recent posts...

Friday, April 13, 2007

I love movies. So, add to the list.

சினிமா பாக்கரதுதான் என்னோட இஷ்ட ஹாபி.

என்ன படமானாலும், முழுசா பாப்பேன்.

என்னடா பொழப்பு இது, 24 மணி நேரமும் லேப்-டாப்ல தட்டிக்கிட்டு, பேசாம 'க்ரியேடிவ்' field பக்கம் போய் ஏதாவது வேலை செய்லாம்னு தோணும்.

இந்த ஒண்ணுத்துக்கும் ஒதவாத $ தான் விடமாட்றது.

இயற்கையிலேயே ஒடம்புல ஊறிப்போன, 'பயந்து வாழ்தலும்' ஒரு பெரிய தடை. Risk எடுக்க பயந்துகிட்டு, 'comfort zone' விட்டு வெளியில் வராமல், அப்படியே வாழ்க்கை ஓடிடும்னு நெனைக்கறேன்.

சரி, பொலம்பல் எதுக்கு, விஷயத்துக்கு வருவோம்.

சமீபத்தில் பார்த்ததில் மிகவும் ரசித்த படங்கள் சில கீழ தரேன். அதே ரேஞ்சுல, வேற ஏதாவது must-see படங்கள் உங்க மனசுக்கு தோணுச்சுன்னா சொல்லுங்க. பாக்கணும்.

-> Mystic River (Clint Eastwood directed) - கலக்கலான படம். இளவயதில், abuse செய்யப்படும் Tim Robbinsன் நிலமையை விளக்கும் டக்கர் சினிமா.

-> Million $ Baby (Clint Eastwood directed) - நீங்களும் பாத்திருப்பீங்க. பல எதிர்பார்ப்புகளுடன் வரும் ஒரு பாக்ஸிங் வீராங்கனையின் வாழ்க்கையில் அடிக்கும் திடீர் திருப்பத்தத விவரிக்கும் அருமையான் ட்ராமா. கடைசியில் கண்ணில் ஈரம் சொட்டும்.

-> In the Bedroom - மகனை பறிகொடுத்த பெற்றோரின் நிலையும், அவர்களின் பழிவாங்கலும். டமால் டிமீல்னு இல்லாம, அமைதியான படம். பார்க்கவேண்டிய படம்.

-> Saving Private Ryan - (Steven Speilberg)அஞ்சு ஆறு தடவ பாத்தாலும், சலிக்காத படம். வீட்டிலிருக்கும், Yamaha receiver/Bose speaker காசு கொடுத்து வாங்கினது வீண் போகலன்னு ஞாபகப் படுத்தும் படம். குறிப்பா கடைசி 20 நிமிடம், யப்பா!!!

-> Finding Nemo (Pixar) - நீங்களும் பாத்திருப்பீங்க. கார்டூன்னா எனக்கு கொள்ளை பிரியம். அலாதீன்ல இருந்து, Shrek வரைக்கும் எல்லாம் பிடிக்கும்.

-> Childrens of the Heaven (Iranian) - கெடச்சா பாருங்க. ரொம்ப கவித்துவமான படம். அண்ணன், தங்கையின் செருப்ப தொலச்சுடுவான். அத தேடி ஓடரதும், அதனால் நடக்கும் விஷயங்களும், இனிமையா சொல்லிருப்பாங்க. Iran ஏதோ, வில்லங்கமான ஊருன்னு ஊடகங்கள் காட்டுது. இந்த படம் பாத்தீங்கன்னா, அங்க எவ்ளோ இனிமையானவங்க இருக்காங்கன்னு புலப்படும்.

-> அழகி (தங்கர்பச்சான்) - தமிழ்ல பல பெரிய gapக்கு அப்பறம் வந்த அருமையான படம். ஒவ்வொரு காட்சியும் சலிக்காத கோர்வை. அதுவும், க்ராமத்து பள்ளிக்கூட சீனெல்லாம், மனப்பாடமே ஆயிடுச்சு. இந்த மாதிரி படம் எடுங்கப்பா, பாத்துக்கிட்டே இருப்போம்.

