recent posts...

Saturday, April 28, 2007

ஒரு மலையாளப் பாட்டும், எனக்குப் பிடித்த ஐய்யப்பன் பாட்டும், இட்லியும் பொங்கலும் சுக்கு காப்பியும்...

கேரளாவில் குருவாயூரப்பன் மிகப் ப்ரசித்தின்னு எல்லாருக்கும் தெரியும்.

அந்த குருவாயூரப்பனை பற்றிய அழகான குறும்பாடல் ஒன்று மலையாளத்தில் உள்ளது. கேட்டிருப்பீங்கன்னு நெனைக்கறேன்.
'செத்தி மந்தாரம் துளசி' (chethi mandaram thulasi) என்று தொடங்கும் அருமையான பாடல்.
சுஜாதா பாடியுள்ள அதன் ஒலிவடிவம் இங்கே இருக்கு. கேட்டா சொக்கிப் போயிடுவீங்க.

----------- ----------- -------------
ஷக்தி, தனக்கு இந்த பாட்டு ரொம்ப புடுக்கிம்னு சொல்லி அவங்க பாடினத அனுப்பியிருக்காங்க. அதன் ஒலி வடிவம் இங்கே.

ஷைலஜாவும் இந்த பாட்ட அழகா பாடி அனுப்பியிருக்காங்க. அது இங்கே.
----------- ----------- -------------

இந்த பாடலின் ஒரிஜினல் ஒலிவடிவம் தேடும் போது, எனக்கு மிகவும் பிடித்த ஐய்யப்ப சுவாமியின் பக்தி கானம் கண்ணில் பட்டது.
"தேடி வரும் கண்களுக்கு ஓடி வரும் சுவாமி" என்ற இந்த பாடல் சொக்க வைக்கும் ரகம். பள்ளிக் காலத்தில் என் வீட்டிலும், நண்பர்கள் வீட்டிலும், ஊர் கோவிலிலும் நடக்கும் ஐய்யப்ப பூஜைகள் நினைவுக்கு வந்தது.
ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்! $க்காக ரொம்பவே விஷயங்கள் மிஸ்ஸ்ஸ்ஸ்ஸ் பண்றோம். என்னமோ போங்க!
(குறிப்பா, பூஜை முடிந்ததும் கிடைக்கும், இட்லியும், பொங்கலும், சுக்கு காபியும். அடேங்கப்பா, என்ன சுவையா இருக்கும்).

ஐய்யப்ப பாடலின் தமிழ் வடிவம் கிடைக்கல. மேலே சொன்ன மலையாள பாட்டின் ஆல்பத்திலேயே, சுஜாதாவின் குரலில் அந்த பாடல் இங்கே. ரொம்ப அழகா பாடியிருக்காங்க.

அதையும் கேளுங்க. ஜோதியில் ஐக்கியமாவுங்க.

வேற யாராவது பாடி இந்த பாடல்களை அனுப்பினா, நேயர் விருப்ப பகுதியில், அரங்கேற்றம் பண்ணிடலாம்.

குருவாயூரப்பா!! சுவாமி சரணம்!

:)

பி.கு1: யாராவது கேரளா போயிட்டு வந்தா, இந்த சி.டி ஆல்பம் வாங்கிட்டு வாங்க மக்கள்ஸ். சுவாமி மேல பாரத்த போட்டு, mp3ய அனுப்பி வைங்க. :)

பி.கு2: Latest Survey பாத்தீங்களா? குழலி என்ன சொல்றார்னும் பாருங்க.

பி.கு3: கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே, VSK, சர்வேசன், ஷக்தி குரல் வண்ணத்தில் கேட்க்க இங்கே சொடுக்கலாம்.

பி.கு4: பாட்டுக்கு பாட்டு 24th பாடல் செ.ரவி பாட இன்னும் வரல. வேற யாராவது மேடை ஏறி பாடரதா இருந்தா, பாடிட்டு பாடல அனுப்புங்க. விவரங்கள் இங்கே.

:)

18 comments:

Anonymous said...

I have the 2nd song dude, but in tamil.
what is your mail id?

