாதிரியே பிழையில்லாம அட்சரம்பெசகாம பாடினாங்க.
SPBயும், ஜேசுதாசும் சேர்ந்து "இரண்டு கைகள் நான்கானால்" பாடினாங்க. ஜேசுதாஸ் அதிகம் பேசமாட்டாருன்னு நெனச்சா, அவரும் அப்பப்ப காமெடி எல்லாம் அடிச்சு கலக்கினாரு.
SPB ஜேசுதாஸை அண்ணா அண்ணா என்று உண்மையான பாசத்துடன் மூச்சுக்கொருமுறை அழைத்துக் கொண்டிருந்தார்.
ராஜாவின், பெருமை கூறாமல் SPB இருக்கமாட்டாரு. "சின்ன மணிக்குயிலே" பாடலைப் பற்றிக் கூறும்போது "best composition" என்று புகழாரம் தூவினார்.
அந்த பாட்டுக்கு, தபேலா வாசிச்சவரு கலக்கிப்புட்டாரு. ஜெயா டி.வில அவர பாத்த மாதிரி ஞாபகம்.
சுசித்ரா என்ற வளர்ந்து வரும் பாடகி "எண்ணத்தில் ஏதோ ஜில்லென்றது" என்ற பாடலை அருமையாக பாடினார். இந்த பாட்டெல்லாம் பாடுவாங்கன்னு நெனைக்கவே இல்ல நானு. ஒரு இன்ப அதிர்ச்சி (கானா பிரபா கிட்ட, நேயர் விருப்பமா இந்த பாட்ட கேக்கணும்:) ).
ஜேசுதாஸ், தன் நண்பனான ரவீந்தரன் இசை அமைத்த, 'His Highness Abdullah" (malayalam) படத்திலிருந்து, "ப்ரமதவனம் வீண்டும்" என்ற கர்நாடிக் ஸ்டைல் பாடலை பாடினார். சென்னை Saphire தியேட்டரில் இந்த படம் வந்த போது, நண்பனுடன் பார்த்திருக்கிறேன்.
படத்தில், இந்தப் பாடலை மோகன்லால் பாடுவார். ஜேசுதாஸின் குரலின் தாக்கம், காதை விட்டகல சில மாதங்களாச்சு. இந்த படம் கெடச்சா பாருங்க. ஒவ்வொரு பாடலும் சூப்பர்.
தொடர்ந்து, "விழியே கதை எழுது" என்று ஜேசுதாஸும், சித்ராவும் கலக்கினாங்க.
SUPER STARனு எல்லாரும் கூப்பாடு போட, SPB, சித்ரா இனைந்து "ஆலப் போல் வேலப்போல்" பாடினாங்க.
எனக்கு தெரிஞ்ச ஒரே தெலுங்கு பாட்டு, 'ஷங்கரா நாதஸரீராபரா". SPB full formல அத பாடினாரு. ட்ரம்ஸ் காரர் பின்னிப் பெடலெடுத்தாரு.
சில சூப்பர்-ஹிட் பாடல்கள் , சூப்பர் சொதப்பல் படத்தில் அமைந்துவிடும். அந்த மாதிரி ஒரு பாடல் தான் "பூவே செம்பூவே உன் வாசம் வரும்". "செந்தாழம்பூவே" என்று ரசிகர் ஒருவர் குரல் கொடுக்க, "பூ தான வேணும்? செம்பூவே பாடறேன்"ன்னு ஜோக்கிக்கிட்டே, ஜேசுதாஸ் அந்த பாட்ட பாடினாரு.
பாடல் முடிவதர்க்கு சற்றுமுன் "யாரும் விசில் அடிக்காதீங்க. பாட்டு முடியும்போது, ஒரு அருமையான flute வரும். அமைதியா கேளுங்க" என்று flute காரரின் திறமையை காட்ட வாய்ப்பு கொடுத்தார். அவரும் மயக்கிட்டாரு. (கானா பிரபா, request#2 :) )
Chennai 600028ல் இருந்து 'யாரோ' பாடலை SPB, சித்ரா பாடினாங்க.
