உலகின் ஏழு புதிய அதிசயங்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுத்து அறிவுப்பு வெளி வந்தாச்சு.
முழு விவரங்கள் இங்க படிச்சிருப்பீங்க -- விலாவாரியா நம்ம சந்தோஷ், வெளக்கிருக்காரு பாருங்க - உலகின் புதிய அதிசயங்கள்.
இப்போ மேட்டர் இன்னான்னா, இதே போல், தமிழ் நாட்டில், பார்த்தே ஆக வேண்டிய டாப் 10 இடங்கள் என்னன்னு கண்டுபிடிக்கும் பொறுப்பை அதிகாரபூர்வமா என்னிடம் ஒப்படச்சுருக்காங்க.
(inspired by Discoveries Top 1000 places to see before you die ).
முதல் கட்டமா, இந்த டாப் 10 சர்வேயில் கலந்து கொள்ளத் தகுயுடைய இடங்களைப் பின்னூடுங்கள்.
( சந்தோஷ், உங்க தாத்தாவோட பழைய வீடெல்லாம் சேக்கப்படாது :) )
அப்பறமா, இணையத்தின் மூலம் சர்வே, தொலை பேசி, SMS போன்ற வகையராக்கள் மூலம் வாக்குகள் சேகரிச்சு (நான் பணக்காரனானதும்) ரிஸல்ட்ஸ் அறிவிக்கப்படும்.
பரிந்துரைகள் தொடங்கட்டும். மீஜிக் ஸ்டார்ட்ஸ்!
Jokes apart, மெய்யாலுமே, ஒரு விடுமுறைக்கு வந்தா, என்ன என்ன எடம் பாக்கலாம்னு ஒரு லிஸ்ட் சொல்லுங்க நண்பர்காள் :) தீவாளிக்கு வரோம்ல!
:)
29 comments:
திருவரங்கம் கோவில். அதன் பிரமாண்டத்துக்கும், உயர்ந்த அந்த கோபுரத்துக்கும். ஆத்திகராயினும், நாத்திகராயினும் கோவில் முழுவதும் சுற்றி வந்து அதன் பிரமாண்டத்தை ரசிக்க வேண்டும்.
1. சென்னை மெரினா கடற்கரை,
2. மகாபலிபுரம்,
3. தஞ்சை பெரிய கோவில்
4. மதுரை மீனாட்சியம்மன் கோவில்,
5.நாகூர் தர்கா,வேளாங்கன்னி சர்ச்
6. கன்யா குமரியில் அனைத்து இடங்களும்
7.கோடையில் ஓய்வெடுக்கும் இடங்கள் (ஊட்டி, கொடைக்கானல்)
8.திருச்சி மலைக்கோட்டை
9.கோவை மாநகர்
10. திருப்பூர் அல்லது ஈரோடு மாவட்டம் மேட்டூர்
தமிழ் நாட்டில், நான் பார்த்த, எனக்குத் தெரிஞ்ச டாப் இடங்கள்
1) மஹாபலிபுரம்
2) மெரினா
3) ப்ரஹதீஷ்வரர் ஆலயம், தஞ்சாவூர்
4) கன்யாகுமரி
5) வேடந்தாங்கல்
6) மதுரை மீனாஷி அம்மன் கோயில்
7) இராமேஸ்வரம்
8) ???? ஹ்ம் அவ்ளவா இன்னும் பாக்கல :(
கங்கை கொண்ட சோழபுரம்.
தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய ராஜ ராஜ சோழன் மகன் ராஜேந்திர சோழனால் கட்டப் பட்டது தான் இந்த கங்கை கொண்ட சோழபுரம்
http://en.wikipedia.org/wiki/Gangaikonda_Cholapuram
இதைப்போல முந்தி ஒரு லிஸ்ட் வந்துருக்கு.
இங்கே இருக்கு பாருங்க
பார்க்க வேண்டிய இடங்கள் என்று பட்டியல் இட்டால் இப்படி ஏராளமாக இருக்கு. அழகு, தொன்மை, மற்றும் குற்றாலம் மெரினா போன்று இயற்கையும் தவிர்த்து உலக அதிசயங்கள் மாதிரி தமிழ்நாட்டு அதிசயங்கள் என்று ஏதாவது ஒரு தனிச்சிறப்புக் கொண்ட இடங்களாக எனது 7 பட்டியல்....
1. தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் கோபுரம்,
2. ராமேஸ்வரம் கோவில் தாழ்வாரம்,
3. கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை,
4. சித்தன்னவாசல் ஓவியங்கள்,
5. பாம்பன் பாலம்,
6. மாமல்லபுரம் சிற்பங்கள்,
7. நாயக்கர் மகால் அல்லது கங்கை கொண்ட சோழபுரம் அல்லது செஞ்சிக்கோட்டை.
'சாவரதுக்கு முன்னாடி பாத்துடு' - இந்த அளவுக்கு நச்சுனு இருக்கும் இடங்கள் தமிழ் நாட்டுல என்னென்ன இருக்கு. வெறும் கோயில்கள் மட்டுமில்லாம, வேற அவ்ளவா வெளியில் தெரியாத இடங்களும் இருந்தா சொல்லலாம்.
சூப்பர் இடங்கள் எல்லாம் வருது. அனுப்புங்க தொடர்ந்து. நன்னி
'சாவரதுக்கு முன்னாடி பாத்துடு' - இந்த அளவுக்கு நச்சுனு இருக்கும் இடங்கள் தமிழ் நாட்டுல என்னென்ன இருக்கு. வெறும் கோயில்கள் மட்டுமில்லாம, வேற அவ்ளவா வெளியில் தெரியாத இடங்களும் இருந்தா சொல்லலாம்.
சூப்பர் இடங்கள் எல்லாம் வருது. அனுப்புங்க தொடர்ந்து. நன்னி
QMC,Stella mary's, ............( innum ennana sollaporenu unghaluke therinju irukum so appeetu)
1) ஊட்டிக்கு விடப்படும் ஃபேர்ரி குயீன் நீராவி ரயில் , இந்தியாவில் தற்போது இயங்கும் இரண்டு நீராவி ரயில்களில் ஒன்று யுனெஸ்கொ ஹெரிடஜ் சிம்பல்(மற்றது டார்ஜிலிங்க்)
2)பிச்சாவரம் சதுப்பு நிலக்காடு.
3)ஒக்கெனகல் நீர் வீழ்ச்சி
4)கச்ச தீவுக்கு அருகே உள்ள குருசு தீவு ஆன்டுக்கு ஒரு முறை தான் இந்தியர்களை அங்கே அனுமதிக்கிறார்கள் அங்குள்ள தேவாலயத்தில் வழிபட , இழந்த தீவைப்பார்ப்பது ஒரு பரவசம் தானெ!
5) கண்ணகி கோயில் இன் கம்பம் , கேரளாவின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அஙேயும் ஆண்டுக்கு ஒரு முறை சித்ரா பவுர்ணமி அன்று தான் அனுமதி!
6)செஞ்சி கோட்டை!
7) மேட்டுர் அணையில் மூழ்கி இருக்கும் ஜலகண்டேஷ்வரர் ஆலயம் , கோடையில் தண்ணீர் வற்றினால் தான் பார்க்கும் பாக்கியம் கிடைக்கும்!
8)திருச்சி முக்கொம்பில் உள்ள கல்லணை , சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்னர் கரிகால் பெரு வளத்தானால் கட்டப்பட்டது , வெறும் கற்களை வைத்து , இன்றும் உள்ளது, (எனக்கு உண்மையில் அக்காலத்ததா இல்லை கட்டுக்கதையா என்று சந்தேகம் கூட உண்டு)
9) மகா பலிபுரம்
10)நீலகிரியில் உள்ள சிங்க வால் குரங்குகள் சரணாலயம் அபூர்வமான பிராணியாம் உங்களுக்கு பிடிக்குமே
1. Mahabalipuram
2. Tanjavore Prahatheswarar Temple
3. Madurai Meenakshi Temple
4. Srivilliputtur Andal Temple (1500 yrs old)
5. Kanyakumari
6. Trichy Kallanai
7. Danuskodi & Rameswaram
8. Poombuhar
9. Kutrallam & Pabanasam
10.Top slip & Aliyar - pollachi
anony,
//QMC,Stella mary's, ............( innum ennana sollaporenu unghaluke therinju irukum so appeetu) //
இதெல்லாம், 'சாகரதுக்கு முன்னாடி' பாத்தா பத்தாது.
23 வயசுக்குள்ள பாக்க வேண்டிய இடங்களப்பா :)
அருமையான லிஸ்ட் சேந்துக்கிட்டு இருக்கு.
தொடரட்டும்.
மாசக் கடைசில சர்வே போட்டுடலாம்.
