என்னடா இது, எங்கப்பாத்தாலும், GLOBAL WARMING பத்தியே பேச்சா இருக்கே, நம்ம எதயாச்சும் பண்ணலாமேன்னு ஒரு வருஷமா ஒரே அரிப்பு.
"An Inconvenient Truth" என்ற Al Goreன் டாக்குமெண்டரி பாத்தீங்களா?
புள்ளி விவரங்கள் புட்டு புட்டு வெக்கராரு மனுஷன்.
இந்த வெளம்பரம் பாத்திருப்பீங்க்க. சும்மா, இதை விட நெத்தியில அடிச்ச மாதிரி, வேற எப்படி சொல்ல முடியும்?
சில பேரு, இதெல்லாம் சும்மா. கத வுடராங்கன்னு சுத்திக்கிட்டு திரியராங்க.
ஆனா, நம்மள சுத்தி அப்பட்டமா, பல விஷயம் நடக்குது. வழக்கத்து மாறா சுட்டெரிக்கும் வெயிலும், திடீர் மழையும், சூராவளியும் பாத்தாலே, something is not rightனு புரியும்.
நம்ம பங்க செஞ்சே ஆகணும்னு ஒரு கட்டாயம் இருக்கு.
இன்னிக்கு கூட Al Gore ஒரு பேட்டீல "ஏன்யா, மாசுக் கட்டுப்படுத்து கட்டுப் படுத்துனு ஊர் ஊரா சுத்தி சவுண்டு விடரியே. ஆனா, நீயும், private Jetல சுத்தர, தேவைக்கு அதிகமான சைஸ்ல்ல பங்களா கட்டி எல்லாம் வீணடிக்கர. ஊருக்கு தான் உபதேசமா"ன்னு கேட்டாங்க.
அதுக்கு அவரும் பொறுமையா "இல்லைங்க, நான் முடிந்தவரை பொது விமானத்தில் தான் பயணிப்பேன். என் பங்களாவில் முக்கால்வாசி சூரிய ஒளியின் உதவியால், செயல் படும் விதம் Solar Cell எல்லாம் போட்டு தான் வச்சிருக்கேன். Hybrid கார் தான் ஓட்டரேன்" அது இதுன்னு வெளக்கம் கொடுத்தாரு.
ஒவ்வொரு தனி மனுஷனும், தன்னால் முடிந்த சில விஷயங்களைச் செஞ்சா போதும், 30 வருஷத்துல வர இருக்கும் கஷ்டத்த, 300 வருஷம் தள்ளிப் போடலாம்.
நெனச்சு பாருங்க, உங்க பசங்க 30 வருஷத்துல, கஷ்டப் படரதுக்கு நீங்களும் காரணமா இருக்கணுமா?
அதுவும் சாதாரண கஷ்டம் இல்லை. சமாளிக்க முடியாத இயற்க்கைச் சீற்றம் வருமாம்.
அமெரிக்கா காரன், எதயாச்சும் பண்ணி சமாளிச்சுடுவான்.
நம்ம ஊர் நெலமைய நெனச்சு பாருங்க? எவன் காப்பாத்துவான்?
ஊரு ரணகளம் ஆகும் அபாயம் இருக்கு.
யோசிச்சு எதயாச்சும் பண்ணுங்கா.
இங்க சில ஐடியாஸ் கொடுக்கராங்க்க பாருங்க.
உங்களுக்குத் தெரிஞ்சதும் சொல்லுங்க.
எனக்குத் தெரிஞ்சது.
0) பதிவர் சந்திப்பின் போது, எதயாவது ஒரு தெருவ தேர்ந்தெடுத்து அங்க இருக்கரவங்கள, மெரட்டி உருட்டி ஒழுங்கா இருக்கச் சொல்லலாம் (I mean awareness தரலாம்)
1) முடிந்தவரை பஸ், ட்ரெயின் உபயோகியுங்கள்
2) சாலையோரம் மரங்கள் நடுங்கள்
3) உங்க பக்கத்து தெரு ஆளுங்கள எல்லாம் கூட்டா சேத்து, உங்க neighbourhood நல்லா பசுமையா வச்சுக்கப் பாருங்க. எவ்வளவுக்கு எவ்வளவு மரம் வெக்கரமோ, அந்தளவுக்கு, நன்மை பயக்கும்..
