recent posts...

Sunday, August 26, 2007

சீ.. நீ எனக்கு வேண்டாமடா...



... ... ...
சாந்து பொட்டு தீர்ந்ததென்று
ஸ்டிக்கர் பொட்டு கேட்ட எனக்கு
சாந்தில் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தாயே
சீ.. நீ எனக்கு வேண்டாமடா
... ... ...
'ஏங்க, வெளில போய் சாப்பிடலாங்க' என்ற என்னை
சரவணா பவன் இட்டுச் சென்று,
சூப்பர் ஸ்பெஷல் மீல்ஸ் உனக்கும் காஞ்சு போன ரெண்டு இட்லி எனக்கும்
சீ.. நீ எனக்கு வேண்டாமடா
... ... ...
அடுப்படியில் ஆயிரம் வேலையில் நானிருக்க
'கொஞ்சம் வெங்காயம் வெட்டிக் கொடுங்க' என்றதர்க்கு
'பதிவெழுதறேன் டிஸ்டர்ப் பண்ணாத', என்று ஜெயகாந்தன் போல் பில்ட்-அப் கொடுத்தாயே
சீ.. நீ எனக்கு வேண்டாமடா
... ... ...
நெய் ஊற்றி ருசியுடன் நான் செய்த தம்-பிரியாணி
மூக்குப் பிடிக்க தின்றுவிட்டு நீ சாய
'எப்படி இருக்குங்க' என்றதர்க்கு, 'ஓ.கே, ஆனா பக்கத்து வீட்டு பிரியாணி அளவுக்கு இல்லை'யென்றாயே
சீ.. நீ எனக்கு வேண்டாமடா
... ... ...
வேலையெல்லாம் முன்னரே முடித்துவிட்டு
'சித்தி' கடைசி எப்பிஸோட் பார்க்க அமர்ந்தால்
'ஹேய், இதை எவன் பாப்பான்' என்று, கூலா சேனலை மாத்தி WWF பார்த்தாயே
சீ.. நீ எனக்கு வேண்டாமடா
... ... ...
காலை முதல் மாலை வரை
தினகரனும், குமுதமும், விகடனும், ஹிண்டுவும் ஆன்லைனில் ஓஸியில் படித்துவிட்டு
வீட்டுக்கு வந்ததும்.. 'ஊ, ஒரே டயர்டுப்பா', என்று நீ பண்ணும் அலம்பிருக்கே
சீ.. நீ எனக்கு வேண்டாமடா
... ... ...
என்னடா இது வாழ்க்கை, கேடு கெட்ட பயலை நம்பி
இன்னும் எத்தனை கால கஷ்டங்களோ என்று கலங்கிய நாளில்
பக்கத்து வீட்டு லக்ஷ்மியும், இதே புலம்பலை புலம்பியது கேட்டேன்
ஹ்ம். நீ கொஞ்சம் ஓ.கே தாண்டா
... ... ...

-சர்வேசன்

(Inspired by நிலவு நண்பன்'s அருமையான கவிதை - நீ எனக்கு வேண்டாமடி)

என் ஃபஸ்டு கவிதை (கவுஜ?) இது. எப்படிகீது?

பின்னூட்டத்தில் உங்க கவிதை திறமையும் காட்டுங்க, இதே ஸ்டைலில் வரணும். :)

;)

25 comments:

Anonymous said...

//என் ஃபஸ்டு கவிதை (கவுஜ?) இது. எப்படிகீது?//

சுமாராகீது. :-)

SurveySan said...

//சுமாராகீது. :-) //

இருக்கட்டும் இருக்கட்டும் :)

CVR said...

ஹ்ம்ம்!!
உங்களுக்கும் இந்த கவுஜ மோகம் வந்துருச்சா???
உங்க வீட்ல நடக்கற மேட்டர் எல்லாம் அப்படியே புட்டு புட்டு வெச்சிட்டீங்க!!! :-D

SurveySan said...

CVR, நிலவு நண்பனின் அந்த கவிதை படிச்சா யாருக்குதான் கவிதை வராது?