தொடர்ந்து வந்த பாடல்கள்
அதிசய ராகம் - ஜேசுதாஸ்
நீ பாதி நான் பாதி - ஜேசுதாஸ், சித்ரா
கண்ணா வருவாயா - சித்ரா (யப்பா, வாட் எ சாங்!!!! )
திரும்ப, SUPER STARனு ஓலமிட, "காதலின் தீபம் ஒன்று" பாடினாங்க.
அந்த நேரத்தில் HelpVinay.Org (முந்தைய பதிவை பாருங்கள்) பற்றி SPB கூறி, தன் வழியில் இறைவனை வணங்குவதாகச் சொல்லி, "தேவுடா தேவுடா" பாடினார்.
சிவாஜி இல்லாமலா, ரசிகர்களின் தொல்லை தாங்காம, "பல்லேலக்கா" எடுத்து விட்டாரு பாருங்க. அதிருந்துடுச்சு ஆடிட்டோரியமே. குட்டீஸ் எல்லாம் மேடைக்கு ஓடி, ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் :)
ஜேசுதாஸ், "தென்றல் வந்து என்னைத் தொடும்" பாடி, அதைத் தொடர்ந்து மலையாளத்தில் "கடலினக்கர போணோரே காணாப்பொன்னினி போணோரே" என்று அதிரடி கிளப்பினார்.
அந்த பாடல் தொடங்குவதர்க்கு முன்னர் "அடி பொளி" என்ற மலையாள வாக்கியத்துக்கு அர்த்தம் சொன்னார். அதாவது "ப்ரமாதம் தூள்" என்பதுதான் அடி பொளியாம் :)
அப்பறம் பாடினார் பாருங்க, "கண்ணே கலைமானே" பாட்ட, அடேங்கப்பாஆஆஆஆஆஆஆ.
அதைக் கேட்டு, எல்லாரும் அமைதி ஆயிட்டாங்க.
"உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே" -- என்ன வரிகள். படத்துல, கமல் கண்ணுல தண்ணி வரும் இந்த வரிகளின் போது. என்றும் மறவாது, அந்த வாக்கியமும், கமலின் நடிப்பும், இந்தப் படமும், ஜேசுதாஸின் குரலும், இளையராஜாவின் இசைக் கலவையும். We are so blessed my friends to enjoy the great output of these wonderful wonderful artists!
SPB, சித்ரா, தன் பங்குக்கு "குருவாயூரப்பா" பாடலை பாடி, பழைய நினைவுகளை தட்டி எழுப்பினாங்க. "அஞ்சலி அஞ்சலி" அதையும் பாடினாங்க. சூப்பரோ சூப்பர்.
சித்ரா - சும்மா சொல்லக் கூடாதுங்க. கலை அரசிங்க இவங்க. என்ன ஒரு பவ்யம். தொழில் பக்தி. பாத்தாலே, சும்மா அதிருதில்ல கைதட்டல்.
"சுந்தரி கண்ணால் ஒரு சேதி" பாட வந்த சித்ரா கிட்ட, SPB, இந்த பாடலின் இரண்டாவது சரணத்தை சுசித்ரா பாடட்டுமே என்றார் (சுசித்ரா, வளர்ந்து வரும் பாடகி. so, அவங்களுக்கு வாய்ப்பு கொடுப்போம்னு சொல்லியிருப்பாரு). சித்ரா, அழகா வழி விட்டதுமில்லாம, சுசித்ராக்கு கோரஸ் வேற பாடினாங்க. ஹ்ம். தலைக்கனம்னா என்ன வெலைன்னு கேப்பாங்க :)
மலையாள நண்பர்கள் "சேச்சி, அது பாடூ, இது பாடூ"ன்னு கொரல் விட்டுக்கிட்டே இருந்தாங்க.
அவங்கள திருப்திப் படுத்த, பிட் பிட்டா, நச்சுன்னு கொஞ்சம் பாட்ட எடுத்து விட்டாங்க. அருமை!
அப்படி இப்படின்னு, 4 மணி நேரங்கள் போனதே தெரியல.
கடைசியா, "காட்டுக்குயிலு மனசுக்குள்ள" பாடலை பாடி முடிவு பண்ணாங்க.
மீண்டும் அடுத்த வருடம் வருவதா வாக்கு கொடுத்திருக்காங்க.
மொத்தத்தில், அடி பொளி! can't wait to see them all again!!!
