recent posts...

Friday, April 27, 2007

சேரனின் மாயக்கண்ணாடி - இதிலும் சாதீயமா?

----------------- --------------- ---------------------
சென்னைவாசியா? A1 positive இரத்த வகையா? இங்கே சொடுக்கி உடனே உதவவும்.
----------------- --------------- ---------------------
இனி, மேல படிங்க..

வேலை நிமித்தமாக சென்ற வாரம் San Francisco சென்றிருந்தேன். ஒரு குட்டி மாம்பலமே அங்க இருக்கு.
புதுப் படம் சென்னையில் ரிலீஸ் ஆகுதோ இல்லியோ, நம்ம குட்டி மாம்பலத்துல, DVD (திருட்டோ திருடாததோ) உடனே கெடச்சுடும்.

எல்லா படமும் தியேட்டர்ல வராத போது, இந்த DVD கிடைப்பது சௌகர்யம்தான்.

நண்பன் வீட்டுக்கு சாப்பிடப் போயிருந்த போது, மாயக்கண்ணாடி என்ற சேரனின் படத்தை திரையிட்டான்.

பொறுப்பான இயக்குனர்களின் மத்தியில், சேரனுக்கு ஒரு இடம் உண்டு. கருத்தாழமுள்ள சில படங்களைத் தந்தவர். பெரிய அளவில் க்வாலிட்டி படமா இருக்காதுன்னாலும், சலிக்காமல், அறுவருப்பு இல்லாமல் அழகாக செல்லும் படங்களைத் தந்தவர்.

மாயக்கண்ணாடி நல்ல படம். பெரிய அளவில் தொய்வில்லாமல், மெதுவா நகர்ந்து சுபமாக முடிஞ்சுது.
இளையராஜா சொதப்பிட்டாருன்னுதான் நெனைக்கறேன். குடுக்கர காசுக்குக்கேத்த மாதிரி தான் இப்பெல்லாம் பாடலின் தரம் இருக்கு.

படத்தின் கதை கிட்டத்தட்ட இதுதான். முடிதிருத்தகம் செய்யும் சேரனுக்கு, தானும் வாழ்க்கையில் பெரியாளாகி, கார் பங்களாவுடன் வாழணும் என்கிற ஆதங்கம். அதுக்காக இருக்கும் வேலையை விட்டு, சினிமாவில் சேர ட்ரை பண்றாரு + மற்ற பல வழிகளையும் முயற்ச்சி பண்றாரு. ஒண்ணும் சரியா வரல. கடைசியில், தனக்குள் இருக்கும் திறமை என்னவோ, அதை வைத்து முன்னேறுவதே சாலச் சிறந்தது என்பது போல் முடியும் படம்.

நல்ல கருத்து மாதிரிதான் எனக்குத் தோணிச்சு.

எனக்கு என்ன நல்லா வருமோ, அதை மெருகேத்தி முன்னேறுவது நல்லதா?
இல்ல, சீக்கிரம் பணம் செய்யணுங்கறதுக்காக, எனக்குத் தெரியாத விஷயங்களை ரிஸ்க் எடுத்து கத்துக்கிட்டு செய்யணுமா?

வாழ்க்கைப் பாதையில், ஒவ்வொரு தனி நபரின், வயது, திறமை, சுற்று, வாழ்க்கை சூழல், மற்ற பல விஷயங்களின் கலவை மேலே உள்ள ரெண்டில் எது சரி என்று தீர்மானிக்கும்.

சரி, அத்த வுடுங்க.
இந்த படத்த பாத்து குழலி சார், சேரன் மாயக்கண்ணாடி படத்தில், சாதீயத்தை புகுத்தியுள்ளார் என்று கூறியுள்ளார்.

(இப்ப தான் கொஞ்சம் அடங்கியிருக்கு சாதீயச் சண்டைஸ், அதுக்குள்ள திரும்பவான்னு நீங்க மொனகரது கேக்குது).

அவர் பதிவ படிங்க, அப்பாலிக்கா கீழ வாக்குங்க.


பி.கு:: VSK, சர்வேசன்(with a twist), மற்றும் ஷக்தி, பின்னி பெடலெடுத்து இருக்கும், ஷைலஜாவின் விருப்பமான, பி.சுசீலா பாடிய, கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே கேட்டீங்களா கேட்டீங்களா?