4) உங்களுக்குத் தெரிஞ்ச குளம், குட்டைய, ஆள் சேத்து சுத்தப் படுத்தி, தண்ணி சேமிக்க வழி செய்யுங்க.
5) குளம் குட்டைகளை, 'ஆக்ரமித்து' பட்டா போடும், வில்லன்ஸ, சிவாஜி மாதிரி அடிச்சு வெரட்டுங்க.
6) ??? வேற யாராச்சும் பின்னூட்டிச் சொல்லுங்க.
எனக்கு கல்லூரி நாட்களிலேயே, இந்த 'சமூக' அரிப்பு கொஞ்சம் அதிகமா இருக்கும்.
அதுவும், வேலை கெடச்சு, NRI ஆகி, சிங்கப்பூர், அமெரிக்கான்னு சுத்த ஆரம்பிச்சதும், 'அரிப்பு' கொஞ்சம் அதிகமாவே ஆயிடுச்சு.
ஒவ்வொரு வருஷமும், ஊருக்குப் போகும்போதும், சொறிஞ்சு விடலன்னா, கன்னா பின்னானு, அரிக்க ஆரம்பிச்சுடும் :)
பெருசா ஒண்ணும், இது வரைக்கும் கழட்டல. சின்ன சின்னதா, உதவும் கரங்கள் மாதிரி நிறுவனத்துக்கு அஞ்சோ பத்தோ கொடுப்பதோடு சரி.
வேற எதயாச்சும் நல்லது பண்ணனும்னா, சிவாஜிக்கு வந்த அதெ நெலம, நம்மில் பலருக்கும் வருது. உருப்பட விடாம இருக்கரதுக்கு ஒரு கும்பல் இருக்கு ஊர்ல.
இப்படித்தான், போன வருஷம், எங்க தெருவில வரிசையா மரம் வச்சு ஊர முன்னேத்தலாமேன்னு முடிவு பண்ணேன்.
தெருவுல இருந்த ஒரே வேப்ப மரத்தையும், குப்ப சேருதுன்னு, நம்ம நெய்பர் வெட்டி கடாசியிருந்த்தாரு. (%^#$$^&@@#!!$!$&*(%^#%@$$).
தெருவில் இருக்கும் 100 வீடுகளிலும், நிழல் தரும் மரங்கள் யாரும் வச்சுக்கல.
"எதுக்குப்பா,சும்மா வேஸ்டு, குப்பதான் சேரும்"னு சொல்லி, வெறும் தென்னமரம் மட்டும் கொஞ்ச வீட்ல இருக்கும்.
இத்தனைக்கும், எல்லாம், படிச்சு பெரிய பதவிகளில் இருக்கும் மக்கள் நிறைந்த தெரு எங்களது.
சரி, நாம தான் NRI, நம்ம கண்ணுலதான், தப்பெல்லாம் பளிச்சுனு தெரியுமே.
எங்க வீட்டுக்கு முன்னாடி, மூணு நிழல் தரும் மரங்கள் வெக்கலாம்னு, மூணு 7 அடி உயரமுள்ள மரக்கண்ணு வாங்கி, அதுக்கு பாதுகாப்பு வலையும் வாங்கியாச்சு. ஒரு மரத்துக்கு 300 ரூபாயாச்சு.
எல்லாத்தையும் வண்டில கொண்டு வந்து, ஒரு ஆள் வச்சு ஆழமா நட, எல்லாமா சேத்து 1200 ரூபா கிட்ட ஆச்சு.
மரத்த நட குழி வெட்டும் போதே, எதித்த வீடு, பக்கத்து வீடு ஆளெல்லாம் குசலம் விசாரிக்க வந்துட்டாங்க.
"இதை எல்லாம் பர்மிஷன் இல்லாம ஏன் பண்றீங்க. The municipality people should do this."
"மரம் வெச்சா வீட்டுக்கு நல்லதுல்ல. வேர் உள்ள வந்து சுவர ஒடச்சிடும்"
"குப்ப சேரும். யார் கூட்டுவா?"
இப்படி சப்பைக் கட்டுக்கள் நிறைய வந்துது.
