recent posts...

Sunday, August 19, 2007

டோண்டு ராகவனும், பட்டறையும், சைக்கோவும், என் சுதந்திரம் பறிபோன கதையும்

என்னத்த சொல்றது. நான் பாட்டுக்கினு தேமேன்னு சர்வே போட்டுக்கினு, மொக்கைப் பதிவுகளுக்கு பின்னூட்டம் போட்டுகினு செவனேன்னு கெடந்தேன்.

வேல வெட்டி ஏதும் இல்லாம தமிழ்மணத்த மேஞ்சுக்கினு இருந்தப்போ, டோண்டு ராகவன்னு ஒருத்தரோட பதிவு ஒண்ணு படிச்சு பின்னூட்டனேன். வயசானவங்க ஓய்வூதியம் வாங்க எவ்ளோ கஷ்டப்படறாங்கன்னு எழுதியிருந்தாரு. அடேங்கப்பா, மனுஷன் பல நூறு பதிவுகள் போட்டு பின்னிக்கிட்டிருக்காரு.

அவருக்கு பின்னூட்டம் போட்ட பத்து நிமிஷத்துல, பிடிச்சது சனி!

பின்னூட்ட மாடரேஷன் எல்லாம் செய்யாம, சுதந்திரமா இருந்த என் பதிவுல, கன்னா பின்னான்னு ஏதோ ஒரு சைக்கோ குப்பைய கொட்டிக்கினான். டோண்டுக்கும் அவனுக்கும் ஏதோ ஜென்ம விரோதப் பகை போலருக்கு. வாட் இஸ் த ஹிஸ்டரி பிஹைண்ட்?

என்ன கரமாந்திரமோ. சைக்கோ தொல்ல தாங்க முடியல. லேப்-டாப்புலேருந்து பொக வருது.

கமெண்ட் மாடரேஷன் திரும்பப் போட்டு என் சுதந்திரத்துக்கு நானே முட்டு போடவேண்டியதாப் போச்சு. வாழ்க பாரதம். ஊர்லதான் தெகிரியமா வாயத் தொறக்க முடியாது. இனி, இங்கயும் இந்த மாதிரி ஆளுங்கலால தேவையில்லா முட்டுக்கட்டைகள் கொட்டப் போவுது.

என்ன பட்டறை நடத்தி என்ன ப்ரயோஜனம்? வூட்டக் கழுவிட்டு, அப்பாலிக்கா கெஸ்ட்ட கூட்டிட்டு வாங்க. வந்த ஒடன ஓடிடப் போறாங்க இதெல்லாம் பாத்து.

ஐயா சைக்கோ, இதோ இந்த அவார்டு உனக்குத்தான். எஞ்சாய்!


எல்லாருக்கும் இப்படி வருதா? இல்ல, எனக்கு ஸ்பெஷல் ட்ரீட்மெண்டா? எல்லாரும் டோண்டுக்கு ஒரு பின்னூட்டம் போடுங்க. அப்பாலிக்கா, இங்க வந்து சொல்லுங்க, உங்களுக்கும் கவனிப்புக் கிடைத்ததா என்று :) யாருக்கு என்ன நடந்தா என்னன்னு கண்டுக்காம போயிடாதீங்க ;)

பி.கு1: சரி சரி, லெஸ் டென்ஷன், கும்மியர் 007 வாக்குப் போட்டாச்சா?

பி.கு2: ஜூடான இடுகைகள்ல வந்துரும்ல? குத்துங்க!

54 comments:

வடுவூர் குமார் said...

உங்களுக்கு என்ன வயசு?இது பழைய கதை,எனக்கும் முழுவதும் தெரியாது.
சர்வே சன் நீங்க முதல் ஆள் கிடையாது கடைசி ஆளும் கிடையாது.
அதென்ன டோண்டு வோடு நிறுத்திவிட்டீங்க,இன்னும் சில பேர் இருக்காங்க,அங்கேயும் பின்னூட்டம் இட்டு தெரிந்துகொள்ளுங்கள். :-))
கடைசி அறிவிப்பு வந்துவிட்டதா?
குப்பைகளை எங்கு போடனுமோ அங்கு போட்டுவிட்டு மேலே செல்லுங்கள்.

Anonymous said...

டோண்டு பேர் போட்டாச்சுல்ல, கண்டிப்பா சூடான இடுகைகள்ல வந்திடும்.

டோண்டா கொக்கா.

SurveySan said...

வாங்க வடுவூர், எனக்கும் பின்னூட்டம் வராம போயிடுமோன்னு பயந்துட்டேன் :)

நான் வந்து பத்து மாசம் ஆச்சுங்க.

குப்பைன்னா குப்பத் தொட்டீல போடலாம். இது ஃப்ளஷ் பண்ண வேண்டிய சமாச்சாரம் :)

SurveySan said...

