recent posts...

Wednesday, April 04, 2007

2 முக்கிய தீர்ப்புகள் + செ.ரவி விருப்ப 'தமிழ்மண' சர்வே

இட ஒதுக்கீடு பிரச்சனைக்கான தீர்வு, பாக்கிஸ்தான் செய்யும் பொருளை வாங்கலாமா, சிவாஜி பாட்டு காசு கொடுத்து வாங்குவீங்களா என்ற மூன்று சர்வேக்களின் ரிஸல்ட்ஸ் கீழே அலசப்படுகிறது. அது தவிர, செந்தழல் ரவியின் விருப்பமாக, தமிழ்மணத்தின் 40+ பின்னூட்ட லிமிட் உங்களுக்கு பிடிச்சிருக்கா, தொடர்ந்து அது இருக்கணுமா என்றும் ஒரு புது சர்வே கீழ இருக்கு.

1) இடஒதுக்கீடு பிரச்சனைக்கு தீர்வு என்ன என்று மக்கள்ஸை கேட்டதர்க்கு பதில் சொல்லிட்டாங்க.

சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வேணுமா, இல்லை பொருளாதார அடிப்படையில் வேணுமா என்ற கேள்விக்கு, பொருளாதார அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு இருக்க வேண்டுமென்று பெரும்பான்மையானவர்கள் (44%) கருத்து தெரிவித்துள்ளார்கள்.
29% சாதி அடிப்படையில்தான் இட ஒதுக்கீடு அமைய வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.
26% இட ஒதுக்கீடு சரியான ரிஸல்ட்ஸ் தரல. வேற ஏதாவது யோசிச்சு செய்யணும்னு சொல்லிருக்காங்க.
மொத்தம் 102 வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதில் ஒரு நல்ல விஷயம், யாரும் ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பாளி இல்லை. ஒடுங்கியவனுக்கு நன்மை விளையணும்னு தான் 100% ஆளுங்க நெனைக்கறோம். வழிமுறைகளில் தான் மாற்றுக் கருத்து இருக்கு.

என் personal கருத்து - நானும் பெரும்பான்மையான கருத்துடன் ஒத்து போகிறேன். நான் இந்த டாப்பிக்ல கொஞ்சம் வீக்கு.
என்னைப் பொறுத்தவரைக்கும், ஏழையா இருக்கரவனுக்கு வாழ்வதர்க்கு வழி அமைத்துத் தரணும்.
அவன் எந்த சாதியானாலும், அவனிடம் மெரிட் இருந்தாலும் இல்லாமல் போனாலும் இதை தாமதிக்காமல் செய்யணும்.
பாவங்க ரொம்ப காலமா கஷ்டப்படறாங்க. சாக்கடை சுத்தம் பண்ணி பிழைப்பவனுக்கும், மூட்டை தூக்கி உழைப்பவனுக்கும், கல்லுடைத்து கஷ்டப் படறவனுக்கும், அடுத்த வேளை உணவே கேள்விக்குறியாக இருப்பவனுக்கும் சீக்கிரம் நன்மை நடக்கணும்.
Enough of this bloody dirty politics crap.
பொருளாதார அடிப்படையில் ஏன் ஒதுக்கீடு இருக்கக் கூடாது, சாதியின் அடிப்படையில் ஒதுக்கீடு கொடுத்து ஏன் சாதியை இன்னும் தூக்கிப் பிடித்து சாதிக்கு சாகா-வரம் தரவேண்டும் என்று எந்த பதிவிலும் யாரும், இதுவரை உருப்படியா சொன்ன மாதிரி தெரியல. (no கும்மீஸ் here please :) ).

ஒடுக்கப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு ‍- என்ன தான் தீர்வு -- RESULTS

2) இவ்ளோ காலமா, ஷாப்பிங் போற எடத்துல, ஒரு பொருள் made in pakistanஆ இருந்தா, தேள் கொட்டின மாதிரி அதை எடுத்த எடத்திலேயே தூக்கிக் கடாசும் பழக்கம் இருந்தது. pakistan பொருள் மட்டும் இல்லை, பாக்கிஸ்தானியின் உணவகம், அவர் சம்பந்தப்பட்ட எதுவாயிருந்தாலும், இந்த தேள் கொட்டின எபெக்ட் தான்.
அவனுங்க நம்ம விரோதிங்க என்பது, brain-wired செய்யப்பட்டதால் இந்த வினையோ?
Made in Pakistan - பொருள் வாங்குவது O.Kவா என்று மக்கள்ஸை கேட்டதர்க்கு,
59% கண்டிப்பா வாங்கலாம் என்றும்,
37% வாங்கக் கூடாது , இது தேசத் துரோகம்னு சொல்லியிருக்காங்க.
மொத்த வாக்குகள்: 90