SurveySan said...

தன்யனானேன்.

surveysan2005 at yahoo.com

துளசி கோபால் said...

பாட்டின் வரிகள் உங்களுக்காக.

செத்தி மந்தாரம் துளசி பிச்சக மாலகள் ச்சார்த்தி
குருவாயூரப்பா நின்னே கணிகாணேனம்

மயில் பீலி ச்சூடிக்கொண்டும், மஞ்ஞத்துகில் ச்சுற்றிக்கொண்டும்
மணிக்குழலூதிக்கொண்டும் கணிகாணேனம் (2) (செத்தி)


வாகச்சார்த்துக் கழியும்போள் வாசனப்பூ வணியும்போள்
கோபிகமார் கொதிக்குன்னோருடல் காணேனம் (2) (செத்தி)

ஆகதியமடியன்டே ஆஷ்ருவீணு குதிர்னொரு
அவல்பொதி கைக்கொள்ளுவான் கணிகாணேனம் (2) (செத்தி)

SurveySan said...

துளசி கோபால்,

வரிகளுக்கு நன்றி. இதுக்கு என்னங்க அர்த்தம்?

//ஆகதியமடியன்டே ஆஷ்ருவீணு குதிர்னொரு
அவல்பொதி கைக்கொள்ளுவான் கணிகாணேனம் //

துளசி கோபால் said...

//ஆகதியமடியன்டே ஆஷ்ருவீணு குதிர்னொரு
அவல்பொதி கைக்கொள்ளுவான் கணிகாணேனம் //

மனசிலே இருக்கும் சொல்லமுடியாத துக்கம்( எல்லாம் வறுமைதான், வேறேன்ன?)
கொண்டு உன்னிடம் வந்தவரின்( குசேலரின்) மனம் குளிர, அவர்
முடிஞ்சு கொண்டுவந்த அவல் மூட்டையை கையில் எடுத்துக்கிட்டவனை
முத்லில் தரிசிக்கணும்.

இதுதான் அர்த்தமுன்னு நான் நினைச்சுக்கிட்டு இருக்கேன்.

விளக்கம் தெரிஞ்சவுங்க யாராவது சொன்னால் நானும் தெரிஞ்சுக்குவேன்.

ஷைலஜா said...

ஷக்தி ரொம்ப அழகா மலையாளப் பாட்டு பாடறாங்களே..எப்படி ஷக்தி மலையாளம் தெரியுமா உங்களுக்கு?

SurveySan said...

துளசி, சரியான விளக்கம் மாதிரிதான் தெரியுது. :)

ஷைலஜா, நீங்களும் பாடலாமே?

ஷைலஜா said...

மலயாளம் கொறச்சி அறியாம்..பாடும் அளவு தெரியாதே சர்வ்ஸ்!

SurveySan said...

ரொம்ப சுலபமான மொழி மலையாளம். ரெண்டு தடவ கேட்டா தானா வரும்.

Shakthi said...

ஷைலஜா நீங்கலும் பாடலாமே..எனக்கு மலையாளம் தெரியும்..ஏன்னா ஞான் ஒரு மலையாளியானு :)

ஷைலஜா said...

ஓ ஷக்தி !மலையாளப்பெண்ணாயிருந்து தமிழ்ல அசத்தறீங்களே! சரி நானும் மலயாளம் பாட்டு பாட முயற்சிக்கறேன்..
ஷைலஜா

Shakthi said...

சீக்கிரம் பாடுங்க..

SurveySan said...

பாடுங்க பாடுங்க. சீக்கிரம் பாடுங்க.

SurveySan said...

ஷைலஜா, அருமையா பாடியிருக்கீங்க.

தெரியாத பாஷையிலும் புகுந்து விளையாடியது அருமை.

Anonymous said...

shailaja, nallaa paadirukkeenga.

Shakthi said...

ஷைலஜா..நல்லா பாடியிருகீங்க..கண்கள் எங்கே பாட்டும் பாடிடுங்க..

Anonymous said...

shylaja, shakthi, sujatha - very nice

CVR said...

rendu paatume very nice and melodious!
very soothing!! :-)