அனானி,

ஜூடாயிடுங்கறீங்க. பாப்போம். ஜூடுல வந்துட்டா. இனி டோண்டு பேர டைட்டில்ல எல்லா பதிவுக்கும் சேத்துட வேண்டியதுதான் :)

SurveySan said...

அனானியாரே,

டோண்டுவின் ஃபுள் ஹிஸ்டரி வச்சிருக்கீங்க போல இருக்கே. வரிசையா அவரு சொன்ன commandments எல்லாம் கொடுக்கறீங்க?

interesting.

டோண்டு எங்கிருந்தாலும் வருக.

ஏங்க, ஒரு தலித்துக்கு தண்ணி கொடுக்க ரெண்டு டம்ப்லர் சிஸ்டம் சரின்னு சொன்னீங்களாமே? குற்றச்சாட்டு நெம்பர் 1 இதுதானுங்க ஒங்க பேர்ல.

உங்க வாதத்தை முன் வையுங்கள் :)

இந்த மேட்டர் நல்லாருக்கே, ஆனா தூக்கம் வருது. அப்பாலிக்கா வந்து கண்டின்யூ பண்றேன்.

அனானி, உன் பின்னூட்டம் எல்லாம் பாத்தா, உன் காது ரெண்டும் ரத்தக் கொத்திப்புல செவந்து இருக்கர மாதிரி தோணுது. லெஸ் டென்ஷன்.
நீங்க குற்றப் பத்திரிக்கையை தொடர்ந்து ஃபைல் பண்ணுங்க. நாளைக்குப் பாக்கறேன்.

கண்றாவியா எழுதினா, படிக்காம டெலீட் பண்ணிடுவேன், சொல்லிட்டேன்.

லேப்-டாப் ஏற்கனவே, பொக வருது, ஏதோ மேட்டர் தீஞ்சு போன மாதிரி.

வாழ்க்கை வாழ்வதற்கே. எஞ்சாய்! :)

TBCD said...

அனேகமா இது மட்டுறுத்தல்..இல்லாததால வருமாக இருக்கும்...
நல்ல ஐ.டியாவா இருக்கே...சூடான இடுகையில்..இடம் பிடிக்க..
1.ஒரு மொக்கை..பதிவ போட வேண்டியது
2.அப்புறம்..டோண்டு பதிவுல போய் அவர ஆதரிச்சு...(போண்டா சாப்பிடாதீங்க, நீங்க..வலையுலக தண்டுல்கர்) ஒரு பின்னூட்டம்..போட வேண்டியது..
3.அப்புறம்..வர ஆபாச கமேண்டுகளை..பார்த்து ரீலீஸ் பண்ண வேண்டியது
4.அப்புறம்..பதிவுல மத்தவங்க வர ஆரம்பிச்ச பின்னாடி...அதெல்லாம்..டெலீட் பண்ணீர வேண்டியது..
5.பதிவு சூடு குறையும்..போது..மறுபடியும் ஒரு பிண்ணூட்டம்..

எப்படி...நான்..ட்ரை பண்ணுனதுல்ல....நீங்க. ட்ரைப் பண்ணிப்பார்த்து சொல்லங்களேன்..

துளசி கோபால் said...

//நான் வந்து பத்து மாசம் ஆச்சுங்க. //

அட! இவ்வளோ நாள் எப்படிய்யா
தப்பிச்சீர்? !!!!

dondu(#11168674346665545885) said...

Please see the following posts.
1. About double glass system: http://dondu.blogspot.com/2006/03/blog-post_08.html
2. About keeping DalitIASofficersunders forced waiting: http://dondu.blogspot.com/2006/03/blog-post_26.html

Judge for yourself.

Regards,
Dondu N.Raghavan

டோண்டு ரசிகர் மன்றம் said...

அப்பாடா!.. டோண்டு -போலி மேட்டரைக் கண்டுக்க நீங்க ஒருத்தராவது இருக்கீங்களே.. இப்ப ஒரு வருசமா எவனுமே கண்டுக்கலைங்க. புதுசு புதுசா பதிவர்கள் வராங்க.. போட்டோக்ராபிங்கிராங்க, பா.காசாங்குறாங்க.. இந்த போலி டோண்டுவும் காணோம், பிரச்சனையும் யாரும் கண்டுக்கலை.. ஒரே போரா இருந்துச்சு...

இப்ப நீங்க கையில் எடுத்திருக்கீங்க... இப்பவாச்சும் ஏதாவது முடிவு கெடைக்குதான்னு பார்ப்போம்.. புதிய நாட்டாமை சர்வேசன் வாழ்க

இரண்டாம் சாணக்கியன் said...

எனக்கும் இதே போலத்தான் மெயில் வந்துள்ளது.. என்ன செய்வது..?