என் personal கருத்து - 59% ஆளுங்க தப்பில்லன்னு சொல்றீங்க. ரொம்ப சந்தோஷம். ஆனா, உங்க பேச்ச கேட்டு நான் ஒரு டீ-ஷர்ட் வாங்கி மாட்டிட்டு, நாளைக்கே கார்கில் மாதிரி அவனுங்க mis-adventure பண்ணா என்ன பண்றது? அந்த டீ-ஷர்ட் போடவே கூசுமே அதுக்கப்பறம். ( என் பாக்கி நண்பர்கள் ரொம்ப நல்ல பசங்கதான். நல்ல வேளையா அவனுங்களுக்கு தமிழ் படிக்க தெரியாது. என்னது? நான் எழுதரது தமிழ் இல்லியா? தங்கிலீஷா? அது சரி! :) )
so, இப்போதைக்கு நான் 37% ஆளுங்க வழியே பின்பற்றலாம்னு இருக்கேன் :)

'மேட் இன் பாக்கிஸ்தான்' பொருள் வாங்குவீங்களா? - RESULTS

3) சிவாஜி படப் பாடல்கள், காசு கொடுத்து வாங்குவீங்களான்னு கேட்டிருந்தேன்.
No Surprises here.
61% ஆளுங்க, "காசா? நானா? ஹிஹி. ஒன்லி திருட்டு MP3 தான்," அப்படின்னு அடிச்சு சொல்லிருக்கீங்க.
மொத்தம் 94 வாக்குகள் பதிவாயிருக்கு.

ஆமா, சி.டி ரிலீஸ் ஆயாச்சே, காசு கொடுத்து வாங்கினவங்க, பின்னூட்டுங்க பாக்கலாம். download பண்ணவங்களும் ஒரு உள்ளேன் ஐயா சொல்லுங்க.

என் personal கருத்து - இதெல்லாம் இரத்தத்துல ஊறிடுச்சுங்க. இன்னும் ரெண்டு தலைமுறை தாண்டினாதான் இந்த கேப்மாறித்தனம் மாறும்.
RDO office, ரோட்டோர ட்ராபிக் மாமா, Registrar office, கல்லூரி சீட்டு, இங்கயெல்லாம் லஞ்சம் கொடுக்கரது எப்படி, சாதாரண மேட்டர் மாதிரி ஒரு தொனி உருவாயிடுச்சோ, அதே மாதிரி 'திருட்டு வழி' எங்கயெல்லாம் சுலபமா இருக்கோ, அதையெல்லாம் உபயோகிக்க நமக்கு கூச்சமே இல்லாம அல்வா சாப்பிடர மாதிரி ஆகிட்டு வருது.
இந்த திருட்டு mp3, வி.சி.டி எல்லாம் எம்மாத்திரம்?
வேணும்ணா, ரஜினி, ஷங்கர், கமல், மணிரத்தினம் மாதிரி ஆளுங்க சேர்ந்து லஞ்சத்த ஒழிக்க ஏதாவது பெரிய அளவுல social-service பண்ணட்டும், அப்பறம் வேணா நம்ம பயலுவ யோசிச்சு திருட்டு mp3 சுடரத நிறுத்துவாங்க.
வாழ்க பாரதம் :)

சிவாஜி படப் பாடல்கள் - சர்வே RESULTS

4) இப்ப செந்தழல் ரவி மேட்டருக்கு வரேன்.
தமிழ்மணத்துல ஒரு பதிவுக்கு 40 பின்னூட்டங்களுக்கு மேல வந்துட்டா, முகப்புலேருந்து தூக்கிடறாங்க.
வெறும் 'ஜல்லி' மட்டும் அடிக்கர பதிவுகள பில்டர் செய்ய இது நல்ல வழிதான்.
ஆனால், பாட்டுக்கு பாட்டு மாதிரி, உலக மக்களுக்கு மிகவும் தேவையான பதிவுகள் எல்லாம் 40+ லிமிட்னால வெளிச்சம் கெடைக்காம கஷ்டப் படுது :).
அது தவிர, கொஞ்சம் லேட்டா வந்தா, சில நல்ல பதிவுகள் கண்ணில் படாமலேயே கூட போயிடுது. (வேற பக்கத்துல அத காட்டினாலும், யார் அங்கயெல்லாம் போய் பாக்கராங்க? முகப்பு முகப்புதான்.)
தமிழ்மணம் இந்த 40+ நிலையை தொடரணுமா? உங்கள் கருத்த கீழ தட்டுங்க.




