recent posts...
Saturday, July 07, 2007
07 - 07 - 07 ~ பூமிக்காக
நம்ம Al Gore அண்ணாச்சி, 7/7/7 அன்று, உலக அளவில் 'Live Earth' என்ற கச்சேரி ஏற்பாடு பண்ணி, Global Warming ( உலகளாவிய வெப்பம்? :) ) விழிப்புணர்வு கொடுத்திட்டிருக்காரு.
உலகம் முழுவதிலும் 2 பில்லியன் ஆளுங்க இந்த கச்சேரியப் பாத்து, Global Warming பத்தித் தெரிஞ்சுக்கிட்டு, ஓரளவுக்கேனும், தங்களால் முடிந்த சின்ன சின்ன விஷயங்கள செஞ்சு, பூமிக்கு நேரவிருக்கும் மாசுக் கேடுகளைக் குறைக்கப் பாடுபடுவார்கள் என்று நம்பிக்கை!
LIVE EARTH பற்றிய விளக்கங்கள் இங்கே - Live Earth.
நான் ஏற்கனவே இங்க சொன்ன மாதிரி, இந்த Global Warmingஅ கண்டுக்காம விட்டா, முப்பது வருஷத்துல, அது தன் வேலைய பெருசா காட்ட ஆரம்பிக்குமாம்.
அப்ப பொலம்பி பிரயோஜனம் இல்லை.
இப்பவே, உங்களுக்குத் தெரிஞ்சத, முடிஞ்சத, வெட்கப்படாம செஞ்சு, Carbon Emissions, Recycling, Avoiding Plastics, Wastage reduction, Spread Global Warming Awareness மாதிரி ஐட்டங்களில் மேலும் கவனம் செலுத்தவும்.
உங்க சோம்பேரித்தனத்தாலும், அக்கரையின்மையாலும், உங்க குழந்தைகள் நாளைக்குக் கஷ்டப்படக்கூடாது என்பதில் கவனம் வையுங்கள்! :)
National Geographyல ஒரு போலார் கரடியோட கதைய காமிச்சாங்க. நம்ம பண்ற கூத்துல, முதல் கஷ்டம் அதுங்களுக்குத்தான். அதுங்க வாழும் இடங்களில் பனி எல்லாம் சீக்கிரமே உருகிவிடுகிறதாம். கடலில் பனிக்கட்டிகள் இல்லன்னா, கரடியால ரொம்ப தூரம் நீந்தி இறை தேட முடியாதாம். கொஞ்ச தூரம் நீந்திய பிறகு இளைப்பாற அவை பனிப் பாரையைத் தான் பயன் படுத்தும். இப்படி ஒரு கரடி இறையைத் தேடித் தேடி, ஒண்ணும் கிடைக்காம களைப்பில் இறந்த போவதைக் காட்டினார்கள். அடக் கொடுமையே!
நம்ம செய்யும் விஷயங்கள் நம்மை மட்டும் அல்லாமல், நம்மைச் சுற்றி உள்ளதையும் பாதிக்குது.
என்னமோங்க, என்னால பொலம்பதான் முடியும்.
என்னால் முடிந்தது, ப்ளாஸ்டிக் உபயோகிப்பதைக் குறைக்கலாம். தேவையில்லாம, கார் உபயோகித்தலைக் குறைக்கலாம். தேவைக்கதிகமா எதையும் வாங்காம இருக்கலாம். மரங்கள் சில வைக்கலாம்.
இன்னும் சில வருஷங்களில், இந்தியாதான் அதிக மக்கள் தொகை கொண்ட ஊராகப் போகுது.
உருப்படியா, ஒவ்வொருத்தரும், 'விழிக்கலன்னா' கஷ்டம்தேன்.
மாற்றத்தின் முதல் படி நீயா இருன்னு காந்தி சொல்லி இருக்காராம். இருக்கீங்களா?
தொடர் வெளையாட்டெல்லாம் வெளையாடி களைப்பாயிருப்பீங்க.
நம்ம பூமிக்காக ஒண்ண யோசிச்சு இந்த தலைப்புல எழுத முடிஞ்சங்க "07 - 07 - 07 ~ பூமிக்காக".
நீங்க என்ன பண்ணப் போறீங்க, மத்தவங்கள என்ன பண்ணச் சொல்றீங்க, உங்க கவலைகள் என்னா, இந்த உலகளாவிய வெப்பத்தைப் பற்றி உங்க கருத்து என்னா? etc...
இங்க பாருங்க - நல்லா எழுதினீங்கன்னா சற்றுமுன் ஆளுங்க பரிசு கொடுத்தாலும் கொடுப்பாங்க. :)
இதுவரை எழுதியவர்கள்:
1) குப்பய எங்கே போட்டீங்க - by முத்துலெட்சுமி
2) சூட்டு யுகப் பிரளயம்! உருகி மறையும் கிலிமாஞ்சாரோ பனிச்சிகரங்கள் - by சி.ஜெயபாரதன் B.E. (Hons), P.Eng. [Nuclear] Canada
3) ?
4) ?
5) ?
6) ?
7) ?
பி.கு1: ஜன கன மன - சேந்து கலக்குவோம் பதிவப் படிச்சு பெயர் பதிந்து விடுங்கள். உங்க 'தேச பக்திய'க் காட்டுங்க. நன்றி! பாட முடியாதவங்க, வாசிக்கலாம் தப்பில்ல. :))
பி.கு2: சிவாஜியாவா பாட்ஷாவான்னு கேட்டதுல, பாட்ஷா பாய், 76% வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். சந்தோஷம் பொங்குதே பொங்குதே! அழுகாச்சி அழுகாச்சியா வருது (ஆனந்தக் கண்ணீர்). யாராவது, இந்த ரிஸல்ட, ரஜினிக்கும், ஷங்கருக்கும் காட்டுங்க :)
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
கொஞ்சம் ஓவரா தெரியல?
ரொம்ப நல்லவனா நடிக்கும் வாரமா இது?
Post a Comment