வெற்றி said...

சர்வேசன்,

/* எல்லாருக்கும் இப்படி வருதா? இல்ல, எனக்கு ஸ்பெஷல் ட்ரீட்மெண்டா? */

நானும் உங்களைப் போல டோண்டுவின் சில பதிவுகளுக்குப் பின்னூட்டம் எழுதிய போது, எனக்கும் இப்படியான பின்னூட்டங்கள் வந்தது.

நான் 'மாடரேஷன்' வைத்திருந்ததால் அவற்றைப் பிரசுரிக்கவில்லை. :-))

ம்ம்ம்...

'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு'

என்ற வள்ளுவர் மொழியை இங்கே பின்பற்ற முடியாது. :-))

குமரன் (Kumaran) said...

நானெல்லாம் டோண்டு பக்கத்துக்கு போய் பாத்தே பல மாசமாகுது. அப்புறம் எங்கே பின்னூட்டம் போடறது? அப்படியே பாத்த / படிச்ச காலத்துலயும் பின்னூட்டம் போட்டதா நினைவில்லை. ஆனாலும் அந்தக்காலத்துல இருந்து (ஏறக்குறைய டிசம்பர் 2005ல் இருந்து - நான் பதிவெழுதத் தொடங்கியது அக்டோபர் 2005ல்) இந்தக் காலம் வரை ஆபாசப் பின்னூட்டங்கள் வந்துக்கிட்டு தான் இருக்கு. என்ன செய்ய? ஒருத்தர் மட்டும் இந்த அனானி ஆபாசப் பின்னூட்டம் போடறதா தெரியலை. ஒரு சிறு குழுவாவது இருக்கணும்.

டோண்டுவை ஆதரிச்சா மட்டும் இல்லை சில பதிவுலக நண்பர்களின் கருத்துக்கு எதிர் கருத்து சொன்னால் கூட இந்த ஆபாச பின்னூட்டம் வரும். அந்தப் பக்கம் போய் எதிர் கருத்து சொல்லிட்டு ஒரு அரை மணி நேரத்துக்குள்ள பாத்தா இந்தப் பக்கம் ஆபாசப் பின்னூட்டம் வந்திருக்கும். அந்த நண்பர்களிடம் கேட்டால் எனக்குத் தெரியாது என்று கைவிரிப்பார்கள். :-)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சர்வேசா!!
உமக்குமா? இதெல்லாம் பழைய கதை
அந்த கேஸ் மாற்றக்கூடிய ஒரு ஜீவனில்லை. கருணைக் கொலை செய்யவேண்டிய ஜீவன்.
ஆரு பெற்ற பிள்ளையோ இப்படி? அலையுது. ஆனால் இந்தக் கணனியுலள் பூந்து விளையாடும் அறிவு உள்ளது. சரியாகப் பயன்படுத்துவதாகத் தெரியவில்லை.
செக்ஸ் டாக்டர் பிரகாஸ் போல், தன் பலத்தைச் சரியாகப் பிரயோகிக்கத் தெரியாதது.
இது இப்படியே தனித் தீவாக இருந்து தற்கொலை தான் செய்யும்...

SurveySan said...

எல்லாருக்கும் விலாவரியா ராத்திரி கமெண்டு போடறேன்.

கருத்துக்கு நன்றீஸ்.

interesting comments :)

சைகோ அனானி, தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல், பின்னூட்டினே இருக்காரு. அனேகமா இன்னிக்கு ப்ளாகர் க்ரேஷ் ஆனாலும் ஆகலாம். கூகிள் சர்வர்ல பொக வருதாம் :)
எவ்ளோ நேரம்தான் பின்னூட்டம் வருதுன்னு பாக்கறேன். யாருய்யா சம்பளம் தராங்க உனக்கு? வெளங்கனாப்பலதான்.

SurveySan said...

டோண்டு, லிங்குக்கு நன்றி.

ஒரு லிங்க் வேல செய்யலியே? அதை மக்களே படிச்சுட்டு, தீர்ப்பு சொல்ற மாதிரி ஒரு சர்வே ரெடி பண்ணிடலாம் :)

SurveySan said...

tbcd,

என்ன பண்ணியும் ஃபஸ்டா வர முடியலியே? இன்னும் கொஞ்சம் காரம் சேத்து டைட்டில் வைக்கணும் :(

SurveySan said...

துளசி கோபால்,

//அட! இவ்வளோ நாள் எப்படிய்யா
தப்பிச்சீர்? !!!! //

அடப்பாவமே, அப்படியா சங்கதி.

கொலச்சுட்டு போகட்டும்னு சும்மா விட்டுட்டாங்களா?

