இணையத்தில் வந்த ஒரு செய்தியில், சிவாஜி படத்தில் எப்படி 'தமிழின்' முன்னேற்றத்தை தாங்கி பிடிக்கிறார்கள் சில பாடல்களில் என்று அலசி தள்ளியிருக்காங்க.
ஏதோ, மூன்லைட், சன்லைட்னு ஒரு பாட்டாம், ஆங்கிலக் கலப்பு அள்ளி வீசியிருக்காங்களாமே?
நல்லது.
நம்ம ஊர்ல திரைப்படத்துக்கு, தமிழ்ல பேர் வச்சா வரிவிலக்கு கொடுக்கறாங்களாமே?
தமிழை மேம்படுத்த உதவ தொடங்கின மஹாதிட்டம் இது.
'சிவாஜி' தமிழ் பெயரா?
தமிழ் பெயராவே இருந்தாலும், 'மூன்லைட், சன்லைட்' பாட்டெல்லாம் இருக்கே - அது பரவால்லியா?
ஆமா, திரைப்படம் எடுக்கரவங்களுக்கு மட்டும் எதுக்கு இந்த flexibility? மளிகை கட வச்சிருக்கரவங்க, கடைக்கு 'தங்கம் ஸ்டோர்ஸ்'னு வைக்காம, 'தங்கம் கடை'ன்னு தமிழ்ல வச்சா sales tax விலக்கு கிடைக்குமா? சினிமாக்கு மட்டும் எதுக்கு இந்த விலக்கு?
personally, எனக்கு இந்த 'வரி விலக்கு' திட்டம் மேல் துளி கூட நல்ல அபிப்ராயம் கிடையாது. இவங்க தமிழ்ல பேர் வச்சதால ஒண்ணும் தமிழ் வளரப்போவதும் இல்லை, இங்கிலீஷ்ல பேர் வக்கரதால தமிழ் அழியப் போவதும் இல்லை.
அரசு கஜானாக்கு வரவேண்டிய, வரிப் பணம் தான், சும்மா வீணாகுது.
சோ, சிவாஜி படத்துக்கு வரிப் பணம் தேவையா என்பதே, இந்த சர்வேயின் கேள்வி.
(100 பேருக்கு மேல, ஓட்டு விழுந்தா, இத ஒரு லெட்டரா மாத்தி, 'letter to the editor' of hindu, குமுடம், விகடன், தினகரன், தினமலருக்கு, ஊரில் இருக்கும் நண்பர் மூலமா, அனுப்பலாம்னு இருக்கேன். உங்க பின்னூட்டங்களோட சேத்து. so, நல்லா யோசிச்சு பின்னூட்டுங்க :) )
பி.கு:
ஆயர்பாடி மாளிகையில் பாடி அனுப்புங்க சாமிகளா
பாட்டுக்கு பாட்டுல, ஷக்தியின், அழகிய கண்ணே உறவுகள் நீயே, தொடர்ந்து ஸ்ரீஷிவ்(SriShiv) பாடணும். அவரை மேடைக்கு வரச் சொல்லுங்க ப்ளீஸ்
வியர்டு சர்வேக்கு வாக்கினீங்களா. பெரியாருக்கு முத்தம் லீடிங் த சார்ட்.
முக்கிய தீர்ப்பும், 40+ சர்வேயும் பாத்தாச்சா?
வர்டா! நம்மால முடிஞ்சது :)
24 comments:
மேட்டர இங்க தான் படிச்சேன்
எனக்குத் தோன்றிய சில கேள்விகள்...
1. 'சிவாஜி'யை
அ) பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும்.
ஆ) திரைப்படக் கல்லூரியின் நுழைவுத் தேர்வில் வைக்க வேண்டும்.
இ) எல்கேஜி-யிலே தினமும் திரையிடவேண்டும்.
