recent posts...

Wednesday, August 01, 2007

குப்பி, சிவராசன், LTTE, ராஜீவ் காந்தி ~ சர்வே

குப்பி திரைப்படம் பார்த்தேன். ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டபின், சிவராசனும் அவன் கூட்டாளிகளும் தப்பி ஓடுவதும், அவர்களை போலீசார் வலைவீசித் தேடிப் 'பிடிப்பதும்' படத்தின் கரு.

சிபிஐ அதிகாரியாக வரும் நாசர் ஒரு பிடிப்பே இல்லாமல் நடித்து, படத்தின் சில பாகங்களை தொய்வாக்கி விட்டார். வசனம் பேச முழுசா காசு கொடுக்காதது போல் இருந்தது அவரது டயலாக் டெலிவரி.

படத்தில் நடித்த மற்றவர்கள் எல்லாமே நன்றாக நடித்திருந்தனர்.
குறிப்பாக, சிவராசன் &coவிர்க்கு வீடு தேடித்தரும் ப்ரோக்கரும் அவரின் மனைவியாக நடித்த தாராவும், யதார்தமாக நடித்து கலக்கியிருந்தனர்.

படத்தை முழுவதும் black&whiteல் எடுத்தது, என்னைப் பொறுத்தவரை, அவ்வளவு பிடிப்பைத் தரவில்லை. ஒரு வரட்ச்சி படம் முழுவதும்.

போலீசார் சுற்றி வளைத்ததும், சிவராசன் கூட்டாளிகள், குப்பியில் உள்ள சைனைட் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்வார்கள்.
சிவராசன் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு வீர மரணம் அடைந்து விடுவார்.

படம் பார்த்து முடித்ததும், சிவராசன் & coவின் மேல் ஒரு பரிதாபம் எழுந்ததே தவிர ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு தக்க தண்டனை கிடைத்ததே என்ற மனநிலை எழவில்லை.
படம் எடுத்தவர்கள் அதைத் தான் எதிர்பார்த்தார்களா என்று தெரியவில்லை.

LTTE இயக்கத்திர்க்கு ராஜீவின் கொலை ஒரு பெரிய பின்னடைவை தந்தது என்பது மிகையல்ல.
படத்தில் சிவராசனுடன் இருக்கும் தாணு என்ற பெண் சொல்வது "உங்கட நாட்டில் நாங்கள் செய்த தவறுக்கு தண்டனையாக உங்கள் மண்ணிலேயே எங்கள் உயிரை இழக்கிறோம்" என்பது.

ராஜீவைக் கொன்று LTTE சாதிச்சது என்ன? இழந்தது என்ன?
உங்களின் கருத்து இந்த விஷயத்தில் என்ன?

சர்வே போடலாம்னு நெனச்சேன். ஆனா, என்ன ஆப்ஷன் கொடுக்கரதுன்னு தெரியல.
ஆப்ஷன் சரியா போடலன்னா, கேள்வி கேட்டே டார்ச்சர் பண்ண ஒரு கும்பல் காத்துக்கிட்டிருக்கு :) அதனால, இம்முறை சர்வே லேது.

பார் எ சேஞ்ச், கருத்தச் சொல்லுங்க.

பி.கு1: புஷ் செய்த நல்ல காரியம் பாத்தீங்களா?

பி.கு2: TBCD, CVR, கண்ணபிரான் ரவிசங்கர், நானு, அப்பாவி கிட் ஆகியோரின் குரல் வண்ணத்தில் ஜன கன மன கேட்டீங்களா? கேளுங்க. உங்க பெயரையும் பதியுங்கள். இதுவரை பதிந்தவர்கள் பாடலை அனுப்புங்கள்.

பி.கு3: தமிழ்நாட்டில் பார்த்தே ஆக வேண்டிய இடங்கள் இங்கே

பி.கு4: FixMyIndia.Org

நன்றி!

35 comments:

TBCD said...