நமக்கே இப்படின்னா, டோண்டுவோட கீ-போர்டு, மவுஸ், மானிட்டரேல்லாம் இன்நேரத்துக்கு தீஞ்சு போயிருக்குமே :)

SurveySan said...

டோண்டு ரசிகர் மன்றமே,

ஓஹோ. இதிலயும் ஒரு ஜாலி மேட்டர் இருக்கா.
சந்தோஷமா இருந்தா சரி :)

ஆனா, இப்படியே எல்லாரும் டோண்டுக்கு பின்னூட்டம் போட்டீங்கன்னா, அந்த சைகொ அனானிக்கு, ரத்தக் கொதிப்பு ஜாஸ்தியாகி அசம்பாவிதம் ஆயிடப் போவுது :)

SurveySan said...

சாணக்யரே, உங்களுக்கும் இந்த நெலமையா? ஏதாச்சும் செய்யுங்க.
நீங்களே கைவிரிச்சா என்னா பண்றது.

SurveySan said...

வெற்றி,

என்னங்க டிக்ரி வாங்கின மாதிரி சொல்றீங்க :)

நீங்க சொல்றத பாத்தா, ஆத்தா அருள் சொல்லிட்டான்ற மாதிரி இருக்கு.

கொண்டாட வேண்டியதுதானா? :)

SurveySan said...

குமரன்,

கம்ப்யூட்டர் கெட்டுப் போயிடும்னு, ஒதுங்கி இருக்கீங்களா? இல்ல, அவரு சொல்றதுல கருத்து உடன்பாடில்லையா?

வேறு பதிவர்களுக்கும் இந்த தடா இருக்கா? யாருன்னு சொல்லுங்க, டெஸ்ட் பண்ணிப் பாத்துடறேன்.

;)

SurveySan said...

Johan-Paris,

//சர்வேசா!!
உமக்குமா? இதெல்லாம் பழைய கதை
அந்த கேஸ் மாற்றக்கூடிய ஒரு ஜீவனில்லை. கருணைக் கொலை செய்யவேண்டிய ஜீவன்.
ஆரு பெற்ற பிள்ளையோ இப்படி? அலையுது. ஆனால் இந்தக் கணனியுலள் பூந்து விளையாடும் அறிவு உள்ளது. சரியாகப் பயன்படுத்துவதாகத் தெரியவில்லை.
செக்ஸ் டாக்டர் பிரகாஸ் போல், தன் பலத்தைச் சரியாகப் பிரயோகிக்கத் தெரியாதது.
இது இப்படியே தனித் தீவாக இருந்து தற்கொலை தான் செய்யும்...//

வந்தாச்சுங்க. என்ன பண்றது.

அவ்ளோ மேதாவியா அவன். ஹ்ம். நீங்க சொல்லித்தான் தெரியுது.
அவன் எழுதரத பாத்தா, 3ஆம் கிளாஸ் தாண்டாத மாதிரி தெரியுது.
பாதி தமிழ் இல்ல, வேற ஏதோ பாஷ.

ஏதோ 'அட்டு' எடத்துலேருந்து வந்திருக்கான்.

அட்டு: அசிங்கமான, மட்டமான, கேவலமான, @#$@#$#$@#$ :)

SurveySan said...

சைகோ அனானி,

கை வலிக்கலையாய்யா? ரெஸ்ட் எடுத்துட்டு அப்பறம் அடி. இப்பெல்லாம் படிக்கரதுல்ல, நேரா ரிஜக்ட் தான்.

துளசி கோபால் said...

//நமக்கே இப்படின்னா, டோண்டுவோட கீ-போர்டு, மவுஸ்,
மானிட்டரேல்லாம் இன்நேரத்துக்கு தீஞ்சு போயிருக்குமே :)//

இப்பப்பாருங்க இங்கே வந்துபோனதுக்கே............ ஒருத்தர் வந்து 'கழிஞ்சுட்டு' போயிருக்கார்.
மாடரேஷன் போட்டு வச்சுருக்கறதாலே வீட்டுக்கு வெளியே அசிங்கம் பண்ணி வச்சுருக்கு.

குறைஞ்ச அளவில் குறிப்பிட்ட சொற்கள் இருக்கும் சொல்வங்கிதான் என்றதால் வடிகட்டி போட்டுருக்கேன்.
அதுவே பார்த்து வெளியில் தள்ளிவிட்டுருது.

SurveySan said...

துளசி கோபால்,

மாடரேஷன் இல்லாம, சந்தோஷமா இருந்தேனேங்க.
சைக்கோக்கள் உள்ள வரை இதெல்லாம் கஷ்டம்தான்.

வடிகட்டும் ரகசியம் என்ன? பதிவா போடுங்களேன்.

வெற்றி said...