-> Black (ஹிந்தி) - சில பேருக்கு பிடிக்கலன்னாங்க. ஓவர்-ஏக்டிங் மாதிரி இருக்காம். ஓவர்-ஏக்டிங் இருந்தாலும், அதுவும் ஒரு அழகுதான் இந்த படத்துக்கு. படத்துக்கு பெரிய +பாயிண்ட், ரவி.கே.சந்திரனின் ஒளிப்பதிவு. ராணி முகர்ஜி படிக்கும், கல்லூரி முன்னால் அமிதாப்பும், ராணியும் பேசும் காட்சி வரும். அடேங்கப்பா.

-> தனியாவர்தனம் (மலயாளம்) - cousin ரெகமண்ட் பண்ணினதால தேடிப் பிடிச்சு வாங்கி பாத்த படம். மம்மூட்டியின் அசத்தல் நடிப்பில் அட்டகாசமான படம். மெதுவாக நகரும், கடைசியில், திக்குமுக்காட வைக்கும்.

-> மூன்றாம் பிறை - கமல், ஸ்ரீதேவி நடிப்பு ஒருபக்கம். ராஜாவின் இசைக் கோர்வை ஒரு பக்கம். பாலுமகேந்திரனின் ஆளுமை ஒரு பக்கம். இப்படி எல்லாம் படமே இப்ப வரதில்ல. :(

(list will grow).

Please comment with similar movies you liked. follow my format, so its easy to copy/paste into my content.

நன்றி!

24 comments:

இராம்/Raam said...

//-> Childrens of the Heaven (Iranian) - கெடச்சா பாருங்க. ரொம்ப கவித்துவமான படம். அண்ணன், தங்கையின் செருப்ப தொலச்சுடுவான். அத தேடி ஓடரதும், அதனால் நடக்கும் விஷயங்களும், இனிமையா சொல்லிருப்பாங்க. Iran ஏதோ, வில்லங்கமான ஊருன்னு ஊடகங்கள் காட்டுது. இந்த படம் பாத்தீங்கன்னா, அங்க எவ்ளோ இனிமையானவங்க இருக்காங்கன்னு புலப்படும்.//

சர்வே,


அந்த படத்தை நானும் பார்த்துருக்கேன்... அதை பத்தி ஒரு பதிவே போடணுமிங்க... நல்ல படம் :)

மாறன் said...

ச‌ர்வேச‌ன்,

எல்லாம் சூப்பர் படங்க...

அதுல‌ மிஸ்டிக் ரிவர் என்னை ரொம்ப‌ கவர்ந்த படம். சைல்ட் மொல‌ஸ்டேஷன் ஒரு மனிதனை எப்படி பாதிக்கிறது என்பதை இதைவிட அருமையாய் சொல்லமுடியுமான்னு தெரியல...

ரொம்ப யோசிக்கவெச்ச படம். மூனு ஃப்ரென்ட்ஸ்ல ஒருத்தன மட்டும் கொடூரன் கொண்டுபோவதும். அவன் மட்டும் எப்படி அந்த நிகழ்சியின் தாக்கத்திலேயே வாழ்கிறான் என்பதையும், சமூகத்தில் எப்படியெல்லாம் வித்தியாசப்பட்டு போகிறான் என்பதையும் கிலின்ட் அருமையாக‌ படம்பிடித்துள்ளார்.

க்ளைமேக்ஸ்ல எனக்கு என்னமோ (நம்மவூரு டேஸ்ட் போல) கொன்னவன் மேல கோவம் வராம, போட்டுக்குடுத்த அந்த பெண் மேல அவ்வளோ கோவம் வந்துது...மிகச் சிறந்த படம்.

ந‌ம்ம‌ ஊருல‌ இந்த ச‌ப்ஜெக்ட்ட‌ யாரும் அவ்வ‌ள‌வா தொட‌ல‌. ஆனா ந‌ம்ம‌ ஊருல‌ தான் சைல்ட் மொல்ஸ்டேஷ‌ன் ரொம்ப‌ அதிகம் (ரென்டு நாளைக்கி முன்னால தட்ஸ் தமிழ்ல கூட படிச்சதா ஞாபகம்). இந்த‌ விஷ‌ய‌த்த‌ தைரிய‌மா சொல்ல‌ முன் வ‌ந்த‌ இய‌க்குன‌ர் செல்வ‌ராக‌வ‌னுக்கு (காதல் கொண்டேன்) என் வ‌ண‌க்க‌ம்.