மிதக்கும் வெளிக்கு கொடுத்த அவார்டு பாத்தீங்களா?

நம்ம பட்டைய பாத்தீங்களா?

One Bedroom flat பாத்தாச்சா?

பி.கு: தமிழ்மண புது லுக்கு சூப்பரு!!!

32 comments:

Unknown said...

இதெல்லாம் என்னங்க காமடி?

பாரதி கண்ணம்மா பார்த்தவங்க சேரன் ஜாதியவாதின்னு சொல்லுவாங்களா?

கலிகாலம்.

SurveySan said...

செல்வன், வாங்க வாங்க. கலிகாலமேதான். :)

ஒரு விஷயம் ஓவரா பிடிக்கலன்னா, எல்லா ஏங்கிள்ளயும் தப்பாதான் தெரியுமோ ?

SurveySan said...

20 பேர் வாக்கு இருக்கு. 2 பின்னூட்டம் தான் இருக்கு.

கருத்தையும் சொல்லுங்க சாரே, அப்பதான மத்தவங்களுக்குத் தெரியும் உங்க தாட்!

Anonymous said...

அட..என்னாங்க நீங்க, நா மாட்டியிருக்கிற கண்ணாடி மஞ்சளுப்பா..அதான் எல்லாம் மஞ்சளாவே தெரியுது!

Hariharan # 03985177737685368452 said...

மண்டைக்குள்ள புரட்(டு)சி பூந்துட்டா சி(நி)ந்தனை வளம் பெருக்கெடுக்குமான்னு ஒரு சர்வே போடுங்க!

ragasiya snehithan said...

'ஏதாவது ஒரு துறையில திறமைய வளர்த்து, நிலையா இருந்து முயற்சி செய், சீ சீ இந்த பழம் புளிக்கும்னு சொல்லி அடிக்கடி வெவ்வெறு துறையில முயற்சி செய்யாத!' இத தான் சேரன் சொல்லிருக்குறதா எனக்கு படுது.

பாரதிய நவீன இளவரசன் said...

surveysan! i havent seen the film yet. But i clicked 'kilambittaanya kilambittaan'... :)))

SurveySan said...

anony,

//அட..என்னாங்க நீங்க, நா மாட்டியிருக்கிற கண்ணாடி மஞ்சளுப்பா..அதான் எல்லாம் மஞ்சளாவே தெரியுது! //

அப்படீங்கறீங்க? ஹ்ம். மஞ்சக் கண்ணாடின்னா பறவால்ல, கொஞ்ச நாள்ள கழட்டி வெச்சுடலாம்.
ஜாண்டீஸா இருந்தா தான் கஷ்டம். :)

ஆனா, பாதிக்கப்பட்டவங்களா இருந்தாலும், இந்த மாதிரி ஆகலாமோ?

SurveySan said...

ஹரிஹரன்,

//மண்டைக்குள்ள புரட்(டு)சி பூந்துட்டா சி(நி)ந்தனை வளம் பெருக்கெடுக்குமான்னு ஒரு சர்வே போடுங்க! //

சர்வே க்யூவில் சேர்க்கப்பட்டது :)

SurveySan said...

வந்தியத்தேவன்,

//'ஏதாவது ஒரு துறையில திறமைய வளர்த்து, நிலையா இருந்து முயற்சி செய், சீ சீ இந்த பழம் புளிக்கும்னு சொல்லி அடிக்கடி வெவ்வெறு துறையில முயற்சி செய்யாத!' இத தான் சேரன் சொல்லிருக்குறதா எனக்கு படுது. //

ஆஹா. இதுவும் சரிதான்.
பாஸிடிவ்வா பாத்தா, பல நல்ல விஷயம் தெரியுது படத்துல.

SurveySan said...

ப்ரின்ஸ்,

//surveysan! i havent seen the film yet. But i clicked 'kilambittaanya kilambittaan'... :))) //

என்னங்க இப்படி சொல்லிட்டீங்க. விமர்ஜனம் படிச்சாவது, ஒரு தாட்ட சொல்லியிருக்கலாமே :)

ரவி said...

I give 50:50

SurveySan said...

50:50 :)

இப்படி சொன்னா எப்படி?

வெற்றி said...