துளசி அம்மா,

/* இப்பப்பாருங்க இங்கே வந்துபோனதுக்கே............ ஒருத்தர் வந்து 'கழிஞ்சுட்டு' போயிருக்கார். */

ஹிஹிஹி... இங்கு வந்து போனதால் எனக்கு ஒன்றல்ல மூன்று பின்னூட்டங்கள் அன்பர் அனுப்பியிருந்தார்...

கோவி.கண்ணன் said...

ஹலோ,

ஆபசபின்னூட்டங்கள் கிடைக்கப்பட்டவர்கள் எல்லாம் அப்படி கிடைக்காதவர்களைப் பார்த்து போலியின் கைக்கூலிகள் என்று சொல்கிறார்கள் தெரியுமா ?

போலியிடம் பட்டம் பெறுவதைவிட பெருமகனார் கொடுக்கும் பட்டங்கள் ஆபசத்துக்கு குறைவே இல்லை. வேண்டுமென்றால் சொல்லுங்க தனிமடலில் சாம்பிள் அனுப்புகிறேன்.

எவனோ என்பெயரை கேலி செய்திருக்கிறான், நீ ஏண்டா போய் கேட்கவில்லை என்று எவனோ எவனுக்கோ பின்னூட்டம் போடுகிறான். இதெல்லாம் எதோ நான் கேட்டுக் கொண்டது போல. எனக்கு எவனும் வக்காலத்து வாங்கத் தேவையில்லை.

'போலியின் கைக்கூலி' பட்டம் - எல்லாம் தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று சொல்லும் நல்நோக்கு தான் போலிருக்கிறது.

வாழ்க வாழ்க !

துளசி கோபால் said...

நாம் செய்யற தமிழ்ச்சேவை(??!!)க்கு நம்ம குடும்ப அங்கத்தினர்கள் கஷ்டப்படணுமான்னு யோசிக்கணும்.
மாடரேஷந்தான் பெஸ்ட் கண்ணா பெஸ்ட்.

என்னோட ஒரு பதிவுக்கு பின்னூட்ட பாக்ஸ்லே உங்க மெயில் ஐடி அனுப்புங்க. அதை வெளியிடமாட்டேன்.
வடிகட்டி விவரம் அதில் தரேன்.

TBCD said...

வேலியில போற ஓனான வேட்டியில எடுத்து விட்டா மாதிரி, இங்க வந்து கருத்து சொன்னதுக்கு, எனக்கு இரண்டு பின்னூட்டம்...அவரப் பத்தி...
நேரம்..எப்படி கிடைக்குது அவனு(ரு)க்கு...இப்படி யாரு எங்க, என்ன பேசுறாங்க அப்படின்னு பார்த்து பார்த்து பின்னூட்டம்..போட...

karuppannan said...

new to these parts of the world.. very surprising...

SurveySan said...

கோவி, same blood? (புரியலன்னா கேளுங்க விளக்கம் சொல்றேன் :) )

துளசி, மாடரேஷன், பெஸ்ட் தான். அதுவும், சின்ன குழந்தைகள் எல்லாம் ரெண்டு மூணு பேரு பதிவுலகில் இருக்கும்போது, இது மிக அவசியம்.

tbcd, வெல்க்கம் டு த க்ளப். கண்டுக்காதீங்க. அந்தாளு எங்க வேல செய்யறானோ,அங்க அப்ளிகேஷன் போட்டு வேலைக்குப் போயிடலாம். இவ்ளோ டைம் இருக்கே, வெட்டியா பொழுத கழிக்க :)

கருப்பண்ணன், என்னங்க பண்றது, ரொம்ப பழமா இருந்துட்டேன் :)

SurveySan said...

சைகோ அனானி, போதும்லே நிறுத்து.
யாஹூ ரொம்பி வழியுது.
ஃபில்டர் போட்டு தனியா ஒதுக்கிட்டேன். பாக்கரதுகூட இல்ல.
புது கெட்ட வார்த்த கண்டுபிடிச்சு அனுப்பு, அப்பதான் கண்ணுல படும்.

டோண்டு பஸ்ல போகும்போது வெத்தலைய போட்டு உன் தலைல கிலைல துப்பிட்டாரா? இவ்ளோ காண்டா அந்தாளு மேல.

மாத்ருபூதம் கூட இல்லையே,யாருகிட்ட போய் உன் நெலமைய வெளக்கி மருந்து கேப்பேன்?

ஐயோ பாவம்.

Anonymous said...

சர்வேஷன்,

கால்ல ஒட்டினத தொடச்சு போட்டுட்டு போயிட்டே இருய்யா. இதுக்கெல்லாம் ஒரு பதிவ போட்டுக்கிட்டு. வேலையப் பாருங்க டே.

மின்னல் மன்னன் said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

உங்க நிலைமைய நினைச்சா பாவமா இருக்கு....ஆமா, பில்டர்ல்லாம் போட்டுட்டீங்க தானே?.........அப்பத்தான் கொஞ்சமாவது வசதியா இருக்கும்.

