ஜெ போட்டு, பக்கத்துல மூணு புள்ளி வச்சு, தன் ஓவியங்களுக்கு கையெழுத்து போடுவார் ஜெயராஜ்.
இதோ இப்படி 'ஜெ...'
ஞாபகம் இருக்கா அவர? நம்மூரு ராணி, குமுதம், குங்குமங்களில் வரும் சிறுகதை, பெறுகதைக்கெல்லாம் சித்திரம் வரைந்து கதைக்கு உயிரூட்டியவர்.
இவருக்கென்றே ஒரு தனி பாணி உருவாக்கி, பாத்தவுடன், 'ஜெ' படம்தான்னு சொல்ல வைக்கும் ரகங்கள் இவர் படங்கள்.
இவர் படத்தில் மிக மிக நளினமாய் வரும் பெண்களை பார்த்துக் கொண்டே இருக்கலாம். ( ஹி ஹி ).
வல்லிசிம்ஹனின் இந்தப் பதிவில் ஜெயராஜ் பற்றி குறிப்பிட்டிருந்தார். பழைய ஞாபகம் எல்லாம் வந்துடுச்சு, அதான், அங்க இங்க தேடி, ஜெ... படங்கள் சில கீழ போட்டிருக்கேன்.
ஜெயராஜின் பேட்டி ஒன்று, இங்கே காணக் கிடைக்கிறது.
எஞ்சாய்!
ஜெ... படங்கள் வேற எங்காவது இருந்தா, பின்னூடுங்கள். ;)
பி.கு1: MSVக்கு உயர் விருது கொடுக்கவேண்டும் என்று உருவாக்கிய பெட்டிஷன் here. படித்து, பெயர் பதியுங்கள்.
பி.கு2: ஜன கன மன மறக்காதீங்க சாரே.
பி.கு3: பட்டறை மேட்டர் இங்கே
ச...
8 comments:
ஆமா, ஜெயராஜின் ஓவியப் பெண்கள் கொஞ்சம் அப்படி இப்படிதான் இருப்பாங்க! ஆனா, அவரோட பெண் ஓவியங்கள் எல்லாமே ஒரே மாதிரியா இருக்குறமாதிரி ஒரு பிரமை! ராணியில் அவர் ஓவியங்கள் பிரபலம்..
நீங்க சொன்ன 'ஜெ' ஜெயராஜா?
நான் வேற என்னவோ நினைச்சுட்டேன்:-)
பரவாயில்லை. அவுங்களும் 'நளினமா' இருந்தவங்கதான் ஒரு காலத்துலே.
ஜெயராஜ் பேட்டி..
படத்துமேலேயும் எழுத்து ஓடுது.
T shirt மேல் அல்ல!!
தஞ்சாவூரான், ராணியில் பார்த்ததாய் தான் எனக்கும் ஞாபகம். சின்ன வயசு அப்போ :)
துளசி கோபால், வில்லங்கமா இருக்கே, நீங்க சொல்றது :)
வடுவூர் குமார், டி.ஷர்ட் மேல இல்லியா? பிரீலியே?
சூப்பர் :)
Thanks Bala!
சர்வேசா.. எனக்கும் அப்போ சின்ன வயசுதாங்க :)
குமாரு... எனக்கும் ஒன்னும் பிரிலியே?!?
துளசி கோபால், அதே ராணியில் ஜெ-யும் (ஜெயராஜ் இல்ல!) ஒரு கதை எழுதினது ஞாபகம் இருக்கு. கதையின் பெயர்: ஒரு சுத்தி ஒரு டோப்பா -னு நினைவு!
தஞ்சாவூரான்,
//சர்வேசா.. எனக்கும் அப்போ சின்ன வயசுதாங்க :)//
பிஞ்சுலயே பழுத்தாச்சா?... நீங்களும் :)
Post a Comment