கருத்து சொன்னா பரிசு உன்டா...?
நானும் சமிபத்தில பார்தேன்...அந்தப் படம் கலரில் தானே உள்ளது....
அவர்கள் செய்தது...அவர்களை ஒரு ரவுடி கும்பலாகத் தான் பாக்கத் தோன்றியது.. என்ன நியாயம் சொன்னாலும், இந்தியா செய்த உதவிகளை ( யார் செய்தால் என்ன ) மறந்து , செய் நன்றி கொன்ற கும்பல்..
புலியின் நியாயம் மானுக்கு புரியாது... ஆனால் மனிதர்கள்...மனிதர்களாக இருக்கனும், துப்பாக்கி இருக்குதுன்னு பிடிக்காத எல்லாரையும் சுட ஆரம்பிச்சா, நாம் சவங்களோட தான் வாழனும்

Anonymous said...

eeஅப்படியே திருப்பெரும்புதூரில் அன்றைக்குத் தலைவர்கள் நடந்துகொண்ட விதம் பற்றியும் சர்வே போடுங்கையா. வந்துட்டானுவ.

சர்வேசான். சர்வேசான். அப்டீன்னு தலைல தூக்கிவைச்சுட்டு ஆடுற ஈழப்பதிவர்களை சொல்லணும்யா. பாட்டுக்கேக்குறதென்ன போடுறதென்ன. நடக்கட்டும். நடக்கட்டும்.

கொழுவி said...

சர்வேசன் - படத்தப் பற்றி நீங்க தாராளமா எழுதுங்க.. ஆனா இணையத்தில ஒரு சுற்றுப்போல நடக்கிற இந்த ரஜீவ் கொலையை திரும்பவும் ஆரம்பிக்க விரும்புறீங்களா..? பரவாயில்லை.. இது பதிலுக்கு இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட இலங்கைத் தமிழர்கள் என்ற பதிலில் கொண்டு வந்து நிற்கும் -

ஆயிரக்கணக்கில் இலங்கைத் தமிழர்களைக் கொன்று இந்திய இராணுவம் சாதித்தது என்ன? இழந்தது என்ன..?

இப்பிடியொரு சர்வே நடத்தும் எண்ணம் உண்டா..?

சிவராசன் குழுவிற்கு தண்டனை வழங்கப்பட்டது என்ற மனநிறைவைத் தரவேண்டுமானால் குற்றப்பத்திரிகை பாருங்கள்.

பாரதிய நவீன இளவரசன் said...

//சர்வே போடலாம்னு நெனச்சேன். ஆனா, என்ன ஆப்ஷன் கொடுக்கரதுன்னு தெரியல.//

எல்.டி.டி.ஈ. மீதான தடை நீக்கம்
1. தாரளமாகச் செய்யலாம்.
2. தொடரவேண்டும்.
3. கருத்து சொல்வதற்கில்லை.

Anonymous said...

எங்கள் இந்திய அமைதிப்படை நண்பர்கள் போலச் சென்று தாக்குதல் நடத்தியதால் வந்த விளைவு. படையெடுப்பாளர்களாக போரை பிரகடனம் செய்யாமல் ராஜீவ் திரைமறைவு நாடகம் ஆடியதை படத்தில் காட்டவில்லை. சிங்கள் இராணுவம் செய்ய மறந்த பல கொடுமைகளை எங்கள் படை செய்ததையும் மறைத்துவிட்டார்கள்.


புள்ளிராஜா

Anonymous said...

எங்கள் இந்திய அமைதிப்படை நண்பர்கள் போலச் சென்று தாக்குதல் நடத்தியதால் வந்த விளைவு. படையெடுப்பாளர்களாக போரை பிரகடனம் செய்யாமல் ராஜீவ் திரைமறைவு நாடகம் ஆடியதை படத்தில் காட்டவில்லை. சிங்கள் இராணுவம் செய்ய மறந்த பல கொடுமைகளை எங்கள் படை செய்ததையும் மறைத்துவிட்டார்கள்.


புள்ளிராஜா

Anonymous said...

