Sunday, April 15, 2007

டாப் Weirdaர் மகுடமளிப்பு விழா + INVITAtions

எல்லாரும் வியர்க விருவிருக்க வியர்டி முடிச்சாச்சு.

வியர்டினவங்க லிஸ்ட்ல, கொஞ்சம் டேஞ்சரஸ் வியர்டர்களை தனிப்பதிவுல போட்டு, அவங்கள்ள டாப்பு யாருன்னு பாத்தோம். அதோட ரிஸல்ட் சொல்ல இந்த பதிவு. :)

வியர்டுக்கெல்லாம் பெரிய வியர்டு, பதிவர் மிதக்கும் வெளியின்,
வகுப்பில் பெரியாரின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு முத்தமிட்டுக்கொண்டிருப்பேன்.

33% ஓட்டு வாங்கியிருக்காரு.
வாழ்த்துக்கள் "மிதக்கும் வெளி" சார். கலக்கிபுட்டீங்க. :)

மொத்த ரிஸல்ட்ஸ் இங்கே பார்க்கலாம்.

பெரியார் அபிமானிகள் கொலைவெறியோட ஓட்டு போட்டதால் வெற்றி பெற்றாரா, இல்லை எதிர்ப்பாளர்களின் வாக்கால் வெற்றி பெற்றாரா தெரியல :)

எது எப்படியோ, அவருக்கு வாழ்த்துக்கள்.

இதற்க்காக ஒதுக்கி வைத்தது $25. இதனுடன் இன்னொரு $25 ம் சேர்த்து, உதவும் கரங்களுக்கு அனுப்பப்படும்.
"அனுஷா வாஸுதேவா நினைவாக" இதை அனுப்பி வைக்கிறேன்.
(ஏதோ நம்மால முடிஞ்சது).

வியர்டர்களை லிஸ்ட் எடுத்து தொகுத்து வழங்கிய எல்லெல்.தாஸுவுக்கு நன்றி. வாக்களித்தவர்களுக்கும் நன்றி.

...

இந்த வியர்டு மேட்டர் யார் ஆரம்பிச்சு வச்சான்னு தெரியல. அட்டகாசமா பொழுது போச்சு.
இப்ப அடுத்ததா அழகு அழகா நெறைய அழகு பதிவுகள் போடறாங்க. இந்த மாதிரி புது விதமா எழுதி ஜாலியா கொண்டு போலாம் தமிழ்மணத்த.
திரும்ப இந்த IP சண்டையெல்லாம் ஆரம்பிச்சு, சாக்கடையாக்காதீங்க சார்ஸ் அண்ட் மேடம்ஸ். STOP It please!!!!

...

வந்தது வந்தீங்க. ஆயர்பாடி மாளிகையில் பாட்டை இராமனாதனும், நானும் பாடியிருக்கோம். கேட்டு மார்க் போடுங்க.

சர்வஜித் புத்தாண்டுல எப்படி வாழணும்னு சில இலவச ஐடியாஸ் அள்ளி வீசியிருக்கேன், அதையும் படிச்சு கருத்த சொல்லுங்க.

சூப்பர் திரைப்படங்களின் அணிவகுப்பு இங்க இருக்கு. உங்களுக்கு பிடிச்சதையும் சொல்லுங்க.

சிவாஜி படத்துக்கு வரி விலக்கு கொடுக்கக்கூடாதுன்னு 81% பேர் சொல்லியிருக்கீங்க. இந்த வாரக் கடைசில பத்திரிகைகளுக்கு நம்ம கருத்த letter to editor க்கு அனுப்பறேன். நல்ல தீர்க்கமான கருத்த சொல்லுங்க.

...

12 comments:

SurveySan said...

மிதக்கும் வெளி உரல் என்னாங்க?

குமரன் (Kumaran) said...

வாக்களிப்பு நடந்ததைக் கவனிக்கவில்லை. கவனித்திருந்தாலும் மிதக்கும் வெளியிற்குத் தான் வாக்களித்திருப்பேன். கட்டாயமாக. :-)

வெற்றி said...

க.க,
/* பெரியார் அபிமானிகள் கொலைவெறியோட ஓட்டு போட்டதால் வெற்றி பெற்றாரா, இல்லை எதிர்ப்பாளர்களின் வாக்கால் வெற்றி பெற்றாரா தெரியல :) */

:)))
ஆகா, இந்த விசயத்திலையாதல் இரு தரப்புக்கும் கருதொற்றுமை இருந்திருக்குப் போல :)))

நான் பெரியாரின் அபிமானியும் இல்லை, எதிர்ப்பாளரும் இல்லை.
எனினும் நான் மிதக்கும் வெளிக்குத் தான் வாக்களித்திருந்தேன்.

குமரன் (Kumaran) said...

அட நான் டிஸ்கி போட மறந்துட்டேனே. வெற்றி போட்ட டிஸ்கி தான் எனக்கும். :-)

SurveySan said...

குமரன், வெற்றி,

வருகைக்கு நன்றி.

டிஸ்கி - ரிபீட்டு :)

SurveySan said...

ஷைலஜா,

உங்க பாட்டு சூப்பர். நன்றி.

எந்த படம்னு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்.

மத்தவங்களே, ஷைலஜா பாட்ட இங்க கேக்கலாம்.

செ.ரவி, த, தா, ஆ - இதுல எதுலயாவது சட்டுனு ஒரு பாட்டு பாடி மெயில் அனுப்புங்கோ. நன்றி!

Anonymous said...

Vettri petravarukku vaalthukkal

துளசி கோபால் said...

வெற்றிபெற்ற 'மிதக்கும்வெளி'க்கு வாழ்த்து(க்)கள்.
நானும் இவருக்குத்தான் போட்டேன். பயங்கர வியர்டுப்பா:-)

மிதக்கும்வெளி said...

இப்பதான் இந்தப் பதிவைப் பார்த்தேன். அடப்பாவிகளா, ஊரே கூடி மெண்டல்ன்னு பட்டம் கொடுத்துட்டு வாழ்த்துக்கள் வேறயா? ))-

SurveySan said...

மிதக்கும் வெளி,

மெண்டல்னு சொல்லலீங்க. வியர்டர்னு சொல்லிருக்காங்க,அம்புடுதேன்.

:))))))

-L-L-D-a-s-u said...

நான் அந்த கலெக்ட் செய்யும்போதே
நினைத்தேன்.. கேசுதான்னு ;) ;) .
நீங்கள் சர்வே போடும்போதும் தெரிந்தது, இவர்தான் ஜெயிப்பார்னு, அதனால் விதிகளின்படி, அவருக்கே கள்ள ஓட்டும் சேர்த்து போட்டேன்

ரவி said...

Super !!!!!!!!!!!!1