நீங்க ஒரு நாலு வரி எடுத்து விடுங்க பாக்கலாம்.
சும்மா ட்ரை பண்ணுங்க, வரூம், வரூம், வ்ரும் :)

Anonymous said...

அடுப்படியில் ஆயிரம் வேலையில் நானிருக்க
'கொஞ்சம் வெங்காயம் வெட்டிக் கொடுங்க' என்றதர்க்கு
'பதிவெழுதறேன் டிஸ்டர்ப் பண்ணாத', என்று ஜெயகாந்தன் போல் பில்ட்-அப் கொடுத்தாயே
சீ.. நீ எனக்கு வேண்டாமடா
-----------------------
ரசித்தேன். ;)

SurveySan said...

cvr,

//உங்க வீட்ல நடக்கற மேட்டர் எல்லாம் அப்படியே புட்டு புட்டு வெச்சிட்டீங்க!!! //


எங்க வீட்டு மேட்டரெல்லாம் இல்லீங்க. சொம்மா கற்பனை :)

SurveySan said...

அனானி,

//ரசித்தேன். ;) //

மகிழ்ந்தேன் :)

வெற்றி said...

சர்வேசன்,
படிக்க நல்லாயிருக்குது.
இன்னும் தொடருங்கள்.

SurveySan said...

வெற்றி,
//படிக்க நல்லாயிருக்குது.
இன்னும் தொடருங்கள்//

ஆஹா. நெஜமாவா? சொல்லிட்டீங்கல்ல, பார்ட்2 வரும் :)

நீங்க ஒரு நாலு வரி சொல்லிட்டுப் போங்க :)

முரளிகண்ணன் said...

சிரிக்க சிந்திக்க

SurveySan said...

முரளி கண்ணன்,

சிந்திக்க? :)

SurveySan said...

யாருமே ஒரு நாலு வரி கவிதை சொல்லாதது வருத்தமான விஷயம்.

சொல்லுங்க சாரே, யாராச்சும்?

Anonymous said...

ungalin pala thiramaigalum veliyil varuvadhu kandu magizhchi.
=)

TBCD said...

ஒரு
நாலு வரி
கவிதை
"பின்னூட்டம்"

இன்னும் யாரும் டெஃபினிஷன மாத்திடலயே...பாருங்க 1க்கு கீழே 1...கவிதை(ஜ)

SurveySan said...

TBCD, அவ்வ்வ்வ்வ்!

நான் சொன்ன கவுஜ கண்டினியூ பண்ணி பின்னூட்டம் போடணுங்க :)

SurveySan said...

ஒருத்தர் கூடவா கவிதைய கண்டினியூ பண்ண மாட்டீங்க?

டூ பேட்! :)

கற்பனை வரலியா? அதெல்லாம் எனக்கு மட்டும்தான் வருமா? ;)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

"என்னை மட்டும் காதலித்தாய் என்று நினைத்தால்
நீ காதலித்த கடைசிப் பெண் நான்தான் என்று
பெரிய பட்டியலையே தருகின்றாய்
ச்சீ ச்சீ நீ எனக்கு வேண்டாமடா.."

"கை வலிக்கிறது கொஞ்சம் சோறு ஆக்கிக் கொடுங்கள் என்று கேட்டால்
உப்புக்குப் பதிலாக சீனியைப் போட்டு கிண்டி வைத்திருக்கிறாயே..
ச்சீ ச்சீ நீ எனக்கு வேண்டாமடா.."

அடப்பாவிகளா இப்படியா என்னுடைய கவிஜையை கிண்டலடிக்கிறது.... :)ம் இதுவும் நல்லாத்தான் இருக்கு

SurveySan said...

நிலவு நண்பன்,

//"கை வலிக்கிறது கொஞ்சம் சோறு ஆக்கிக் கொடுங்கள் என்று கேட்டால்
உப்புக்குப் பதிலாக சீனியைப் போட்டு கிண்டி வைத்திருக்கிறாயே..
ச்சீ ச்சீ நீ எனக்கு வேண்டாமடா.."//

3 lines? we need 4 lines?