~மாறன்

SurveySan said...

வாங்க இராம்.

தனி பதிவு வேற யாரோ போட்டு படிச்ச ஞாபகம். தேடிக் குடுக்கறேன்.

SurveySan said...

மாறன்,

மிகச் சரியா சொன்னீங்க. என்னையும் அந்த mystic river ரொம்ப ஈர்த்தது.
first-class team படத்துல.

இவனுங்க நடிக்கர மாதிரியே இருக்காது. அப்படியே வாழ்றானுவ படத்துல.

child molestation கொடுமையான விஷயம். படங்கள் மூலமா, அந்த வலி என்னன்னு தெரிய வச்சா, எதிர்ப்பும் வலுப்பெறும். நம்ம ஊருக்கும், இந்த கதைய உல்டா பண்ணி எடுக்கலாம்.

I am waiting for next Clinty movie? நீங்க சினிமா பத்தி எழுத ஆரம்பிச்சீங்க. ஆனா, பதிவு கொறஞ்சிடுச்சே?. அடிச்சு ஆடுங்க.

ப்ரசன்னா (குறைகுடம்) said...

இதுல எவ்வளவு பாத்துருப்பீங்கன்னு தெரியல. இருந்தாலும் சமீபத்துல பாத்ததுல எனக்கு பிடிச்சத சொல்றேன்.

1. Lives of Others (German)
2. Children of men
3. Illusionist
4. City Of God (Portuguese, I guess)
5. Glen Garry, Glen Ross
6. Scent Of a woman
7. American Beauty
8. Memento
9. Eternal Sunshine of the Spotless Mind
10. Hotel Rwanda
...........
goes on :-)

SurveySan said...

குறைகுடம்,

4. City Of God (Portuguese, I guess) - பாத்தாச்சு. விருவிருப்பான படம். ஒரு மாதிரி sepia color நல்லா இருக்கும்.

7. American Beauty - பாத்தாச்சு. ரொம்ப புடிச்சுதுன்னு சொல்ல மாட்டேன்.

9. Eternal Sunshine of the Spotless Mind - அட, போன வாரம் தான் முழுசா பாத்தேன். Jim Carreyன் வித்யாச முயற்சி வியக்க வைத்தது. படம் ஒரே சுத்தல்ஸ் :)

10. Hotel Rwanda - பாத்தேன். உண்மைக்கதை என்பதால், ஈர்ப்பும் அதிகம். பாவம், இவ்ளோ கஷ்டப்பட்டிருக்காங்க. ஹீரோ, poitier மாதிரி யாரையாவது போட்டிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்குமோ? வயசாயிடுச்சு poitierக்கு.

மற்ற படங்கள் பாக்கறேன் :)
நன்றி!

Radha Sriram said...

எனக்கு பிடித்த படங்கள்

1) The Sound Of Music
2) A PATCH of BluE
3) MR HOlland's OPus
4) Forrest GUmp
5) ROman HOlliday
6) Sabrina
7) To Kill a mocking Bird
8) Amadeus
9) Rain Man

தொடரும்.....!!

நெல்லை சிவா said...

ஓ..இவ்வளவு படங்கள் இருக்கா, பார்க்கிறதுக்கு.

ப்லாக்பஸ்டர் மெம்பர்ஷிப்ப, உருப்படியா உபயோகிக்க, இந்த ரெகமெண்டேஷன்கள் உதவும்.

SurveySan said...

Radha,

Good ones.

1) The Sound Of Music
பாத்தாச்சு. ஒரு சூப்பர் ஹிட் பாட்டிருக்கு ஈதுல. சட்டுனு ஞாபகம் வரமாட்டேங்குது.
'My Favourite Things' பாட்டு, எனக்கு ரொம்ப பிடித்தது.