Anonymous said...

சர்வேசா, இது ஒண்ணும் ஒரு ஆளு வெல மெனக்கட்டுச் செய்வதில்லை....குழு, அதுவும் குழு பல தேசங்களில், பல டயம் சோனிலும் பண்ணுவது....நீங்க கூட இதில் சிலரிடம் பேசியிருக்கலாம்....ஹிஹிஹி...

dondu(#11168674346665545885) said...

அன்புள்ள சர்வேசன்,

விரிவாகப் பதில் போடாததற்கு மன்னிக்கவும். வாடிக்கையாளர் அலுவலகத்தில் ஆன்லைன் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு வேலை. அகலப்பட்டை இணையம் இருந்தாலும் மெயிலுக்கு தடா. ஆகவே அவ்வப்போது எனது பதிவுக்கு போய் மாடரேட் செய்ய வேண்டியிருந்தது. தமிழில் எழுத முடியாத அளவுக்கு நேரமில்லை.

இப்போது கேசை சுட்டிகள் மூலம் விளக்குகிறேன்.

1
2
3
4
5
பார்க்கவும்.

தலித் விஷயங்களுக்கான பதிவுகளின் சுட்டிகள்:
6
7

அன்புடன்,
டோண்டு ராகவன்

SurveySan said...

அனானி,

//சர்வேசா, இது ஒண்ணும் ஒரு ஆளு வெல மெனக்கட்டுச் செய்வதில்லை....குழு, அதுவும் குழு பல தேசங்களில், பல டயம் சோனிலும் பண்ணுவது....நீங்க கூட இதில் சிலரிடம் பேசியிருக்கலாம்....ஹிஹிஹி...//

அப்படியா சங்கதி. பெரிய அளவுல ரிஸர்ச் பண்ணியிருக்கீங்க போல :)

இருட்டு ரூம்ல ஒக்காந்துக்கிட்டு ரத்தக் கொதிப்பு ஏறி முடிய பிச்சுக்கிட்டு ஒரு நாள் வீழ்ச்சிதான் நம்ம சைக்கோக்கு. ;)

SurveySan said...

டோண்டு,

//விரிவாகப் பதில் போடாததற்கு மன்னிக்கவும். வாடிக்கையாளர் அலுவலகத்தில் ஆன்லைன் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு வேலை. அகலப்பட்டை இணையம் இருந்தாலும் மெயிலுக்கு தடா. ஆகவே அவ்வப்போது எனது பதிவுக்கு போய் மாடரேட் செய்ய வேண்டியிருந்தது. தமிழில் எழுத முடியாத அளவுக்கு நேரமில்லை//

மன்னிப்பெல்லாம் எதுக்குங்க. பதிவுகளுக்கு நன்றி. விலாவாரியா படிச்சுட்டு, ஒரு மெகா சர்வே தயார் பண்றேன்.
உங்கள மேலும் மேலும் புகழின் உச்சிக்கு கொண்டு போய் ஒக்கார வைக்கணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு அலையறாங்க. ;)

:)

Doondu said...

டோண்டு ஒண்ணும் நீங்கள் நினைப்பது போல் பெரிய யோக்கியவான் அல்ல.

அவனின் விதண்டாவாதங்களை நான் விரும்பவதில்லை.

அவனிடம் உள்ள கோபத்தை உங்களிடம் காட்டியது தவறு.

அவனைத் தூக்கி வைத்து பெரிய ஆள் ஆக்க வேண்டாம்.

இனி அசிங்கமான பின்னூட்டங்கள் உங்களுக்கு வராது.

sorry for the trouble.

டோண்டு ரசிகர் மன்றம் said...

//Doondu said...
இனி அசிங்கமான பின்னூட்டங்கள் உங்களுக்கு வராது.

sorry for the trouble.
//

!!! காலை காட்டுங்க.. எப்படி இப்படி எல்லாம்?! கலக்குறீங்க.. இது மாதிரி இந்த ஆள் இது வரை யாருக்குமே சொன்னதில்லை.. இந்த வெற்றிக்கே நாட்டாமை சர்வேசன் வாழ்கன்னு கூவணும் போல இருக்கு..

SurveySan said...

ரசிகரே, நல்லா இருந்தா சரி.

ஏதோ உள்குத்து வாசன மட்டும் அடிக்குது ;)

SurveySan said...

K.Athiyaman சாரே,

கருத்துக்கு நன்றி. சில விஷயங்கள் வெளியில் காட்ட விரும்பாததால், உங்க பின்னூட்டத்தை ப்ரசுரிக்கல.