இந்திராகாந்தி சீக்கியரால் கொல்லப்பட்டபோது ஆயிரக்கனக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள், இது பற்றி நாடாளமண்றத்தில் கேள்விகேட்டபோது ராஜீவ்காந்தி சொன்ன பதில் "ஒரு ஆலமரம் விழும்போது ஆயிரக்கணக்கில் சிறிய செடிகள் நசிந்து அழிவது தவிர்க்கபடாத ஒன்று" என்றார். அவர் வாதப்படிபார்த்தால் ஈழத்தில் இரண்டாயிரம் சிறிய செடிகள் வீழந்து நசிந்தபோது ஒரு ஆலமரம் வீழ்தப்பட வேண்டும்தானே, இதுதானே அவர் வாதம். இதைதான் சொல்வார்கள் "தவினை தன்னை சுடும்" என்று. ராஜீவின் மரணம் ஈழப்போரட்டத்தில் ஒரு பின்னடைவுதான், ஆனால் அதை விட அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் ஈழத்தமிழினமே பூண்டோடு அழிக்கப்பட்டிருக்கும். என்பதை யாரவது மறுத்து கருத்து கூறமுடியுமா?

Anonymous said...

TBCD said...
கருத்து சொன்னா பரிசு உன்டா...?
நானும் சமிபத்தில பார்தேன்...அந்தப் படம் கலரில் தானே உள்ளது....
அவர்கள் செய்தது...அவர்களை ஒரு ரவுடி கும்பலாகத் தான் பாக்கத் தோன்றியது.. என்ன நியாயம் சொன்னாலும், இந்தியா செய்த உதவிகளை ( யார் செய்தால் என்ன ) மறந்து , செய் நன்றி கொன்ற கும்பல்..
புலியின் நியாயம் மானுக்கு புரியாது... ஆனால் மனிதர்கள்...மனிதர்களாக இருக்கனும், துப்பாக்கி இருக்குதுன்னு பிடிக்காத எல்லாரையும் சுட ஆரம்பிச்சா, நாம் சவங்களோட தான் வாழனும்


ராஜீவ் காந்தி மானா? என்பதுதானே கேள்வி, ஆட்டுகுட்டிகளை காக்க தாய் ஆடு வேடம் போட்டு வந்த நரி அல்லவா? உண்மை தெரிந்தால் மேய்பன் அடித்துக்கொல்வது முறைதானே.

Anonymous said...

//ராஜீவ் காந்தி மானா? என்பதுதானே கேள்வி, ஆட்டுகுட்டிகளை காக்க தாய் ஆடு வேடம் போட்டு வந்த நரி அல்லவா? உண்மை தெரிந்தால் மேய்பன் அடித்துக்கொல்வது முறைதானே.//

ராஜீவ்காந்தி நரி அல்ல அவரை இந்த பொறிக்குள் வீழ்த்தி இந்திய வெளியுரவு கொள்கை வளர்ப்பளர்களே நரிகள், ராஜீவ்காந்தி ஒரு அரசியல் கன்னுக்குட்டி.

Anonymous said...

"ராஜீவ்காந்தி நரி அல்ல அவரை இந்த பொறிக்குள் வீழ்த்தி இந்திய வெளியுரவு கொள்கை வளர்ப்பளர்களே நரிகள், ராஜீவ்காந்தி ஒரு அரசியல் கன்னுக்குட்டி."

100 கோடி மக்கள் வாழும் நாட்டை ஒரு கன்னுக்குட்டியிடமா விளையாடக்
கொடுத்தீர்கள்?

Anonymous said...

கன்னுக்குட்டி செல்லக்குட்டி தான். ஆனா அடுத்தவன் தோட்டத்தில போய் மேயவிட்டது தப்பு.

stan said...

Dear Anonymous guys,

Please tell me what did you achieve after killing Rajiv Gandhi. Apart from getting nothing from Srilanka you lost the support of Indian tamil people also. Dont blame IPKF for everything. Its because of monopoly of LTTE, common people died. LTTE will throw the bomb at IPKF and run into hospital so that common people will be killed. Realize that because of LTTE only you are in such a bad state. You killed Rajiv Gandhi who was the hope star of India for 20th century. Why he had to interfere in your fight..? Just because all your people came to India as refugees..why are you coming to India man...go and die in the sea..