4) Forrest GUmp
Tom Hanksக்காக எவ்ளோ தடவ வேணா பாக்கலாம். பிங் பாங் விளையாடர சீன் ஒன்னு ரொம்ப நல்லா இருக்கும்.

7) To Kill a mocking Bird
எல்லாரும் ஓஹோன்னு சொல்றாங்க இந்த படத்த பத்தி.. எனக்கு பெருசா ஒண்ணும் பிடிக்கல. நல்ல quality movie. Greogery peck நடிப்பு நச்சுனு இருக்கும். Bold movie.

8) Amadeus
ஆஹா. என் லிஸ்ட்ல விட்டுப் போச்சு. சூப்பர் படம். குறிப்பா, Mozart சாகரத்துக்கு முன்னாடி படுக்கைல இருந்துகிட்டு ஒரு composition dictate பண்ற சீன். யம்மாடி. அந்த backround score தூள் ரகம்.

மத்த படங்களை பாக்கறேன். நன்றி.

SurveySan said...

வாங்க நெல்லை சிவா.

ஆமாங்க, பல படங்கள் கிடைக்குது பாருங்க.

உங்க விருப்ப படங்கள் சொல்லலியே?

Anonymous said...

Schindlers List,
Phenomenon,
Gladiator,
Apollo13,
Mullum Malarum,
Nayagan,
Pudhia Paravai,
Karnan,

list goeso on.

பாரதிய நவீன இளவரசன் said...

எனது யூகத்தில் டாப் டென் தமிழ் படங்கள்:

எதிர் நீச்சல்
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
சில நேரங்களில் சில மனிதர்கள்
உதிரிப்பூக்கள்
அழியாத கோலங்கள்
அவள் அப்படித்தான்
முதல் மரியாதை
மௌன ராகம்
நாயகன்
அழகி

மேலும் சினிமா விமர்சனம் பற்றி எனது வலைப்பதிவில்:
http://bharateeyamodernprince.blogspot.com/2006/04/blog-post_13.html

வல்லிசிம்ஹன் said...

Raindrops on roses and whiskers on kittens

Bright coper kettles and
and warm woolen mittens
Brownpaper paCkages rounded with strings

These are a few of my favourite things:-0
Gloves in my dresses with blue satin tresses
Snowflakes that lay on my nose and eyelashes

இப்படி அருமையாகப் போகும் அந்த அழகியப் பாடலுக்காக எத்தனை தடவை

சௌண்ட் ஆஃப் மியூசிக்
பார்த்திருப்பேனோ!!

என்ன இனிமை!!

When the dog bites
when the bee stings
when I am feeling sad,
I smply remember my favorite things
andthen I don't feeeeeeeeeeeel sooooooooooo
saaaaaaaad:-)
thank you once more surveysan.

and I remembered one more old movie,
ANASTASIA

STARRING YUL BRYNNAR
AND INGRID BERGMAN.

பழைய நினைவுகளைத் தொலைத்த
நோய் உடலை வாட்டும் ஒரு ரச்ஷ்யன் ரஜகுமாரி.
அவளைப் போலி என்று நினைத்து அவளை வைத்துப் பணம் சம்பாதிக்க நினைக்கும் பீட்டர்.

பாரிசில் முடியும் இந்தப் படம் (1957) இன்ச் பை இன்ச் ரசிக்கப் பட வேண்டியது.

the suave Brynner and the majestic bergman magic.

படம் கிடைத்தால் பாருங்கள்.
மற்ற படங்கள்.

1,மிசியம்மா
2,மாயா பசார்
3,மேக்கென்னாஸ் கோல்ட்,
4,Spell bound
5,Butch cassidy and Sundance Kid
6,terrance hill,bud spenser team
movies
7,புன்னகை மன்னன்
8,இருமலர்கள்,
9,பாமாவிஜயம்,
வீட்டுக்கு வீடு
11,காதலிக்க நேரமில்லை
12 தூக்குதூக்கி(சிவாஜி,பத்மினி)
13,தில்லானா மோகனாம்பாள்.
கடைசியா இங்கே பார்த்த the Queen,
14,FUGITIVE( harrison ford&tommy lee jone)
innum pattiyal romba long.
iththoda niruththikkaren.:-)

SurveySan said...

prince,

உங்க பதிவு படித்தேன். நல்ல லிஸ்ட் போட்டிருக்கீங்க.