புரிதலுக்கு நன்றி :)

சில விஷயமெல்லாம் ரொம்ப ஆராயக் கூடாது. தொடச்சுட்டு போயிக்கிட்டே இருக்கணும். எங்கயோ படிச்ச ஞாபகம், டார்வினோ ஃபிபோனாச்சியோ சொன்னது, இயற்கையில்யே, 10ல 4 மட்டமானதா இருக்கும். 4ல ஒண்ணு, ஒண்ணுத்துக்கும் உதவாத ரகமா இருக்குமாம் :)

Dondu Fan Club said...

We are the original Dondu Fan Club. Although the above 2 comments from Dondu rasigar manram seems decent, it must be from poli mandram. Readers are hereby advised to ignore the comments from duplicate fan club.

Dondu Fan Club
Head Office - Nanganallur

TBCD said...

சர்வேசன்..மேலே நான் சொன்னத...அப்படியே பாலே பண்ணி ஒருத்தர் ஜுடாவே இருக்காரு பாத்தீங்களா....

SurveySan said...

TBCD,

இப்ப நடப்பதை பார்க்கும்போது, இந்த பதிவு ஏன் போட்டோம் என்று தோன்றுகிறது.

நான் பாட்டுக்கு என் வேலையை பின்னணியில் பண்ணியிருக்கணும்.
ஆரம்பத்தில் வந்த சூடு, இப்ப வரும் தொடர் நையாண்டி பதிவுகளால், வீரியம் இழந்துவிடும்.
மற்றவர்களுக்கும் ஒரு எரிச்சல் வரலாம்.

பாதிக்கப்பட்டவர்கள் சுதாரிக்க வேண்டும்.

Anonymous said...

இதை ஆரம்பித்து பலரின் பேரைக் கொடுக்கிறோம் என்று புலம்புவது தேவையா ?

ஆர்வம் தேவைதான் கோளாறாக போய்விட்டால் ?

சரி, போலி பிரச்சனையையே அடுத்த வாரமும் தொடரலாமா ?

ஒரு சர்வே ரெடி பண்ணுங்க சார்

மதுரை மச்சி said...

Surveysan neenga arambichu vachaathu ipo tamilmaname paathikittu eriyuthu. poliya thituravanga ellam nallavanganu sollikuranga, poliya thitathavangala poliyoda kaikoolinu sound viduranga. poliya thiturenu sollikutu vara posts nala thamizmanam front page naarinathu than micham.:(

மதுரை மச்சி said...

Surveysan can clarify one thing, the people using the isp's from malaysia, singapore, uae mostly share the same ip address. especially singapore and malaysia 100's of ppl share a same ip address. i myself running a big tamil site know this very well. so how accurate it would be to point a particular person that he is a poli. and the ppl who are all shouting now doesnt seams to give the exact details abt whats happening and instead started to accuse others who ever is quiet as the poli's supporters. surveysan try to bring the truth and let the poli matter get solved soon. it is really annoying to see the bloggers scolding each other and the posts coming in front for the thamizmanam page. It only makes persons like me who are intrested in blogging to stay away from the blogging:(

SurveySan said...

anony,

//இதை ஆரம்பித்து பலரின் பேரைக் கொடுக்கிறோம் என்று புலம்புவது தேவையா ?//

ஆரம்பித்தது சுபத்தில் முடியும். க்வல படாதீங்க. இடையில் வரும் நையாண்டிகளும், கிளருதல்களும் தவிர்க்கலாம்.

SurveySan said...

மதுரை மச்சி,

பொக வச்சதுல, ஒவ்வொரு கரையாணா வெளியில் வருது பாருங்க.

வி.கருப்பு பதிவுல இது இருக்கு
//விடாதுகருப்பு ஒரு தனி நபர் அமைப்பு அல்ல. இது ஐவர் சேர்ந்த குழு என்று பலமுறை பல நேரத்தில் சொல்லி வந்திருக்கிறேன். இதுதான் உண்மை. உங்களில் சிலருக்கு நான் இதுகுறித்து விளக்கமாக மடலும் எழுதி இருப்பேன். தயவு செய்து மீண்டும் நினைத்துப் பாருங்கள். தற்போது இவர்கள் சொல்லும் சுட்டிக் காட்டும் பாதிக்கப்பட்டவரும் கருப்பு அமைப்பில் ஒரு அங்கத்தினர்! //

வி.கருப்புதான் அந்த சைக்கோன்னு confirmed ஆச்சுல்ல? வி.கருப்பு யார் எங்க இருந்து எழுதரான் என்பதெல்லாம் பல ஆதாரங்கள் இருக்கின்றன. இந்த வாரம் நான் அனைத்தையும் சேர்த்து சில முகவரிகளுக்கு அனுப்ப உள்ளேன்.

நண்பர்கள் சிலரின் மடலுக்காக வெயிட்டிங்.

