இது பட்டை வாரம்.
எல்லாரும் அவங்கவங்களுக்கு புடிச்ச மாதிரி ஒரு பட்டைய போட்டுட்டாங்க. எந்த பட்ட நமக்கு சரியா வரும்னு யோசிச்சுப் பாத்தேன். யோசிச்சேன் யோசிச்சேன் யோசிச்சுக்கிட்டே இருந்தேன்.
அத போட்டா, ஓவரா ஆயிடும்.
இத போட்டா, அவ்வளவு சரியாவும் இருக்காது.
ஒண்ணும் போடலன்னா, பட்டை வாரத்த அவமதிக்கர மாதிரி ஆயிடும்.
அதனால இத்த போடறேன்.
இதுவே எமது பட்டை. (கொழப்பம் தீரும்வரை) :))))
:))))))))))
டிஸ்கி: கொழப்பத்துக்கெல்லாம் காரணம், சொல்ல வந்தத 'தூய' மெட்ராஸ் தமிழ்ல எல்லாருக்கும் பிரியர மாதிரி சொல்லாம, புறநானூறு தமில்ல சொன்னதால கூட இருக்கலாம்.
சில பேர், பத்தி பத்தியா வெளக்கம் கொடுத்தாங்க. அப்படியும் கொழப்பம்தான்.
என்னது? தூங்கரவன எழுப்பலாம், தூங்கர மாதிரி நடிக்கரவன எழுப்ப முடியாதா?
அது சரி.
தூங்கி எனக்கென்னங்க கெடைக்கப் போது?
வந்தது வந்தீங்க கீழ ஒரு குத்து குத்தி பத்த வச்சுட்டுப் போங்க.
:))))
21 comments:
என் பட்டையை உங்க பதிவுல விருப்பப்பட்டா போட்டுக்கலாம்.
நெட்ல சுட்ட பட்டை. காபிரைட் பிரச்சனை வந்தா உங்கள நீங்க தான் காப்பாத்திக்கணும்.
/* இது பட்டை வாரம் */
oh...அட இதுதானா விசயம்? நானும் என்னடா ஆளாளுக்கு பட்டை போடுகிறார்கள் என்று மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்தேன். :-))
வழமைபோல நான் என் கடமையைச் செய்து விட்டேன், அதுதான் வாக்குப் போட்டு விட்டேன்.
நாலாவது தேர்வுக்குத்தான் நான் குத்தினேன்[ஆள வுடுங்க].
சர்வேசன், இது ரொம்ப அவசியமா?
யார் பெரியவர் என்ற போட்டியில் காப்பி கடையிலும், டீக்கடையிலும் பொது ஜனம் யாருக்கும் தெரியாமால காறித் துப்பிக் கொண்டிருந்தவர்கள் இப்பொழுது பொதுவில் எல்லோர் மேலும் தெறிக்குமாறு துப்புகிறார்கள். எச்சில் என் மேல் ஒட்ட வேண்டாம் என்றுதான் நான் நினைக்கிறேன்.
வெற்றி, உங்கள மாதிரி 'தெளிவா' இருக்கரவங்களுக்குத்தான், 4த் ஆப்ஷன் :)))
ஆதிசேஷனை தூக்கியபோது பிராமணீயம் எங்கே சென்றது?
நானும் எழுத வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் எழுதும் நிலைக்கு ஆளாக்கி விட்டார்கள். பிராமணீயம் எழுத வேண்டாம் என்று தடுக்க யாரும் இல்லை. இது நமது சொந்த வலைப்பதிவு. நமக்குப் பிடித்ததை எல்லாம் எழுதுகிறோம். முஸ்லிமைக் கண்டபடி வாய்க்கு வந்தபடி திட்ட பார்ப்பனர்கள் எல்லாம் நமது வலைப்பதிவைப் பயன்படுத்துகிறோம்.
சொந்த பெயரில் ஒரு பதிவும் போலியாக ஒரு பெயரிலும் நமது கருத்துக்களை மக்கள் முன் வைக்கிறோம். அதனைக் கேள்வி கேட்க தமிழ்மணத்துக்கு உரிமை இல்லை. நமதுபதிவோ அல்லது பின்னூட்டமோ ஆபாசமாக இருக்கும்போது அல்லது வரையறைகளை மீறும்போது மட்டுமே தமிழ்மணம் நம் பதிவுகளை தூக்குகிறது. எனவே அவர்கள் ஆரிய திராவிட பேதம் பார்ப்பது இல்லை.
நான் எனது பதிவினில் முஸ்லிமை எதிர்ப்பேன், அல்லது தாக்குவேன். அது எனது தனிப்பட்ட உரிமை. அதேபோல தமிழ்மணம் நிர்வாகிகள் தங்களுக்குப் பிடித்த பதிவுகளை சேமிக்க பூங்கா என்ற இதழை நடத்துகின்றனர். அங்கே சென்று பார்ப்பனீயம் மட்டுமே போட வேண்டும் அல்லது சமகிருதம்தான் போட வேண்டும் என்று சொல்வது சரியாக எனக்கு படவில்லை. அதேபோல நமது ஒவ்வொருத்தரின் பதிவுக்கும் தமிழ்மணமும் அதன் நிர்வாகிகளும் வந்து திராவிடர்களை ஆதரித்துதான் பதிவுகள் போட வேண்டும் என்று சொன்னால் நாம் கேட்போமா? கண்டிப்பாக கேட்க மாட்டோம்.