ஜெய்ஹிந்த்!

(பின்னூட்டுங்க. கமெண்ட் மாடரேஷன் இல்ல, சோ, யோசிச்சு ஊட்டுங்க, ப்ளீஸ். நன்றி)

20 comments:

SurveySan said...

செ.ரவி, நம்ம சர்வே ரிஸல்ட பாத்து, 40+ல ஏதாவது மாற்றம் வந்துட்டா, எனக்கு சேர வேண்டியத, பதிவர் சந்திப்பின் போது வாங்கிகறேன் :)

(கள்ள ஓட்டு கணக்கு பாக்கணுமா இதுக்கு?)

வெற்றி said...

க.க,

"கண்டிப்பா தேவை"

மேலே உள்ள தெரிவுக்கு நான் குத்தியாச்சு. 40 கூடிவிட்டது. பின்னூட்டங்களின் உயரெல்லையை 25 ஆக வைத்திருக்கலாம் என்பதே என் எண்ணம். இந்தத் தெரிவையும் கருத்துக்கணிப்பில சேர்த்துக் கொள்ளுங்கள்.

SurveySan said...

25ஆ? 100 வச்சா சரியா இருக்கும் என்பது என் எண்ணம் வெற்றி :)

SurveySan said...

2 ன்னு த்லைப்பு வச்சு 3 தீர்ப்பு சொல்லிட்டேனோ?. தலைப்ப இனி மாத்த முடியாது.
தெய்வ குத்தம் ஆகாம இருந்தா சரி :)

Anonymous said...

இதுவரை எத்தனை ஓட்டு விழுந்தது என்ற விவரம் தாருங்கள்...

காரணம் நான் ஒட்டு குத்திய பிறகும் % மாறாமல் அப்படியே நிலையாக இருக்கிறது...

SurveySan said...

ரவி, 45 பேர் போட்டுருக்காங்க.

திரும்ப ட்ரை பண்ணிப் பாருங்க.

அந்த pc உபயோகித்து வேற யாராவது ஓட்டு போட்டிருப்பாங்களோ?
உங்க proxy ipலேருந்து, நீங்க போட ட்ரை பண்ண அதே நேரத்துல, வேற ஒருவரின் ஓட்டு விழுந்திருந்தாலும், இதே நிலை வரலாம். 'கொஞ்ச' நேரம் கழிச்சு ட்ரை பண்ணினா வர்க் ஆகும்.

கதிர் said...

உள்ளேன் அய்யா

SurveySan said...

தம்பி,
ஆஆஆஆஆஆஆ, யூ டூ?

Anonymous said...

//ஏன் சாதியை இன்னும் தூக்கிப் பிடித்து சாதிக்கு சாகா-வரம் தரவேண்டும் என்று எந்த பதிவிலும் யாரும், //


You mean to say "RESERVATION is the main cause for CASTE Separatism "..

Great!! Wonderful thought!

It shows who you are! Better remove your mask !!

SurveySan said...

சேரன்,

//You mean to say "RESERVATION is the main cause for CASTE Separatism "..
Great!! Wonderful thought!
//

uh oh. No சேரன். I meant to say, if we keep CASTE as the base for reservations, the 'divide' among us in the name of caste will never die. The hatred amongs CASTES will only increase - is that we want?

//It shows who you are! Better remove your mask !!
//
அடப்பாவமே? who am I? I am a 'சராசரி' and I totally give a damn for this CASTE crap. :)

Stop branding people, just based on their opinion.

Anonymous said...

No Surveysan,

I am not branding you! It is not my intention also.

See, If you implement economy based alone, then main purpose of social equality will not exist. "RESERVATION IS NOT POVERTY ERADICATION PROGRAME" - It is for social equality. Better do not confuse both.

My suggestion will be

Implement Caste based Reservation with Creamy layer. Mean, Say no to Wealthy people.

Hope you got my point.

SurveySan said...

சேரன், thanks for the clarification :)

We definitely need to throw out Creamy layers (கிருமி லேயர், as, செ.ரவி puts it).

but, why should we bring CASTE into it? why not ALL poors get the benefit?

thats what I dont understand.