எல்லாத்தையும் சமாளிச்சு, மரத்த வச்சு தண்ணிய ஊத்தி, அக்கடான்னு படுத்தா, அழகான கனவுல எங்க தெருவின் எதிர்கால லுக்கு இப்படி தெரியுது. ஆனா?
விட்டாங்களா பாவிகள்.
ராவோட ராவா, நான் வச்ச மூணு மரக்கண்ணையும் ஒடிச்சு போட்டுட்டானுவ.
எதிர்வீடா? பக்கத்து வீடா? வில்லன் யார்னு தெரியல. ரெண்டுல ஏதோ ஓண்ணுதான் :(
தெரு அசிங்கமா இருக்கு. போதாகொறைக்கு, எவனோ துட்டு சொரண்ட, 'ஓப்பன்' சாக்கடைக் கால்வாய் வெட்டி விட்டிருக்கான்.
எவனும் கேள்வி கேக்கலன்னா, குல்லா போட்டுடராங்க.
திருந்துமா இதெல்லாம்? கப கபன்னு எரியுது. அடுத்த தடவ போகும் போது, இருட்டடி கொடுத்தாதான் புத்தி வரும்.
ஊருக்கு, ஏதாவது பண்ணுங்க மக்கா!
:)
பி.கு1: 7/7/7 அன்னிக்கு பல global warming விழிப்புணர்வு விஷயம் நடக்கப் போகுது. நம் மத்தியிலும், எல்லாரும் "7/7/7" - என்ற தலைப்பில் உங்களுக்குத் தெரிஞ்சத சொல்லுங்கோ.
பி.கு2: Global Warming Facts
:)
14 comments:
ம்...செய்யணும் ..எதாச்சும்..
முடிந்தவரை எதெல்லாம் உபயோக்கிக்ககூடாதோ அதை குறைத்தோ இல்லை உபயோகிக்காமலொ இருக்கிறேன்.
7/7/7 க்கு கொண்டாடிடலாம்.
அண்ணாத்த!!
Michael Crichton-ஓட "State of the Fear" படிச்சீங்களா??
அதுல அவரும் புள்ளிவிவரத்தோட Global warming என்பது தேவை இல்லாத பயம் என்று சொல்லுறாரு!!
யாரை நம்புறதுன்னே தெரியல!!
ஆனா நாம மரம் நடறது,மாசு கட்டுப்பாடு போன்ற விஷயங்கள் எப்பவுமே நல்ல விஷயம் தான் க்ளொபல் வார்மிங் இருக்கோ இல்லையோ!!
"State of Fear" கண்டிப்பா படிச்சு பாருங்க!!
An interesting novel on this subject!! :-)
BTW!
thats a rocking advertisement!! :-)
//7/7/7 க்கு கொண்டாடிடலாம். //
Jamaichuduvom!
//Michael Crichton-ஓட "State of the Fear" படிச்சீங்களா??
//
Crichton yaarunga, andha Dinosaur ellaam kosu voda raththathulerundhu kondu vandhaare avaraa?
avaru solradha ellaam nambikkittu :)
May be he is true. But, we should act and do our part. No harm in reducing waste and pollution :)
நட்சத்திர வாரத்துல ரொம்ப அவசியமான தகவல்கள தந்துட்டு வரீங்க......நன்றி....முடிந்த வரை முயற்சி செய்வோம்.....
ரொம்ப பேரு ஹொலோகோஸ்ட் கூட நடக்கவே இல்ல, அமெரிக்காகாரன் நிலாவ தொட்டதே இல்லன்னு சொல்லிகிட்டு திரியராங்க.....எல்லாம் ஒரு பரபரபுக்குதான்.....'state of fear' fiction தானேங்க cvr?? நான் இன்னும் படிச்சது இல்ல......
சர்வேசன்,
நல்ல பதிவு. எமது பகுதிகளில் [இலங்கை, இந்தியா, பாகிஸ்தான்] வாழும் அதிகமான சாதாரண மக்களுக்கு இப் பிரச்சனை பற்றி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேணும்.
அத்துடன் மீள்பாவனை (recycle)செய்யக் கூடிய பொருட்களைப் பாவிக்கலாம்.
// No harm in reducing waste and pollution :) //
ரைட்டு தான் தல!!
