recent posts...

Wednesday, August 08, 2007

Michael Jackson - in Guinness + some video clips

மைக்கேல் ஜாக்ஸன் - பேரக் கேட்டாலே அதிரும், இவர் ஏறும் மேடைகள் எல்லாம்.
King of Pop னு சும்மாவா சொல்றாங்க.
அவரைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் ஒருபுறம் இருக்கத்தான் செய்கிறது. அதை அலச அல்ல இந்த பதிவு.

ஒரு ரசிகன் என்ற முறையில் அவரின் ப்ரம்மாண்டமான திறமைக்கு வந்தனம் செய்யவே இந்தப் பதிவு.

அப்பெல்லாம், நம்மூர்ல world-this-weekனு ப்ரணாய் ராய் ஒரு ப்ரோக்ராம் பண்ணுவாரு.
அதுலப் பாத்துதான், மைக்கேல், மடோனாவெல்லாம் பரிச்சயம்.

அப்பறம் ஸ்கூல்ல, சில பயலுவ, Bad, Thriller, Dangerousனு வகை வகையா இவரு பாட்ட போட்டுக் காமிப்பாங்க. ஒவ்வொரு பாட்டும் ஜிவ்வுன்னு இருக்கும்.

இப்ப கேட்டாலும், அருமையான பாடல்கள் இவை.

2006 உலக இசை விருது நீகழ்ச்சியில், மைக்கேலுக்கு Diamond award கொடுத்து கவுரவிச்சாங்க.
அவர் பேர சொல்லும்போதும் சரி, அவர் மேடைக்கு வரும்போதும் சரி, ரசிகர்கள் செய்த ஆர்பாட்டம், அடேங்கப்பா.

25 வருஷம் ஆச்சு Thriller வந்து.
இதுவரை 104 மில்லியன் ஆல்பம் வித்துட்டாங்களாம்.
யாரும் கிட்ட வரமுடியாது.

உலக சாதனை இதுன்னு, கின்னஸ்ல போட்டுட்டாங்க.

$300 மில்லியன் இதுவரை பொதுநல காரியங்களுக்கு கொடுத்திருக்காராம்.

இவர் பாடல்கள் பற்றி பிறகு எழுதுகிறேன், இப்போதைக்கு இதக் பாருங்க.

Heal the world, கேட்டுப்பாருங்க. சொக்கிடுவீங்க.


thrillerல கடைசி நிமிட டேன்ஸ் பாருங்க, அசந்துடுவீங்க. :)


மைக்கேல் தலைவா, கலக்கிட்டீங்க..
தொடர்ந்து கலக்குங்க!

என்றென்றும் ரசிகன்,
-சர்வேசன்

பி.கு1: MSV petitionனை கவனிக்கவும்
பி.கு2: ஜன கன மன.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அனுப்புங்கய்யா...

10 comments:

Anonymous said...

heal the world is brilliant.

SurveySan said...

அனானி, உங்க ரசனைக்கு ஒரு ஓ!

Sundar Padmanaban said...

Man in the Mirror - கேட்ருக்கீங்களா? மைக்கேல் ஜாக்ஸனோட 20 வருஷ விசிறியாக்கும் நான்!

மதுரைல இருக்கும்போது நாங்க அஞ்சு பேரு அஞ்சு யெஸ்டி வண்டிங்களோட பெட்ரோல் டாங்க்ல BAD Guys னு எழுதித் திரிஞ்சோம். நண்பன் ஆரம்பிச்ச சிறுதொழிலுக்கு பேரு என்ன வச்சோம் தெரியுமா? BAD International. மதுரைல கடைக்கு இந்த மாதிரி பேரை யாரும் கனவுல கூட யோசிச்சிருக்கமாட்டாங்க! :-)

பைக்காராவுல இருக்கு கடை. ரெண்டாவது கடைக்கு Tough Bagsனு பேரு வச்சிருக்கோம். அந்தப்பக்கம் போனீங்கன்னா 'ஓனர்'கிட்ட நான் விசாரிச்சதா சொல்லுங்க! :-)

பதிவுக்கு நன்றி.

SurveySan said...

Sundar,

Good taste :)

I still remember the days when my friends used to dance for Bad making MJ moves :)

CVR said...

எனக்கு அவ்வளவாக அவரது பாடல்கள் பரிச்சயம் கிடையாது.

ஆனால் அவரின் "Who is it","Earth song","Stranger in Moscow" போன்ற சில பாடல்களை விரும்பி கேட்டிருக்கிறேன்!! :-)

Stranger in Moscow பார்த்தால் "பாரிஜாதம்" படத்தில் வரும் "உன்னை கண்டெனே" பாடல் எங்கிருந்து இன்ஸ்பையர் ஆகி இருக்கலாம் என்று யோசிக்கத்தோன்றும்!! :-)

அந்த பாடலின் காட்சியமைப்பை கண்டு கண்டு சிலாகித்திருக்கிறேன்!! :-)

SurveySan said...

CVR,

Try listening to
heal the world,
i just cant stop loving you,
Liberian girl,
Stranger in Mirror (moscow?)
they dont really care about all us (boys, maaro maaro type )

SurveySan said...

I meant "Man in the mirror",

reflecting, Gandhi's

"You be the change what you want to in others"

SurveySan said...

you be the change what you want to see in others.

CVR said...

நீங்க சொன்ன பாட்டு எல்லாமே முன்னமே கேட்டிருக்கேன் தல!! :-)

மாசிலா said...

மைக்கேல் ஜாக்சன் உண்மையாகவே ஈடு இணையற்ற ஒரு தனிப்பெரும் கலைஞந்தான்.

நன்றி மைக்கேல் உன் இசைகள் மட்டும் நடனங்களுக்கு.

மூன் லைட் வாக் சிறப்பு மைக்கேல் புகழ் ஓங்கட்டும்.

பதிவுக்கு மிக்க நன்றி.