எனவே இந்த விஷயத்தில் தமிழ்மணம் சொல்வது சரியாகப் படுகிறது எனக்கு. எனவே எனது தார்மீக ஆதரவை தமிழ்மணத்துக்கு நான் அளிக்கிறேன். இதனால் என்மேல் கோபம் கொண்டு நேசகுமார், திருமலைராஜன், ஜயராமன், டோண்டு, முகமூடி எல்லேராம், கால்கரி சிவா, வஜ்ரா சங்கர். ம்யூஸ், அரவிந்தன், ஜடாயு, இட்லிவடை, அன்புடன் பாலா போன்றவர்கள் என்னை ஆபாசமாக சித்தரித்தாலும் கவலைப்பட போவதில்லை. எனது ஆதரவு என்றும் தமிழ்மணத்துக்கு உண்டு.
ஜெய்ஹிந்த்!!!
உதயா,
சும்மா டமாஸுதானங்க.
காறித் துப்பி ஊர கெடுக்கரவன அடிச்சுத் தொறத்தணும் என்பதே என் நிலை.
ஆனா, சமீபத்திய சில விஷயங்கள் குழப்பத்தைத் தந்ததால் இந்த பட்டைய போட்டேன் :)
இருக்கர 1000 பேர மேய்க்கரதே இவ்வளவு பெரிய விஷயமா இருக்கே. நாளைக்கு லட்சம் வந்தா எப்படி இருக்கும்னு தெரியல.
முப்பதுல மூணு பேர்தான் என்ன மாதிரி கொழம்பியிருக்கரவங்க இதுவரை :)
//கொழப்பத்துக்கெல்லாம் காரணம், சொல்ல வந்தத 'தூய' மெட்ராஸ் தமிழ்ல எல்லாருக்கும் பிரியர மாதிரி சொல்லாம, புறநானூறு தமில்ல சொன்னதால கூட இருக்கலாம். //
:)
அது புறநானூறு தமிழ் அல்ல பாசிச புண்ணிலிருந்து வழிந்த தமிழ் என்பதால்தான் பிரச்சனையே
பட்டைய போட்டா சமையல் வாசமா இருக்கும், நீங்க என்ன வித்தியாசமா பட்டைய கிளப்பியிருக்கீக..நாமளும் வெற்றிப் பட்டையத்தான் குத்தியிருக்கோமுங்கோய்!
கண்டன அறிக்கை
எங்கள் கட்சி கொ.ப.செ. பினாத்தலார் அவர்கள் மனமுவந்து மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வெளியிட்ட பட்டையையோ அல்லது அன்பு நண்பர் இட்லி வடையார் வெளியிட்ட பல கலர் பட்டையையோ இக்கருத்துக் கணிப்பில் இணைக்காத பாசிச சர்வேசனை நாங்கள் வன்முறையாகக் கண்டிக்கிறோம்.
இவண்
இலவசக் கொத்தனார்
அகில உலக அமெரிக்க துணை பொதுச்செயலாளர்
ப.ம.க.
அட ஆமாங்க,
இட்லி வடையோட பட்டையும்,
உப்புமா பதிவுக்கு ஆதரவு கொடுத்த பினாத்தலார் பட்டையையும் சேக்கணும்!
அரவிந்தன்,
அவர்கள் பாசிஸ்டுகளாகவோ வேறு என்னவாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். அவர்கள் பயன்படுத்தியது நல்ல தமிழ். அது தவறென்றால் நீங்கள் இந்தியாவை பாரதம் என்பதையும் பாசிசம் என்று பொருள் கொள்ள வேண்டியுருக்கும்.
ஒன்னும் புரியலப்பு....
தொடர்புடைய என்னுடைய பதிவு: Express solidarity to get back mutual appreciation « Snap Judgment
:) ;) :D :P
கொத்ஸ்,
பெனாத்தலார் பட்டைய பாக்கல இந்த் பதிவு போடூம்போது.
தேர்தல் ஆரம்பிச்சப்பறம் புது வேட்பாளர்கள் சேக்க முடியாது..
:)
கடோத்கஜன், இ.வடை பட்டையும் சர்வே போடும்போது பாக்கலீங்கோ.
ஆமா, வந்தவங்கெல்லாம் ரொம்ப்ப தெளிவா இருக்கீங்க போலருக்கு. 50+ வாக்குக்கள்ள எனக்கு வெறும் 3 தானா :(?
அ.நீலகண்டன், தீவு, நாகை சிவா... எல்லாருக்கும் வந்தனம்.
67 வாக்குகள் வந்துருக்கு.
உங்களது பதிவு எனக்கு இட்லி வடையின் பதிவை நினைவு படுத்துகிறது =
// அடையாளம் தெரியாத சிலரால் பெரியாரின் சிலை உடைக்கப் பட்டது. தி.க வைச் சேர்ந்த சிலர் கோவில் அர்ச்சகரின் பூனூலை அறுத்தனர்.//
விளக்கம் தேவையில்லை என்று நினைக்கிறேன்.
சர்வேசன், உதய்யின் கருத்து தான் என்னோட கருத்தும். ஆமா பொட்டீகடைகாரர் ஒரு பட்டை போட்டு இருந்தாரு அதை பாக்கலையா?
Post a Comment