க.க,
இன்னும் நீங்கள் குறிப்பிட்ட படத்தைப் பார்க்கவில்லை. படத்தைப் பார்த்த பின்னர் தான் வாக்குப் போடலாம்/கருத்துச் சொல்லலாம்.:-))

லக்கிலுக் said...

மாயக்கண்ணாடி பற்றி ஒரு சினிமா பத்திரிகையில் முக்கியமான பொறுப்பில் இருக்கும் நண்பர் அடித்த கமெண்டு :

"ராஜாஜி இந்தப் படத்தை பார்த்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாரு. நம்ம குலக்கல்வி திட்டத்தை என்ன அருமையா எடுத்துக் காட்டியிருக்காரு சேரன்னு சொல்லி"

Anonymous said...

இரத்த தானம் பற்றி லிங்க் கொடுத்த்துக்கு நன்றீ...நமது வலைப்பதிவர் ஒருவர் ரத்த தானம் அளித்துள்ளார்...இன்று ஆப்பரேஷன் நடைபெறுகிறதாம்...

ஷைலஜா said...

இன்னும் படம் பார்க்கல சர்வ்ஸ்..அதனலால கருத்து இப்போ நஹி. சரி இந்த செந்தழல் ரவி இங்கவரார் இல்ல போட்டு அமுக்கி அவரை பா.பாட்டுல கொண்டு தள்ளீ பாடவைக்கவேண்டியதுதானே?!

SurveySan said...

வெற்றி,

படத்தப் பாக்காம, விமர்சனம் படித்தும் கருத்து சொல்லலாம் :)

SurveySan said...

லக்கிலுக்,

//"ராஜாஜி இந்தப் படத்தை பார்த்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாரு. நம்ம குலக்கல்வி திட்டத்தை என்ன அருமையா எடுத்துக் காட்டியிருக்காரு சேரன்னு சொல்லி" //

ராஜாஜி கூலிங்கிளாஸ் போட்டிருப்பாரு. எல்லாமே மங்கலா தான் தெரியும்.
நாமெல்லாமும் கண்ணாடி போட்டா பாக்கரோம் :) ?

SurveySan said...

செந்தழல் ரவி,

//இரத்த தானம் பற்றி லிங்க் கொடுத்த்துக்கு நன்றீ...நமது வலைப்பதிவர் ஒருவர் ரத்த தானம் அளித்துள்ளார்...இன்று ஆப்பரேஷன் நடைபெறுகிறதாம்...//

சூப்பர். ஏதோ நம்மால முடிஞ்சது இதுதான்.
ஆப்பரேஷன் சுபமா முடிய வேண்டிக்கறேன்.

SurveySan said...

ஷைலஜா,

//இன்னும் படம் பார்க்கல சர்வ்ஸ்..அதனலால கருத்து இப்போ நஹி. சரி இந்த செந்தழல் ரவி இங்கவரார் இல்ல போட்டு அமுக்கி அவரை பா.பாட்டுல கொண்டு தள்ளீ பாடவைக்கவேண்டியதுதானே//

செ.ரவி, பிடி கொடுக்க மாட்ராரு. விட்டுப் பிடிக்கலாம்.
இல்லன்னா, நானே அடுத்த பாட்ட பாட வேண்டியதுதான் :)

SurveySan said...

109 பேர்ல, 45% நாங்க இந்த வெளையாட்டுக்கு வரலன்னு ஓட்டு போட்டுட்டாங்க (கெ.கெ).

சூடாதான் போகுது, but, personally, வேதனையான விஷயம் இது.

ஒரு சாதாரண சினிமாலயும், உள்ளப் பூந்து, phd வாங்கி,குலக் கல்விய சேரன் வெளம்பரம் பண்றாருன்னு சொல்றோமே.. எங்கேயோ போயிட்டோம் போங்க :)

Udhayakumar said...

//மாயக்கண்ணாடி பற்றி ஒரு சினிமா பத்திரிகையில் முக்கியமான பொறுப்பில் இருக்கும் நண்பர் அடித்த கமெண்டு :

"ராஜாஜி இந்தப் படத்தை பார்த்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாரு. நம்ம குலக்கல்வி திட்டத்தை என்ன அருமையா எடுத்துக் காட்டியிருக்காரு சேரன்னு சொல்லி"//

லக்கி, சேரனோட தாத்தாவும் கத்தியோட ஆலமரத்தடியில உக்காந்த மாதிரி காட்டிருக்காங்களோ?