2. ஆஸ்காருக்கு
அ) பரிந்துரை
ஆ) ரவிச்சந்திரனை வைத்து விநியோகிக்க வேண்டும்
இ) ஏன் அனுப்ப வேண்டும்? அது ஆங்கிலேயனுக்கு
3. வலைப்பதிவில் தினமும் ஒவ்வொருவரின் பதிவிலும்
அ) ஒரு இடுகை இடலாம்
ஆ) இரண்டு போடலாம்
இ) புதியதாக ஒரு பதிவு தொடங்கலாம்
ஈ) வோர்ட்ப்ரெசுக்கு ஒன்று, ப்ளாகருக்கு ஒன்று என்று இரண்டாகத் துவக்கலாம்
4. சிவாஜி படத்துக்கு விமர்சனம்
அ) எழுதலாம்
ஆ) பிட் டாரண்டில் பார்த்து எழுதலாம்
ஆ) வெளியாவதற்கு ஒரு மாதம் முன்பு எழுதலாம்
அப்புறம் எதாவது தோன்றினால் வரேன் :)
bala,
ஏற்கனவே யோசிச்சு வச்சிருந்த மாதிரி, அடிச்சு வெளாசியிருக்கீங்க?
நோ கமெண்ட்ஸ்னு ஒரு ஆப்ஷன் கொடுக்கலன்னா, வெட்டி, சேதுக்கரசி கோச்சுப்பாங்க.
ஆனா, ஒண்ணு தெரியுது, இணையத்துல திட்டினாலும், சப்போர்ட் பண்ணினாலும், 'சிவாஜி'க்கு நல்லது. ஓ.சி விளம்பரமாதான் முடியுது இதெல்லாம் :)
guys and gals,
dont be reluctant to provide your 'valuable' thoughts.
//சோ, சிவாஜி படத்துக்கு வரிப் பணம் தேவையா என்பதே, இந்த சர்வேயின் கேள்வி
//
இந்த பதிவிற்கும் சோவுக்கும் என்ன சம்மந்தம்
சர்வேசன்
சினிமாக்களுக்கு வரிவிலக்கு அளிப்பதன் அபத்தத்தை பலமுறை கண்டித்திருக்கிறேன்.இப்போது உங்களுடன் சேர்ந்து மீண்டும் அதை வலியுறுத்துகிறேன்.
மற்றபடி சிவாஜிக்கு என்று தனியாக எதுவும் சட்டம் போட வேண்டியதில்லை.மற்ற படங்களுக்கு வரிவிலக்கு கொடுத்தால் சிவாஜிக்கும் தரவேண்டும்,மற்ற படங்களுக்கு வரிபோட்டால் சிவாஜிக்கும் போடலாம்.அதுதான் நியாயமாக இருக்க முடியும்.
மாமா சங்கராச்சாரியின் ஆபாசத்தை விட பெரியார் ஒன்றும் மோசமில்லை
'தமிழ் தலைப்புக்கு வரி விலக்கு' போன்ற திட்டங்கள், எல்லாம் திமுகவுக்கு ஒரு இலவச விளம்பரம் கொடுப்பதற்கும், திரையுலகத்தினரின் ஆதரவுக்கும் உதவக்கூடிய திட்டம், அதப்போயி தமிழ் வளர்க்கும்னு சொன்னா, நம்பணும்!
என்னைப் பொறுத்தவரையில், சிவாஜிக்கு மட்டுமல்ல, எந்தத் தமிழ்ப் படமானாலும், ஒட்டு மொத்தமா இந்தச் சலுகையே திரும்பப் பெறவேண்டிய ஒன்று.
எல்லோரையும் போல அவரும் ஒரு திரைப்பட இயக்குனர். மத்தவங்க எல்லோரையும் விட அவர் மட்டும் தப்பா எதுவும் செய்யரா மாதிரி ஒன்னும் எனக்கு தெரியலை
அவருக்காக ஸ்பெசலா சலுகை எதுவும் தர வேண்டாம் அதே சமயம் காரணம் இல்லாம பிரச்சனையும் பண்ண வேண்டாம் என்பது என் கருத்து.
எந்த திரைப்படத்துக்கு வரி விலக்குத் தரத் தேவையில்லை. நிதி உதவியும் கூட.
நடிகர் யாராக இருந்தாலும் எல்லா படத்துகும் வரி கொடுகப்படவேண்டும்
எந்த படத்துக்கும் தரக்கூடாது...
anony,
//இந்த பதிவிற்கும் சோவுக்கும் என்ன சம்மந்தம் //
ஹிஹி.. டமாசு!