Thanks
Stan

stan said...

Moreover

Whatever crimes Indian soldiers have committed in their individual capacities have been punished by a military court. From World War I onwards Indian army has had the finest record relatively in human rights. Send me a case, and I will check the records to find out if it has gone unpunished. To blame the Indian army as a whole is LTTE's propaganda.

Thnaks
Stan

Anonymous said...

உலகத்திலேயே ராஜீவ் காந்தியின் சூத்துக்குதான் அதிக மதிப்பு, ஏனெனில் அதை காட்டியே ஒரு அம்மா, ஒரு மாநிலமுதல்வர் ஆகி இருக்கிறார். அதிக அளவு போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டதுm ராஜீவ் காந்தியின் _____தான்:-)

டிராஸ்க்கி said...

ரஜீவ் காந்தியை கொன்றதன் மூலம் எதையும் அடையாமல் இருந்திருக்கலாம்,
கொல்லாமல் விட்டு இருந்தால் அடைபவனே இருந்திருக்க மாட்டான்
இந்த கேள்வியை எதிர்கொள்ள அங்கு ஒரு தமிழன் கூட இருக்க மாட்டான் .

தனது பிரதேச வல்லாண்மையை எங்கெல்லாம் ஸ்தாபிக்க நினைத்தோ அங்கே இந்தியா அடி வாங்கியது உண்மை .

அதில் இதுவும் ஒன்று .

மற்றபடி உயிர்களை கொல்வது என்ற ரீதியில் பார்த்தால் இதுவும் ஒரு கொலைதான் . ஆனால் நியாயம் என ஒன்று இருந்தால் அதை பெற அவர்கள் வேறு வழி இல்லாமல் செய்த கொலையாக கருதலாம் .

TBCD said...

கொல்லுகின்ற உரிமைய்யை குடுத்தது யார்... அவர் செஞ்சது தப்புன்னா, உலக பொது மன்றங்கள் இருக்கின்றனவே... இந்தியாவில் பாகிஸ்தான் செய்கின்ற கொடுமைக்கு அவர்களின் தலைவர்களை கொல்ல ஆரம்பித்தால்...எங்கே..இதை...அமெரிக்கா..செய்திருந்தால்..அங்கே..இது போன்று பன்னுவார்களா..
//* ராஜீவ் காந்தி மானா? என்பதுதானே கேள்வி, ஆட்டுகுட்டிகளை காக்க தாய் ஆடு வேடம் போட்டு வந்த நரி அல்லவா? உண்மை தெரிந்தால் மேய்பன் அடித்துக்கொல்வது முறைதானே.*//

SurveySan said...

anony,

//eeஅப்படியே திருப்பெரும்புதூரில் அன்றைக்குத் தலைவர்கள் நடந்துகொண்ட விதம் பற்றியும் சர்வே போடுங்கையா. வந்துட்டானுவ.

சர்வேசான். சர்வேசான். அப்டீன்னு தலைல தூக்கிவைச்சுட்டு ஆடுற ஈழப்பதிவர்களை சொல்லணும்யா. பாட்டுக்கேக்குறதென்ன போடுறதென்ன. நடக்கட்டும். நடக்கட்டும்.//

சம்பந்தமே இல்லாம என்னேன்னமோ சொல்றீங்க? எல்லாத்த பத்தியும் சர்வே போடலாங்க, ஆனா, one-at-a-time தான முடியும்?
நான் பார்த்த படம் பற்றி விமர்சித்து, சில கேள்விகளைக் கேட்டேன்.
அதுக்கும் பாட்டு கேக்கரதுக்கும் ஏனய்யா முடிச்சு போடறீங்க? :)
என்னமோ போங்க்க!

SurveySan said...