1.சென்னை கட்ற்கரை
2.கன்னியாகுமரி
3.மூணார்
4.திருச்சி மலைக்கோட்டை
5.தஞ்சை பெரியகோவில்
6.கங்கைகொண்ட சோழபுரம்
7.மாமல்லபுரம்
8.குற்றாலம்
9.கொடைக்கானல்
10.கல்லணை
முட்டம்
Pondichery ashram
and the Bar near the seashore ;)
//Pondichery ashram
and the Bar near the seashore ;) //
:) I agree.
Cyril,
//முட்டம் //
What place in முட்டம் ?
1. எட்டயபுரம் - பாரதி வீடும் பக்கத்திலிருக்கும் வீரபாண்டிய கட்டப்பொம்மன் கோட்டை - தூக்கிலிட்ட இடம்
2. கங்கை கொண்ட சோழபுரம் (அதன் வரலாற்றுப் பெருமைகளை படித்து விட்டு போக வேண்டும்)
3. திருக்குறுங்குடி - (நெல்லை மாவட்டம் வள்ளியூருக்கு அருகே இருக்கிறது)
4. டாப் ஸ்லிப் - பரம்பிக்குளம் சாங்சுவரி
5. கிருஷ்ணாபுரம்
6. ஊட்டி மலை ரயில் பயணம்
7. குற்றாலம்
8. கன்யாகுமரி
9. கும்பகோணத்துக் கோவில்கள் - தாராசுரம்
10. மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
அடியேன் போக வேண்டிய அவசியம் இல்லாத ஊர்களின் பட்டியல் ஒன்றையும் வைத்துள்ளேன். தேவைப்படுவோர் சுயவிலாசமிட்ட தபால் தலையுடன் தொடர்பு கொள்ளவும்.
list கொடுத்தவர்களுக்கு நன்றி!
மேலும் தொடரட்டும், எல்லாம் சேத்து ஒரு லிஸ்ட் போட்டுடரேன்.
நாகமலை புதுகோட்டை (மதுரை) அருகில் உள்ள சமண குடைவரைகள்
வெள்ளிக்கெழம சர்வே போட்ருவம்.
Hi
Trichy Iyappan koil
1. மதுரை மீனாட்சி அம்மன் கோவில்-சித்திரைத் தேர்-கள்ளழகர் வைகையாற்றில் இறங்குதல்.
2. தஞ்சை பிரஹதீஸ்வரர் கோவில்-கும்பகோணம் கோவில்கள்
3. கொடைக்கானல்-ஊட்டி(மேற்குத்தொடர்ச்சி மலை கோடை வாசஸ்தலங்கள்)
4.ஒகேனேக்கல் -குற்றாலம்-சுருளி அருவிகள்
5.சென்னை மெரீனா கடற்கரை-மயிலைக்கோவில்-நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில்-சென்னைப் புறநகர் மின்சார மாடி ரயில் பயணம்
6. திருச்சி மலைக்கோட்டை- திருவரங்கம்-திருவானைக்கோவில்
7.இராமேஸ்வரம்-தனுஷ்கோடி-இராமர்பாலம்
8. கன்னியாகுமரி-சுசீந்திரம்
9. காஞ்சிபுரம்-மாமல்லபுரம் சிற்பக்கோவில்கள்
10 வேலூர்-செஞ்சி கோட்டைகள்
சாகுமுன் கண்டிப்பாக டேஸ்ட் பார்த்துட வேண்டியவை:
கோவை அன்னபூர்ணா கௌரிசங்கர் சாம்பார் இட்லி,
நெல்லை சாந்திவிலாஸ் அல்வா, மதுரை ஆரியபவன் பை நைட் டிபன் அயிட்டங்கள்,
திருச்சி பனங்கல் கண்டு பால் ...
Hariharan, thanks for the list.
will comebine all and come up with top10 :)
திருவண்ணாமலை
ரமனாஷ்ரம்
பெசன்ட் நகர்
மயிலை கபாலீஸ்வரர்
1. Longest(widest) sea shore- Marina Beach
2. Mangrove Dense forests- Pichavaram near Chidambaram
3. ooty Botanical gardens
4. Congression of three oceans-Kanyakumari Tip.
5. Madurai Meenakshi amman for sculpture.
6. Chidambaram Nataraja Temple- Golden canopy over Lord & Bharatnatya mudras carved in stone
7. Vedanthangal Bird sanctuary.
8. Coutralam five falls.(Nature)
9. Pampan Bridge at Rmeswaram (Architecture)
10 Carved stone temple at Mahabalipuram.
bad anony, your comments were deleted :(
Post a Comment