உங்களுக்கு பின்னூட்டத்துல சொன்னத இங்கயும் போடுறேன்.

//
prince,

நெஞ்சில் ஓர் ஆலயம், என் லிஸ்டில் சேர்க்க மறந்த ஒரு fantastic and technically stunning movie.

அந்த மாதிரி touching மூவி அதுக்கப்பறம் வந்ததான்னு தெரியல.
//

SurveySan said...

prince,

எதிர் நீச்சல் --- ஜாலியான படம்.
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் -- பாக்கல.
சில நேரங்களில் சில மனிதர்கள் -- லக்ஷ்மியின் யதார்த்தம் நல்லா இருக்கும்.
உதிரிப்பூக்கள் -- சின்ன வயசுல பாத்தது. இன்னொரு தடவ பாக்க ட்ரை பண்றேன். படம் கிடைக்கல. பாடல்கள் ஒவ்வொன்றும் முத்துக்கள்.
அழியாத கோலங்கள் -- பாத்த ஞாபகம் இல்ல. பாடல்கள் நல்ல பாடல்கள்.
அவள் அப்படித்தான் -- தைரியமான படம். சுஜாதா தான? ஜேசுதாஸ் பாட்டு, காலத்தால் அழியாது.
முதல் மரியாதை -- சிவாஜி நடிச்ச படத்துல ரொம்ப புடிச்சது.
மௌன ராகம் -- ஆஹா, ராஜா background scoreக்காக எவ்ளோ தடவ வேணா பாப்பேன். மோகன் நடிச்சதுல புடிச்சது.
நாயகன் -- அசத்தல் படம். நமது ரசனையை பெரிய அளவில் மாற்றிய படம்.
அழகி -- அழகு.

SurveySan said...

வல்லிசிம்ஹன்,

Anastasia கடச்சா பாக்கறேன்.

1,மிசியம்மா -- சாவித்ரி எனக்கு ரொம்ப பிடிக்கும். வெரி க்யூட்.

2,மாயா பசார் -- நானும் ரொம்பவே ரசிச்ச படம். இப்ப பாத்தா பிடிக்குமான்னு தெரியல.

3,மேக்கென்னாஸ் கோல்ட், -- ஓ.யா!

7,புன்னகை மன்னன் -- டு டு டு டூ டு டூ டூ டூ டு டூ டூ டு டூ - மறக்க முடியுமா.

9,பாமாவிஜயம், -- சௌகாரின் அலட்டல் சூப்பர்.

11,காதலிக்க நேரமில்லை -- ஊட்டி அழகு இன்னும் மனசுல இருக்கு.

14,FUGITIVE( harrison ford&tommy lee jone) -- விறு விறு படம்.

நன்றி. பாக்காததை பாக்கறேன் :)

தென்றல் said...

நம்ம கிட்டயும் ஒரு பெ..ரி..ய்ய்.....ய... லிச்ட் இருக்குங்க, Surveyசன்!

உடனே நினைவுக்கு வருவது...

1.பாச மலர்
2.பாவ மன்னிப்பு
3.தில்லானா மோகனாம்பாள்.
4.சர்வர் சுந்தரம் (வசனம்: கே.பா)
5.உதிரிப்பூக்கள்
6.முள்ளும் மலரும்
7.மறுபடியும் (குறிப்பாக இறுதிக் காட்சி)
8.மகாநதி
9.தேவர் மகன்

என்னுடைய லிச்ட்-லில் இருக்கும் மலையாளம் படங்கள்:
1. அமரம் (மம்மூட்டி)
2. Kaazhcha (Dir: Blessy's Debut)
3. Thanmathra (Dir: Blessy)
4. Achanurangaatha Veedu (Lesser known actor Salim Kumar got a major award for this one.)
5. Classmates (Biggest hit of 2006.)
6. Unnigale Oru Katha Parayam (1980s. Hero: Mohanlal)
7. Perumazhakaalam (National award for Meera Jasmine, Kaavya Maathavan)
8. Karutha Pakshigal (Mammooty)

ஆங்கிலத்தில்
1.Phildelphia
2.Pretty Woman
3.Pay it forward
4.Erin Brockovich
5.The Hurricane
6.Turner & Hooch
7.A Few Good Men
8.The Truman Show
9.Bruce Almighty

(இன்னும் வளரும்..)