இம்முறை நிச்சயம் சுபம்.

நிலமையின் வீரியத்தை குறைக்கும் பதிவுகள் போடப் படுவது குறையவேண்டும்.

மதுரை மச்சி said...

adaa surveysa paravala sabash matha atkalai pola summa sound vittukitu aduthavangala thaaki posts podama prachanaiya mudikurathuku nenga etho seyura pola iruku. nalla padiya senju mudinga raasa punniyama pogum. daily thamizmanam vanthu nalla nalla posts a padichutu ipo vara intha kanravi posts paathu ivanga ellam padichu enna use ena than nineka thonuthu.

மதுரை மச்சி said...

it is really funny to see the ppl who r making noise now pointing a person saying he is poli. they are making noise as if they found something newly. read the posts in the following links

http://robinhoot.blogspot.com/2006_07_01_archive.html

http://robinhoot.blogspot.com/2006/09/blog-post.html

the above posts have been made last year in june by the person called robinhoot supposed to be from thailand. iam sure that the bloggers who are making noise now are aware of this if so why these people were keeping quite all these time and shouting now? inga nadakuratha ellam paatha tamilnaatu arasiyalai ellam minjidum pola iruku. :))

Anonymous said...

豆豆聊天室 aio交友愛情館 2008真情寫真 2009真情寫真 aa片免費看 捷克論壇 微風論壇 大眾論壇 plus論壇 080視訊聊天室 情色視訊交友90739 美女交友-成人聊天室 色情小說 做愛成人圖片區 豆豆色情聊天室 080豆豆聊天室 小辣妹影音交友網 台中情人聊天室 桃園星願聊天室 高雄網友聊天室 新中台灣聊天室 中部網友聊天室 嘉義之光聊天室 基隆海岸聊天室 中壢網友聊天室 南台灣聊天室 南部聊坊聊天室 台南不夜城聊天室 南部網友聊天室 屏東網友聊天室 台南網友聊天室 屏東聊坊聊天室 雲林網友聊天室 大學生BBS聊天室 網路學院聊天室 屏東夜語聊天室 孤男寡女聊天室 一網情深聊天室 心靈饗宴聊天室 流星花園聊天室 食色男女色情聊天室 真愛宣言交友聊天室 情人皇朝聊天室 上班族成人聊天室 上班族f1影音視訊聊天室 哈雷視訊聊天室 080影音視訊聊天室 38不夜城聊天室 援交聊天室080 080哈啦聊天室 台北已婚聊天室 已婚廣場聊天室 夢幻家族聊天室 摸摸扣扣同學會聊天室 520情色聊天室 QQ成人交友聊天室 免費視訊網愛聊天室 愛情公寓免費聊天室 拉子性愛聊天室 柔情網友聊天室 哈啦影音交友網 哈啦影音視訊聊天室 櫻井莉亞三點全露寫真集 123上班族聊天室 尋夢園上班族聊天室 成人聊天室上班族 080上班族聊天室 6k聊天室 粉紅豆豆聊天室 080豆豆聊天網 新豆豆聊天室 080聊天室 免費音樂試聽 流行音樂試聽 免費aa片試看A片 免費a長片線上看 色情貼影片 免費a長片 本土成人貼圖站 大台灣情色網 台灣男人幫論壇 A圖網 嘟嘟成人電影網 火辣春夢貼圖網 情色貼圖俱樂部 台灣成人電影 絲襪美腿樂園 18美女貼圖區 柔情聊天網 707網愛聊天室聯盟 台北69色情貼圖區 38女孩情色網 台灣映像館 波波成人情色網站 美女成人貼圖區 無碼貼圖力量 色妹妹性愛貼圖區 日本女優貼圖網 日本美少女貼圖區 亞洲風暴情色貼圖網 哈啦聊天室 美少女自拍貼圖 辣妹成人情色網 台北女孩情色網 辣手貼圖情色網 AV無碼女優影片 男女情色寫真貼圖 a片天使俱樂部 萍水相逢遊戲區 平水相逢遊戲區 免費視訊交友90739 免費視訊聊天 辣妹視訊 - 影音聊天網 080視訊聊天室 日本美女肛交 美女工廠貼圖區 百分百貼圖區 亞洲成人電影情色網 台灣本土自拍貼圖網 麻辣貼圖情色網 好色客成人圖片貼圖區 711成人AV貼圖區 台灣美女貼圖區 筱萱成人論壇 咪咪情色貼圖區 momokoko同學會視訊 kk272視訊 情色文學小站 成人情色貼圖區 嘟嘟成人網 嘟嘟情人色網 - 貼圖區 免費色情a片下載 台灣情色論壇 成人影片分享 免費視訊聊天區 微風 成人 論壇 kiss文學區 taiwankiss文學區