அதத்தான் நானும் சொன்னேன்!! :-)
//ஆனா நாம மரம் நடறது,மாசு கட்டுப்பாடு போன்ற விஷயங்கள் எப்பவுமே நல்ல விஷயம் தான் க்ளொபல் வார்மிங் இருக்கோ இல்லையோ!!//
விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதைகளில் Michael Crichton-a அடிச்சுக்க முடியாது தலைவா!!
தகவல்கள் எல்லாம் புட்டு புட்டு வெப்பாரு!! :-)
எப்பயாச்சும் அவரு கதை ஏதாவது படிச்சா சொல்லுங்க!! :-)
சின்னாதா ஒரு முயற்சி...777 ன்னு தலைப்பு வைக்கத்தான் முடியல ப்ளாக்கர் சொதப்புது...குப்பையை எங்க போட்டிங்கன்னு பதிவு வந்திருக்கு .
இது என்னோட பதிவு லிங்க்
http://sirumuyarchi.blogspot.com/2007/07/blog-post_07.html
நிஜமாகவே நல்ல உபதேசம் ஊருக்கும் நாட்டுக்கும்.நானும் எங்கள் flat-ஐ சுற்றி மேலும் மரங்கள் நட ஆவன செய்கிறேன். சரி......மரங்கள் நடவேண்டும் ஓகே!
வயதானவர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்புவதுபோல்
வயதான மரங்களை கூசாமல் வெட்டி
வீழ்த்துவதை தடுப்பது யார்...எப்படி..?சர்வேசன்!
நானானி,
//நிஜமாகவே நல்ல உபதேசம் ஊருக்கும் நாட்டுக்கும்.நானும் எங்கள் flat-ஐ சுற்றி மேலும் மரங்கள் நட ஆவன செய்கிறேன்.//
ரொம்ப நன்றி! கொஞ்சம் கஷ்டமான வேலைதான். சிரமம் எடுத்துக்கிட்டு செஞ்சா உங்களுக்கும் நல்லது, உங்கள் சந்ததிக்கும் நல்லது. :)
// சரி......மரங்கள் நடவேண்டும் ஓகே!
வயதானவர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்புவதுபோல்
வயதான மரங்களை கூசாமல் வெட்டி
வீழ்த்துவதை தடுப்பது யார்...எப்படி..?சர்வேசன்!
//
கஷ்டம் தான். மரத்த வெட்டும்போது வேடிக்கப் பாக்காம, ஏன் எதுக்கு, கண்டிப்பா வெட்டியே ஆகணுமா, பர்மிஷன் இருக்கா, இப்படின்னு யாராவது கேள்வி கேட்டாலே, பாதி மரத்த காப்பாத்திடலாம்.
ஏதோ ஒரு சோம்பேரி அவன் வேலையை சுலபமாக்கிக் கொள்ள மரத்த வெட்டரான். முடிந்த வரை இதை எல்லாரும் சேந்து தடுக்கணும்.
atleast, ஒரு awareness கொடுக்கணும்.
மாற்றத்தின் முதல் படி நீயா இருன்னு காந்தி சொல்லி இருக்கார் நம்மால ஆனது செய்வோம்!!
Reduce, Reuse, Recycle செய்யவேண்டும்.
Reduce - பொருட்களின் தேவையைக் குறைத்துக்கொள்ளுதல்
Reuse - இயன்றபோது மீண்டும் அதையே பயன்படுத்திக்கொள்ளுதல்
Recycle - மறுசுழற்சி செய்தல்
http://en.wikipedia.org/wiki/Recycling
கனடாவைச் சேர்ந்த ஜெயபாரதன் எனக்குத் தெரிந்தவர். திண்ணையில் அறிவியல் கட்டுரைகள் எழுதுபவர். அவருடைய வலைப்பதிவில் global warming தொடர்பான கட்டுரைகள் காணவும்:
jayabarathan.wordpress.com
அவற்றையும் உங்கள் கூட்டுமுயற்சியில் சேர்த்துக்கொள்ளலாம். அனுமதி வேண்டுமென்று நினைத்தால் அதை என் பொறுப்பில் ஒப்படைக்கவும்.
நன்றி சேதுக்கரசி!
சேட்துடுவோம்!
Post a Comment