(இன்னமும் படம் பார்க்கவில்லை, இந்த ஞாயிறு தான் ரிலீஸ். அதுக்கப்புறந்தான் கமெண்ட், ஓட்டு எல்லாம்)

வெட்டிப்பயல் said...

இந்த படம் நான் பார்க்கல...

ஆனா என் ஃபிரெண்ட் சொன்னது... படத்துல ஒரு இடத்துல எல்லாம் பயங்கரமா கை தட்டி என்னமா சீன் வெச்சிருக்கானு சொன்னாங்களாம்.

என்னடா அதுனு கேட்டா, இடைவேளைனு சொல்றான் :-)

SurveySan said...

உதயகுமார்,

//லக்கி, சேரனோட தாத்தாவும் கத்தியோட ஆலமரத்தடியில உக்காந்த மாதிரி காட்டிருக்காங்களோ?
//

அந்த மாதிரி ஒரு சீன் இருந்தா, இந்த சர்வேக்கு அவசியமே இருந்திருக்காது.
அவ்ளோ மெனக்கெட்டு, எந்த சாயலும் வராம எடுத்திருக்காரு சேரன் என்பது என் எண்ணம்.

பாத்துட்டு, தெளிவா ஒரு விமர்சனம் போடுங்க பாப்போம்.
:)

SurveySan said...

வெட்டிபயல்,

படம் கொஞ்ச இழுவை ரகம் தான். ஒரு 15 நிமிஷம், நவ்யா நாயரோட டேட்டிங் போவதை காமிப்பாங்க. அலுத்து போயிடுச்சு.

நடூல மாமாக்கு தண்டம் அழரதுங்கர மாதிரி, ஊர்ல நடப்பதும் வருங்கரதால மன்னிச்சு விட்டேன்.

ஓகை said...

படம் பார்க்கவில்லை. ஆனால் சுயமுன்னேற்றக் கருத்துகளுக்கு எதிராக படம் எடுக்கப்பட்டிருக்கிறதோ என்று யோசனை வருகிறது. அப்படியானால் அது ஏற்றுக் கொள்வதற்கில்லை.

'இருக்கிறத விட்டுட்டு பறக்கறத புடிக்க முயற்சி பண்ணாதே' என்கிற பின்பற்றக்கூடாத பழமொழியை வலியுறுத்தும் படத்தை குலக்கல்வியை வலியுறுத்துகிறது என்று சொல்வதா?

Anonymous said...

I have seen this movie and i never see any caste .

My family member who started beauty parlour is not a member of so called caste projected by others .

Just ignore people who always find fault with others while they never see themselves ..

Anonymous said...

Kuzhali penathuradhai ellam oru matter-aa eduthu adhukku oru survey! Ada pongappa.

SurveySan said...

ஓகை,

//படம் பார்க்கவில்லை. ஆனால் சுயமுன்னேற்றக் கருத்துகளுக்கு எதிராக படம் எடுக்கப்பட்டிருக்கிறதோ என்று யோசனை வருகிறது. அப்படியானால் அது ஏற்றுக் கொள்வதற்கில்லை.//

படத்தின் கருவை, சுயமுன்னேற்றத்துக்கு எதிரான கருத்தாகவும் கொள்ளலாம். ஆனால், தனக்கு என்ன நல்லா வரும்னு தெரிஞ்சுகிட்டு, அதுல கவனம் செலுத்துன்னும் வச்சுக்கலாம்.

எனக்கு சேரன் சொன்ன விஷயம் புடிச்சிருந்தது. முக்கியமா, சினிமா மோகம் கொண்டு பல பேர் கெடுவதை இந்தப் படம் தடுக்கலாம்.

SurveySan said...

anony1,

//My family member who started beauty parlour is not a member of so called caste projected by others .
Just ignore people who always find fault with others while they never see themselves .. //

exactly. i know people working in beauty parlours, who didnt choose it because of their caste.

anony2,

//Kuzhali penathuradhai ellam oru matter-aa eduthu adhukku oru survey! Ada pongappa.//

அப்படியெல்லாம் சொல்லப்படாது. எல்லோர் கருத்துக்கும் மதிப்பளித்து, எதிர் வாதங்களை வைக்கணும்.

SurveySan said...

132 and counting..