//ராஜீவின் மரணம் ஈழப்போரட்டத்தில் ஒரு பின்னடைவுதான், ஆனால் அதை விட அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் ஈழத்தமிழினமே பூண்டோடு அழிக்கப்பட்டிருக்கும். என்பதை யாரவது மறுத்து கருத்து கூறமுடியுமா?
//

ஹ்ம். நல்ல கருத்து.
எடுப்பார் கைபிள்ளை போல், ராஜீவ் அன்று நடந்து கொண்டதால் வந்த ப்ரச்சனைகள் அதிகமே :(

SurveySan said...

//கருத்து சொன்னா பரிசு உன்டா...?
நானும் சமிபத்தில பார்தேன்...அந்தப் படம் கலரில் தானே உள்ளது....
//

பரிசு உண்டு.
ஆனா, பரிசு என்னுடைய மறூ பின்னூட்டத்தில் 'பின்னூட்டத்திர்க்கு நன்றி' என்று வார்த்தையாக வரும். :)

அடடா, கலர்ல வந்துதா? நான் பாத்தது B&Wல இருந்ததே.

என்ன கொடுமைய்யா இது?

SurveySan said...

//உலகத்திலேயே ராஜீவ் காந்தியின் சூத்துக்குதான் அதிக மதிப்பு, ஏனெனில் அதை காட்டியே ஒரு அம்மா, ஒரு மாநிலமுதல்வர் ஆகி இருக்கிறார். அதிக அளவு போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டதுm ராஜீவ் காந்தியின் _____தான்:-) //

bad anony!

SurveySan said...

Stan,


//Dear Anonymous guys,
Please tell me what did you achieve after killing Rajiv Gandhi. Apart from getting nothing from Srilanka you lost the support of Indian tamil people also. Dont blame IPKF for everything. Its because of monopoly of LTTE, common people died. LTTE will throw the bomb at IPKF and run into hospital so that common people will be killed. Realize that because of LTTE only you are in such a bad state. You killed Rajiv Gandhi who was the hope star of India for 20th century. Why he had to interfere in your fight..? Just because all your people came to India as refugees..why are you coming to India man...go and die in the sea..

Thanks
Stan

//

Stan, The later part of your comment is rude.
Its sadistic to ask a refugee to go and die instead of taking refuge in India.

You and I are blessed to live in a peaceful country.

DO NOT SUGGEST things to people without fully understanding their pains and sufferings.

G.Ragavan said...

சர்வேசன், குப்பி திரைப்படத்தை நானும் பார்த்தேன். அந்தப் படம் பிரச்சனையை நடுநிலையோடு அணுகியிருக்கிறது என்றே நினைக்கிறேன். கொஞ்சம் கூட மிகைப்படுத்துதல் இல்லை. உள்ளது உள்ளபடி. இன்னொன்று சொல்கிறேன். படம் மூலத்தில் கன்னடம். தமிழ்ப்படமல்ல. பிறகுதான் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. நம்மாளுகளும் எடுத்தாங்களே குற்றப்பத்திரிக்கைன்னு..படமா அது!

ராஜீவ் காந்தி மரணம் விடுதலைப்புலிகளுக்கு ஒரு அடிதான். மறுப்பில்லை. ஆனால் அது ராஜீவ் காந்தியின் அரசியல் கத்துக்குட்டித்தனத்தின் விளைவு என்பதையும் நாம் மறுக்க முடியாது. மிகமிகத்தவறான வெளியுறவுக்கொள்கையின் பலன் அது. அதற்காக கொலை சரி என்று வாதம் செய்யவரவில்லை. அதே நேரத்தில் அது ஏன் நடந்தது என்று நினைத்துப் பார்த்துக்கொள்வதிலும் தவறில்லை.

Anonymous said...

STAN: "You killed Rajiv Gandhi who was the hope star of India for 20th century. "

After Rajiv, Now INDIA is Developing Very FAST.

SurveySan said...

g raghavan,

சரியாச் சொன்னீங்க.
குப்பி, மசாலா கலக்கப்படாத நல்ல திரைபடம் என்பதில் சந்தேகம் இல்லை.

கொலைக்கு முன்னால் நடந்த விஷயங்களைக் காட்டாததால், மனம் ஒரு பக்கமாகவே இழுக்கப்படுகிறது.