Who is losing and who is gaining, if we throw out CASTE from the equation?
some claim, the 2% brahmins shouldn't reap any benefits because they were the 'bad guys', who caused this divide in the past 1000 years - isn't that a silly argument? :)

( btw, i am not a brahmin :), if it will help support my argument )

We, creamy layers, to should voluntarily step aside and let way for the really suffering poors.

Anonymous said...

Surveysan,

It is not abt 2%. (BTW do you have any data for this? :) )

I am talking for the whole nation.

Better read Dharumi's post. It will give more visibility in this issue.

Perhaps, you will understand, We not just making noise, we have something in it.

Pls apologize if my words hard on you!

Thanks
சேரன்

SurveySan said...

சேரன், no worries.
I am also trying to understand, why this issue has not settled down after all these years.

தருமி பதிவு தேடிப் படிக்கிறேன்.

2% or 20% - Why should we focus to filter out the so called 'higher caste' POORS?

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்
நாண நன்னயம் செய்வதுதானே?

என்னமோ போங்க :)

தருமி பதிவு படித்து விட்டு, புரிதல் கிடைத்ததா இல்லையா என்று இன்று இரவுக்குள் சொல்கிறேன் :)

SurveySan said...

சேரன்,
தருமி பதிவுகளில், இட ஒதுக்கீடு ஏன் வேண்டும் என்ற வாதங்கள் பார்த்தேன்.
இடஒதுக்கீடு கண்டிப்பாக கொடுக்கப்படல் வேண்டும் என்பதே என் நிலையும்.

ஆனா, அதை ஒருவனின் சாதியை வைத்து ஏன் தீர்மானிக்க வேண்டும் என்றுதான் எனக்கு இன்னும் புலப்படலை. அவர் பதிவிலும், அதற்க்கான விளக்கம் கிடைக்கல.

மற்ற சிலர் எழுதியிருப்பதை பார்த்தேன். உயர் பதவிகளில், பெரும்பான்மை, ப்ராமணர்கள் இருப்பதால், அதை மாற்றவே, இட ஒதுக்கீடு அவசியம் என்பது போல் எழுதியிருக்கிறார்கள்.

சரி, அப்போ, பொருளாதார அடிப்படையில் வ்ழங்கினால், ஏழை ப்ராமணன் முன்னுக்கு வந்து பெரிய பதவிய புடிச்சுடுவான்னு பயமா? என்னய்யா வாதம் இதெல்லாம்?

உண்மையில் ஏழ்மையில் இருப்பவன், போராடி, முன்னுக்கு வந்தால் வந்து விட்டுப் போகட்டும், அவன் ப்ராமணனா இருந்தா என்ன, ஹரிஜனா இருந்தா என்ன?

(ஓ, வர்ணாஸ்ரமம் கொண்டு 1000 வருஷம் ஆட்டிப் படச்சதுக்கு பழி வாங்கணுமா?)

கிண்டலுக்கு சொல்லல, திடமான, 'மனிதம்' அடிப்படையில், யாரும், ஒரு நல்ல பாயிண்ட் கூட சொல்லல. சும்மா, அவன் செஞ்சான், நான் செய்வேன்ற ரீதில ஏட்டிக்கு போட்டி பாயிண்டா தான் இருக்கு, எல்லார் சொல்றதும்.

மொத்தத்துல, உருப்பட மாட்டோம் :)

நான் சர்வேஸோட நிறுத்திக்கறேன். இந்த புரியாத புதிரெல்லாம் எனக்கு வேண்டாம்.

என்னால் முடிந்தது, இல்லாதவர்க்கு, direct-help செய்வது. முடிந்தவரை அதையாவது ஒழுங்கா செய்யறேன் :)

Santhosh said...

ரொம்ப நாள் கழிச்சி உள்ளேன் அய்யா :))

SurveySan said...

வாங்க சந்தோஷ்,:)

67 votes so far

மணிகண்டன் said...

இதுவரைக்கும் 48% பேர் தேவையில்லனு பொலம்பியிருக்காங்க. நானும் கும்பலோட சேர்ந்துக்கறேன். எப்பவும் ஜெயிக்கற கூட்டனில இருக்கனும்ல :)

SurveySan said...

மணிகண்டன், 50:50 ரெஞ்சுல தான் போகுது. இப்படியே போனா, 40 strongஆ நின்னுடும் :)

SurveySan said...

neck to neck போகுதே?

கொல வெறியோட யாரும் வந்து குத்தலியா?