//அடப்பாவிகளா இப்படியா என்னுடைய கவிஜையை கிண்டலடிக்கிறது.... :)ம் இதுவும் நல்லாத்தான் இருக்கு //

:) என்ன இப்படி சொல்லிட்டீங்க? இது லொள்ளு சபா ஸ்டைல்ல ஒரு முயற்சி. பாப்புலரான படம்னாதான லொள்ளு பண்ணுவாங்க :)

Unknown said...

கவுஜ நல்லாருக்கு சர்வேசா..

ஹ்ம்ம்ம்... முயற்சி பண்ணி பாத்துட்டென்... வெறும் காத்துதான் வருது :(

இதுக்கெல்லாம் நல்ல கிட்னி வேணுமோ?

SurveySan said...

//இதுக்கெல்லாம் நல்ல கிட்னி வேணுமோ?//

நல்ல லிவர் வேணும். எவ்ளோ சரக்கடிச்சாலும் தாங்கிக்கிட்டு ஸ்ட்ராங்கான கருத்துக்கள் அப்பதான் வரும் :)

மஞ்சூர் ராசா said...

நாளைக்கு ஆபீஸ் போக துணிக்கு
இஸ்திரி போட சொல்லி
நாளெல்லாம் சொல்லியும் கணினி முன்னால் உட்காந்துட்டு
காலையில் எந்திரிச்சி என்னெ
திட்டறீங்களே
சீ... நீ எனக்கு வேண்டாமடா

சினிமாவுக்கு கூட்டி போக சொன்னா
ஏதோ ஒரு கருமாந்திர இங்கிலீஸ்
படத்துக்கு கூட்டிப்போயிட்டு
வீட்டுக்கு வந்து ஜொள்ளு விடறீங்களே
சீ... நீ எனக்கு வேண்டாமடா

சின்னப் பையன் said...

ரஜினி, கமல் மற்றும் நேத்து வந்த விரல் மன்னன் சிம்புவின்
பிறந்த நாளெல்லாம் ஞாபகம் வைத்திருந்து - உன் கை பிடித்த
என் பிறந்த நாள் மறந்து விட்டேன் என்றாயே
சீ... நீ எனக்கு வேண்டாமடா

SurveySan said...

மஞ்சூர்,

ditto :)

boochandi, சிறு மாற்றம். ரஜினி கமல் பிறந்த நாளெல்லாம் ஞாபகம் இருக்காது. ஆனா,கூட படிச்ச மத்த பொண்ணுங்க நெம்பர் ஞாபகம் இருக்கும் :)

VSK said...

காலையிலே கிளம்பும்போது
கையில் டிஃபன் இல்லையென்று
கன்னத்தில் அறைந்தாயே
சீ.. நீ எனக்கு வேண்டாமடா
...........

பத்துமணிக்கு ஃபோன் பண்ணி
நானில்லையென்று கோபித்து
எவனோடு போனாயடிஎன்றாயே
சீ.. நீ எனக்கு வேண்டாமடா
...........

வீட்டிலில்லை மண்ணெண்ணை அரிசி
ரேஷன் கடையிலோ கூட்டம்
இதுவெதுவும் அறியா மடையா
சீ.. நீ எனக்கு வேண்டாமடா
............

டாக்டரிடம் கூட்டிப்போ கண்மணியை
ரெண்டுநாளா ஜுரமென்று கத்துகிறேன்
ஃப்ரெண்ட்ஸொட சீட்டாடப் போய்விட்டாய்
சீ.. நீ எனக்கு வேண்டாமடா
......

நீயின்றி வாழ்வில்லை என்றாய்
உனைப்பிரிய மாட்டென் என்றாய்
தொலையமாட்டாயா என்கிறாய் இன்று
சீ.. நீ எனக்கு வேண்டாமடா
...........

கண்ணுக்கழகாய் அன்றிருந்தாய்
எண்ணத்தில் நீயே இருக்கின்றாய்
இருந்தாலும் ரமேஷை பிடிச்சிருக்கு
சீ.. நீ எனக்கு வேண்டாமடா
:))))

SurveySan said...

VSK, வாரே வா!

கடைசி பாரா, 'நீ ஓ.கே தாண்டா' முடிக்கலியே? :)