SurveySan said...

anony,

//STAN: "You killed Rajiv Gandhi who was the hope star of India for 20th century. "

After Rajiv, Now INDIA is Developing Very FAST. //

what??? is it? which India are we talking about here?

Anonymous said...

okeyyy iyaaa but enaku onuthan puriya maatenguthuuu...eeen ltte inum antha kolayai nangal seiyavilai endu maruthuu varuhinamm...plzzzzzz explain panungooo..

Anonymous said...

if Rajiv came back to power definetly Praba and his murderous gang would have been elimintated because IPKF had started controlling ltte's operations in urban areas and people also didn't bother much about them..IPKF was way better than ltte or SL Army.
IPKS was sent back by Premedasa(as part of agreement that India has to pull out the forces if Srilankan gvt asked)..during IPKF's stay ltte surrendered to Premedasa..
ltte killed Rajiv for the money..that is plain and simple...
If Rajiv was alive today North and East of SL would have been more free and properous than ever...imagine the state of N and E today...
it is wholesale disaster for India and normal voiceless tamil of SL that Rajiv was murdered...

one eela tamilan

SurveySan said...

//okeyyy iyaaa but enaku onuthan puriya maatenguthuuu...eeen ltte inum antha kolayai nangal seiyavilai endu maruthuu varuhinamm...plzzzzzz explain panungooo.. //

மறுக்கறாங்களா? அப்படியா?
எங்க மீடியா அப்படிச் சொல்லலியே?
சிவராசன்&கோ, எந்த க்ரூப்பைச் சேர்ந்தவர்கள்?

SurveySan said...

//ltte killed Rajiv for the money..that is plain and simple...
//

money? from who?

Stan said...

I am sorry for my rude comments against refugees. The point is Rajiv's killing is a setback in the strugger for eelam and also a greater set back for India. India would have been super power now.Ofcourse LTTE would have been demolished. I dont agree that LTTE is a sole representative of eelam.Eeelam tamilzhan would have been free bird without LTTE.

SurveySan said...

stan,

//I am sorry for my rude comments against refugees. The point is Rajiv's killing is a setback in the strugger for eelam and also a greater set back for India. India would have been super power now.Ofcourse LTTE would have been demolished. I dont agree that LTTE is a sole representative of eelam.Eeelam tamilzhan would have been free bird without LTTE. //

thanks stan. no worries.
well, I dont think Rajiv would have made us superpower by now. well, nobody could make us superpower for the next 25+ years at the least for that matter.

I dont know the impact EElam would have had, if there was no LTTE. may be there would have no Eeelam by now.

stan said...

Rajiv initiated the process of economic liberalisation way back in 1985.

He ushered India into the telecom, electronics and computer age. Today India becoming a world superpower in information technology.

Rajivj gave a new vision to Indian science and technology. for him, science and technology had a fundamental social purpose going beyond atomic anergy, space and defence.

He started a number of programmes to mobilise science and technology in areas like water supply, sanitation, literacy, immunisation, agriculture and communication.

He raalised that in a country such as ours, so complex, so large and varied the people had to be empowered to govern themselves. Hence, he spearheaded a crusade to strengthen panchayats in rural India and nagarpalikas in urban India so that true local and self-government would emerge.

Most of all, Rajiv Gandhi stood for excellence, for the spirit of inquiry and questioning, for the modernisation of mindsets and for the harmonious blending of modernity with tradition.

How can forget the settlemet of Assam, Andhra and Punjap terrorists.?. The failure in Srilanka accord was because of LTTE's monopoly just because Prabaharan want to be sole leader of eelam. Rajiv had definite plan for eelam. Please tell me what is the best solution eelam people had got from anybody which was much better than Rajiv's accord.?

SurveySan said...

stan,

//Most of all, Rajiv Gandhi stood for excellence, for the spirit of inquiry and questioning, for the modernisation of mindsets and for the harmonious blending of modernity with tradition.
//

I am not very sure if Rajiv stood for excellence.
He did have a charm and did make us proud on few occassions.
He had his slice of issues as well.