'உதிரிப்பூக்கள்' கிடைத்தால் தெரியப்படுத்துகிறேன்!

அமரம், Achanurangaatha Veedu, Perumazhakaalam ம் பார்த்தேன். ம்ம்ம்... படம் பார்த்துட்டு சொல்லுங்க...

தமிழ் படங்களாம் இதுமாதிரி வர இன்னும் எத்தனை வருடம் ஆகுமோ?

SurveySan said...

தென்றல்,

நீங்க சொன்ன எல்லா தமிழ், ஆங்கிலப் படமும் பாத்திருக்கேன்.
Truman Show was a interesting movie.

(btw, GodFather விட்டுப்போச்சு எல்லார் லிஸ்ட்லேயும். இந்த லிஸ்டுக்கெல்லாம் அப்பார்பட்டது அது :) )

மலையாளப் படங்களில், பெருமழக்காலம் பாத்துட்டேன். தனிப் பதிவே போட்டிருக்கேன் அதைப் பற்றி.

அச்சன் உறங்காத வீடும் பாத்தேன். I was not impressed.

மற்ற படங்களும் பாக்கறேன் :)

Santhosh said...

சர்வேசன்,
நானும் உங்க கேட்டகிரி தான் கார்டூன் அப்படின்னா கொள்ளை இஷ்டம்.
1. Ice Age 1 & 2 பாத்துட்டு விழுந்து விழுந்து சிரிக்காட்டி ஏன்னு என்கிட்ட கேளுங்க.
2. Over the edge.
3. Troy
4. முகவரி
5. Mr.Bean
6. Transporter
7. Body Guard from beijing.

Anonymous said...

Veerachaami.

SurveySan said...

சந்தோஷ், நல்ல லிஸ்ட்.

1. Ice Age 1 & 2 பாத்துட்டு விழுந்து விழுந்து சிரிக்காட்டி ஏன்னு என்கிட்ட கேளுங்க. ---பாத்துட்டேங்க. ரே ரொமானோ வோட கொரல் யானைக்கு கச்சிதம்.கூட ஒரு ப்ராணி சுத்துமே (meer cat?) அதோட கொரலும் சூப்பர்.

3. Troy - அவ்ளோ பிடிக்கல எனக்கு. இந்த மாதிரி படங்களில் gladiator மிஞ்ச அடுத்த படம் வரல.


மற்ற படங்களை பார்க்க முயற்ச்சிக்கிற்றேன்.

SurveySan said...

அனானி,

வீராச்சாமி? யூ மீன். வீராச்சாமி?
யூ ரியலி மீன் வீராச்சாமி?

படம் பாக்கர ஆசையே போயிடுமே,அதெல்லாம் பாத்தா :)

டி.ஆரோட பழைய படங்கள் மிகவும் பிடிக்கும். குறிப்பா, ஓரு தலை ராகம்.
அவரோட பாடல்களும் பிடிக்கும்.
ஆனா, அவரத்தான் பிடிக்காது :)

பாலராஜன்கீதா said...

// அவள் அப்படித்தான் -- தைரியமான படம். சுஜாதா தான? ஜேசுதாஸ் பாட்டு, காலத்தால் அழியாது. //
சர்வேசன், அவள் அப்படித்தான் ருத்ரையா இயக்கம் கமல் ஸ்ரீபிரியா ரஜினி நடித்தது

http://sinnakuddy.blogspot.com/2007/04/blog-post.html

நீங்கள் நினைத்துக்கொண்டிருப்பது அவள் ஒரு தொடர்கதை ? :-)))

SurveySan said...

சும்மா....