நானும் எவ்வளவோ பொறுமையா இருந்துட்டேன்.
சரி போனா போகுதேன்னு பாத்தா, யாரும் மதிக்க மாட்றாங்க.
வேற ஏதாவது மேட்டர்னா கூட மன்னிச்சு வுட்டுடலாம்.
ஆனா, தேச பக்தீல வெளையாடலாமா?
60 ஆம் வருஷ சுதந்திர தெனத்த கொண்டாட 60 பேர் ஜன கன மன பாடி அனுப்புங்கன்னு கேட்டேன்.
ரூ 1001 பரிசும் தரேன்னு சொன்னா, இதுவரைக்கும் 12 பேர்தான் தேறிருக்காங்க.
என்னாங்கய்யா ஜன கன மன பாட கசக்குதா?
இப்படியே வுட்டா சரிபடாது.
நல்ல ஆஜானுபாகுவான அடி ஆட்கள் தேவை.
நல்ல டப்பும், தினசரி முட்டை பரோட்டாவும் போடப் படும்.
வேலை:
இதுவரை பெயர் கொடுத்து பாடல் அனுப்பாதவர்களை வழிமறித்து, பாடல் பதிந்து எனக்கு அனுப்பணும்.
பெயர் கொடுக்காத பதிவர்களை, கும்ஸா தூக்கிக் கொண்டு போய், பெயர் கொடுக்கும்படி செய்யணும்.
விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன!
Entrants so far:
1) 'Appavi' family Kid
2) Surveysan - Click to listen
3) Sumanga, Singapore
4) அமுதசுரபி
5) செந்தழல் ரவி
6) சேதுக்கரசி
7) மோகன்தாஸ்
8) அப்பாவி
9) TBCD
10) CVR
11) கண்ணபிரான் ரவிசங்கர்(KRS)
12) Kavitha
13) மாதினி
..
60) ????
இதுவரை பாடலை அனுப்பிய உள்ளங்களுக்கு நன்றி!
10 comments:
அடியாட்கள் எல்லாம் வேண்டாம்..
நாளை காலை நிச்சயம் அனுப்பிவிடுகிறேன்...
அன்புடன்
அரவிந்தன்
பேர் குடுத்து உடனே அனுப்பிச்ச எங்களுக்கு ஒரு நன்றி சொன்னா.. எங்களால முடிஞ்சத செய்வோம்ல...அது சரி...
வெறும் புரோட்டாவா.. இல்லை முட்டை புரோட்டாவா..?
தமிழகத்தின் நிகரற்ற பிரியானி இல்லையா....
உங்கள பார்த்தா..பாவமா இருக்கு.... நம்ம தேச பக்தி எல்லாம் சந்தேகப் பட ஆரம்பிச்சுட்டீங்க..
வேனுமின்னா...நானே ரென்டு கள்ள வோட்டு போடவா..
அரவிந்தன்,
ஓ.கே அனுப்பிச்ச ஆளுங்கள வேற எடத்துக்கு அனுப்பிடறேன்.
உடனே அனுப்புங்க :)
நன்றி!
tbcd,
மன்னிச்சுக்கோங்க.
இதுவரை பாடலை அனுப்பியவர்க்கு நன்னி!
நீங்க அப்படியே, ரெண்டு ஆட்டோ புடிச்சு, பதிவர் பட்டறை நடக்கர எடத்துக்குப் போய், ரெண்டு தட்டு தட்டி, பாட்ட பாடச் சொல்லி அனுப்புங்க :)
பதிவர் பட்டறை போறவங்க, ஒரு ஜன கன மன கோரஸ் பாடி, அத ரெக்கார்ட் பண்ணி அனுப்புங்கோ :)
300 பேர் பாத்திருக்கீங்க ஆனா, புதுசா 3 பேர் கூட தேரல.
சம்திங் ராங்.
ஜன கன மன எதிர்ப்பாளர்களோ?
சர்வேசன்,
/* 300 பேர் பாத்திருக்கீங்க ஆனா, புதுசா 3 பேர் கூட தேரல.
சம்திங் ராங் */
1.பார்ப்பவர்கள் எல்லோரும் கணினித் துறையில் இருந்து வருபவர்கள் இல்லையென நினைக்கிறேன். எனவே அவர்களுக்கு இணையத்தில் எப்படிப் பாடி அனுப்புவது எனும் தொழில் நுட்பம் தெரியாமல் இருக்கலாம். நீங்கள் அது பற்றி ஒரு சிறு குறிப்புக் கொடுக்கலாமே.
2. நீங்கள், தேசிய கீதத்தைப் பாடி அனுப்பினால் பரிசு தருவதாக அறிவித்துள்ளீர்கள். ஆனால் பலர் தமது தேசிய உணர்வை பரிசுக்காக அடைமானம் வைக்க விரும்பாமல் இருக்கலாம்.
3.சில வேளைகளில் பரிசுத் தொகை குறைவாக இருக்கலாம். :-))
இவை எனக்குத் தோன்றிய காரணங்கள்.:-))
ஆட்டோவில போற தூரம்மின்னா தான் போயிருப்போம்ல...
//*நீங்க அப்படியே, ரெண்டு ஆட்டோ புடிச்சு, பதிவர் பட்டறை நடக்கர எடத்துக்குப் போய், ரெண்டு தட்டு தட்டி, பாட்ட பாடச் சொல்லி அனுப்புங்க :)*//
பாஸ் நிறையா சம்பளம் தருவீர்களா? நல்ல சாப்பாடு போடுவீர்களா? அப்ப நான் வேணும்னா அடியாளா வரட்டுமா? சீக்கரம் சொல்லுங்க எங்கள் கம்பேனியில் ஒரு மாத நேட்டீஸ் தர வேண்டும்!!
senthilalagu,
உடனே வாங்க. இன்டர்வ்யூ ஏற்பாடு பண்ணிடலாம். 120 பஸ்கி எடுக்கோணும் முதல் ரவுண்டுல. ரெண்டாவது ரவுண்டுல, 100 முட்ட பரோட்டா காலி பண்ணனும்.
Post a Comment