I am not very sure if Rajiv introduced modernisation, etc... modernisation and globalisation started way before him and actually improved later by Rao and Singh.

panchayath raj was his vision and it empower some sect and gave positive results. was it a success overall, i dont know :(

Anonymous said...

ராஜீவ் பயந்தது அடைக்கலம் தேடி வருபவர்களுக்காக அல்ல. எங்கே தமிழ்கமும் இண்தியா விலிருந்து பிரிண்து விடுமோ என்று.

Anonymous said...

豆豆聊天室 aio交友愛情館 2008真情寫真 2009真情寫真 aa片免費看 捷克論壇 微風論壇 大眾論壇 plus論壇 080視訊聊天室 情色視訊交友90739 美女交友-成人聊天室 色情小說 做愛成人圖片區 豆豆色情聊天室 080豆豆聊天室 小辣妹影音交友網 台中情人聊天室 桃園星願聊天室 高雄網友聊天室 新中台灣聊天室 中部網友聊天室 嘉義之光聊天室 基隆海岸聊天室 中壢網友聊天室 南台灣聊天室 南部聊坊聊天室 台南不夜城聊天室 南部網友聊天室 屏東網友聊天室 台南網友聊天室 屏東聊坊聊天室 雲林網友聊天室 大學生BBS聊天室 網路學院聊天室 屏東夜語聊天室 孤男寡女聊天室 一網情深聊天室 心靈饗宴聊天室 流星花園聊天室 食色男女色情聊天室 真愛宣言交友聊天室 情人皇朝聊天室 上班族成人聊天室 上班族f1影音視訊聊天室 哈雷視訊聊天室 080影音視訊聊天室 38不夜城聊天室 援交聊天室080 080哈啦聊天室 台北已婚聊天室 已婚廣場聊天室 夢幻家族聊天室 摸摸扣扣同學會聊天室 520情色聊天室 QQ成人交友聊天室 免費視訊網愛聊天室 愛情公寓免費聊天室 拉子性愛聊天室 柔情網友聊天室 哈啦影音交友網 哈啦影音視訊聊天室 櫻井莉亞三點全露寫真集 123上班族聊天室 尋夢園上班族聊天室 成人聊天室上班族 080上班族聊天室 6k聊天室 粉紅豆豆聊天室 080豆豆聊天網 新豆豆聊天室 080聊天室 免費音樂試聽 流行音樂試聽 免費aa片試看A片 免費a長片線上看 色情貼影片 免費a長片 本土成人貼圖站 大台灣情色網 台灣男人幫論壇 A圖網 嘟嘟成人電影網 火辣春夢貼圖網 情色貼圖俱樂部 台灣成人電影 絲襪美腿樂園 18美女貼圖區 柔情聊天網 707網愛聊天室聯盟 台北69色情貼圖區 38女孩情色網 台灣映像館 波波成人情色網站 美女成人貼圖區 無碼貼圖力量 色妹妹性愛貼圖區 日本女優貼圖網 日本美少女貼圖區 亞洲風暴情色貼圖網 哈啦聊天室 美少女自拍貼圖 辣妹成人情色網 台北女孩情色網 辣手貼圖情色網 AV無碼女優影片 男女情色寫真貼圖 a片天使俱樂部 萍水相逢遊戲區 平水相逢遊戲區 免費視訊交友90739 免費視訊聊天 辣妹視訊 - 影音聊天網 080視訊聊天室 日本美女肛交 美女工廠貼圖區 百分百貼圖區 亞洲成人電影情色網 台灣本土自拍貼圖網 麻辣貼圖情色網 好色客成人圖片貼圖區 711成人AV貼圖區 台灣美女貼圖區 筱萱成人論壇 咪咪情色貼圖區 momokoko同學會視訊 kk272視訊 情色文學小站 成人情色貼圖區 嘟嘟成人網 嘟嘟情人色網 - 貼圖區 免費色情a片下載 台灣情色論壇 成人影片分享 免費視訊聊天區 微風 成人 論壇 kiss文學區 taiwankiss文學區