:)
பி.கு: HelpVinay.Org மறந்திடாதீங்க. இன்னும் 6 நாட்களே உள்ளன.
21 comments:
இந்த நிகழ்ச்சிக்கு போனவங்க யாராவது தெரியும்னா, அவங்க எடுத்த போட்டோ வாங்கி அனுப்புங்க.
small world, கண்டிப்பா யாராவது இருப்பாங்க.
கேட்டுச் சொல்லுங்க :)
தூள். பாக்கணும்னு ஆசைய கிண்டிட்டியேப்பா.
நல்ல வாய்ப்பு அனுபவிச்சு ரசித்திருக்கிங்க. ஹ்ம். பொறாமையா இருக்கு.
தல
பிச்சு உதறீட்டீங்க, நேரில் பார்த்தது போல பிரமை.
சித்ரா, நந்தனம் படத்தில இருந்து பாடினாங்களா?
எட்டெல்லாம் பத்தாதுன்னு சொல்லவே தான் உங்களை நான் எட்டு விளையாட கூப்பிடல..
http://ayanulagam.wordpress.com/2007/07/03/8game/
Thank You!
Thank You!
Thank You!
Thank You!
பிரபா, நந்தனம் படத்துல என்ன பாட்டு?
எனக்கு தெரிஞ்சு,
கங்கேன்னு ஒரு பாட்டு,
களபம் தரா பகவானே மனசும் தரா,
தும்பி
இதெல்லாம் சட்டு சட்டுனு பாடினாங்க.
I saw a couple of videos on google from the concert...someone was sitting up very close. SO lucky. Sundari and Kanne Kalaimaane. SPB seemed more talkative than at the Toronto show.
Pls, someone post pics. Would love to see.
anony, can you post the URLs from goog?
thanks,
சூப்பர் தலைவா.....கலக்கிட்டிங்க ;)))
\\SurveySan said...
பிரபா, நந்தனம் படத்துல என்ன பாட்டு?
எனக்கு தெரிஞ்சு,
கங்கேன்னு ஒரு பாட்டு,
களபம் தரா பகவானே மனசும் தரா,
தும்பி
இதெல்லாம் சட்டு சட்டுனு பாடினாங்க.\\
ம்ஹும்...இது இல்லை தலைவா....தல பிரபா சொல்லறது வேற....சித்ராவுக்கு விருது வாங்கி கொடுத்த பாட்டு அது.
Gopinath,
Thanks.
I esnipped and found this from Nandanam - http://www.esnips.com/doc/b6739ffe-0df0-45f9-bbc1-4742a8cab437/Nandanam---Karmukil
is this the one?
http://video.google.ca/videoplay?docid=2508575201543735718&q=yesudas&total=172&start=10&num=10&so=1&type=search&plindex=9
link to Kanne Kalaimane at the concert...
Just searching "Yesudas" on google videos takes you to 3 other clips.
anony,
Thank you
Thank you
Thank you
தல
நான் சொன்னது "கார்முகில்" அப்படின்னு ஆரம்பிக்கும் பாட்டே தான், பாடினாங்களா?
"கங்கே" வடக்கும் நாதன் ல வந்தது.
karmugil paadala.
Gange paadinaanga, without musjik.
சர்வே சன் சார்,
என்னாங்க தலைவர் இங்கே இருக்கிறார்போல தெரியுது திடிர் திடிர்ன்னு பறந்துடாராரே? உங்க ரிப்போர்ட் SuPerB நேர்ல கலந்துகிட்ட அனுபவம். இதே எஸ்.பி.பி & ஜேசுண்ணா ஒரூ நிகழ்ச்சி எங்க கல்லூரியிலும் நடந்தது.அந்த நாள் தலைவர் மேடக்கே வர ஒரு மணி நேரம் ஆயிற்று ட்ராப்பிக்ஜாமீல் தான். அந்த நிகழ்ச்சியை நினவூ படுத்திடீங்க. நன்றி.
நிகழ்ச்சி படங்கள் அவசியம் போடவும்.
நேரில் பார்த்தது போல் இருந்தது.
Kovai Ravi,
//நிகழ்ச்சி படங்கள் அவசியம் போடவும். //
:( all photos blacked out.
Jessissa,
//நேரில் பார்த்தது போல் இருந்தது. //
thank you
thank you
Post a Comment