செல்வன்,
//மற்ற படங்களுக்கு வரிவிலக்கு கொடுத்தால் சிவாஜிக்கும் தரவேண்டும்,மற்ற படங்களுக்கு வரிபோட்டால் சிவாஜிக்கும் போடலாம்.அதுதான் நியாயமாக இருக்க முடியும். //
நியாயம்தான். ஆனா, மத்த படங்கள் இவங்க படம்மாதிரி, வாரிக் குவிக்காதே. :)
தடைனு போட்டா, எல்லா படத்துக்கும்தான் போடணும். ஒத்துக்கறேன்.
கரு.மூர்த்தி, உங்க பின்னூட்டத்த தூக்கிட்டேன். பெரியார் ஏளனம் இங்க எதுக்கு?
உங்களுக்கு பிடிக்குதோ இல்லியோ, அவர் பலருக்குப் பிடித்த பெரும் தலைவர்.
:)
நெல்லை சிவா,
//'தமிழ் தலைப்புக்கு வரி விலக்கு' போன்ற திட்டங்கள், எல்லாம் திமுகவுக்கு ஒரு இலவச விளம்பரம் கொடுப்பதற்கும், திரையுலகத்தினரின் ஆதரவுக்கும் உதவக்கூடிய திட்டம், அதப்போயி தமிழ் வளர்க்கும்னு சொன்னா, நம்பணும்! //
சரியாச் சொன்னீங்க. நம்ம தலைல மொளகா அரைக்கரத எப்பதான் நிறுத்துவானுங்களோ.
கண்டதுக்கும், 'பொதுநல' வழக்கு போடறாங்களே,இதுக்கு யாரும் போடலியா?
cvr,
//எல்லோரையும் போல அவரும் ஒரு திரைப்பட இயக்குனர். மத்தவங்க எல்லோரையும் விட அவர் மட்டும் தப்பா எதுவும் செய்யரா மாதிரி ஒன்னும் எனக்கு தெரியலை
அவருக்காக ஸ்பெசலா சலுகை எதுவும் தர வேண்டாம் அதே சமயம் காரணம் இல்லாம பிரச்சனையும் பண்ண வேண்டாம் என்பது என் கருத்து. //
கரெக்டுதான். ஆனா, உப்புச்சப்பு இல்லாத மேட்டர சொல்லி வரிக்குறைப்பு செஞ்சாங்க. சிவாஜி, துட்டு அள்ளிக் குவிக்கப் போகும் படம்.
டிக்கட் விலையை அரசு வைத்திருக்கும் வரம்புக்கு அதிகமா வச்சுக்கலாம்னு எல்லாம் திட்டம் தீட்டிட்டிருக்காங்க. இப்பவே ஏதாவது பண்ணா, சில கோடிகள் கஜானாக்கு கிடைக்கும்.
சிவாஜிக்குன்னு தனியா எந்த சட்டமும் வேண்டாம்தான் :)
கொத்ஸ், chandra, வெட்டிப்பயல்,
ரிபீட்டு!
'அவர்களே' என்று தமிழில் சொல்வது போல 'ஜி' என்று ஹிந்தியில் சொல்கிறார்கள் , மன்மோகன்ஜி , வாஜ்பாய்ஜி போல். ' சிவா அவர்கள்' என இந்தப்படப் பெயர் இருந்திருக்குமென்றால், சன் டீவி அதிபர், மன்னிக்கவும், தமிழக முதல்வர் அறிவித்தபடி , வரிவிலக்கு அளிக்கப்படுவதில் சட்டவிரோதமில்லை (சரியா தவறா என்பதல்ல) . ஆனால் நல்லகாலமாக வேற்றுமொழி கலந்த இந்தப்படத்தின் பெயர் , இந்த அறிவிப்புக்கு முன்னாலே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது . சிவாஜி என்ற பெயரிலேயே இந்தப்படம் வெளிவரும் சூழலில் இதற்கும் வரிவிலக்கு அறிவித்தால் அது சட்டவிரோதம் ..
சரியாச் சொன்னீங்க தாஸு.
ஊருக்கு நல்லது சொல்ற படத்துக்கு வேணும்னா வரிவிலக்கட்டும், மத்ததுக்கெல்லாம் வரி வாங்கித்தான் ஆகணும்.
91 vote so far.. atleast 9 more needed to finish the voting.
If you guys know the contact info. for 'letter to the editor' of magazines, send it to me please.
thanks
thehindu@vsnl.com
thanks k4karthik :)
Post a Comment